சனி, 11 ஆகஸ்ட், 2012

பாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் - 4/8 To 11/8

                
எங்கள் B+ செய்திகள்! 
    
விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்
 
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கள்ளக் காதல் செய்தி இல்லாத நாள் வேண்டும்
தற்கொலைச் செய்தி இல்லாத நாள் வேண்டும்
நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.
சென்ற வாரத்து செய்திகளில் இருந்து, இதோ சில B+ செய்திகள்!
         
திங்கள்  
       
- வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை என்பது நிச்சயம் சென்னையைப் பொறுத்தவரை பாசிட்டிவ் நியூஸ்தான்!


- நிலவில் தண்ணீரில்லை என்று சொன்ன நீல் ஆர்ம்ஸ்டிராங் கருத்தைப் பொய்யாக்கி நிலவில் தண்ணீர் உள்ளது என்று சொன்னது தமிழன்தான், இந்தியன்தான் என்று பெருமைப் பட்டுள்ளார் மயில்சாமி அண்ணாதுரை.  

   
- இந்தியாவின் குடும்ப அமைப்பினாலும், சேமிக்கும் பழக்கத்தினாலும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இந்தியா தப்பியிருப்பதாக எஸ். குருமூர்த்தி பெருமிதம்.
  
செவ்வாய்   
        
- திங்கள்கிழமை செவ்வாயில் இறங்கிய அமெரிக்க விண்கலம் கியூரியாசிட்டி ரோவர் பற்றியும் அதன் தொழில் நுட்பத்தில் வேலை செய்யும் இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் பற்றிய செய்தி. 1969 இல் திங்களில் மனிதன் காலடி வைத்தான்! இன்று திங்கட்கிழமை அன்று செவ்வாய்க் கிரகத்தில் மனிதனை கை (முயற்சி) நுழைந்துள்ளது!

       
- திருவண்ணாமலை அருகே விழுப்புரம்-கோரக்பூர் ரயிலைக் கவிழ்க்க நடந்த சதியை, தண்டவாளத்தில் ஏற்பட்ட வித்தியாசமான சத்தத்தால் எச்சரிக்கை அடைந்த ஓட்டுனர் வண்டியை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது. சபாஷ் அலர்ட் ஓட்டுனர்!
    
- குடகில் பெருமழை ஆரம்பமாம். காவிரியில் தண்ணீர் வரும் சாத்தியம்! மேட்டூர் நிரம்பும் சாத்தியம். (இப்படி வந்தால்தான் உண்டு!)
             
புதன்
           
காஞ்சிபுரத்தில் கொத்தடிமைகளாக இருந்த ஏழு பேர்கள் மீட்கப் பட்டனர்! 
           
வியாழன்

       
இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளின் தேர்வு முறையை மாற்றியமைக்க யோசனை கேட்டு அனைத்துத் துணைவேந்தர்களுக்கும் அரசு கடிதம். 
           
வெள்ளி  

         
ரயிலில் இருந்து தூக்கி வீச முயன்ற குழந்தையை தத்து எடுக்க நடிகர்கள் லாரன்ஸ் மற்றும் பிரபு தேவா ஆர்வம். (இதை செய்தித் தாள்களில் படிக்க முடியவில்லை என்றாலும் முகப் புத்தகப் பகிர்வில் பார்த்தது)
      

16 கருத்துகள்:

  1. நல்ல விஷயங்கள். பல நான் வாசிக்க தவறியவை முடிந்தால் அவ்வப்போது தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. எங்கள் ப்ளாக்11 ஆகஸ்ட், 2012 அன்று AM 10:34

    ஒவ்வொரு சனிக்கிழமையும் தொடரும் எண்ணம் உள்ளது மோகன் குமார். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பல நல்ல விசயங்களை அறிந்து கொண்டேன்...

    பாராட்டுக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  4. இப்போதைய பேப்பர் மற்றும் டீவிக்கள் நலல் விஷயங்களை பகிர மாட்டார்கள்... அவர்களுக்கு ரேட்டிங் தான் முக்கியம்

    பதிலளிநீக்கு
  5. என் கண்ணுல மட்டும் நல்லது படுறதே இல்ல..

    பதிலளிநீக்கு
  6. விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்
    கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கள்ளக் காதல் செய்தி இல்லாத நாள் வேண்டும்
    தற்கொலைச் செய்தி இல்லாத நாள் வேண்டும்
    நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.
    சென்ற வாரத்து செய்திகளில் இருந்து, இதோ சில B+ செய்திகள்!//

    நல்ல செய்திகள்.
    நல்லதையே கேட்போம், நல்லதையே படிப்போம்,
    நல்லதையே சொல்வோம்
    என்று முடிவு செய்து விட்டால் எல்லாம் நல்லதே நடக்கும்.
    வாழ்த்துக்கள், நல்ல செய்திகளை தொடருங்கள் படிக்க ஆவலாய் இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  7. நன்றி நன்றி. ஏன் நீங்களே நல்ல நியூஸ் பேப்பர் கொண்டு வரக் கூடாது!!!

    பதிலளிநீக்கு
  8. எங்கள் ப்ளாக்11 ஆகஸ்ட், 2012 அன்று PM 12:37

    // வல்லிசிம்ஹன் said...
    நன்றி நன்றி. ஏன் நீங்களே நல்ல நியூஸ் பேப்பர் கொண்டு வரக் கூடாது!!!//
    என்ன பேப்பர் வேண்டும் என்று சொல்லுங்க. சைக்கிளில் கொண்டுவந்து போட்டுவிடுகின்றோம்.
    மாத சந்தா கட்டினீர்கள் என்றால் அது போதும்!!

    பதிலளிநீக்கு
  9. அட.. நியூஸ் டயரி நல்லாவே இருக்கே...

    பதிலளிநீக்கு
  10. நாட்டுல இப்படியும் சில நல்ல விஷயங்கள் நடக்கறது தெரிய வரப்ப சந்தோஷமாதான் இருக்கு. அப்பாடி! பரவாயில்லையேன்னு மனசுக்கு ஒரு திருப்திதான்.
    ஒவ்வொரு சனிக்கிழமையும் இதை தொடருவது நல்லா இருக்கும். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  11. மக்களைக் கவர அவர்களைக் கதிகலங்க வைக்கும் செய்திகளையே முன்னிலைப் படுத்துகின்றன மீடியாக்கள். நல்ல விஷயங்களைப் பகிர்வதால் நல்ல அதிர்வலைகள் பரவட்டும். தொடருங்கள்!!!

    பதிலளிநீக்கு
  12. ஓ...... பாசிடிவ் என்று தலைபிருந்தால் அருமையாய் இருக்கும் என்பது ஓ பாசிடிவ் ரத்தம் ஓடும் என் எண்ணம்... இருந்தும் நீங்கள் எப்போதுமே பீ பாசிடிவ்வாக இருப்பதால் மாற்றுக் கருத்துக்கள் ஏதும் இல்லாமல் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன் ( என்ன ஒரு புத்திசாலித்தனம் )

    பதிலளிநீக்கு
  13. இதில் என்ன பெருமை?

    //நிலவில் தண்ணீரில்லை என்று சொன்ன நீல் ஆர்ம்ஸ்டிராங் கருத்தைப் பொய்யாக்கி நிலவில் தண்ணீர் உள்ளது என்று சொன்னது தமிழன்தான், இந்தியன்தான் என்று பெருமைப் பட்டுள்ளார் மயில்சாமி அண்ணாதுரை.

    பதிலளிநீக்கு
  14. //செவ்வாயில் இறங்கி இன்றுடன் முப்பத்தாறு வருடங்களாகின்றன என்பதும் தெரிந்ததே.

    திங்கட்கிழமை அன்று செவ்வாய்க் கிரகத்தில் மனிதனை கை (முயற்சி) நுழைந்துள்ளது!

    பதிலளிநீக்கு
  15. கொலை,கொள்ளை,கற்பழிப்பு கள்ளக்காதல் இல்லாத பத்திரிக்கை செய்திகள் இல்லை இன்று.ஆனால் அதற்குப்பின்னால் இருக்கிற அரசியல் என ஒன்று இருக்கிறதே சார்.எனக்கு த்தெரிந்து ஒரு செய்திதாளை வரி
    விடாமல் படிக்கிற ஒருவர் படித்து முடித்ததும் பேசுவது கள்ளக்காதல் பற்றியும்,விபத்து பற்றியுமே/படிக்கிற பத்து பக்கத்தில் அவரது நினைவில் முக்கிய மாக நின்று கோலாச்சுவது எது?அதை செய்தது யார்?என்ற கேள்வியே இங்கு பிரதானமாய் எழுந்து நிற்கிறது.

    பதிலளிநீக்கு
  16. அருமையான பகிர்வுகள். இது போன்ற நல்ல செய்திகளை உங்களுக்கு முன்னரே தி.வா. பகிர்ந்து கொண்டிருந்தார். ஆனால் போணி ஆகலைனு விட்டுட்டார் போலிருக்கு! :)))))) இப்போ அந்த வலைப்பக்கத்தின் உரல் கூடக் கிடைக்கிறதில்லை. :((((

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!