Saturday, June 9, 2012

ஆயிரம் மலர்களே, மலருங்கள்!எங்கள் ப்ளாக் பிறந்தது, 28-06-2009. மூன்றாவது இலை விடுவதற்கு இன்னும் மூன்று வாரங்கள் உள்ளன. 
   
'மொளச்சு மூணு இலை விடலை; அதற்குள் ஆயிரம் பதிவுகளா!' என்று வாசகர்கள் ஆச்சரியப்படலாம்.
          
'எங்களு'க்கு ஒரு வயதாகும்பொ ழுது, நாங்கள் வெளியிட்ட பதிவு இங்கே "ஆண்டு நிறைவு"  
                  
ஆனால், இந்த 'ஆண்டு நிறைவு' பதிவு வெளியாவதற்கு இரண்டு நாட்கள் முன்பே, (ஓராண்டு பூர்த்தியடையும் முன்பே) எங்கள் ஐநூறாவது பதிவு வெளியாகிவிட்டது!
                   
'எங்கள்' இரண்டு வயது முடிந்து, மூன்றாம் வயதில் காலடி பதித்த பொழுது, (28-06-2011) எழுநூற்று ஐம்பது பதிவுகளைக் கடந்துவிட்டோம். அப்பொழுது நாங்கள் வெளியிட்ட (வாசகர்களுக்கு எங்கள் வணக்கங்கள்) பதிவுக்கு முப்பத்தாறு கருத்துரைகள். அந்தப் பதிவுக்கு பின்னூட்டம் இட்டவர்கள் எல்லோரும் எங்கள் ரசிகர் மன்ற நிரந்தர உறுப்பினர்கள் ஆகிவிட்டார்கள். அதில் ஓரிருவர் மட்டும் இப்போது எங்கள் ப்ளாக் பக்கம் அதிகம் வருவதில்லை. 


நிற்க.   
                   
'ஆயிரம்' என்று சொன்னவுடன், என்னென்ன நினைவுக்கு வருகின்றது என்று யோசித்துப் பார்த்ததில் ....  
   
# ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணம் செய்! 
         
# கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். (இன்னும் முற்றவில்லை?) 
               
# என்னுடைய பெண்ணுக்கு, நானும் என் பையனும் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்த நாட்களில், சைக்கிளின் பின்னாடியே சந்தோஷமாக ஓடிவந்து, 'மலர்' என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட சிறு பெண். கண்களை மலர மலர விழித்துக் கொண்டு ஆர்வத்துடன், என்னுடைய பெண்ணிடம், "அக்கா அக்கா எங்க வீட்டுல ஆ ..... யிரம் ரூபாய் இருக்கு. நாங்க ரொம்ப பணக்காரவங்க!" என்று சொன்னது ஞாபகம் வருகிறது!
                  
எங்கள் ப்ளாக் ரசிகர் மன்ற உறுப்பினர்கள், அவர்களுக்கு ஆயிரம் என்றவுடன் நினைவுக்கு வருவது என்ன என்று, கருத்துரைக்கலாம், எங்களுக்கு எழுதலாம், அவர்களுடைய பதிவில் எழுதலாம். 
 *******************************
                    
'எங்கள்' ஆசிரியர்களில் ஒருவர் , ஆயிரமாவது பதிவுக்கு என்ன போடலாம் என்று கேட்டவுடன், சில பாடல்களும், படங்களும் எழுதி அனுப்பி, அந்தப் பாடல்களின் யூ குழாய் இணைப்புக் கொடுக்கலாம் என்று எழுதியிருந்தார். அந்தப் பாடல்கள், படங்கள் பட்டியல் இதோ இருக்கு. உங்களுக்குப் பிடித்த பாடல்களை, கூகிளாண்டவர் உதவியுடன், தேடிப் பார்த்து, ரசித்துக் கொள்ளுங்கள்! 
                  
பாடல்கள்:- 

ஆயிரம் மலர்களே மலருங்கள்... நிறம் மாறாத பூக்கள்.

ஆயிரம் பூக்கள் மலரட்டும்.... ஆயிரம் பூக்கள் மலரட்டும்.

ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்... ஒரு தாய் மக்கள்.

ஆயிரம் திருநாள் பூமியில் வரலாம்.... புது வசந்தம் 

ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே..... ஒரு குடும்பத்தின் கதை

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ..... கை கொடுத்த தெய்வம்

ஆயிரம் நிலவே வா ..... அடிமைப் பெண்
(இந்தப் பாடல் காட்சியில் ஒரு புதுமை என்ன என்றால், கதாநாயகன் சேலை உடுத்திக்கொண்டும், கதாநாயகி வேட்டி போன்று வெள்ளை உடை அணிந்துகொண்டும் இருப்பதுதான்!)

ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் .... அடுக்குமல்லி

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ..... அரசகட்டளை.

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு.... கற்பகம் 

ஆயிரம் நிலவு ஆயிரம் கனவு ....... அவளுக்கென்று ஓர் மனம்.

ஆயிரம் கோடி.... கரிசல் காட்டுப் பூவே. 

ஆயிரம் தாமரை மொட்டுக்களே ....அலைகள் ஓய்வதில்லை.

ஆயிரம் ஜன்னல் வீடு .... வேல் 

ஓராயிரம் பார்வையிலே... வல்லவனுக்கு வல்லவன்.

ஓராயிரம் கற்பனை.... ஏழைக்கும் காலம் வரும்.

வாரணம் ஆயிரம் - கேளடி கண்மணி.

சுகம் ஆயிரம் என் மனதிலே...... மயங்குகிறாள் ஒரு மாது

சுகமோ ஆயிரம்... துணையிருப்பாள் மீனாட்சி 

அழகு ஆயிரம்..உலகம் முழுவதும் .... உல்லாசப் பறவைகள். 
     
படங்கள்:- 
    
ஆயிரம் பூக்கள் மலரட்டும்
ஆயிரம் ஜென்மங்கள்
ஆயிரம் நிலவே வா
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வசிந்தாமணி.
ஆயிரம் வாசல் இதயம்.
ஆயிரம் பொய்
ஆயிரம் முத்தங்கள் 
ஆயிரம் ரூபாய் 
ஆயிரத்தில் ஒருவன்.
ஆயிரத்தில் ஒருத்தி 
வாரணம் ஆயிரம்
கைதி கண்ணாயிரம்!  
    
நாடகங்கள்:-  
    
ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிந்தாமணி. 
அலாவுதீனும் ஆயிரம் வாட் பல்பும் 
   
(அப்பாதுரை சார்! அது 1000 இல்லை; 1001 Arabian .... ) 
    
(ஆயிரம் தொடர்புடைய மீதிப் பாடல்கள், படங்கள் நினைவுக்கு வருபவர்கள் பின்னூட்டத்தில் பதியலாம்.) 
      
வாழ்த்தப் போகும் வாசகர்கள் எல்லோருக்கும் எங்கள் 1000 நன்றிகள் ! 
                         

40 comments:

பத்மநாபன் said...

ஆயிரம் பதிவு கண்ட எங்கள் ப்ளாக்கிற்கு பல்லாயிரம் வாழ்த்துக்கள்...

ராமலக்ஷ்மி said...

மிகுந்த மகிழ்ச்சி:)! பதிவு வானில் ஆயிரம் நிலவாக ஆயிரம் பதிவுகள்!

779-வது பதிவில் வாழ்த்தியது போலவே ஆயிரமாவது பதிவிலும் ஆசிரியர்கள் ஐவருக்கும் என் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடருங்கள். தொடர்கிறோம்:)!

பா.கணேஷ் said...

750க்கு அப்புறமா சேர்ந்துக்கிட்ட இந்த எங்கள் ப்ளாக் வாசகனின் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். இன்னும் பல ஆயிரங்கள் நாங்கள் படிக்க வேண்டும் என்பது விருப்பம். தொடர்கிறேன் நானும்.

தமிழ் உதயம் said...

விட்டு போன ஒரு பாடல்

ஓராயிரம் திருவாசகம் உன்னோடு நான் பேசுவேன்...

படம்: திருப்பங்கள்

V. Ramaswamy (நாகை வை. ராமஸ்வாமி) said...

ஆயிரம், பல்லாயிரமாக வளர வாழ்த்துக்கள். வாசகர் உள்ளம் குளிர, நெஞ்சம் மகிழ, கருத்துக்களும், புதினங்களும் பெருகட்டும். படைப்பாளிகளுக்கும், ஆசிரியர் குழுவுக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்....நாகை வை. ராமஸ்வாமி

kg gouthaman said...

வை ரா சார்! சௌக்கியமா? இப்போ எந்த ஊர்ல இருக்கீங்க?

வெங்கட் நாகராஜ் said...

ஆயிரம் பல நூறாயிரமாகப் பெருக வாழ்த்துகள் நண்பர்களே....

தொடர்ந்து அசத்துங்கள்.....

இராஜராஜேஸ்வரி said...

ஆயிரம் பதிவுகள் கண்ட எங்கள் பிளாக் ஆயிரம் ஆயிரம் பதிவுகள் கண்டு சிறக்க இனிய வாழ்த்துகள்..

Madhavan Srinivasagopalan said...

வாழ்த்துக்கள்....

ஆயிரம் சம்பந்தமாக ஒரு கேள்வி...

1) எண்களாக ஒன்று முதல் ஆயிரம் வரையில் எழுதினால் எத்தனை எட்டுக்கள்(8) எழுதுவோம் ?

2) மேலும் இந்தக் கேள்வியை விரிவாக்கினால்... ஒன்று முதல் 10**n ( n is a natural number) வரையில் எழுதினால் எத்தனை 'நான்கினை'(4) எழுத வேண்டும் ?

PS... for a change, I am asking Q in ur blog..

Madhavan Srinivasagopalan said...

10**n == 10 to the power 'n'
or also represented as 10^n

meenakshi said...

ஆயிரம் பதிவுகள் கண்ட 'எங்கள் ப்ளாக்' வலைபூவிற்கு ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்!
ஆயிரம் என்றதும் நினைவுக்கு வரது நிறைய இருக்குங்க. பாடல்களை பற்றி சொல்லும்போது குறிப்பா எங்காளோட இந்த பாட்டுதான் சட்டுன்னு ஞாபகம் வந்துது. நீங்க இந்த பாட்டை மறந்துட்டீங்களே! :)
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே, உனக்கு நீதான் நீதிபதி.
ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு பாடுது மனது

விடாம தொடர்ந்து படிச்சுண்டு வர ரொம்ப சில பதிவுல 'எங்கள் ப்ளாக்' என்னிக்குமே உண்டுங்க. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

அப்பாதுரை said...

மலர் சொன்ன "நாங்க பணக்காரங்க..." - மிகவும் ரசித்தேன். சிட்டிகை இலக்கியம்.
ஆயிரத்தின் பிரம்மாண்டம் தாக்குகிறது.
முயற்சிக்கும் உழைப்புக்கும் வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

இன்னாடா.. மாதவன் ஒண்ணும் சொல்லலியனு பாத்துகினிருந்தேன்..

அப்பாதுரை said...

மாதவன்.. எங்களை என்ன ஹூசைனம்மானு நெனச்சீங்களா? டக்க்னு கணக்கு விடை சொல்ல?

குரோம்பேட்டை குறும்பன் said...

//மாதவன்.. எங்களை என்ன ஹூசைனம்மானு நெனச்சீங்களா? டக்க்னு கணக்கு விடை சொல்ல?//

இதற்கு ஹுசைனம்மா வரணுமா என்ன? இதோ நான் சொல்றேன்,
கணக்குக்கு விடை: டக்க்

Geetha Sambasivam said...

அப்பாதுரை ஆயிரம்னு சொல்றச்சேயே நினைச்சேன். ஆயிரம் பதிவானு. ஆயிரமாயிரம் வாழ்த்துகள். மேலும் பல்லாயிரக்கணக்கான பதிவுகள் காணவும், வாசகர்கள் கிடைக்கவும் வாழ்த்துகள்.

எனக்கு ஆயிரம் ரூபாய் சினிமா தான் நினைவில் வந்தது. அதுக்கு அப்புறமாத்தான் ஆயிரம் ரூபாய் நோட்டுச் செல்லாதுனு அறிவிச்சாங்களோ?

Geetha Sambasivam said...

கு.கு. கணக்கில் ராமாநுஜத்தையும் மிஞ்சிடுவார் போலிருக்கே! :P :P:P:P

Geetha Sambasivam said...

அப்பாதுரை ஆயிரம்னு சொல்றச்சேயே நினைச்சேன். ஆயிரம் பதிவானு. ஆயிரமாயிரம் வாழ்த்துகள். மேலும் பல்லாயிரக்கணக்கான பதிவுகள் காணவும், வாசகர்கள் கிடைக்கவும் வாழ்த்துகள்.

எனக்கு ஆயிரம் ரூபாய் சினிமா தான் நினைவில் வந்தது. அதுக்கு அப்புறமாத்தான் ஆயிரம் ரூபாய் நோட்டுச் செல்லாதுனு அறிவிச்சாங்களோ?

middleclassmadhavi said...

Menmelum peruga vaazhthukkal!

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள் !

ஹேமா said...

5 பேரும் சேர்ந்து இன்னும் ஆயிரமாயிரமாய் எழுத என் வாழ்த்துகள்.எங்கள் புளொக் அது எங்கள் புளொக் !

Anonymous said...

ஆயிரம் பதிவானால் அதிசயமோ அதற்கென்ன
பாயிரம் பாட நினைக்கின்றீர் படைப்பவரே - போயிரும்
புதிதாய் புரட்சியாய் பொறுப்பாய் போக்கிரியை
எதுதான் போடலாமென் றிரும்.

ஹுஸைனம்மா said...

//எங்களை என்ன ஹூசைனம்மானு நெனச்சீங்களா?//

அவ்வ்வ்வ்.... வாழ்த்து சொல்ல லேட்டாகிப் போச்சேன்னு ஓடிவந்து பாத்தா... போட்டுத் தாக்கிருக்கீங்களே!! அப்ப எப்ப கணக்கு போட்டாலும் நான்(தான்) பதில் சொல்லணும்னு ஆகிப்போச்சா!! அவ்வ்வ்வ்வ்....^n

எனக்கு இந்த ஃபார்முலா போட்டுச் செய்ற கணக்கெல்லாம் வராதுங்க.. நம்புங்க.. கால், அரை, காலேஅரைக்கால்னு.. நான் வெறும் சில்லறைப் பார்ட்டிங்க!!

ச்சே... வளத்து வச்சிருந்த இமேஜெல்லாம் இப்பிடிப் போயிருச்சே!! அப்பவே உண்மையை ஒத்துகிட்டிருந்திருக்கணும்!! :-((((((

:-))))))

மோ.சி. பாலன் said...

ஆயிரம் யானை வென்றால் பரணி பாடலாம். ஆயிரம் பதிவு கண்ட உங்களை தரணி பாடும். பதிவு ஆயிரம் தந்த பதிவு ஆசிரியர் குழு பல நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.

ஹுஸைனம்மா said...

//1) எண்களாக ஒன்று முதல் ஆயிரம் வரையில் எழுதினால் எத்தனை எட்டுக்கள்(8) எழுதுவோம் ?//

இதே போல முன்பு 1-100ல் எத்தனை ஒன்பதுகள் என்று கேள்விக்கு (தப்பா) பதில் கண்டுபிடிச்ச அனுபவம் உண்டு. அதனால், மானம் போகுதேன்னு ‘உக்காந்து’ யோசிச்சதில், இந்தக் கேள்விக்கு (மட்டும்) விடை கண்டுபிடிச்சேன்.

1-100: 8, 18, 28, 38, 48, 58, 68, 78, 80,81,82,83,84,85,86,87,88, 89, 98 - இப்படி 20 எட்டுகள்.

இதே போல, 101-200 லும் 20 எட்டுகள். போலவே 201-300, 301-400, 401-500, 501-600, 601-700, 701-709, 901- 1000 லும் தலா 20.

800-900 ல் 121 எட்டுகள்.

ஆக, 9x20 + 121 = 301 எட்டுகள்.

சரியா?

அடுத்த கேள்விக்கெல்லாம் நான் வொர்த் இல்லை. ஆளைவிடுங்க!!

இனி யாராவது ‘கணக்கு-ஹுஸைனம்மா’ன்னு சொல்லிப் பாருங்க.... (கோவமா இருக்கேங்கிறதுக்கு என்ன “ஸ்மைலி” (!!) போடணும்?? அதை இங்கே போட்டுக்கோங்க.)
:-)))

ஹுஸைனம்மா said...

//800-900 ல் 121 எட்டுகள்.

ஆக, 9x20 + 121 = 301 எட்டுகள்.//

ஹி.. ஹி... கேர்லெஸ் மிஸ்டேக்..

800-900 ல் 120 எட்டுகள்.

ஆக, 9x20 + 120 = 300 எட்டுகள்.

இப்ப அடுத்த கணக்குக்கு விடை இப்பிடி இருக்குமோன்னு தோணுது - ஃபார்முலால்லாம் போடலை, ஒரு லாஜிக்கலாப் பாத்தா..

10^2 ல் 20 எட்டுகள்
10^3 ல் 300 எட்டுகள்
அப்படின்னா...

10^n contains (n x 10^n-1) times of each digits என்பதுதான் அடுத்த கேள்விக்கு விடையோ?

Geetha Sambasivam said...

(ஹூசைனம்மா) சகுந்தலா அம்மா, மயக்கமா வருதே!!!! கணக்குன்னாலே வயித்தைக்கலக்கும். :)))))

Geetha Sambasivam said...

கோபமா இருக்கேன்னு காட்டிக்கிறதுக்கு சும்மா "க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"ரிடுங்க போதும். ராயல்டி மட்டும் மறக்காம அனுப்பி வைக்கணும்.

k_rangan said...

எட்டு எட்டில் ஆயிரம் போட்டுவிடுவீர்கள் என்று எதிர் பார்த்தேன். எப்படி ?
இப்படி:

888+ 88+ 8+ 8+ 8

Madhavan Srinivasagopalan said...

// 10^n contains (n x 10^n-1) times of each digits என்பதுதான் அடுத்த கேள்விக்கு விடையோ? //

Good... u got it..

ஹுஸைனம்மா said...

ஹை, கரெக்டா!! நன்றி!!

அதுக்காக இனி யாராவது இதுக்கு அடுத்த லெவல்லயெல்லாம் கணக்குப் புதிர் போட்டீங்க.... ஆட்டோ, சுமோதான்!! :-)))

//ராயல்டி மட்டும் மறக்காம அனுப்பி வைக்கணும்.//
கீதா மேடம், நாமெல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு. நோ ஃபார்மாலிட்டீஸ், ஓகே?! :-D

மோகன்ஜி said...

ஆயிரம் பதிவு! ஹைதராபாத்துக்கு வாங்க எல்லோரும் சுத்திப் போடுறேன்.. இது ஒரு பெர்யா சாதனை.. அதிகமான பதிவுகள் மட்டுமல்ல, அர்த்தமுள்ளவையும் தான் அவை என்பதோர் சிறப்பு.

மை சென்ட்... 'உலகம் ஆயிரம் சொல்லட்டுமே!

2. ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!

3.ஆயிரம் பேர் வருவார்.. ஆயிரம் பேர் போவார்.. ஆனாலும் ஒரு சிலர் தான் மனிதராக வாழ்வார்.

அமைதிச்சாரல் said...

ஆயிரத்துக்கு பல்லாயிரம் வாழ்த்துகள்...

ஜீவி said...

ஆயிரத்தில் நிறைய வெரைட்டியைக் காட்ட முயற்சித்திருக்கிறீர்கள்! அது தான் இந்த பிலாக்கின் முதுகெலும்பு, மூச்சு எல்லாம்! அதற்காக ஆயிரமாயிரம் வாழ்த்துக்களைப் பிடியுங்கள், முதலில்!

அடுத்து,

//எங்கள் ப்ளாக் பிறந்தது, 28-06-2009.//

இப்பொழுதெல்லாம் எங்கள் பிலாக்கில் எந்தத் தேதியையும் பார்த்தாலே, அதில் எட்டு இருக்கிறதென்று எண்ணுவது எனக்கு வழக்கமாகப் போய்விட்டது! அந்த அளவுக்கு அந்த எட்டெட்டின் மகிமை!
பார்ப்பதற்கு சாதாரணமாகத் தோன்றினாலும், உண்மையிலேயே மிகவும் உழைப்பெடுத்துக் கொண்டு உன்னிப்பாக எழுதுகிற பதிவு அது!

முத்துப் போல 5 ஆசிரியர்கள்! அந்த 'சிரி'யிலேயே உற்சாகச் சிரிப்பையும், 'ஸ்ரீ..'யையும் கொண்டு வந்திருக்கிறார்கள், பாருங்கள்! இந்த ஐவரின் அடிக்கடியான அட்டகாசங்களுக்கு மனம் கனிந்த உற்சாகமான வாழ்த்துக்கள்.

மேலும், தொடருங்கள்.. தொடர்ந்து வருகிறோம்!

ஜீவி said...

எங்கள் பிளாக்கில் எட்டிட்ட எந்தத் தேதியையும் பார்த்தாலே, அதில் எட்டு எத்தனை இருக்கிறதென்று... என்று ஒரு திருத்தம்..

அப்பாதுரை said...

சபாஷ் ஹூசைனம்மா.
-இப்படிக்கு கணக்குல புளி சங்கம்.

அப்பாதுரை said...

குகு நம்ம கட்சியா? எனக்கும் டக்க்ணு தோணிச்சுங்க.

Geetha Sambasivam said...

//ராயல்டி மட்டும் மறக்காம அனுப்பி வைக்கணும்.//
கீதா மேடம், நாமெல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு. நோ ஃபார்மாலிட்டீஸ், ஓகே?! :-D //

ஹுசைனம்மா, இப்படியா அநியாயத்துக்கு செண்டிமெண்ட் காட்டறது? என்னை "கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரவே" விடலையே நீங்க! என்ன போங்க! பின்னூட்டம் கொடுத்தாப்போலயே இல்லை.! :)))))

அப்பாதுரை said...

//(ஹூசைனம்மா) சகுந்தலா அம்மா, மயக்கமா வருதே!!!! கணக்குன்னாலே வயித்தைக்கலக்கும். :)))))

ஆமாங்க.. மோர் காய்ச்சி குடிக்க வேண்டிய நிலமையாயிடுச்சு..

Geetha Sambasivam said...

அதை ஏன் கேட்கறீங்க? கொழுமோர் காய்ச்சிக் குடிச்சுட்டு வந்தால் செண்டிமெண்டாலே டச்சிட்டாங்க. ராயல்டி கொடுக்காமல் இருக்கிறதுக்கு ஒரு நொ.சா. :P:P:P:P:P

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!