Friday, June 8, 2012

எட்டெட்டு பகுதி 20 :: மாயாவுக்கு அம்மா ஆவி செய்த உதவி!

               
எட்டெட்டு பகுதி 19 க்கு இது சுட்டி<< பிங்கியின் போஸ்ட் மார்ட்டம் ரிபோர்ட் - (ஒரு பகுதி:)  
             
பெயர் : பிங்கி

இனம்: பெண் 

வயது: சுமார் இருபது. 

உடல் சோதனைக்குக் கொண்டுவரப்பட்ட நாள்: 08-08-08. 

இறந்த நேரம்: காலை 08-08. 
   
இறப்புக்கான காரணம்: "பருகிய கோக்க கோலா பானத்தில், சாலிசைக்ளிக் ஆசிட், இப்ரால் (ஆயிரம் எம் ஜி)  ஆகியவை கலந்திருப்பது தெரிகின்றது. ஆல்கஹாலில், இவை இரண்டும் கலந்தால், அது உயிருக்கு பேராபத்தை விளைவிக்கும். பரிசோதனையில், வேறு எந்த சந்தேகத்துக்குரிய பொருட்களோ தடயங்களோ கிடைக்கவில்லை. மேலும் இறந்து போன இந்தப் பெண் கல்யாணமாகாத கன்னிப் பெண் என்பதையும் சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன."   

பிணப் பரிசோதனை தெரிவு செய்த போலீஸ் ஆபீசர் பெயர்: .............."  
*****************************************************  
     
(ஆவியுலகில்...) 
       
மாயா: என்னம்மா இது அநியாயமாக இருக்கு! பிள்ளையார் பிடிக்க குரங்காக மாறிவிட்டதே! 
   
அம்மா: "மாயா நான் ஆரம்பத்திலேயே சொன்னேன். 'இந்த உலகத்துக்கு வந்த பிறகு, அந்த உலகப் பிரச்னைகள் நமக்கு வேண்டாம்' என்று. நீதான் கேட்காமல் என்னென்னவோ பிரயத்தனங்கள் செய்தாய். விதியை மதியால் வெல்வதற்குக் கூட விதி சரியாக அமையவேண்டும். மேலும் ..."  
   
மாயா: அம்மா ஓ ஏ சாப்பிட வேண்டிய கோக்க கோலாவை, பிங்கி எப்படி, ஏன் குடித்தாள்? 
     
அம்மா: "உனக்கு மட்டும் சொல்கிறேன். நீ கே வி யிடம் - ஓ ஏ வின் கோக்க கோலா பானத்தில் தன்னிலை அறியும் மாத்திரையைப் போடச் சொன்ன பொழுது, நானும் கேட்டுக் கொண்டிருந்தேன். என்னுடைய எண்ண அலைகள் 'பரம்' வரை சென்றுவிட்டன. அங்கிருந்து உடனடியாக எனக்கு ஒரு எம் எம் எம் (மானசீக மெயில் மெசேஜ்) வந்தது. அதுல பரம், 'அந்தக் கோக்க கோலாவை, ஓ ஏ பருகக் கூடாது' என்று உணர்த்தியிருந்தார். " 
              
"அந்த நேரத்திலிருந்து, கே வி யின் மனதில், காலு சிங் மனதில் எல்லாம் புகுந்து, என்னென்னவோ செய்துப் பார்த்தேன். எதுவும் பலனளிக்கவில்லை. கே வி, (உனக்கு) மாயாவுக்கு உதவியே தீருவேன் என்று உறுதியாக இருந்தார். காலு சிங், கே வி மாத்திரை கலந்ததைப் பார்க்கவில்லை. மறக்காமல், ரூம் உள்ளே கோக்க கோலாவைக் கொண்டு போய் வைத்தவுடன், அதில் ஆஸ்பிரின் மாத்திரையைப் போட்டுவிட்டான். நல்ல வேளை - அந்த நேரம், ஓ ஏ பாத் ரூமில் இருந்தார். டெலிபோனுக்குப் பக்கத்தில், காலு சிங் கோக்க கோலாவையும், ஆரஞ்சு ஜுசையும் வைத்துவிட்டு அகன்றுவிட்டான். "
    
"வேறு எந்த வழியும் தோன்றாத நிலையில், மும்பை ஹோட்டல் பிராஜக்ட் பார்த்துக் கொள்ளும் மானேஜரின் மனதில் புகுந்து, அவரை, ஓ ஏ வுக்கு போன் செய்ய வைத்தேன். அவருக்கு ஆகஸ்ட் பதினொன்றாம் தேதி, திங்கட்கிழமையன்று லீவு வேண்டியதிருந்தது. இந்த நேரத்தில் போன் செய்தால், ஓ ஏ லீவு கொடுத்துவிடுவார் என்று அவர் மனதில் தோன்றவைத்தேன். அவர் போன் செய்தவுடன், பிங்கி போனை எடுத்தாள்."
   
"போன் செய்த மானேஜர் 'சும்மா' லீவு மட்டும் கேட்டால், கிடைக்காது என்பதால், போனை பிங்கி எடுத்தவுடன், 'மேடம், மும்பை ஹோட்டல் பிராஜக்ட் மிகவும் சரியாக நிறைவேறி வருகின்றது. ஹோட்டலை, குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே திறந்துவிடலாம் என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும்' என்று தொடங்கி, மெதுவாக தன்னுடைய லீவு சமாச்சாரத்திற்கு வந்தார்." 
   
"கேட்டுக் கொண்டிருந்த பிங்கிக்கு ஒரே சந்தோஷம். மும்பை ஹோட்டல் பிராஜக்ட் வெற்றிகரமாக முடிந்தால், ஓ ஏ வுடன் தன்னுடைய திருமணம் உடனே நடைபெறும் என்று சந்தோஷமடைந்தாள் அவள். அந்த சந்தோஷத்தில், காலு சிங் கொண்டு வந்து வைத்த குளிர் பானத்தை, அது என்ன என்று கூடப் பாராமல், அனிச்சையாக கையில் எடுத்துப் பருகத் தொடங்கியிருந்தாள் பிங்கி." 
       
(தொடரும்) .... "மாயாவின் அம்மா ஆவி"
(தொடரும்) ..... "பதிவாசிரியர்"  (வேறு வழி இல்லை!) 
                      

23 comments:

அமைதிச்சாரல் said...

உதவியைப் பாதியில் நிறுத்திட்டீங்களே... அடுத்த பகுதி எப்போ???

Geetha Sambasivam said...

காலம்பரலேருந்து இந்தப்பதிவுக்குவரச்சே எல்லாம் மின்சாரம் நின்னு போய்ட்டு இருக்கு. இது மாயாவின் ஆவி வேலையா? மாயாவோட அம்மாவின் ஆவி வேலையா? இல்லைனா பிங்கியோட ஆவி வேலையானு தெரியலை. அதை முதல்லே கண்டுபிடிக்கணும். :))))))

அப்பாதுரை said...

//விதியை மதியால் வெல்வதற்குக் கூட விதி சரியாக அமையவேண்டும்.
வட்ட வட்டப் பாத்தி கட்டி.

ஜீவி said...

//விதியை மதியால் வெல்வதற்குக் கூட விதி சரியாக அமையவேண்டும். மேலும் ..." //

:)) அப்படி அந்த விதி சரியாக அமைவதற்கு ஏற்ற மதிநுட்பம் வேண்டும்.

வட்ட வட்ட பாத்தி கட்டி..
(நன்றி: அப்பாஜி)

அப்பாதுரை said...

கல்யாணமாகவில்லை என்பதை எந்தப் பிரேத பரிசோதனை சொல்கிறது? எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்? ஆச்சரியமாக இருக்கிறதே!

அப்பாதுரை said...

இருந்தாலும் உங்க சின்சியரிடி பாராட்டுக்குரியது.
பிங்கியிலிருந்து கேஸ் நம்பர் வரைக்கும் போஸ்ட் மார்ட்டம் ரிபோர்ட் interesting.

பதிவாசிரியர் said...

//அப்பாதுரை said...
இருந்தாலும் உங்க சின்சியரிடி பாராட்டுக்குரியது.
பிங்கியிலிருந்து கேஸ் நம்பர் வரைக்கும் போஸ்ட் மார்ட்டம் ரிபோர்ட் interesting.//

கஷ்டப்பட்டு உருவாக்கிய படத்திற்கு உங்களிடமிருந்து வந்த பாராட்டு, பெரு மகிழ்ச்சியைத் தந்தது! நன்றி.

பதிவாசிரியர் said...

வட்ட வட்டப் பாத்தி கட்டி? ----- அப்பாதுரை, ஜீவி விளக்கமா சொல்லுங்க, புரியவில்லை!

பதிவாசிரியர் said...

//Geetha Sambasivam said...
காலம்பரலேருந்து இந்தப்பதிவுக்குவரச்சே எல்லாம் மின்சாரம் நின்னு போய்ட்டு இருக்கு. இது மாயாவின் ஆவி வேலையா? மாயாவோட அம்மாவின் ஆவி வேலையா? இல்லைனா பிங்கியோட ஆவி வேலையானு தெரியலை. //

நான் இந்தப் பதிவை பப்ளிஷ் செய்ய ஜூன் ஐந்தாம் தேதியிலிருந்து முயற்சி செய்து வந்தேன். ஒவ்வொரு தடவையும் வந்து, எடிட் செய்ய ஆரம்பிக்கும் பொழுது, சிஸ்டம் ஹாங் ஆகிக் கொண்டிருந்தது. அப்புறம் மாயாவின் பாட்டி ஆவியை மனமுருகிப் பிரார்த்தித்து, பிறகு இந்தப் பதிவை ஜூன் எட்டாம்(!) தேதிதான் பதிவிட முடிந்தது!

பதிவாசிரியர் said...

//அப்பாதுரை said...
கல்யாணமாகவில்லை என்பதை எந்தப் பிரேத பரிசோதனை சொல்கிறது? எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்? ஆச்சரியமாக இருக்கிறதே!//

இந்தூர் டாக்டருக்கு போன் செய்து கேட்டதில், அவர் கூறிய விளக்கம்: "பிங்கி போன்ற அழகிய இளம் பெண்கள் உடலில் கல்யாணமாகி, இருபத்து நான்கு மணி நேரத்திற்குள், பல மாற்றங்கள் காணப்படும். அந்த மாற்றங்கள் எதுவும் இந்த உடலில் காணப்படவில்லை. அதனால்தான் என்னுடைய ரிப்போர்ட்டில் அவ்வாறு குறிப்பிட்டிருந்தேன். மேலும் இறந்தவர் தற்கொலை செய்துகொண்டார் என்று போலீஸ் ஆபீசர் கூறியதால், தற்கொலைக்கு வேறு ஏதாகிலும் காரணங்கள் உண்டா என்பதையும், பிரேதப் பரிசோதனையில் ஆய்ந்து, அறிக்கையில் எழுதியுள்ளேன்."

ஜீவி said...

//வட்ட வட்டப் பாத்தி கட்டி? //

சைக்கிள் அனுபவங்கள் பற்றி பதிவு போட்ட உங்களுக்குத் தெரியாததா?
அந்த சைகிள் சக்கரம் தான்; அதன் அந்த சுற்றி வரும் சுற்றுப்பாதை தான்!

'வட்ட வட்ட பாத்தி கட்டி.. வண்ண வண்ண சேலை கட்டி.. கட்டழகி நடப்பது நாட்டியமா.. அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா..'
என்று மறக்கவே முடியாத ஒரு
பாடல் கூட உண்டே!

அப்பாதுரை said...

உடலில் மாற்றமில்லை என்பதால் கல்யாணமாகவில்லை என்று தீர்மானித்த டாக்டர் அசல் தானே?

அப்பாதுரை said...

ரைட்டுங்கோ ஜீவி..

அப்பாதுரை said...

இந்த இந்தூர் டாக்டரை விடறதில்லை இன்னிக்கு.. :)
சரி.. அப்போ கல்யாணமான டொன்டிபோர் மணி நேரத்துல அழகற்ற பெண்கள் உடலில் மாற்றம் ஏற்படுமா படாதா டாக்டர்..

பதிவாசிரியர். said...

எலெக்டிரானிக் சாமியாரும், காசு சோபனாவும் எட்டெட்டு தொடரின் அடுத்த சில பதிவுகளுக்குள் இந்தூர் செல்வார்கள், அப்பொழுது, அந்த இந்தூர் டாக்டரிடம், அப்பாதுரை கேட்ட சந்தேகங்களை கேட்டு, அவர் சொல்லும் விளக்கங்களை, எங்கள் ப்ளாக் ல பதிவிட சொல்லுகின்றேன். அதுவரையிலும், அப்பாதுரை பொறுமையாக காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்!

Vinoth Kumar said...

உங்களின் உழைப்பு இந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போட்டில் தெரிகிறது ...

சீரிய முயற்சியுடன் தொடரை தருவதற்கு நன்றிகள், மற்றூம் வாழ்த்துக்கள்.

ஆனாலும் சில சந்தேகங்கள்...
1) தன்னிலை அறியும் மருந்து என்பது விஷம் தானா ? வாழ்வில் பிரச்சனை என வந்த பெண்ணிடம் பிரச்சனையை தீர்க்க சாமியார் வழி சொல்வாரா இல்லை கணவரை விஷத்தை கொடுப்பாரா ? ( ஒருவேளை பிரச்சனைய தீர்க்கிரத விட பிரச்சனை பண்ணூரவங்களை தீர்த்துடலாம்கிர தமிழ் பட வில்லன் லாஜிக்கா ? )

2) பிங்கி சாகும்போது கல்யாணம் ஆகாமல் இருக்கலாம்.. ஆனால் கன்னியாக இருந்திருக்க முடியாது ...ஏனென்றால் .. மனைவி மாயாவிடம் கிடைக்காதது கிடைத்தால் மட்டுமே ஏஓ பிங்கியிடம் மயங்கி கிடப்பர்.. அப்போது தான் தன்னிலை அறியும் மருந்துக்கு வேலை ? ஒருவேளை பிங்கி கன்னியாவே இருந்தால் ஏஓ அவளிடம் மயங்கி கிடக்க வேண்டியது இல்லை. ஏஓ திருமனம் செய்ய மாட்டேன் என்று சொன்னாலும் அவளுக்கு வேறு ஒருவரை திருமணம் செய்வதில் ஒரு பிரச்சனையும் இல்லை.

Vinoth Kumar said...

3) போஸ் மார்ட்டம் ரிப்போர்டில் இறந்த் நேரம் குறிப்பிடபடும்.
4) விஷம் குடலில் இருந்ததா? எந்தெந்த பகுதியை பாதித்தது எப்படி மரணம் சம்பவித்தது ?

5)இறந்த பிங்கி ஆவி என்ன செய்கிறது ?

Geetha Sambasivam said...

பிங்கி சாகும்போது கல்யாணம் ஆகாமல் இருக்கலாம்.. ஆனால் கன்னியாக இருந்திருக்க முடியாது ...ஏனென்றால் .. மனைவி மாயாவிடம் கிடைக்காதது கிடைத்தால் மட்டுமே ஏஓ பிங்கியிடம் மயங்கி கிடப்பர்.. அப்போது தான் தன்னிலை அறியும் மருந்துக்கு வேலை ? ஒருவேளை பிங்கி கன்னியாவே இருந்தால் ஏஓ அவளிடம் மயங்கி கிடக்க வேண்டியது இல்லை. ஏஓ திருமனம் செய்ய மாட்டேன் என்று சொன்னாலும் அவளுக்கு வேறு ஒருவரை திருமணம் செய்வதில் ஒரு பிரச்சனையும் இல்லை. //

ஹும், இதைத் தான் கேட்கணும்னு பதிவுக்கு வந்தபோதெல்லாம், (இப்போப் புரியுது, பிங்கி ஆவிதான் அது) ஆவித் தொந்திரவாலே பின்னூட்டமே போகலை. அப்புறம் எப்படியோ மறந்திருக்கேன். விநோத்குமார் என்னோட பினாமி ஆகச் செயல்பட்டிருக்கார். பதில் சொல்லுங்க. :)))))))))

குரோம்பேட்டை குறும்பன் said...

ஆமாம் நான் கூட கேட்கணும்னு நெனச்சேன். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல இறந்தவர் பெயர் பிங்கி என்று டாக்டர் எழுதியிருக்கின்றாரே, பெயரை எப்படி பிரேத பரிசோதனை மூலம் கண்டுபிடித்தார் அந்த இந்தூர் டாக்டர்?

Vinoth Kumar said...

//......பெயரை எப்படி பிரேத பரிசோதனை மூலம் கண்டுபிடித்தார் அந்த இந்தூர் டாக்டர்..? //

பிரேத பரிசோதனை செய்ய சொல்லி போலிஸில் இருந்து கேட்பார்கள்.. அதை வைத்து தான் சோதனை பண்ண முடியும். அதில் வழக்கு எண் நாள், பெயர் போன்ற விபரங்கள் இருக்கும்.

Vinoth Kumar said...

Geetha Sambasivam @ vinoth
நான் பேச நினைப்பதேல்லாம் நீ பேச வேண்டும். ம்ம் ம்ம்ம் ம்ம்...

ஜீவி said...

// டாக்டர் அசல் தானே?//

அசல் இல்லை; ஏதோ தூரத்து உறவு முறைன்னு கேள்வி, அப்பாஜி!

அப்பாதுரை said...

வினோத் குமார் விடாக் குமாரா இருக்காரே?

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!