செவ்வாய், 17 ஜனவரி, 2012

எம் ஜி ஆர் என்ற மூன்றெழுத்து!

மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன்.

MGR!

ஜனவரி 17. (1917) அவர் பிறந்த நாள்.

அவரை நினைவு கூரும் வகையில் ஒரு பதிவு தேத்தலாம்னு.. ஹி ஹி ..  போடலாம்னு... ஹி...ஹி...



சினிமாவும் அரசியலும் எம் ஜி ஆர் பார்வையில் : மக்களை 'நம்பவைக்கும்' துறைகள்.

இதைக் கேட்டால் தனியா ஒரு கட்டுரை தேவையா என்ன? 

இசையில் அபார ஆர்வம் ஞானமுடையவர். கர்நாடக சங்கீத ராகங்களை அவ்வப்போது ஹம் செய்து கொண்டிருப்பாராம். எம் ஜி ஆர் மேஜிக் என்று அழைக்கப் படும் எம் ஜி ஆர் கவர்ச்சியின் மீது அவருக்கு நம்பிக்கை அதிகம். எங்கு அபபடி அதை உபயோகிக்க வேண்டும் என்று அவர் நன்றாக அறிந்திருந்தார்.

மலைபோலே வரும் சோதனை யாவும் பனிபோல் நீங்கி விடும்.....



தன் ஊழியர் ஒருவரிடம் அவருக்கு அதிருப்தி இருந்தால் அவரை வேலையை விட்டு நிறுத்தி விடுவார். ஆனால் அவருக்குரிய சம்பளம், உணவு எல்லாம் அவருக்கு சேர்ந்து கொண்டுதான் இருக்குமாம். சில மாதங்களுக்குப் பிறகு அவரை மறுபடி வேலைக்குச் சேர்த்துக் கொள்வாராம்.       எம் ஜி ஆர் ஸ்டைல்!
     
இன்னொரு நல்ல பாட்டு என்ற வகையில் (மட்டும்) அடுத்த பாடல் 
        


தன்னைப் பற்றிய ஒரு நிச்சயமற்ற தன்மையையும், மர்மத்தையும் அவர் உடையாமல் பார்த்துக் கொண்டார் என்கிறார் அவருடன் பணிபுரிந்த ஒரு அதிகாரி. அமைச்சர்கள் உட்பட எல்லோரையுமே ஒரு படபடப்பில் வைத்திருந்ததும் அவர் இயல்பே. எந்த நிமிடம் எதைச் செய்வார் என்பது யாருக்குமே தெரியாது. ஒரு கட்டத்தில் தி மு கவுடன் மறுபடி இணைவதற்குக் கூட கிட்டத் தட்ட அருகில் வந்து அப்புறம் நொடியில் மாறிப் போனார் என்று படித்திருக்கிறேன்.


இன்னொரு சம்பவம் படித்ததும் நினைவுக்கு வருகிறது. அப்போதைய ஜனாதிபதி சென்னை வந்திருந்த போது அப்போதைய முதல்வரான எம் ஜி ஆரை மதிய உணவுக்கு அழைத்தாராம். பதினொன்றரை மணி முதலே கோட்டையில் இருந்த முதல்வர் மற்ற அமைச்சர்களுடன் விவாதத்தில் தொடர்ந்து இருக்க, 12.30 மணி முதலே ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து தொடர்ந்து விசாரித்துக் கொண்டேயிருக்க, எம் ஜி ஆரிடம் கேட்ட போது "நான் ரொம்ப பிசியாக இருக்கிறேன் முப்பது அல்லது நாற்பது நிமிடங்கள் தாமதமாகலாம் என்று ஜனாதிபதியிடம் சொல்லி விடுங்கள். என் வருத்தத்தையும் தெரிவித்து விடுங்கள்" என்றாராம். அதுதான் எம் ஜி ஆர்!


தலைவரைப் பற்றி எழுதறியா.... காந்திக்குப் பிறகு அதிகபட்ச மக்களால் நேசிக்கப் பட்டவர் எங்கள் தலைவர் என்று சேர்த்து எழுது என்கிறார் விசு!  


அமெரிக்காவிலிருந்து அவர் மீண்டு வந்தபோது மதுரைக்கு வந்திருந்தார். அப்போது ரிசர்வ் லைனில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேச அவர் சென்ற போது, அவரைப் பார்க்க நின்ற கூட்டமும், கைக்குழந்தையோடு நின்ற ஒரு பெண் அவர் வந்ததும் ஜீப்போடேயே 'தலைவா...தலைவா' என்று கத்தியபடி ஓடியதும், அப்போது அவர் இடுப்பில் இருந்த குழந்தை நழுவிக் கீழே விழ, அதைக் கூட கவனிக்காமல் அவள் ஓடி, எம் ஜி ஆர் கண்ணிலிருந்து மறைந்து நீண்ட நேரம் கழித்து திரும்பி வந்து குழந்தையைத் தேடியதும் இன்னும் கண்ணில் நிற்கிறது!

சாவித்திரியின் நடை....

எம் ஜி ஆர் மறைந்து இத்தனை வருடங்கள் கழிந்த பிறகும் அவர் பெயருக்கு இருக்கும் கிரேஸ் ஆச்சர்யப் பட வைப்பது. 

அவரை எதிர்த்தவர்கள் கூட, அரசியலிலும் சரி, திரைத் துறையிலும் சரி, அவரை ஒருமுறை நேரில் சந்தித்து விட்டால் போதும், அந்தக் கவர்ச்சியில் மனம் மாறி விடுவார்கள் என்பதை, அவரும் அதை உணர்ந்து இருந்தார் என்பதோடு தேவையான இடங்களில் உபயோகப் படுத்தியும் கொண்டார்.


"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்... இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்"


மது அருந்தும் பழக்கங்கள் கிடையாது. புகைப் பிடிக்கும் பழக்கம் கிடையாது. உடற்பயிற்சி செய்யாத நாள் கிடையாது. தன் உடல் மேல் அவருக்கு இருந்த அதீத நம்பிக்கையால் தனக்கு எதாவது உடம்பு சரியில்லாமல் போகும் என்பதையே அவர் நம்பாதவராக இருந்தார். அவசியமான சமயங்களில் உணவுக் கட்டுப்பாட்டைக் கூட ஏற்க மறுத்தாராம். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியுடன் தஞ்சை பெரிய கோவில் சென்ற போது அவர் கண்கள் இருண்டு, மயங்கி சில நிமிடங்கள் அமர்ந்துதான் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதன் முதற் கட்டமாம். ஆனால் அதுபற்றி அவர் அலட்டிக் கொள்ளாமல் மருத்துவர்களின் அட்வைசை மீறி அலட்சியமாக இருந்தது ஒரு உதாரணம்.


அமெரிக்கா செல்லுமுன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டபோது உடல்நிலை சரியில்லை என்ற தன்னைப் பற்றிய செய்தியோ படமோ வெளியில் வரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாராம். ஆஸ்பத்திரியில் அவரைச் சந்திக்க,  குறிப்பிட்ட இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி, அதுவும் மிகக் கஷ்டப்பட்டே வாங்க முடிந்ததாம்!



என்ன சொல்லுங்கள்....அவர் படங்களில் இருந்த ஜனரஞ்சகமும், சுவாரஸ்யமும் மறுக்க முடியாதவை. அவர் படங்களில் இடம் பெற்ற பாடல்களும் அவர் பேர் சொல்பவை. இத்தனை வருடங்கள் கழித்தும் அவரை நினைக்கும் ரசிகர்களையும், தொண்டர்களையும் பெற்றுத் தந்திருப்பவை அவர் இமேஜ்.    
               
"நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்..."
       

22 கருத்துகள்:

  1. எம்ஜிஆர் சினிமாவோடு நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும். அது மட்டும் தான் குறை.
    போயும் போயும் பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரொம்ப நாளாச்சு பாத்து/கேட்டு. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நல்ல வேளை பாட்டுல வாத்தியார் மாதிரி.. வேறே யாராலயும் முடியாதுங்க..

    பதிலளிநீக்கு
  3. எம்ஜிஆர்-சரோஜாதேவி, எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா ரெண்டுல எது பொருத்தமான ஜோடி?.

    பதிலளிநீக்கு
  4. சுவாரசியமான பதிவு. பாட்டுக்கள் எல்லாம் அருமை. எம்.எஸ்.வீ. இசையில எம்.ஜீ.ஆர் பாட்டுன்னா சும்மாவா!
    சைதாபேட்டையில் நான் இருந்த வீட்டுக்கு மிக அருகில்தான் மாரி ஹோட்டல். அவங்க எல்லாம் முழுக்க முழுக்க D.M.K. அதனாலேயே எங்க தெருவில்தான் நிறைய loudspeaker வைத்து எதுக்கெடுத்தாலும் பாட்டை போட்டுடுவாங்க. முதல் பாடல் எப்பவுமே 'நான் உங்கள் வீட்டு பிள்ளை' தான். ஆரம்பிச்ச கொஞ்ச நேரம்தான் தத்துவ பாடல்கள். அப்பறம் எல்லாம் டூயட்தான் நாள் முழுக்க. தெருவே அலறும். வீட்ல நாங்க பேசிக்கறது கூட கத்திதான் பேசிக்கணும். ரொம்ப ஜாலியா இருக்கும். அதெல்லாம் ஒரு காலம்!

    பதிலளிநீக்கு
  5. குரோம்பேட்டைக் குறும்பன்17 ஜனவரி, 2012 அன்று AM 9:26

    அப்பாதுரை said...
    எம்ஜிஆர்-சரோஜாதேவி, எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா ரெண்டுல எது பொருத்தமான ஜோடி?.

    கருப்பு வெள்ளைப் படம் என்றால் சரோஜாதேவி; கலர்ப் படம் என்றால் ஜெயலலிதா.

    பதிலளிநீக்கு
  6. மூன்றெழுத்துக்கு இருந்த மகிமை அபரிமிதம்.எனக்கு எம்ஜிஆர் சரோஜாதேவி ஜோடிதான் பிடிக்கும்.
    ஜயலலிதா அவரை இன்னும் இளமையாகக் காட்டினார்.
    துரை.சரியா.
    எபி உங்கள் பாட்டுகள் அனைத்தும்சூப்பர். இப்போ சிவகுமார் ஜயாடிவில எஞியார் பாடல்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.''போயும் போயும்'' தான் போய்க் கொண்டிருக்கிறது,.அரசியல் வாழ்க்கையை(இருவருக்கும்) மாற்றிவிட்டது.

    பதிலளிநீக்கு
  7. பாசம் படத்தில் அவர் நடிப்பு ரொம்ப நன்றாக இருக்கும்.
    அலுக்காமல் எங்க வீட்டுப் பிள்ளை படத்தை ஏத்தனை தடவை வேணுமானாலும் பார்ப்பேன்.:)

    மதுரை வீரன் இன்னோரு படம்.சகாப்தம்னால் இவரும் சிவாஜியும் தான்.

    பதிலளிநீக்கு
  8. எங்கள் தங்கம், நினைத்ததை முடிப்பவன், மன்னாதி மன்னன், மீனவ நண்பன், படகோட்டி, ஆயிரத்தில் ஒருவன், --- தலைப்புகளை பாருங்கள்.. இப்படி பொருத்தமுள்ள தலைப்பு இப்போது வருகிறதா ?

    பதிலளிநீக்கு
  9. மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர். நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  10. இப்படிகூட பதிவு தேத்த... ச்சே.. எழுதலாமா... எனக்கு இந்த ஐடியாவெல்லாம் வரலையே... :-))))

    எம்ஜியார் பிறந்த நாள் என்றதும் நினைவுக்கு வரும் ஒரு(ரே) சம்பவம்:

    1991... ஜனவரி மாதம்... அதற்குமுன்னதாகவே 2 மாதங்களாக உலகெங்கும் ஒரே பரபரப்பும், திகிலும்.. இப்போ போலவே.. இப்போ ஈரான்; அப்போ ஈராக், அதான் வித்தியாசம். மூன்றாம் உலகப் போர் நடந்தால் உலகமே அழிந்துவிடும் என்ற எண்ணம் உலவியது மக்களிடம்.. வரும், வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு, ஜன். 17 அன்று வந்தேவிட்டது... போர் அன்றுதான் துவங்குகிறது.. அன்று காலை கல்லூரியில் முதல் வகுப்பு.. சொக்ஸ் (சொக்கலிங்கம்) சாரின் வகுப்பு.. அவர் எங்களைப் பொறுத்தவரை காமெடி கலந்த வில்லன்!! வகுப்புக்கு வந்ததும் கேட்கிறார்.. “இன்று என்ன நாள் தெரியுமா..?” (அவர் பாடத்தை நடத்துவதைவிட பொதுவாகப் பேசுவதுதான் அதிகம்.. உடனே ரொம்ப நல்ல ஆசிரியர் என்று நினைத்துவிட வேண்டாம்.. சரக்கு அவ்வளவுதான்..) வகுப்பே அமைதி காத்தது.. (திகில் பாதி; கடுப்பு பாதி) நான் எழுந்து “இன்று எம்ஜியார் பிறந்த நாள் சார்” என்று சொல்ல வில்லன் சார் உள்பட வகுப்பே சிரிக்க.. ஹி..ஹி..

    பதிலளிநீக்கு
  11. வர வர என் பின்னூட்டங்கள் பலரின் பதிவுகளிலும் பெரிதாகிக் கொண்டே வருகிறது. இதனால்தான், பதிவு எழுத நேரம் கிடைக்கலைபோல - எனக்கு!! :-)))))

    பதிலளிநீக்கு
  12. வாத்தியார் பாடல்கள்னாலே உற்சாக இன்ஜெக்ஷன் தான். எனக்கு மக்கள்திலகம் சரோஜா தேவி ஜோடிதான் பிடிக்கும். நல்லாவே பதிவு தேத்தி, ஸாரி... போட்ருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  13. எம்.ஜி.ஆரின் நினைவில் அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்!

    //அவரை நினைவு கூரும் வகையில் ஒரு பதிவு தேத்தலாம்னு..சீ...போடலாம்னு...ஹி...ஹி...//

    நல்ல தொகுப்பு. கூடவே பொருத்தமான விளக்கம். தங்கள் கட்டுரையின் தொடக்கத்தில் தாங்கள் சொன்ன " தேத்தலாம்னு.. சீ...போடலாம்னு... ஹி...ஹி.. " - என்ற வாசகம்தான் கொஞ்சம் நெருடலாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  15. எப்படியோ எம்ஜியார் ரசிகராயிட்டிஙக!

    பதிலளிநீக்கு
  16. நல்ல ஒரு மாமனிதனை நினைப்பதில் மனதில் மட்டற்ற மகிழ்ச்சி.ஈழத்தோடு கை கோர்த்த இந்தத் தெய்வத்தை நினைக்கையில் பெருமை !

    மறக்கமுடியாத பாடல்கள்.நன்றி !

    பதிலளிநீக்கு
  17. எம்ஜியாரின் பாடல்கள் அனைத்தும் எப்பவுமே கேட்க இனிமையானவை. அதிலும் கண்போன போக்கிலே போன்ற தத்துவப் பாடல்கள்...சூப்பர்.
    துரை, எம்ஜியார்-ஜெயலலிதாவுக்கே என் வோட்டு.

    பதிலளிநீக்கு
  18. ஒரு மனிதருடைய பெருமை அவர் இறந்த பிறகும் பேசப்படவேண்டும்.அப்பொழுது தான் அவர் மாமனிதர்.....
    இருக்கும்போது நான்கு பேர் புகழ்ந்தால் அவரால் ஆகக்கூடிய காரியம் இருக்கிறதென்று அர்த்தம்
    .இறந்து இருபத்தாறு ஆண்டுகள் கழிந்தபின்னும் மதிக்கத்தக்க , மாமனிதராக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்....நல்ல பதிவு.நன்றி.......

    பதிலளிநீக்கு
  19. ஒரு மனிதருடைய பெருமை அவர் இறந்த பிறகும் பேசப்படவேண்டும்.அப்பொழுது தான் அவர் மாமனிதர்.....
    இருக்கும்போது நான்கு பேர் புகழ்ந்தால் அவரால் ஆகக்கூடிய காரியம் இருக்கிறதென்று அர்த்தம்
    .இறந்து இருபத்தாறு ஆண்டுகள் கழிந்தபின்னும் மதிக்கத்தக்க , மாமனிதராக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்....நல்ல பதிவு.நன்றி.......

    பதிலளிநீக்கு
  20. இறந்து போய் இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னமும் உயிர் வாழும் அபூர்வத் தலைவர். உண்மையிலேயே புரட்சித் தலைவர் என்ற பட்டத்துக்குப் பொருத்தமானவர். ஒரு விஷயம் கவனித்திருப்பீர்கள். சிவாஜி படங்கள் போல எம்.ஜி.ஆர். படங்கள் அழுகையும், தோல்வியும், புலம்பலுமாக இருக்காது. கதாநாயகன் நல்லவனாகவே இருப்பான். அவனுக்கு எப்போதும் வெற்றிதான். கஷ்டப்பட்டாலும் வெற்றி அடைவான். சந்தோஷமாகவே இருப்பான். அனைவரையும் திருத்துவான். அதே சமயம் ஒரு பரிதாபமும் வரும்படி நடந்து கொள்வான். அதுவும் பெண்களிடம் இது மிகுதியாகவே இருக்கும். எல்லாப் பெண் ரசிகைகளிடமும் ஒரு பரிதாபத்தைத் தூண்டி விட்டுத் தனக்காக ஐயோ, பாவம் எனச் சொல்ல வைத்த நடிகர்.

    ஹிந்தியில் ராஜ்கபூரும் தமிழில் பின்னர் வந்த பாக்யராஜும் (இவரைத் தானே எம்.ஜி.ஆர் தனது வாரிசு என்று சொன்ன நினைவு) கூட இதே வழியைத் தான் பின்பற்றினார்கள்.

    பதிலளிநீக்கு
  21. இவரைக் குறித்து ஜெயமோகன் எழுதிய விமரிசனக் கட்டுரை பெரும் கண்டனங்களுக்கு உள்ளானது

    நான் எம்.ஜி.ஆர்.ரசிகை எல்லாம் இல்லை. சொல்லப் போனால் சிவாஜி, எம்.ஜி.ஆர் இருவருக்குமே ரசிகை இல்லை. நடிகர்கள் மேலோ, எழுத்தாளர்கள் மேலோ, விளையாட்டு வீரர்கள் மேலோ எல்லாரும் வைக்கும் வெறித்தனமான அன்பைப் பார்த்தால் இப்படியும் இருக்க முடியுமானு நினைப்பேன். நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு விஷயமாகவே தோன்றும். இங்கே சொன்னது பொதுவாக அவங்க இரண்டு பேரும் நடிச்ச படங்களிலிருந்து கவனித்த ஒரு விஷயத்தைப் பகிர்ந்தேன். சாமானிய மக்களின் நாடியைப் பிடித்துப் பார்த்து அதற்கேற்பத் தன் வாழ்க்கையை, முக்கியமாய்த் தொழிலை அமைத்துக்கொண்டு அதில் வெற்றி கண்டார் எம்ஜிஆர், இன்றளவும் பலரின் மனதில் அந்த பிம்பம் தானே இருக்கிறது. அதைச் சுட்டிக் காட்டினேன். அவ்வளவே.

    பதிலளிநீக்கு
  22. நல்ல பதிவு.

    ஒரு தலைமுறையை தன் பாடல்களால் நல்வழியில் நடக்க வைத்தவர்.

    ஏழைகளின் மேல் உள்ளார்ந்த அன்பு கொண்டிருந்தவர்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!