திங்கள், 16 ஜனவரி, 2012

தங்கத் தவளைப் பெண்ணே - சவடால் போட்டி முடிவுகள்.

               
தங்கத் தவளைப் பெண்ணே சவடால் கதைப் போட்டியில் பங்கேற்று, எங்களை உற்சாகப் படுத்திய பதிவர்கள், வாசகர்கள் எல்லோருக்கும் எங்கள் நன்றி. 
    
வோட்டெடுப்பில், பதிவான வாக்குகளில் பாதிக்கு மேல் பெற்று, பெரு வெற்றி பெற்ற, 'மீனாக்ஷி' எஸ் பி எஸ் - அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள்.   
   
எங்கள் ஆசிரியர் குழுவினர் தேர்ந்தெடுத்த முதல் பரிசு கதைகளும், கதாசிரியர்களும், காரணங்களும்:
     
1) ரேவதி நரசிம்ஹன் என்கிற வல்லி சிம்ஹன் - ஐஸ் ப்ரேக்கர் - முதல் கதை எழுதியவர், போட்டியில் பங்கேற்ற முதல்வர்; முதல் கல்லை எறிந்தவர்.  நம்ம ஏரியா பதிவில் அதிகம் பங்கேற்றவர். சுட்டிகள்:  பகுதி 1 , பகுதி 2
             
2) கீதா சாம்பசிவம். இவர் பதிவில் இருந்த நகைச் சுவையையும், போட்டி குறித்து இவர் எழுதிய பின்னூட்டங்களில் இருந்த நகைச் சுவையையும் வெகுவாக ரசித்தோம். சுட்டி இது    இதுவும் 
                
3) கணேஷ்: எங்களுக்குப் புதியவர். அவர் கதை எழுதி இணைப்பும் எங்களுக்கு அனுப்பிய பின்தான் - எங்கள் ஆசிரியர்கள் பலருக்கு இப்படி ஒரு சுவையான பதிவுகள் எழுதுபவர் இருக்கின்றார் என்பது தெரிந்தது. அதற்கு முன்பு நம்ப பின்னூட்டப் பெருமாள் ஆசிரியருக்கு மட்டும்தான் தெரிந்திருந்ததாம்! சுட்டி 
   
4) கீதா சந்தானம்: இது நம்ப ஏரியா பதிவு போட்டிகளில் மிக்க ஆர்வமுடன் பங்கேற்று நிறைய படங்கள் அனுப்பிக் கொண்டிருப்பவர். நகைச் சுவையும், சீரியஸ் கதையும் சம அளவில் கலந்து கொடுத்திருக்கின்றார். 
    
5) அப்பாதுரை. இவர் கதைகளை தராசில் நிறுத்திப் பார்க்கின்ற தகுதி எங்கள் யாருக்கும் கிடையாது. இவர் இந்தப் போட்டியில் பங்கேற்றார் என்பதே - இவர் எங்களுக்கு அளித்த பரிசு. சுட்டி இது 
               
6) வாசகர்கள் பெரும்பான்மை அளித்தது ஒரு புறம். கதையின் இறுதியில் 'அவரை' என்று முடிக்க வேண்டிய இடத்தில், அந்த வார்த்தைக்கு ஒரு புதிய டைமென்ஷன் கொடுத்திருந்தது மிகவும் சிறப்பு.  எங்கள் ப்ளாக் பதிவில், ஏற்கெனவே 'சூப்பர் படைப்பாற்றல் கொண்டவர்' என்று  தேர்ந்தெடுக்கப்பட்டவர், மீனாக்ஷி அவர்கள். சுட்டி இங்கே 
      
குரோம்பேட்டைக் குறும்பன் போட்டிக் கதை பற்றிய பதிவாக ஒரு சிறு குறிப்பு மட்டும் எழுதி, (பஸ் டிக்கெட் குறிப்பு) அதை மட்டும்தான் அனுப்பி வைத்திருந்தார். அதை எங்கள் ஆசிரியர் ஒருவர்தான் விரிவாக்கம் செய்து, பதிவாக வெளியிட்டார். ஆதலால் - கு கு வுக்கு, பரிசு கிடையாது என்று முன்பே தீர்மானித்துவிட்டோம். நல்ல வேளை - வாக்களித்தவர்களும் கு கு வின் டெப்பாசிட்டை காலி செய்துவிட்டார்கள்! கு கு வுக்கும் இது மகிழ்ச்சியே - ஏன் என்றால், அவருடைய ஐடென்டிடி - (எங்கள் ஆசிரியர்கள் உட்பட) யாருக்கும் தெரிய வேண்டிய நிலைமை ஏற்படவில்லையாம் .... (அவருடைய சமீபத்திய மெயில் மூலமாக இதைக் கூறி இருக்கிறார்.) 
            
பரிசு பற்றி முன்பு அறிவித்ததிலிருந்து சிறிய மாறுதல். ஆறு முதல் பரிசுகள். மேலே பட்டியலிடப்பட்ட ஆறு பேர்களுக்கும் பரிசு கொடுப்பது என்று தீர்மானித்து விட்டோம். பரிசுப் புத்தகத்தின் தலைப்புக்கும், குரோம்பேட்டைக் குறும்பன் எழுதிய போட்டிக் கதைத் தலைப்புக்கும் ஓர்  ஒற்றுமை உள்ளது. 


அது என்ன? (any guess?) 


பரிசை இந்த மாத இறுதிக்குள், கொடுத்து விடுவோம். மேற்கண்ட ஆறு பேர்களில் சென்னையில் இருப்பவர்கள் அல்லது சென்னை விலாசம் கொடுப்பவர்களுக்கு, புத்தகத்தை நேரில் தருவதற்கு முயற்சி செய்கின்றோம். இந்தியாவுக்குள் இருக்கின்ற மற்ற விலாசத்திற்கு கூரியர் அனுப்புகின்றோம். வெளிநாடு வாழ் மக்கள் - (இந்த ஆறு பேரில்தான்!) எந்த (இந்திய) விலாசத்திற்கு புத்தகத்தை அனுப்பவேண்டும் என்று மெயில் எழுதித் தெரிவிக்கவும். (engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு தெரியப் படுத்தவும்.) 


வாழ்த்துக்களுடன், 
ஆசிரியர்கள்,
எங்கள் ப்ளாக்.  

24 கருத்துகள்:

  1. பரிசு கிடைக்க வேண்டும் என்ற ஆசையுடன் போட்டியாளர்கள் எல்லாம் என்னைவிட்த் திறமைசாலிகளாயிற்றே என்று உதைப்பும் உள்ளே இருந்தது. முடிவுகளைக் கண்டு மகிழ்ந்தேன். என் முகவரி ஈமெயில் அனுப்புகிறேன். (சென்னைதான்) நான் எங்கள் ப்ளாக் பற்றித் தெரிந்து கொண்டது வல்லி சிம்ஹன் அவர்களின் பதிவு மூலம்தான். அவருக்கு என் ஸ்பெஷல் நன்றி!

    பதிலளிநீக்கு
  2. வெற்றி பெற்ற அனைவருக்கு வாழ்த்துக்கள்..
    நா ரொம்ப பிசியா இருந்தேன்.. அதான் போட்டில கலந்துக்க முடியல..
    நா கலந்திருந்தா ? (பதில் : உங்கள் கற்பனைக்கேற்றவாறு)

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னையும் கதை எழுத தூண்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த போட்டியில் பங்கு கொண்ட எல்லோருமே மிக அருமையாகவும், சிறப்பாகவும் எழுதுபவர்கள். அதனால்தான் நான் கதை எழுதி முடிக்கும் வரை யாருடைய கதையையுமே படிக்காமல் இருந்தேன். கதை எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தது எவ்வளவு உண்மையோ, அது போல எழுத உட்கார்ந்த பின் இரண்டு வரிகூட எழுத முடியாமல் போனதும் அவ்வளவு உண்மை. இறுதியில் ஒரு கட்டத்தில் எழுதியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் வந்து பாதி ராத்திரியில் ஒரு வெறியுடன் உட்கார்ந்து எழுதினேன். :)

    இன்னொரு அதிசயமான விஷயம் எனக்கு விழுந்த ஓட்டு. எப்படிங்க இத்தனை ஓட்டு. ஒரே மர்மமா இருக்கு. பொங்கல் அன்னிக்கு காலம்பர பதிவை பார்த்தப்போ எண்பது ஓட்டுக்கள் இருந்தது. பிறகு இது நம்ப ஏரியாவில் எதாவது கமெண்ட் வந்திருக்கிறதா என்று பார்த்து விட்டு மீண்டும் எங்கள் ப்ளாக் வந்தால் அதுக்குள்ள என் கட்டத்தில் ஓட்டு எண்பத்தி மூணு ஆகி இருந்தது. ஆஹான்னு அப்படியே நம்ப முடியாம உட்காந்துட்டேன். :)
    எனக்கு ஓட்டு போட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றி.

    பங்கு கொண்டு வெற்றி பெற்ற எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. சுவையான கதைப் போட்டியை வைத்த எங்கள் ப்ளாகிற்குப் பாராட்டுக்கள். பங்கு பெற்று பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.ஓட்டுப் போட்ட மக்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  5. வெற்றி பெற்ற அனைவருக்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  6. முன்னரே கேட்க வேண்டுமென்று நினைத்தேன். அது என்ன சவடால் போட்டி? சவால் என்றிருந்திருக்க வேண்டுமோ. சவடால் என்றால் 'சாரமில்லாமல் சத்தம் போடுவது' (brag) என்றுதானே அர்த்தம்.

    பதிலளிநீக்கு
  7. பரிசு பெற்ற எல்லோருக்குமே பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
  8. ஆகா! முடிவு வந்திடுச்சா? இன்னொரு ரூல் போட்டுருவீங்கன்னு நெனச்சா ஏமாத்திட்டீங்களே? (குகுவுக்கு மட்டும் தான் நக்கல் வருமா?)

    ரொம்ப நன்றி. எக்கச்சக்கமா எழுதியிருக்கீங்க.. ரொம்ப நன்றி.

    meenakshi இதானே வேணாங்கறது... ஓட்டு எப்படி விழுந்துச்சுனு தெரியாதா? திட்டம் போட்டு ஊழல் செஞ்சிருக்காப்ல இருக்கு..?

    பதிலளிநீக்கு
  9. meenakshi நிறைய எழுதுங்க.. நல்லா எழுதுறீங்க.

    பதிலளிநீக்கு
  10. அப்ப இனி பாதி ராத்திரி உட்கார்ந்து வெறி பிடிச்ச மாதிரி எழுதிட வேண்டியதுதான். :)
    இந்த கதை எழுத கிடைத்த ஊக்கமும், எழுதிய பின் கிடைத்த நிறைவும் இனியும் கிடைக்கும் என்றால் நிச்சயமாக எழுதுவேன் அப்பாதுரை. பார்க்கலாம்!
    நீங்கள் பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி!

    பதிலளிநீக்கு
  11. அன்பு மீனாக்ஷி மனம் நிறைந்த பாராட்டுகள்.
    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். எனக்கு இன்னும் எவ்வளவு வோட் விழுந்திருக்கும்னு கண்டுகொள்ள முடியவில்லை. ஒருவேளை யாரும் போடவில்லையோ:) இரண்டு பேர்தானா வோட் செய்திருக்கிறார்கள்!!!!கற்பனைக்கு ஒரு ஊக்கம் கொடுத்த எங்கள் ப்ளாகிற்கு மிக மிக நன்றி.
    துரை 41 வாங்கியிருக்கிறார். கீதா சாம்பசிவம்,கீதா சந்தானம்,குகு சார்,கணேஷ் சார் எல்லாருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.வெற்றியைப் பற்றி யாம் கவலையே படுவதில்லை என்று வல்லிசிம்ஹன் சாமியாரிணி சொல்கிறார்:)))))
    உழைப்புதான் முக்கியம்!!!!

    பதிலளிநீக்கு
  12. உங்க அன்புக்கும், பாராட்டுக்கும் ரொம்ப நன்றி, சந்தோஷம் வல்லிசிம்ஹன். உங்கள் உழைப்பின் அருமையை உங்கள் பதிவுகளில் காண்கிறேனே. எவ்வளவு அழகா எழுதறீங்க. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. மீனாக்ஷி மேடம்! நல்ல கதை எப்படி எழுதறதுன்னு இவ்வளவு நாள் மண்டையப் பிச்சுக்கிட்டிருந்தேன். இனிமே நானும் பாதி ராத்திரிலதான் உக்காந்து கதை எழுதணும்னு முடிவு பண்ணிட்டேன். தாங்க்ஸ் குருவே!

    பதிலளிநீக்கு
  14. இன்னாது குருவா! சரியா போச்சு போங்க!
    பாதி ராத்திரி எழுந்து உக்காந்தா தூக்கம்தாங்க வரும். கதை எல்லாம் ஒண்ணும் வராது. :) நானே ஐயோ ராமா! எப்படியாவது எழுதி முடிக்கணுமேன்னு தூங்கி வழிஞ்சுண்டே எழுதி முடிச்சேன். பரிச்சைக்கு கூட நான் இப்படி எல்லாம் கண் விழிச்சு படிச்சதில்லை தெரியுமா! :)

    பதிலளிநீக்கு
  15. வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள். எங்கள் பிளாக்க்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.போட்டியை நடத்திய எங்கள் பிளாக்குக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. எங்கள் ப்ளாக்17 ஜனவரி, 2012 அன்று AM 11:59

    // geetha santhanam said...
    முன்னரே கேட்க வேண்டுமென்று நினைத்தேன். அது என்ன சவடால் போட்டி? சவால் என்றிருந்திருக்க வேண்டுமோ. சவடால் என்றால் 'சாரமில்லாமல் சத்தம் போடுவது' (brag) என்றுதானே அர்த்தம்.//
    பெரிய பதிவர்கள் அப்பொழுதுதான் சவால் சிறுகதைப் போட்டிகள் அறிவித்து வெற்றிகரமாக முடித்திருந்தார்கள். அந்த சமயத்தில் நாங்க சவால் கதைப் போட்டி என்று அறிவித்தால் - அது அவர்களை கேலி செய்வது போல தோன்றிவிடும் - என்று நாங்க நினைத்ததால், 'சவடால் சிறுகதைப் போட்டி' என்று அறிவித்தோம். 'சாரமில்லாமல் சத்தம் போடுவதும்' ஒரு குஷியான சமாச்சாரம்தானே!

    பதிலளிநீக்கு
  18. கெளதமன் ஸார்... நேத்துப் பூரா ரூம் போட்டு யோசிச்சேன், கண்டுபிடிச்சுட்டேன். ‘ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்டு கால்’ பை கிழக்குப் பதிப்பகம்! என் கெஸ் சரியா?

    பதிலளிநீக்கு
  19. எங்கள் ப்ளாக்18 ஜனவரி, 2012 அன்று AM 7:02

    கணேஷ் சார்! வெரி குட்! உங்களுக்கு நூற்றுக்கு நூறு!!

    பதிலளிநீக்கு
  20. திரு.கணேஷிடம் இணைய மக்களின் கோரிக்கை: சரியான விடையை அறிந்து கொள்ளக் காரணமாயிருந்த ரூம் பற்றிய விவரங்களை விளக்கவும்.

    பதிலளிநீக்கு
  21. சத்தம் போடாமல், எனக்குத் தெரியாமல் முடிவை அறிவிச்சாச்சா?? அநியாயம்; போகட்டும், புத்தகத்தை(என்ன புத்தகம்னு சஸ்பென்ஸை கணேஷ் அநியாயத்துக்கு உடைச்சுட்டார்) வல்லிக்கு அனுப்பி வைங்க. வாங்கிக்கறேன். இல்லைனா இங்கே யு.எஸ்.விலாசத்துக்குக் Fedex ல கூரியர் பண்ணறீங்களா? :)))))

    பதிலளிநீக்கு
  22. எங்கள் ப்ளாக்20 ஜனவரி, 2012 அன்று AM 11:49

    //கீதா சாம்பசிவம் said...
    சத்தம் போடாமல், எனக்குத் தெரியாமல் முடிவை அறிவிச்சாச்சா?? அநியாயம்; போகட்டும், புத்தகத்தை(என்ன புத்தகம்னு சஸ்பென்ஸை கணேஷ் அநியாயத்துக்கு உடைச்சுட்டார்) வல்லிக்கு அனுப்பி வைங்க. வாங்கிக்கறேன்.//
    கீதா சாம்பசிவம் மேடம், பரிசுப் புத்தகத்தை, வல்லி சிம்ஹனிடம் கொடுத்துவிடுகிறோம்.

    அப்பாதுரை, கீதா சந்தானம், மீனாக்ஷி - பரிசுப் புத்தகங்களை எந்த முகவரியில் கொடுக்கவேண்டும்? இந்த மாத இறுதிக்குள் கொடுத்துவிடுவோம்.

    பதிலளிநீக்கு
  23. நான் முகவரியை இமெயிலில் அனுப்பி வைக்கிறேன். நன்றி

    பதிலளிநீக்கு
  24. பரிசு பெற்ற ஆறு பேருக்கும் வாழ்த்துகள்!!!!!!

    எங்கள் ப்ளாகிற்கு பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!