Tuesday, April 10, 2012

பெண்ணென்றால் . . .

                       
நேற்று செய்திகள் பார்த்த  பொழுது, கேட்ட பொழுது, அதன் தாக்கம் கொஞ்சம் இருந்தது. 

இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பேப்பரில் படம் பார்த்ததும், மனம் மிகவும் துயருற்றது. 

பல ஆண்டுகள் முன்பு, சென்னையில், எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருந்த எம் எல் சி ஒருவரின் வீட்டில், அந்த எம் எல் சி யின் மனைவி, தன்னுடைய மருமகள் இரண்டாவதும் பெண் குழந்தையாகப் பெற்றார் என்பதற்காக, அந்த மருமகளை, திரும்ப வீட்டிற்கு அழைத்துக் கொள்ளாமல் இருந்து வந்தார். 

அந்தக் கொடுமைகளை எல்லாம் ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டது, இந்தச் செய்தி. ஒரு குழந்தை பெண்ணாகப் பிறப்பதற்கு, ஆணின் ஜீன்ஸ் அதிக காரணம் என்று படித்திருக்கின்றேன். அப்படி இருக்க, பெண்ணாகப் பிறந்த அந்த கள்ளம் கபடமில்லாத, அழகிய பிஞ்சு முகத்தை, காயப் படுத்த எப்படி ஒரு தகப்பனுக்கு மனம் வந்தது? 

என்ன மதம், என்ன ஜாதி, படித்தவரா அல்லது படிக்காதவரா என்ற வீண் வாதங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால், இது முற்றிலும் மனிதத் தன்மை அற்ற செயல் என்பது விளங்கும். 

பெண் குழந்தைக்கு, இந்தக் காயங்களை ஏற்படுத்திய அப்பாவிற்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? 

Photo : Courtesy : The Times of India.


14 comments:

ராமலக்ஷ்மி said...

கொடுமை :((!

வல்லிசிம்ஹன் said...

ஐய்யொ கண்ணே.கண்ணைத் திறந்துடுமா.

கணேஷ் said...

விசாரணை ஏதுமின்றித் தூக்கிலிடலாம் என்பதுதான் எனது தீர்ப்பு. படத்தைப் பார்க்கையிலேயே மனது துடிக்கிறது.

மோகன் குமார் said...

இப்படி பட்ட ஆட்களை என்ன செய்து தண்டித்தாலும் சரி !

***
//பெண்ணாகப் பிறப்பதற்கு, ஆணின் ஜீன்ஸ் அதிக காரணம்//


ஆணின் ஜீன்ஸ் மட்டுமே தான் காரணம். குழந்தை ஆணா, பெண்ணா என தீர்மானிப்பது ஆணின் அணுக்கள் தான் !

Geetha Sambasivam said...

ஆமாம், பார்த்தேன், நானும், ஆணின் க்ரோமோசாம் தான் காரணம். பெண்+ஆண் இருவருக்கும் X ஆக இருந்தால் பெண் குழந்தை என்று கேள்விப் பட்டிருக்கேன்.

இதைப் போன்ற இன்னொரு கொடுமை, கள்ளக்காதலுக்காகக் காதலன் தன் சொந்தக் குழந்தைகளையே கொன்ற கொடுமை. எங்கே போய் முட்டிக்கிறதுனு புரியலை! :(((((

மனித உரிமைக்காரங்க இதை எல்லாம் என்னனு கேட்க மாட்டாங்க! அவங்களுக்கு இவை எல்லாம் துச்சம்.!

Vairai Sathish said...

என்ன செய்வது நண்பா

நண்பர் கணேஸ் சொன்னது போல தான் செய்ய வேண்டும்

வை.கோபாலகிருஷ்ணன் said...

;(((((

மிகவும் கொடுமையாக இருக்கிறது.
மன வேதனையைத் தருகிறது.

ஆணோ பெண்ணோ ஏதோ ஒரு குழந்தை இன்னும் நமக்குப் பிறக்கப் பிராப்தம் இல்லையே என ஏங்குவோர் பலர் இருக்க, இப்படியும் சில அரக்கர்கள் ஆங்காங்கே இருக்கத்தான் இருக்கிறார்கள் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

ஹேமா said...

பெண்கள் இல்லாமல் வாழ்வும் மாட்டார்கள்.பெண்களை வாழவைக்கவும் மாட்டார்கள் !

Anonymous said...

இந்த கொடுமையை என்னத்த சொல்றது. இவங்க எல்லாம் ஒரு பிறப்பா? கேவலம்!
சமீபத்துல நடங்க ஒரு நிகழ்ச்சியை சொல்றேன். எனக்கு நெருங்கின தோழியோட உறவினர் வீட்ல, அவங்க மருமகளுக்கு முதல் குழந்தை பெண் குழந்தை. அந்த பெண் தன்னோட இருபத்தி ரெண்டாவது வயசுல ரெண்டாவது கர்ப்பம் ஆனாங்க. ரெண்டாவதா பிறக்க போற அந்த குழந்தை ஆண் குழந்தையா இருக்கணும்னு அந்த பெண்ணோட மாமியார் வேண்டிண்டு, ஆறு மாசம் கர்பமா இருந்த அந்த பெண்ணை கோவில்ல அங்க பிரதக்ஷணம் பண்ண வெச்சாங்க. இதை கேட்டபோது நான் நடுநடுங்கி போனேன். இப்ப நெனச்சாலும் நடுங்கறது. பாவம் அந்த பெண் எவ்வளவு பயந்திருப்பா, துடிச்சிருப்பா! அந்த பெண்ணோ, அவ புருஷனோ, அவளோட பெத்தவங்களோ யாருமே இதை ஏன் எதிர்க்காம போனாங்க. எப்பேர்பட்ட கொடுமை இது. அந்த கோவில்ல கூடவா இதை
அனுமத்திசாங்க. இப்படியா ஒரு குடும்பம் இருக்கும்? அந்த பெண்ணுக்கு இரண்டாவதா பிறந்ததும் பெண் குழந்தைதான். இதுல அந்த குடும்பமே ரொம்ப படிச்ச குடும்பம். நல்லவேளை அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறக்கலை. ஒருவேளை அப்படி பிறந்திருந்தா அவங்க ஊர்ல இதே மாதிரி இருக்கற மத்த
மாமியாருங்களும் குடும்பத்துக்கு ஆண் வாரிசு வேணும்னு தன் மருமகள்களை எல்லாம் என்ன பாடு படுத்தி இருப்பாங்க. அம்மா! நினச்சே பாக்க முடியல.

இப்பதான் மூன்றாம் சுழில வலைப்பூல ரத்தகாட்டேரி, பேய் விரட்ட பூஜை எல்லாம் பயமா இருக்குன்னு எல்லாம் எழுதினேன். ஆனா உண்மையிலேயே சில மனிதர்களின் குணங்களும், அவங்க சில நேரங்களில நடந்துக்கற விதமும்தான் குலை நடுங்குது. சில விஷயங்களை கேள்வி படும்போதும், பார்க்கும்போதும் மனசை கொல்றது. இந்த மாதிரி மனிதர்களை விட மோசமான ஜந்துக்கள் உலகத்துல இருக்கவே முடியாதுன்னு தோன்றது. வர வர மனிதர்களோட ஓரளவுக்கு
மேல பழக கூட பயமா இருக்கு.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Geetha Sambasivam said...

குழந்தை இறந்து விட்டதாம். இத்தனை கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு அது இருந்திருக்க முடியாது என்பது புரிந்தாலும் மனது கனக்கிறது; வேதனையாக இருக்கிறது. :(((((((

Geetha Sambasivam said...

அசுரர்கள் எல்லாம் இருந்தாங்க என்பது உண்மையே.

pudukai selva said...

அந்த கேடு கெட்டவநிடமிருந்து.
இந்த பாவப்பட்ட உலகிலிருந்தும்
அந்த தேவ குழந்தைக்கு விடுதலை...
பெண் குழந்தை பிறப்பதற்கு
தானே காரனமென்றரியாத
அந்த பாவிக்கு எப்போது தண்டனை?

வல்லிசிம்ஹன் said...

உடம்பே கலங்கியது நேற்று இந்தச் செய்தியைக் கேட்டது. காரணமானவனுக்கு என்ன தண்டனையோ.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!