திங்கள், 11 ஜூன், 2012

நான் பார்த்ததிலே !


நண்பர் ஒருவர், எங்கள் ஆசிரியர் குழுவில் ஒருவருக்கு அனுப்பியிருந்த யூ -குழாய் குறும்படம் ஒன்று நெகிழ வைத்தது. 

அதை இங்கே எங்கள் வாசகர்களுக்காக, வெளியிடுகின்றோம். 

இந்தப் படத்திற்கு வசனம் எதுவும் தேவை இல்லை. இசை இருக்கின்றது. வாசகர்கள் இந்தப் படத்தைப் பார்த்து, எந்த இடம் அவர்களை நெகிழ வைத்தது என்று கருத்துரைக்கலாம். கவிதை எழுதுபவர்கள் இந்தக் குறும்படத்தில், பன்னிரண்டு நிமிட நேர ஓட்டத்தில், முதல் அல்லது நடு அல்லது கடைசி நான்கு நிமிடக் காட்சிக்கு ஏற்ப கவிதை எழுதலாம். அந்தக் கவிதைக்கு இசை அமைக்க எங்களுக்குத் தெரிந்த ஒருவர் இருக்கின்றார். அவர் இசை அமைத்து, பாடி, பாடலைப் பதிவு செய்து, அதையும் எங்கள் ப்ளாக் ல வெளியிட முயற்சி செய்கின்றோம்! 

Our sincere thanks to : NITHUNA NEVIL DINESH. 


13 கருத்துகள்:

  1. தாத்தா, பாட்டி ஒண்ணாச் சாப்பிடறது தானே? இது ஏற்கெனவே பலமுறை வந்திருக்கு. பாவம், அந்தப்பெரியவர்! டீக்கடையிலே வேலை செய்துட்டுக் கடைசியில் சாப்பிடுவார். நடுவில் வரும் சின்னப் பெண் குழந்தையோடு சிநேகம். சரிதானே?

    பதிலளிநீக்கு
  2. இது ஏன் எனக்கு ரீடர்லே தெரியலைனு புரியல்லை. :( தற்செயலா வந்தால் கண்ணிலே பட்டது, போணியே ஆகலை போலிருக்கே, :)))))

    பதிலளிநீக்கு
  3. /யூ -குழாய்//

    நீ(ங்கள்)- குழாய் ??

    //போணியே ஆகலை போலிருக்கே//
    உங்க கைராசி எப்படின்னு பாப்போம்!!

    ஒருவேளை (என்னைப் போல) எல்லாரும் படத்தைப் பாத்துட்டு, கண்ணத் தொடச்சிகிட்டு யோசிச்சுகிட்டே உக்காந்திருக்காங்க போல!! :-))))

    அங்க சாப்பிட்டுட்டுப் போறவங்கள்ல ஒருத்தராவது அவருக்கு டிப்ஸ் கொடுக்காமப் போயிருக்க மாட்டாங்கன்னுதான் தோணுது.

    பதிலளிநீக்கு
  4. நீ(ங்கள்) குழாய்னு எழுத வேண்டியது தானே? யூவை விட்டு வைப்பானேன்?

    பதிலளிநீக்கு
  5. குரோம்பேட்டை குறும்பன்11 ஜூன், 2012 அன்று PM 8:31

    ஓ? மலையாளப் படமா? தமிழிலே எடுத்தாக்க, 'கிழவரோட ராவுகள்' என்று பெயர் வைக்கலாம். மற்றபடி கவிதை எழுத எல்லாம் எனக்குத் தெரியாதுங்கோ!

    பதிலளிநீக்கு
  6. fantastic குரோம்பேட்டை குறும்பன்!

    பதிலளிநீக்கு
  7. அருமையான காணொளி....

    கவிதைக்கும் நமக்கும் காத தூரம்... :))

    பதிலளிநீக்கு
  8. நான்கு இடங்களில் வருகிறாற்போல் இரண்டு இரண்டு வரிகளாக எழுதியிருக்கிறேன்.
    சந்தம்:
    தன்னன்னான தானனன்னா
    தானனன்னா தானனன்னா
    தன்னன்னான தானனன்னா
    தனனனான தானனன்னா

    (வெயிலில் கால் மாற்றி நிற்கும் போது)
    ஒத்தக்காலு கொக்கைப்போல
    வெத்துக் காலில் காத்திருக்கேன்
    பத்து ஊரு போறவரே
    பசியும் ஆற வாருமையா

    (இளைஞர்கள் போட்ட பாட்டிலிலிருந்து தண்ணீர் கீழே கொட்டும்போது)
    என்னப்போல தள்ளாடித்தான்
    தண்ணியெல்லாம் சிந்திப் போச்சோ
    ரெண்டு சொட்டு நான் குடிக்க
    தண்ணிக்குந்தான் தாகம் போச்சோ?

    (உணவுப் பொட்டலம் எடுத்துகொண்டு வீட்டுக்கு நடந்து போகும்போது)
    காத்துலயும் உசுர வச்சான்
    சோத்துலயும் உசுர வச்சான்
    கால்நடையா போகும் என்னை
    மனுசனாக படைச்ச சாமி

    (பூனைக்கு சாதம் வைக்கும் போது)
    புருஷன் வெச்ச சோத்தினிலே
    பூனைக்குந்தான் பங்கு வெச்சா
    எங்க உசுரு பொழச்சதுபோல்
    எலி உசுரும் பொழச்சதையா

    பதிலளிநீக்கு
  9. எங்கள் ப்ளாக்15 ஜூன், 2012 அன்று AM 7:37

    ஆகா பிரமாதம், அற்புதம் மோ சி பாலன்!
    இப்போ எங்கள் ஆஸ்தான இசையமைப்பாளரை, இதற்கு இசையமைத்து,
    பாடச் சொல்லி, பதிவு செய்து, பதிவிட முயல்கின்றோம்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!