செவ்வாய், 13 மார்ச், 2012

உள் பெட்டியிலிருந்து - 3 2012



சந்தோஷம்  என்பது ... 
    
வாழ்வில் நாம் விரும்பாத எந்த விஷயமும் சுவாரஸ்யமாயிருப்பதில்லை  ! 

 
           
மற்றவர்களுக்கு சந்தோஷம் கொடுப்பவர்கள்தான் அதிக சந்தோஷமாயிருக்கிறார்கள்..
 
            
உங்களை வெறுத்தவர்களையும் புண்படுத்தியவர்களையும் தண்டிக்கும் வழி அவர்களை லட்சியம் செய்யாமல் அவர்கள் முன் நீங்கள் சந்தோஷமாக வாழ்வதுதான்.
 
              


சந்தோஷத்தில் அழும் ஒருவனின் கண்ணீரின் முதல் துளி முதலில் வலது கண்ணிலிருந்து விழுகிறது. வலியில் அழுபவன் கண்ணீர் இடது கண்ணிலிருந்து விழுகிறது!    
====================

கேட்காத கவிதை / பார்வையின் மறுபக்கம் 
    
எல்லோருக்கும் நான் செவிடனாகத் தெரிகிறேனாம்... எனெக்கென்னமோ எல்லோரும் ஊமைகளாகத்தான் தெரிகிறார்கள்.    
===========================  

இரண்டு 'இரண்டு' விஷயம்...!
 விவாதங்களை விட,  விட்டுக் கொடுத்துப் போவது சிறந்தது.  

அர்த்தமில்லா வார்த்தைகளை விட அர்த்தமுள்ள மௌனம் சிறந்தது.




வாழ்வில் வெற்றி பெற,
கையில் ஒன்றுமே இல்லாத போது கூட நாம் எப்படி சமாளிக்கிறோம் என்பதும்,
கையில் இல்லாததே ஒன்றுமில்லை என்ற நிலையில் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதும் முக்கியம்.   
===========================

சமாளிப் பூ
  
என் நட்பைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. என் மௌனத்தைக் கூடப் புரிந்து கொள்ளும் அற்புத நட்புகள் இருக்கும் போது இதனால் எனக்குக் கவலையுமில்லை.   
=================================   





டெஃபனிஷன்.1
     
சிலருடைய பிரிவு துன்பத்தைத் தரலாம். ஆனால் அது அவர்கள் நம் இதயத்துக்கு எவ்வளவு நெருக்கமானவர்கள் என்பதை அறிய உதவுகிறது.           
=====================  
                         
டெஃபனிஷன்.2

இரண்டு பரஸ்பர மன்னிப்புகளுக்கிடயில்தான்  ஒரு சந்தோஷ உறவு மலர்கிறது.  
=================================

பழசும் புதுசும் 
   
வயதானவர் : தவறு செய்பவர்களுக்காகத்தான் அழிப்பான் உருவாக்கப் பட்டிருக்கிறது.    
                         
இளைஞன் :   திருத்திக் கொள்ள மனமிருப்பவர்களுக்காகத்தான் அழிப்பான் உருவாக்கப் பட்டிருக்கிறது.    
====================================

அஞ்சு நாலு மூணு...
                           
ஹலோ...உங்களிடம் ஐந்து விஷயங்கள் சொல்ல வேண்டும்.
ஆனால் இப்போது நாலு விஷயங்கள்தான் நினைவில் உள்ளன.
உண்மையில்  மூன்று விஷயங்கள்தான் முக்கியமானவை.
சொல்லப் போனால் உங்களுக்கு இரண்டு விஷயம் தெரிந்தால் போதும்.
விடுங்கள், ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்...
"நீங்கள் எனக்கு முக்கியமானவர்"    
============================
                         
நானும் மகாத்மாவும்
                        
நான் காந்தியின் விசிறி. அவர் படங்கள் சேர்க்கிறேன். எனவே நண்பர்களே,  நூறு,  ஐநூறு,  ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தால் எனக்கு அனுப்புங்களேன்...  

                             

                    

22 கருத்துகள்:

  1. எதை என்று குறிப்பிட்டுச் சொல்ல? அத்தனையும் அருமை.

    காந்தியின் விசிறியே, பத்து ரூபாயிலும் அவர் படம் இருக்கிறது. அனுப்பலாமா:)?

    பதிலளிநீக்கு
  2. //நான் காந்தியின் விசிறி. அவர் படங்கள் சேர்க்கிறேன். எனவே நண்பர்களே, நூறு, ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தால் எனக்கு அனுப்புங்களேன்... //

    Sema technique :))

    பதிலளிநீக்கு
  3. தத்துவங்கள் எல்லாமே அருமை. அந்த “எரேஸர்” - ரொம்ப அருமை. (அடிக்கடி உபயோகிப்பவளாச்சே!!) :-))))

    கண்ணீர் - இடது கண், வலது கண் - நிஜமா, இல்லை தத்துவார்த்தமா எடுத்துக்கணுமா?
    (ஐயம் அன் அப்பாவி)

    //நான் காந்தியின் விசிறி. அவர் படங்கள் சேர்க்கிறேன். எனவே நண்பர்களே, நூறு, ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தால் எனக்கு அனுப்புங்களேன்... //

    காந்தி ஸ்டாம்பு இருக்கு, வேணுமா? :-))))


    இதத்தான் முனனாடி ”பணம் நிம்மதி தராது. நிம்மதி வேண்டுவோர் பணத்தை என் அக்கவுண்டில் டிரான்ஸ்பர் செய்துவிடவும்”னு சொன்னாங்க. (நைஜீரியாவிலிருந்து மெயில் வருமே, அதுகூட இப்பிடித்தானாம்!!)

    பதிலளிநீக்கு
  4. உங்களை வெறுத்தவர்களையும் புன்படுத்தியவர்களையும் தண்டிக்கும் வழி அவர்களை லட்சியம் செய்யாமல் அவர்கள் முன் நீங்கள் சந்தோஷமாக வாழ்வதுதான்.

    சந்தோஷப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. வாழ்வில் வெற்றி பெற,
    கையில் ஒன்றுமே இல்லாத போது கூட நாம் எப்படி சமாளிக்கிறோம் என்பதும்,
    கையில் இல்லாததே ஒன்றுமில்லை என்ற நிலையில் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதும் முக்கியம்.

    அருமையான வாழ்வியல் தத்துவம்...

    பதிலளிநீக்கு
  6. விவாதங்களை விட, விட்டுக் கொடுத்துப் போவது சிறந்தது.

    அர்த்தமில்லா வார்த்தைகளை விட அர்த்தமுள்ள மௌனம் சிறந்தது.

    சிறந்து கவர்ந்த பயனுள்ள பகிர்வுகள் அனைத்துக்கும் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  7. அந்த 5, 4, 3ம் காந்தி விசிறியும் மிக அருமை. ரசிக்க வைத்தது,

    பதிலளிநீக்கு
  8. //நான் காந்தியின் விசிறி. அவர் படங்கள் சேர்க்கிறேன். எனவே நண்பர்களே, நூறு, ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தால் எனக்கு அனுப்புங்களேன்... //

    நூறு ரூபாய் தாள் தான் பதினஞ்சு இருக்குது.. பரவாயில்லையா..?
    ஜஸ்ட் மூவாயிரம் ரூபாய் போஸ்டல் செலவுக்கு என்னோட அக்கவுண்ட்ல போட்டீங்கன்ன.. உடனே அனுப்பிடறேன்..

    பதிலளிநீக்கு
  9. //வாழ்வில் வெற்றி பெற,

    கையில் ஒன்றுமே இல்லாத போது கூட நாம் எப்படி சமாளிக்கிறோம் என்பதும்,

    கையில் இல்லாததே ஒன்றுமில்லை என்ற நிலையில் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதும் முக்கியம். //

    அருமை!!

    பதிலளிநீக்கு
  10. மிகவும் தேவையான பதிவாக அமைந்துவிட்டது... எனக்கு. உளச்சோர்வை நீக்கியது.

    பதிலளிநீக்கு
  11. சந்தோஷத்திலும் துக்கத்திலும் எந்த கண்ணில் கண்ணீர் வருகிறது என்று அறிந்து கொள்ள ஆசை தான்... ஆனால் அந்த தருணங்களில் இந்த விஷயம் நினைவுக்கே வருவதில்லை... அழுது முடித்த பின், சான்ஸ் போச்சே என்று புலம்புவதோடு சரி

    பதிலளிநீக்கு
  12. சொல்லிய அத்தனை விசயங்களும் அர்த்தமுள்ளவை.
    சிரித்தாலும்
    அழுதாலும்
    நிலை ஒன்று தான் ..
    வாழ்ந்தாலும்
    தாழ்ந்தாலும்
    நிலை ஒன்று தான்
    என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது.
    டெஃபனிஷன் கள் சூப்பர்.
    நீங்கள் காந்தியின் விசிறியாக இருப்பதால்
    உங்கள் வேண்டுகோளை ரிசர்வ் வங்கிக்கு அனுப்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  13. எல்லாம் அருமை அற்புதம்.அந்தக் கடைசி...காந்தித்தாத்தா படம் !

    பதிலளிநீக்கு
  14. //மற்றவர்களுக்கு சந்தோஷம் கொடுப்பவர்கள்தான் அதிக சந்தோஷமாயிருக்கிறார்கள்..//

    எவ்வளவு உண்மை!

    //சிலருடைய பிரிவு துன்பத்தைத் தரலாம். ஆனால் அது அவர்கள் நம் இதயத்துக்கு எவ்வளவு நெருக்கமானவர்கள் என்பதை அறிய உதவுகிறது.//

    -- இதைச் சொன்னவரைத் தெரியும். எப்பொழுது சொன்னார் என்றும் தெரியும்.

    பதிலளிநீக்கு
  15. குரோம்பேட்டைக் குறும்பன்14 மார்ச், 2012 அன்று AM 7:15

    ////சிலருடைய பிரிவு துன்பத்தைத் தரலாம். ஆனால் அது அவர்கள் நம் இதயத்துக்கு எவ்வளவு நெருக்கமானவர்கள் என்பதை அறிய உதவுகிறது.//

    -- இதைச் சொன்னவரைத் தெரியும். எப்பொழுது சொன்னார் என்றும் தெரியும்./

    ஜீவி சார் - பின்னூட்டத்தில் என்ன சஸ்பென்ஸ்? - யார் சொன்னது, எப்பொழுது என்பது எனக்குத் தெரியவில்லை. சொல்லுங்க சார்.

    பதிலளிநீக்கு
  16. எல்லாமே மிகவும் அருமை. 'வாழ்வில் வெற்றி பெற' மிகவும் பிடித்தது.

    பதிலளிநீக்கு
  17. யாராவது சொல்கிறார்களா என்று பார்ப்போம். குறைந்த பட்சம் இவற்றைத் தொகுத்தவராவது.

    பதிலளிநீக்கு
  18. இன் பாக்ஸ்
    சிறந்து வருகிறது.
    காந்தித்தாத்தாவும் பத்துரூபாய் நோட்டுகளும் நல்ல கான்செப்ட்.
    அவருக்கு அதுதான் பிடித்திருக்கும் .எளியவர்களிடம் போய்ச் சேர அதற்குத்தான் வழிதெரியும்.

    பதிலளிநீக்கு
  19. எதைச் சொல்ல.. ? எதை விட...? அனைத்துமே அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!