திங்கள், 18 ஜூன், 2012

சீ... அசிங்கம்! --- சிறுகதை

      

தீபா எங்கே....? தேடின  அவன் கண்கள்....!   

            
அதோ வருகிறாள்....   

             

'சீக்கிரம் என் பக்கம் வாயேன்... என் தேவதையே....'  

               
ஆட்கள் யாரும் அமராத மேசைப் பக்கமாக நின்று கொண்டான்.
                      
அவள் வரும்போதே பந்தியில் இருப்பவர்களோடு பேசிக் கொண்டு, தெரிந்தவர்களை விசாரித்துக் கொண்டு மெல்ல வந்தாள். ஒரு புதிய நடுத்தர வயதுக்காரனிடம் வலியப் போய்ப் பேச்சுக் கொடுத்தாள். 
            
யார் அவன்? இரண்டு நிமிடம் பேசி விட்டு அங்கிருந்து எதிர் வரிசைப் பக்கம் சென்றாள். அவனுக்கு, தீபா முன்பு சொல்லியிருந்த வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தன. "வயசானவங்க கிட்டயும் நடுத்தர வயசுக் காரங்க கிட்டயும் ஒரு சௌரியம் ராஜு.... அந்நியப் பொம்பளைங்களை முறைச்சு முறைச்சுப் பார்க்கறவங்க கிட்டப் போய்ப் பேசிட்டோம்னா அவங்க ஜொள்ளுல பாதி குறையும்... வயசுப் பசங்கதான் மோசம்!" 
           
"தலைகீழாச் சொல்றியோ... இன்னும் அவங்களைக் கிட்ட அண்ட விடறே..."
           
"தெரியாதவங்கன்னா வர்ற சுதந்திரம் கொஞ்சம் அறிமுகமானவுடன் 'கெடுத்துக்கக் கூடாது'ன்னு கொஞ்சம் ஜாக்கிரதை உணர்ச்சி வரும்..."
           
ராஜுவுக்கு அதில் உடன்பாடில்லைதான்.... ஆனாலும் என்ன செய்ய... சொல்கிறாள். கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்!
                     
"என்ன தனியா இழுக்கறீங்க....... " அருகில் வந்தாள் தீபா.
           
"உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லத்தான் தனியா நிக்கறேன்.. கிட்ட வாயேன்.."
             
"சொல்லுங்க.." சந்தேகத்துடன் கொஞ்சம் அருகில் வந்தாள்.
         
தாண்டிப் போன பரிமாறுபவருக்கு இடம் கொடுத்து நகர்ந்து அவன் தூரம் செல்லும் வரைப் பொறுத்து,  அருகில் உள்ள இலைகளுக்கு முன் யாரும் இல்லை என்று நிச்சயப் படுத்திக் கொண்டு அவளை நெருங்கினேன். 
     
"பசி வந்துடுச்சுன்னா சாப்பிடுங்களேன்... உங்களைப் பொறுப்பாப் போட்டிருக்காங்கன்னா அப்புறம்தான் சாப்பிடணும்னு நிக்கறீங்களா... நான் பார்த்துக்கறேன்..."
          
"சாப்பாடு உள்ளே போகலை தீப்ஸ்.... இப்போ அதைப் பற்றி நினைக்கவும் முடியலை.." அருகில் நெருங்கி அந்த மூன்று வார்த்தையைச் சொல்லி விட்டான்.
            
"எனக்கு வாந்தி வருது"  
             
"என்னது?"
        
"கத்தாதே... சாப்பிடற இடம்... காலைலேருந்து பேதி மாதிரி மூணு நாலு தரம் போயிடுச்சி.... இப்போ வாந்தி வேற வருது... மாப்பிள்ளைக்கு நல்ல வேலை கொடுத்துருக்காங்க உங்க வீட்டுல.... சொல்லவும் முடியாம.. உனக்காக எவ்வளவு நேரம் காத்திருப்பது... கொஞ்சம் பார்த்துக்கோ... வந்துடறேன்"
   
விரைந்து நடந்தான் ராஜு.  

                            

21 கருத்துகள்:

  1. ஹா... ஹா...
    பொறுப்பான வேலை.
    கதை ரொம்ப நல்லாயிருக்கு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அந்த அவசரத்திலும் எத்தனை யோசிப்புகள்?..

    பதிலளிநீக்கு
  3. அவசரமான விஷயத்தை அவசரமா சொல்லாம மெதுவா சொல்லலாமா?

    பதிலளிநீக்கு
  4. எந்தப் பெண் வீட்டுல மாப்பிள்ளையை பந்திப் பொறுப்பைக் கொடுப்பாங்க? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சும்மா விட்டுடுவாங்களா? நடக்கிற ”கதை”யாப் பேசுங்க!!

    பதிலளிநீக்கு
  5. நல்ல விவகாரமாப் போச்சே:)
    பெண்வீட்ல விசாரிப்பவர்களுக்கா பஞ்சம்!!!ரொம்ப நல்ல மாப்பிள்ளை.நல்ல கதை.

    பதிலளிநீக்கு
  6. //எந்தப் பெண் வீட்டுல மாப்பிள்ளையை பந்திப் பொறுப்பைக் கொஎன் மச்சினியின் திருமணத்தில் நான்தான் பந்தி விசாரிக்கும் வேலையை செய்தேன். இதில் என்ன தப்பு ??டுப்பாங்க?//

    பதிலளிநீக்கு
  7. நல்ல இருக்கே ...கதை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. ஹுசைனம்மா என்கிற லாயர் எப்ப எங்கே தப்பு நடந்தாலும் தட்டி கேட்பாராக்கும் !பதில் சொல்லுங்க

    பதிலளிநீக்கு
  9. எந்த லாட்ஜில் ரூம் போட்டு யோசிசீங்க பாஸ், பின்ன என்ன பாஸ் நீங்க அப்டி அப்டி கதை எழுதலாம் நாங்க இப்டி இப்டி கமென்ட் போட கூடாதா... பல்ப் தான் கொடுக்கப் போகிறீர்கள் என்று தெரியும், அதைக் கொடுத்த விதம் சபாஷ்

    பதிலளிநீக்கு
  10. சொந்தப்பிள்ளை போல் பழகும் மாப்பிள்ளைகளிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது உண்டுதான். சில மாப்பிள்ளைகள் தானே எடுத்துச் செய்யறதும் உண்டு. கதை நல்லாருக்கு.

    பதிலளிநீக்கு
  11. அந்த மூன்று வார்த்தைகளைச் சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், பாவம் மாப்பிள்ளை ரொம்பவே திண்டாடிவிட்டிருக்கிறார்:)!

    பதிலளிநீக்கு
  12. நல்ல கதை ! தொடரவும் ! வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  13. என்ன அநியாயம்? அட, மாப்பிள்ளைக்குப் பொறுப்புக் கொடுத்ததைச் சொல்லலீங்க. இது எனக்கு இப்போத் தான் அப்டேட் ஆகி இருக்கு. இங்கே வந்தால் ஒரு கும்பலே கூடிப் பேசிட்டு இருக்காங்க. அநியாயத்திலும் அநியாயம். கோவிச்சுண்டு சாப்பிடப் பந்திக்குப் போறேன்.

    பதிலளிநீக்கு
  14. ராஜூ வெறும் மேற்பார்வை மட்டும்தானே பார்த்தார்? எதுவும் பரிமாரவில்லையே..?

    பதிலளிநீக்கு
  15. தீபாவை இன்னும் நினைவில் வைத்திருப்பவர் நீங்கள் ஒருவராகத்தானிருக்கும்:)

    பதிலளிநீக்கு
  16. //"வயசானவங்க கிட்டயும் நடுத்தர வயசுக் காரங்க கிட்டயும் ஒரு சௌரியம் ராஜு.... அந்நியப் பொம்பளைங்களை முறைச்சு முறைச்சுப் பார்க்கறவங்க கிட்டப் போய்ப் பேசிட்டோம்னா அவங்க ஜொள்ளுல பாதி குறையும்... வயசுப் பசங்கதான் மோசம்!" //

    இது உங்க சைக்காலஜியான்னு தெரியல!இருந்தாலும் யாருக்கோ எப்பவோ போட்ட பின்னூட்டத்தை மறுபடியும் சொல்லி விடுகிறேன்.

    பம்பாய் தாதரிலிருந்து நானும் எனது நண்பர்கள் இருவரும் மெட்ராஸ் வர இருந்தோம்.ஒரு நடுத்தர வயதுப்பெண்ணும் ஒரு இளம்பெண்ணும் எங்கள் கம்பார்ட்மென்ட் வந்து உட்கார்ந்தார்கள்.நடுத்தர வயதுப்பெண் நேரிடையாக எங்களிடம் பேச்சுக்கொடுத்து இளம்பெண் வேலூர் மெடிக்கல் காலேஜ் செல்வதாகவும் சென்னையிலிருந்து டாக்சி பிடித்து அனுப்பி விடுமாறு வேண்டிக்கொண்டு சென்று விட்டார்.
    வயசுப்பசங்க ஒன்றும் மோசமில்லை:)

    பதிலளிநீக்கு
  17. எங்கள் ப்ளாக்20 ஜூன், 2012 அன்று PM 7:51

    // ராஜ நடராஜன் said...
    தீபாவை இன்னும் நினைவில் வைத்திருப்பவர் நீங்கள் ஒருவராகத்தானிருக்கும்:)//

    நீங்க கூடத்தான் ஞாபகம் வெச்சிருக்கீங்க!

    பதிலளிநீக்கு
  18. குரோம்பேட்டை குறும்பன்20 ஜூன், 2012 அன்று PM 7:57

    //நடுத்தர வயதுப்பெண் நேரிடையாக எங்களிடம் பேச்சுக்கொடுத்து இளம்பெண் வேலூர் மெடிக்கல் காலேஜ் செல்வதாகவும் சென்னையிலிருந்து டாக்சி பிடித்து அனுப்பி விடுமாறு வேண்டிக்கொண்டு சென்று விட்டார்.
    வயசுப்பசங்க ஒன்றும் மோசமில்லை:)//

    இந்த டெக்னிக்குக்குப் பேரு, 'திருடன் கையில சாவி கொடுக்கறது!'

    பதிலளிநீக்கு
  19. ஹாஹா, சென்னைப் பித்தனின் பின்னூட்டத்தால் மீண்டும் இதைப் படிச்சேன். நானாக இருந்தால் இப்படிக் கேட்டுட்டு இருக்க மாட்டேன். நேரே போய் வேலையை முடிச்சுட்டு வந்துடுவேன். யாரு கிட்டே? :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!