சனி, 21 ஜூலை, 2012

எட்டெட்டு பகுதி 23:: ஆஸ்காரும் டாய் காரும்!

                      
            
சாமியார் பேச்சு இன்றி விழுந்ததும், கே வி திகைத்தார். அறையில் இருந்த தொலைபேசியை நோக்கி ஓடினார். ஆம்புலன்சுக்கு போன்  செய்வதா அல்லது போலீசுக்கு போன் செய்வதா என்ற குழப்பத்தில் டெலிபோன் டைரக்டரியைத் தேடின அவருடைய கண்கள். அவசரத்தில் நூறு, நூற்று எட்டு எல்லா எண்களும் மறந்து போய்விட்டன அவருக்கு. 
          
 
           

"கவலைப் படாதீர்கள் கே வி, எனக்கு ஒன்றும் ஆகவில்லை. அந்த மாத்திரையில் விஷம் இல்லை. அதை உங்கள்  மனதில் சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் உறைக்கும்படி செய்ய வேண்டும் என்று நினைத்துதான் இந்த ஆக்ட் கொடுத்தேன்! பிங்கி மரணத்திற்கு, நீங்கள் காரணம் இல்லை." என்றார் அவர் பின்னே வந்து நின்றுகொண்டிருந்த எலெக்டிரானிக் சாமியார்! 
         
மேலும், "மனதில் எந்தக் குழப்பமும் வேண்டாம்; என்னுடைய குருநாதர் கொடுத்த மாத்திரை, விஷ மாத்திரை இல்லை. நீங்கள் கவலைப் படாமல் வீட்டிற்குப் போகலாம். உங்கள் பெண்ணின் பெயரை ANOOSKA என்று இல்லாமல், ANUSHKA என்று மாற்றிவிடுங்கள். இந்தக் கதையை இத்துடன் நீங்கள் மறந்துவிடலாம்!" என்றார். 
     
கே வி சந்தோஷமாக, மன நிறைவுடன் கிளம்பிச் சென்றார். 
==============================  
            
கே வி புறப்பட்டுச் சென்றவுடன், அந்த அலுவலகத்தின் உட்கதவு ஒன்றைத் திறந்து, அறையிலிருந்து வெளியே வந்தார் காசு சோபனா! 
            
எ சா: "எப்பிடிம்மா என்னுடைய நடிப்பு? ஆஸ்கார் கிடைக்குமா?" 
              
சோபனா: "ஆஸ்கார் கிடைக்காது. ஏன், டாய்  கார் கூடக் கிடைக்காது."
             
எ சா: "அட ஏம்மா அப்படி சொல்லுறே ?"
            
சோபனா: "கே வி, நீங்கள் கேட்ட பிளாஸ்டிக் பெட்டியை எடுப்பதற்கு, மேஜை இழுப்பறையைத் திறக்கத் திரும்பியபொழுது, நீங்க விஷ மாத்திரையை சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டு, காவிக் கலர் காட்பரி'ஸ் ஜெம் ஒன்றை, பேப்பரின் மீது வைத்ததை, நான் என்னுடைய அறையிலிருந்து, கணினியில், வெப் கேம் வழியா பார்த்துகிட்டு இருந்தேன். உங்களையும், உங்க குருநாதரையும் கைது செய்து, விசாரணை செய்யவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ரங்கனிடம் சொல்லப் போகின்றேன்." 
           
எ சா: "நீ செஞ்சாலும் செய்வே. சரி, இன்று காலை ஆபீஸ் வந்ததும், நீ சொன்னதை, உன் கனவை, மீண்டும் ஒருமுறை சொல்லு."
           
சோபனா: "இது, இன்று நேற்று மட்டும் வந்த கனவு இல்லை. கடந்த ஒரு வாரமாகத் திரும்பத் திரும்ப வந்த கனவுதான். என்னுடைய கனவில், அனுஷ்கா வந்து, 'உன்னுடைய ஆவி அக்கா சொல்கிறேன், கேட்டுக்கோ. கே வியிடம் இருக்கும் காவி மாத்திரையை வாங்கி, இந்த ஊருக்கு அனுப்பு' என்று சொல்வார். நான், 'இந்த ஊருன்னா எந்த ஊர்?' என்று கேட்டால், 'இந்த ஊருன்னா இந்த ஊருதான்' என்று சொல்லி மறைந்து விடுவார். 
            
எ சா: "எந்த அனுஷ்கா?"
          
சோபனா: "விக்ரமாற்குடு படத்தின் கதாநாயகிதான்." 
           
எ சா: "பாத்தியா சோ! நீ உன்னுடைய கனவை என்னிடம் சொல்லியிருந்ததால்தான், வந்தவர் தன பெயரை 'கே வி' என்று கூறியதும், அவரை உட்கார வைத்து, அவரிடம் கதை கேட்டு, அவரிடமிருந்த காவி கலர் மாத்திரையை, சாமர்த்தியமாக  வாங்கி வைத்துவிட்டேன். என்னைப் போய் போலீசில் மாட்டிவிடுகின்றேன் என்று சொல்கிறாயே!" 
            
சோபனா: "அந்தக் கதையை எல்லாம் வினோத் குமார் போல, நீங்க, சொல்லுறதை எல்லாம் நம்பறவங்க கிட்டே சொல்லுங்க. உங்க குருநாதரைக் காப்பாற்ற, நீங்க அந்த மாத்திரையை அபகரித்து அதற்கு பதிலாக காட்பரி'ஸ்  ஜெம் சாப்பிட்டு, ஃபிலிம் காட்டிட்டீங்க. இது எனக்குத் தெரியாதா?" 
            
எ சா: "சரி எது எப்படியோ போகட்டும்  இப்போ இந்த மாத்திரையை, இந்த ஊருக்கு  .... அடேடே ... ... இந்தூருக்கு அனுப்பணும். அதற்கு என்ன வழி? 'ஆவி சொல்லைத் தட்டாதே!' என்று ஆன்றோர் சொல்லியிருக்கிறார்கள்!"
             
அந்த நேரத்தில் அவருடைய அலைபேசி, காபி ராகத்தில் கீதமிசைத்தது. 
        
" Inspector K_Rangan calling ..." 
                        
(தொடரும்) 
                      

7 கருத்துகள்:

  1. விறுவிறுப்பாக செல்கிறது...
    தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  2. அது சரி, மத்தவங்க என்ன ஆனாங்க? நான் கேட்பது, ஆ"சிரி"யர்களை. காசு சோபனா மட்டும் வந்திருக்காங்க.ம்ம்ம் படிக்கிறது விநோத்குமார் மட்டும்தான்னு முடிவே பண்ணியாச்சு! அப்போ மத்தவங்க எல்லாம்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  3. பதிவாசிரியர்21 ஜூலை, 2012 அன்று PM 3:33

    சோபனா: "அந்தக் கதையை எல்லாம் வினோத் குமார் போல, நீங்க, சொல்லுறதை எல்லாம் நம்பறவங்க கிட்டே சொல்லுங்க.... "
    மத்தவங்க சாமியார் சொல்வதை எல்லாம் நம்பமாட்டார்கள் என்று சொல்கிறார் போலிருக்கு சோபனா!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்....
    கொஞ்சம் நீங்க கோவிச்சுக்கலலைன்ன .. எனக்கு தோணியதை சொல்லுறேண்..


    அது என்னனா....

    முதலில் அதாவது ஆரம்பத்தில் இருந்து... கே.வி ஆடிட் முடித்து போலிஸ் ஷ்டேசன் போகும் வரை கதையில் இருந்த தொடர்ச்சி விருவிருப்பு இப்போ மிஸ்ஸிங்...

    தொலைகாட்சியின் மெகா தொடரை 4 வருஷத்தில் பார்க்கிற மாதிரி ஒரு பீலிங்க்....

    பதிலளிநீக்கு
  5. @விநோத்குமார்,

    போட்டீங்களே ஒரு போடு! பாவம் பதிவாசிரியர், வழிகிற அசடை என்ன செய்யறதுனு யோசிக்கிறார். :))))))

    பதிலளிநீக்கு
  6. பதிவாசிரியர்25 ஜூலை, 2012 அன்று PM 2:58

    ஐ கோயிங் ஹிமாலயாஸ்!

    பதிலளிநீக்கு
  7. அதைச் செய்ங்க முதல்லே. கதையை நாங்களே ஒப்பேத்தறோம். )))))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!