புதன், 1 ஆகஸ்ட், 2012

ராங் நம்பர்!

 
காலையில் சென்னை உரத் தொழிற்சாலையிலிருந்து தொலை பேசி அழைப்பு.  "சார், கார் அனுப்பிட்டோம். நீங்க வந்து பார்த்த பின் தான் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனை செய்ய வேண்டும்."
        
வேக வேகமாகக் குளித்து காலையுணவு சாப்பிட்டு விட்டு ஷூ போட்டுக் கொண்டு கீழே வருவதற்கும் ஒரு கால் டாக்ஸி வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.  முன் கதவைத் திறக்கப் போன போது, சார் நீங்க பின்னே உட்கார்ந்துடுங்க ....... வந்தால், முன் சீட்தான் வேண்டும் என்று அடம் பிடிப்பார் என்றார் ஓட்டுனர். சரி என்று பின் சீட்டிலேயே உட்கார்ந்தேன்.
            
கார் கிளம்பின உடனேயே பாபுவுக்கு போன் செய்து, 'கிளம்பி விட்டேன்' என்றும் சொல்லி விட்டேன். 
            
சற்று நேரம் கழித்து டிரைவருக்கு ஒரு செல் போன் அழைப்பு.  "இதோ வந்து கொண்டே இருக்கிறோம் சார்.  பெசன்ட் நகரில் தாமஸ் சாரைப் பிக் அப் செய்து விட்டால் நேரே வந்துவிடுவோம்."
            
பெசன்ட் நகரில் தாமஸ் முன் சீட்டில் ஏறி உட்காரும் பொழுதே "உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே ' என்றவாறே உள்ளமர்ந்தார். கார் மகாபலிபுரம் சாலை நோக்கித் திரும்புவதை அப்பொழுதுதான் கவனித்த நான், 'இன்னும் யாராவது வருகிறார்களா என்ன?' என்று கேட்டேன் ஓட்டுனர், "இல்லை, நேராக பாக்டரிக்குத்தான் வரச் சொல்லியிருக்கிறார்கள்" என்று சொன்னார். "பின் ஏன் மணலியில் இருக்கும் பாக்டரிக்கு மகாபலிபுரம் ரோடுலே போறீங்க?" என்று கேட்டதும், "உங்க பேரு சுப்பிரமணியம் தானே?" என்று கேட்டார் ஓட்டுனர். நான் ஆமோதிக்க, "வீட்டு வாசலில் நின்றிருந்த நீங்கள், உங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்கும் எல்லா கார்களிலும் ஏறிப் போய்விடுவீர்களா?' என்று கேட்டார். 
          
நான், "அதெப்படி? ஒரு காரில் தானே என்னால் போக முடியும்" என்று ஜோக்'கடிக்க', அதற்குள் "சார், நீங்கள் வீட்டில் இல்லாமல் எங்கே போய் விட்டீர்கள்?" என்று உரத் தொழிற்சாலைக்காரர் அலைபேசியில் அலறினார்!    
             
அப்பொழுதுதான், 'நடந்தது என்ன' என்று என்னால் ஒருவாறாக யோசிக்கமுடிந்தது. மணலி உ.தொ. செல்லவேண்டிய சுப்பிரமணியம், தவறுதலாக மற்றொரு சுப்பிரமணியத்தின்  இடத்தில் மகாபலிபுரம் ரோடில் சென்றுகொண்டிருக்கின்றேன்! 
             
உடனடியாக ஒரு முடிவெடுத்தேன். ஓட்டுனரிடம், "என்னை இந்த இண்டஸ்டிரியல் எஸ்டேட் அருகே இறக்கிவிட்டு இங்கேயே காத்திருங்கள். எனக்கு வந்த டிரைவரை உங்கள் சுப்பிரமணியத்தை அழைத்துக் கொண்டு இங்கு வரச்சொல்வோம். அதிகப்படி டைம், டாக்ஸி சார்ஜ் இரண்டுக்கும் உரத்தொழிற்சாலை ஒத்துக் கொண்டால் அப்படியே விட்டு விடுவோம்" என்று சொன்னேன். ஒரு முக்கால் மணி காத்திருப்புக்குப் பின் மாற்று திட்டப் படி எல்லாம் நடந்தது. அந்த சுப்பிரமணியனை அழைத்து வந்து இறக்கிவிட்டு, என்னை ஏற்றிக்கொண்டு, மணலி ரூட்டில் சென்றது, உரத் தொழிற்சாலைக் கார். 
              
காரில் உட்கார்ந்ததும், "மணலிக்கு எப்பொழுது போவோம் ? " என்கிற  மாதிரி ஒரு தேவையற்ற(?)கேள்வியாவது கேட்காமல், கால் டாக்ஸியில் ஒருக்காலும் ஏறுவதில்லை இப்பொழுதெல்லாம்!  
                        

12 கருத்துகள்:

  1. வேறு எங்கேயும் கடத்தி கொண்டு செல்லாமல் இருந்தாரே... ஹா...ஹா...

    பதிலளிநீக்கு
  2. பாதியலாச்சும் கேட்டாரே.நல்ல ஒரு பாடம்தான் !

    பதிலளிநீக்கு
  3. எங்களுக்கும் இப்படி ஒரே நேரத்தில் கால் டாக்சி வருவது என்பது நடந்திருக்கு. ஆனால் நாங்க வண்டி நம்பர்லே இருந்து முன்னாடியே வாங்கி வைச்சுப்போமே! :)))) அதனால் கண்டு பிடிச்சுடுவோம். அப்படியும் சந்தேகப் பிராணியான நான் டிரைவரைத் துளைச்சு எடுத்துட மாட்டேன்!

    பதிலளிநீக்கு
  4. மறந்துட்டேனே, பெயரை எப்போ மாத்தினீங்க? :)))))

    பதிலளிநீக்கு
  5. நன்றி ஸ்ரீராம் அண்ணா எங்களோடு இணைந்ததற்கு (யுத்தம் ஆரம்பம் பகுதி - 12 )

    For more details

    http://ideasofharrypotter.blogspot.com/2012/07/blog-post_1378.html

    பதிலளிநீக்கு
  6. அருமையான சிறுகதை, ரசித்துப் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  7. எங்கள் ப்ளாக்2 ஆகஸ்ட், 2012 அன்று PM 9:59

    // வல்லிசிம்ஹன் said...
    ezhuthinathu yaaru. Gauthaman ji yaa Sriiraamaa:)confusion.//

    எங்கள் ஆசிரியர்கள் மொத்தம் ஐந்து பேர் என்பதை நினைவுறுத்துகின்றோம்!

    பதிலளிநீக்கு
  8. நாலு (# of) 'கால்' டாக்சி இருந்தா அப்படித்தான் நடக்கும்..
    எல்லாத்தையும் சேத்து முழுசா ஒரே ஒரு டாக்சி இருந்தா இந்தப் பிராப்லம்லாம் வராதில்ல..
    ஒரே டாக்சியா இருந்தாலும் அதுக்கும் நாலு 'கால்' வேணும்...

    # சம்பந்தமில்லாம சம்மதப் படுத்தி எழுதுவோர் சங்கம்...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!