திங்கள், 6 ஆகஸ்ட், 2012

வளரும் கலைஞர், ஸ்ரீராம் வாசுதேவன்

           
ஸ்ரீராம் என்று பெயர் இருப்பவர்கள் எல்லோருமே, பல திறமைகள் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கின்றோம். (எங்கள் ஸ்ரீராம் தும்முகிறார் - அவருக்கு இல்லை இந்த ஐஸ்! ). சமீபத்தில் ஒட்டக நாடு ஒன்றிலிருந்து வந்திருந்த ஒரு ஸ்ரீராம் எங்கள் ஆசிரியர்களில் ஒருவரை சந்தித்தார். பதின்ம வயதைக் கூட எட்டாத இந்த ஸ்ரீராம், இந்த வயதிலேயே ஒரு மியூசிக் ஆல்பத்தில் கூட பாடியிருக்கின்றார். 
   

அவரை எங்கள் வாசகர்களுக்காகக் கொஞ்சம் பாடச் சொன்னோம். உடனே இரண்டு பாடல்கள் பாடினார். அவைகள் இரண்டையும் பதிவு செய்து, இங்கே உங்களுக்கு வழங்குகின்றோம்.
   
ஸ்ரீராம் வாசுதேவன் அவர்கள் பாடிய இரண்டு பாடல்கள் இங்கே: 
         
பாடல் ஒன்று: 
       
பாடல் இரண்டு:


           
வாசகர்களுக்குத் தெரிந்த, வளரும் கலைஞர்கள் பலர் இருப்பார்கள். அவர்களுடைய திறமைகளை பதிவு செய்து, engalblog மின்னஞ்சலுக்கு, நவம்பர் பதினான்காம் தேதிக்கு முன்பாக அனுப்பி வையுங்கள். நவம்பர் பதினான்கு அன்று, குழந்தைகள் தினத்தில், அவர்களுக்குப் பரிசுகள் வழங்குகின்றோம். 
               

14 கருத்துகள்:

  1. ஸ்ரீராம் அவர்களுக்கும், உங்கள் புது முயற்சிக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. ஸ்ரீராம் என்ற அந்த இளைய கலைஞனுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. இந்த இளம் கலைஞனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  4. //ஸ்ரீராம் என்று பெயர் இருப்பவர்கள் எல்லோருமே, பல திறமைகள் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கின்றோம்.//

    அப்சலுட்லி ...

    பதிலளிநீக்கு
  5. மனமார்ந்த வாழ்த்துகள்.. இன்னும் பல சிகரங்களை இவர் எட்டட்டும்..

    பதிலளிநீக்கு
  6. இங்கே இப்போ பொதிகையில் ஶ்ரீராம் பரசுராம், அநுராதா ஶ்ரீராமோ காபி ராகத்தைக் கேட்டுட்டு இருக்கிறதாலே உங்க ஸ்ரீராம் பாட்டை அப்புறம் தான் கேட்கணும். கேட்டுட்டுத் திரும்பவும் கமென்டறேன். அதெப்படி உங்கள் ஆசிரியரை அவருக்குத் தெரிஞ்சது? முன் கூட்டிய அப்பாயின்ட்மென்ட் இல்லாமலே பேட்டியா?

    பதிலளிநீக்கு
  7. சைன் அப்பெல்லாம் பண்ணச் சொல்லுதே? :( உடனடியாக் கேட்கிறாப்போல் போட்டிருக்கலாமோ? மறுபடி முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. // அவர்களுக்குப் பரிசுகள் வழங்குகின்றோம். //

    ஹா.. ஹா.. ஹா..
    பரிசா என்னாத்த கொடுக்கப் போறீங்க.. ?
    ஆயிரம், அஞ்சாயிரம்னு பாயிண்டா கொடுப்பீங்கதான..!!

    பதிலளிநீக்கு
  9. எங்கள் ப்ளாக்6 ஆகஸ்ட், 2012 அன்று PM 3:00

    //அதெப்படி உங்கள் ஆசிரியரை அவருக்குத் தெரிஞ்சது? முன் கூட்டிய அப்பாயின்ட்மென்ட் இல்லாமலே பேட்டியா?//
    எங்கள் ப்ளாக் ஆசிரியர்களில் மூன்று பேர்களின், சகோதரியின் பேரன் - ஸ்ரீராம் வாசுதேவன்!

    பதிலளிநீக்கு
  10. /ஒட்டக நாடு//

    ”ஒட்டகமண்ட்” தெரியும். இது எந்த நாடு??

    //ஆசிரியர்களில் மூன்று பேர்களின், சகோதரியின் பேரன்//

    அப்படின்னா அந்த மூன்று பேரும் உ.பி. சகோதரர்களா? சொல்லவேயில்லை!! :-))))

    (ஒட்டகமண்ட் = Ootacamund) :-)))))

    பதிலளிநீக்கு
  11. எங்கள் ப்ளாக்6 ஆகஸ்ட், 2012 அன்று PM 3:30

    //”ஒட்டகமண்ட்” தெரியும். இது எந்த நாடு??

    //ஆசிரியர்களில் மூன்று பேர்களின், சகோதரியின் பேரன்//

    அப்படின்னா அந்த மூன்று பேரும் உ.பி. சகோதரர்களா? சொல்லவேயில்லை!! :-))))//

    உங்க ஊருக்குப் பக்கத்திலேதான்.

    மூன்று பேரும் உ பி இல்லைங்கோ! தமிழ்நாடுதான்!

    பதிலளிநீக்கு
  12. //மூன்று பேரும் உ பி இல்லைங்கோ! தமிழ்நாடுதான்!//

    தமிழ்நாட்டுல இருந்துட்டு, “உ.பி.” என்னானு தெரியலைன்னா..... It's a great insult!! :-)))))

    பதிலளிநீக்கு
  13. ஹுசைனம்மா சொல்வதை வழி மொழிகிறேன். அதானே, ஜிங் சக்க, ஜிங்சக்க,

    ஹூம், எனக்குக் கூட உபிச உண்டு. உங்களுக்கு உபினா என்னன்னு தெரியலை, ஷேம் ஷேம்:P:P:P:P

    பதிலளிநீக்கு
  14. ஸ்ரீராம் வாசுதேவனுக்கு வாழ்த்துகள்.சூப்பர் சிங்கர் யூனியரில் பக்குபற்றியிருக்கிறாரா?கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!