வெள்ளி, 30 டிசம்பர், 2011

கொஞ்சம் உரத்த யோசனை.

                   
தண்ணி இல்லாமல் துணி துவைக்கும் எந்திரம் வந்தேவிட்டது - அப்பாதுரை மற்றும் கீதா சந்தானம் கேட்டுள்ள விஷயம்! மிக சிறிய பிளாஸ்டிக் மணிகள் போன்ற துகள்களை துவைக்கவேண்டிய துணிகளுடன் சேர்த்து மெஷினில் போட்டால் தண்ணீர் இல்லாமலே துவைக்கும் சிஸ்டம் இன்னும் இரண்டு வருடங்களில் வீடு தோறும் காணப்படும்! 
               
சூரிய சக்தியில் மின்சாரமும் கனவு அல்ல - வாழ்க்கையில் நடக்கக் கூடிய - நடந்து கொண்டிருக்கிற விஷயம் தான். 

    
ஆனால் 10000 ருபாய் செலவில் ஒரு நாளுக்கு 2 யூனிட் தயாரிக்க முடியும் சுடுநீர் இயந்திரங்களும் அப்படித்தான் - சுமார் 1௦௦ லிட்டர் சுடுநீருக்கு முதலீடு 25௦௦௦ வரை!  
          
படிக்கும் பழக்கம் என்பது காகிதப் புத்தகமாகத்தான் இருக்க வேண்டுமா?
கணினியிலும் படிக்கலாமே! 
                    
முதியவர்களுக்கு மரியாதை பற்றி இலங்கையை சேர்ந்தவர் சொல்வது புதுமையாக இருக்கிறது இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்தவர்களிடம் காணப்பெறும் ஒரு நல்ல விஷயம் அவர்கள் யாரையும் 2 வயதுக் குழந்தையாக இருந்தால் கூட நீங்கள் வாருங்கள் போங்கள் என்று பேசுவதைத்தான் பார்க்கிறோம் மதுரைக்காரர்களிடமும் இந்த பழக்கம் உண்டு. 
       
வாலிபந்தனில் வித்தை கற்க வேண்டும் - கற்ற வழியில் நிற்க வேண்டும் என்பதெல்லாம் சங்க காலத்துக்கு மட்டும் தான் பொருந்துமோ ?  
                            
தொப்பையைக் குறைக்க கொஞ்சம் வில் பவர் கொஞ்சம் அவகாசம் நடை பயில போதும் இல்லையா? எந்திரங்கள் தேவையா? எல்லோரும் தொப்பை இல்லாமல் இருந்துவிட்டால், போலீஸ்காரர்களை எப்படி அடையாளம் காண்பது? 
             
உன்னையே நீ அறிவாய் என்றார் சாக்ரடிஸ். அது இல்லாமல் மற்றவர் மனதை அறிய பிரயத்தனம் [முயற்சி] வீண் என்று தோன்றுகிறது/   நம்மிடம் " வாங்க சார் வாங்க! வீட்டிலே குழந்தைகளை எல்லாம் கூட அழைத்து வந்திருக்கலாமே" என்பவர் மனதுக்குள் " ஆமாம் இவன் எழுதப் போற மொய்க்கு 2 பங்கு சாப்பிட்டுடுவான்/////" என்று நினைப்பது நமக்குத் தெரிந்தால் ????
     
அரவங்காடு தொழிற்சாலையில் சிதம்பரம் என்று ஒரு தலைமை குமாஸ்தா இருந்தார். அவர் துர்காபவனில்  ஈவினிங்  டிஃபன் சாப்பிட வந்து விட்டு பஜ்ஜி சட்னி சாப்பிடும் பொழுது 'ஐயரே!  இன்னும் கொஞ்சம் சட்னி போடேன். இன்று நல்லா இருக்கு' என்று சொல்வார் பிறகு தனக்குத்தானே 'ஆமாம் இப்போ நல்லா இருக்குனு ஒரு வார்த்தை சொல்லிட்டாப் போதுமே - ஒரு பிடி உப்பை அதுலே சேர்த்துடுவாரு" என்று அவர் சொல்வது நமக்கும் கேட்கும்! 
     
எனவே, (மற்றவர் மனதை அறியும்) ஆசையை அழித்து விடுங்கள் - அது துன்பத்தை மட்டுமே கொடுத்து நம் நிம்மதியைக் கெடுத்து விடும்! 

என் விருப்பங்கள் :- 
1. ஓர் ஏக்கருக்கு வருடத்துக்கு 10 டன் அதற்கு மேலும் விளைச்சல் கொடுக்கும் தானியப் பயிர். 
   
2. வறண்டு போகாத எண்ணைக் கிணறுகள் - ஏன் தண்ணீர்க் கிணறுகளும் கூடத்தான்! 
    
3. வீட்டிலிருந்தே வேலை - உடற்பயிற்சிக்காக பக்கத்திலிருக்கும் பூங்காவில் நடந்தால் போதும். 
   
4. எந்தப் புத்தகமாக இருந்தாலும், பாட்டாக இருந்தாலும், செய்தித் தாளாக இருந்தாலும் நீங்கள் சம்பாதித்த பணத்துக்கு வரி கட்டியிருப்பின், இலவச டௌன்லோடு வசதி இந்த மாதிரி பைல்கள் கண்ட்ரோல் எக்ஸ் கண்ட்ரோல் வி மட்டுமே செய்ய முடியும் !
    
5. எல்லாக் கோவில்களுக்கும் பிரார்த்தனைக் கூடங்களுக்கும் நுழைவு வரி. அதில் வருகின்ற வருமானம், வருமானக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்களின் மேம்பாட்டுக்கு. 
     
6. எந்த ஊர்வலமாக இருந்தாலும் மக்கள் தொகைக்கேற்ப ஏற்பாட்டாளர் ஒரு தொகை கட்டிய பின்னரே அனுமதி ஆட்கள் அதிகம் வந்தால் அடுத்த கூட்டத்துக்குள் அதிகப்படி தொகையை செலுத்தியிருந்தால் மட்டுமே அனுமதி. 
            
இன்னும் நிறைய உண்டு - சாப்பாடு அழைக்கிறது. 
                   

21 கருத்துகள்:

  1. உங்கள் விருப்பங்கள் யாவும் நன்றாகவே இருக்கின்றன. மிக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. வர வர விருப்பங்கள் கூடிக்கொண்டே போகுது.அப்ப தொப்பை வைக்காம என்ன ஆகும் !

    உப்புமடச் சந்தியில உங்க குறூப்பை பாடச்சொல்லிக் கூப்பிடிருக்கேன்.வந்து பாடிட்டு போங்க ஸ்ரீராம் !

    பதிலளிநீக்கு
  3. வீட்டிலேயே வேலை- சீக்கிரம் வெறுத்துவிடும் என்று தோன்றுகிறது! பிறகு வெளியே போய் புதிதாய் நாலு முகத்தைப் பார்க்கலைன்னா தூக்கம் வராது!

    பதிலளிநீக்கு
  4. அதிக விளைச்சல் கொடுக்க கூடிய தானிய பயிர், வற்றாத கிணறு. நல்ல மனசுங்க உங்களுக்கு!
    மற்றவங்க மனசை அறிய முடிஞ்சுதுன்னா இருக்கற நிம்மதியும் போய்டும். எல்லாரும் நல்லவங்கன்னு நெனச்சுண்டே காலத்தை ஓட்டிடறது நல்லது.
    நான்காவது மிகவும் அருமையான யோசனை!
    தொப்பை கமெண்ட் சூப்பர்! :)

    பதிலளிநீக்கு
  5. செய்தித் தொகுப்பும் உங்கள் விருப்பங்களான நல்ல சிந்தனைகள் யாவும் மிக அருமை!!

    பதிலளிநீக்கு
  6. உங்கள் விருப்பங்கள் நிறைவேறக்கூடிய விருப்பங்களே.

    பதிலளிநீக்கு
  7. //மற்றவர் மனதை அறிய//

    உன் மனதை பிறர் அறியும்படியான செயல்பாடு கொண்டிருந்தால், பிறர் மனதை நீ அறிதல் வெகுசுலபம்.

    -- யாரோ

    பதிலளிநீக்கு
  8. ஆறு விருப்பங்களும் நன்று. 3வது பலரின் விருப்பமாகவும் இருக்கும்.

    / கொஞ்சம் வில் பவர் கொஞ்சம் அவகாசம்/

    ரொம்பச் சரி.

    கடைசியில் உங்களை அழைத்ததே அதைச் சுற்றிதான் உலகமே சுழலது:)!

    பதிலளிநீக்கு
  9. ‘உங்கள்’ பக்கத்தில் எனது இன்றைய பதிவு அப்டேட் ஆகித் தெரிகிறதே.

    பதிலளிநீக்கு
  10. ரெண்டாவது பாயிண்ட் ரொம்ப பிடிச்சிருக்கு. உங்க நல்ல மனசுப்படியே நடந்தா மூன்றாம் உலகப்போர் தடுக்கப்படுமே..

    பதிலளிநீக்கு
  11. தங்கள் கனவுகள் நினைவாக வாழ்த்துக்கள்
    தங்களுக்கு என் இனிய
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    த.ம 5

    பதிலளிநீக்கு
  12. //வருமானக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்களின் மேம்பாட்டுக்கு. //

    மொண்டேக்கின் வறுமைக் கோடா அல்லது எங்கள் ப்ளாக் கின் வருமானக் கோடா என்று சிந்தனையில் இருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  13. பின்னூட்டங்களுக்கு உரத்த சிந்தனை அருமை.தங்கள் விருப்பங்கள் கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
  14. உங்கள் விருப்பங்களை ரசித்தேன். ஷங்கர் ரசிகரோ?
    முதல் விருப்பத்தோடு, விவசாய நிலங்களை விற்றாலோ வாங்கினாலோ கடுமையான தண்டனை வேண்டும் என்றும் சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும் அதிக அளவு மகசூல் செய்யும் விவசாயிகளுக்கு போனஸ் என்று ஊக்குவிக்கலாம்.
    உலகெங்கும் obesity problem அதிகமாவதைப் பார்த்தால் உடற்பயிற்சியைச் சட்டமாக்க வேண்டும் போலிருக்கிறது!!
    எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கும், வாசகர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    எனது ப்ளாக்கில்:
    பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
    புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
    A2ZTV ASIA விடம் இருந்து.

    பதிலளிநீக்கு
  16. நல்லதோர் விருப்பங்களுடன் நாளும் மகிழ்வித்தீர். மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  17. மதுரைக்காரர்களிடமும் இந்த பழக்கம் உண்டு. //

    ஆஹா, தாங்கீஸ்ஸ் தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், எங்க ஊருல்ல! :)))))

    பதிலளிநீக்கு
  18. விருப்பங்கள் நிறைவேற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!