புதன், 20 ஜூன், 2012

உள் பெட்டியிலிருந்து - 06 2012


இன்னொரு யானை - எலிக் கதை


எலியும் யானையும் காதலித்துக் கடிமணம் புரிந்து கொண்டனர். அடுத்த நாளே யானை இறந்து விட்டது. 

எலி சொன்னது, " என் அன்பே....ஒரு நாள் காதலுக்காக ஆயுசு பூரா என்னைக் குழி தோண்ட வச்சுட்டியே..."  
================================

ரொம்பப் பழசுங்க...


மிஸ்டர் எக்ஸ் : "நீதான் பில் கேட்ஸா ?" 
    
பில் கேட்ஸ் : "எஸ்.. வாட் டு யூ வான்ட்?"
    
மிஸ்டர் எக்ஸ் : என்ன கம்பியூட்டர் வச்சிருக்கே நீ...? My pictures னு இருக்கு திறந்தால் என் போட்டோ ஒண்ணு கூட இல்லை. Windows னு இருக்கு திறந்தா காத்தே வரலை. My Documents னு இருக்கு அதுல பார்த்தா என் வீட்டுப் பத்திரம் இல்லை...!
    
பில் கேட்ஸ் : "!!*#@*&..."
===============================
தமிழில் அவ்வளவு சரியா வரலையோ...

நான் எதாவது தவறு செய்திருந்தால் மறந்து விடுங்கள் ஆனால் தவறியும் கூட என்னை மறந்து விடாதீர்கள்...

==========================

கடவுளே...!

என்னிடம் யாராவது உன் வாழ்க்கை முழுவதும் யாரோடு கழிக்க விரும்புகிறாய் என்று கேட்டால் யாருக்கு நான் முழுதும் யோகியமானவன் இல்லை என்று தெரியுமோ அவர்களுடன்தான் என்று சொல்வேன்!

=============================

மாத்தி நேசி...சீ.... யோசி...

மற்றவர்களை நேசிப்பதை விட உங்களை அதிகம் நேசியுங்கள். ஏனெனில் வாழ்வில் பெரும்பகுதி நீங்கள் உங்களுடன்தான் செலவிடப் போகிறீர்கள். 

===========================

இது கேள்வி...
மகன் : "எகிப்துக்கு எப்போ அப்பா போனே..."
அப்பா : "ஏண்டா மகனே..?"
மகன் : "'மம்மி'யை எங்கேருந்து வாங்கினே..?"

============================

போக்குவரத்துத் துறையின் 'ந(கை)ச்'சுவை!


இரத்த தானம் செய்யுங்கள்... ஆனால் சாலையில் அல்ல!

===========================

மறக்க முடியாத சிறுவயது ஞாபகம்...

   

இரவு ஸோஃபாவில் படுத்துத் தூங்கி, காலை 'பெட்'டிலிருந்து எழும் அதிசயம்!

==========================
"அது"
         
ஒரு பறவை தேனியிடம் கேட்டது, "அரும்பாடு பட்டு, கடுமையாக உழைத்து, பறந்து பறந்து நீ சேகரிக்கும் தேனை மனிதன் களவாடிச் செல்வது உனக்கு வருத்தமாயில்லையா"

தேனீ சொன்னது, "மனிதன் நான் சேகரிக்கும் தேனைக் களவாடலாம். ஆனால் தேன் தயாரிக்கும் கலையை அவன் எந்நாளும் என்னிடமிருந்து திருட முடியாது"

=============================
சிக்கனம் சின்னு! 
    
காதல் மனைவி " என்னங்க என் செல்லுல உங்களோட ஒரு மிஸ்ட் கால் இருக்கு?"

காதல் கணவன் : " நீதானே உன் பிறந்த நாளுக்கு ஒரு ரிங் வேணும்னு கேட்டே.."

==========================

ஆங்கிலத்தில் மட்டுமே ரசிக்க...


Your nature is your future!

===========================

பழைய அர்த்தம் புதிய வரிகள்

அருகிலிருக்கும்போது அன்பு புரிவதில்லை. விலகிப் போகும்போது துன்பம் தாங்குவதில்லை.

=============================
கடவுள்...

கேட்கும்போது தரவில்லை என்றாலும் தேவைப் படும்போது தருவான்

வாழ்வின் விடைகளை கஷ்டப்பட்டுக் கண்டுபிடிக்கும்போது கேள்வித்தாளை மாற்றி விடுகிறான்.

=================================

ஊசி நட்பு ஊசா நட்பு










ஊசியும் நண்பனும் ஒன்று.
குத்தும்போது வலித்தாலும்
குணமாகத்தானே...

=======================
அட, ஆமாங்க...

மனதில் அமைதி இருந்தால்தான் எண்ணங்களில் தெளிவு இருக்கும்!
              
உங்களை நீங்களே கையாள மூளையை உபயோகியுங்கள். அடுத்தவர்களைக் கையாள இதயத்தைக் கையாளுங்கள்!
               
சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை. துன்பங்களைச் சந்திக்கத் தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை (கலாம்)
     
படங்கள் நெட்டிலிருந்து எடுத்தவை.
  

11 கருத்துகள்:

  1. // எலி சொன்னது, " என் அன்பே....ஒரு நாள் காதலுக்காக ஆயுசு பூரா என்னைக் குழி தோண்ட வச்சுட்டியே..." //

    ப்ளீஸ்.. பெட்ரோல் விலையை எலிக்காக குறைக்கவும்..

    // இரவு ஸோஃபாவில் படுத்துத் தூங்கி, காலை 'பெட்'டிலிருந்து எழும் அதிசயம்!//

    இதெல்லாம் இப்ப.. நம்ம பசங்களோட அனுபவம்..

    எனக்குலாம், 'கிடைத்த இடத்தில்/தரையில் படுத்து பாய் தலையணையுடன் எழும் ...' எனது நினைவில் வந்தது..

    பதிலளிநீக்கு
  2. சில சிந்திக்கவும் சில வாய்விட்டு சிரிக்கவும் வைத்தன.

    சிக்கனம் சின்னு அதிருகிறார்:)!

    பதிலளிநீக்கு
  3. //கேட்கும்போது தரவில்லை என்றாலும் தேவைப் படும்போது தருவான்
    தேவைப்படாத போது யார் என்ன கேட்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
  4. //..யாருக்கு நான் முழுதும் யோகியமானவன் இல்லை என்று தெரியுமோ அவர்களுடன்தான்..

    ஆயுசு பூரா புலம்பலைக் கேட்டுக் கொண்டிருக்கவா? what a loser!

    பதிலளிநீக்கு
  5. அனைத்துமே ரசிக்க வைத்தன. சிக்கனம் சின்னு வாய்விட்டுச் சிரிக்க வைத்தார். உள்பெட்டி பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  6. ஹா ஹா. 'ஆ' சிரியர்களுக்கு ஆனந்த வாழ்த்துக்கள். சிரிப் பணி தொடரட்டும். எப்பொழுதும் சீரியஸாக இருப்பதையே கொள்கை கொண்டவர்களும் கொஞசமாவது புன்னகைப்பார்கள். புண்ணியம் உங்களுக்கே.

    பதிலளிநீக்கு
  7. //மற்றவர்களை நேசிப்பதை விட உங்களை அதிகம் நேசியுங்கள். ஏனெனில் வாழ்வில் பெரும்பகுதி நீங்கள் உங்களுடன்தான் செலவிடப் போகிறீர்கள். //

    Very true.

    பதிலளிநீக்கு
  8. இரத்ததானம் செய்யுங்கள் சிந்திக்க வைத்த வரிகள் .

    பதிலளிநீக்கு
  9. இது எப்போப் போட்டீங்க?? எனக்கு அப்டேட் ஆகவே இல்லை இன்னிக்கு வரைக்கும். அதோடு மதுரை போயிருந்தேனே, அன்னிக்குச் சொன்னேனே, கோவிச்சுண்டு பந்திக்குப் போறேன்னு, அதான் போயிருந்தேன். :))))))))
    ஆனால் சில சமயம்/பல சமயங்களிலும் எங்கள் ப்ளாக் ரீடரில் அப்டேட் ஆவதில்லை. :(((((

    பதிலளிநீக்கு
  10. எங்கள் ப்ளாக்23 ஜூன், 2012 அன்று AM 6:27

    வருக வருக....

    மாதவன்,
    ராமலக்ஷ்மி,
    அப்பாதுரை,
    கணேஷ்,
    நாகை வை.ராமஸ்வாமி,
    மோகன் குமார்,
    சசி கலா,
    சமுத்ரா,
    கீதா சாம்பசிவம்,

    நன்றி அனைவருக்கும்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!