செவ்வாய், 25 செப்டம்பர், 2012

P. சுசீலா


சுசீலாம்மாவின் குரலை, அவர் குரலில் பாடல்களை ரசிக்காதவர்கள் யார்? நிறைய நிறைய அவரின் பாடல்கள் பிடிக்கும் என்றாலும் இங்கே கொஞ்சம் பகிர்கிறேன். மனம் வராமல்தான் நிறுத்துவேன்! சமீபத்தில் ஜெயா டிவி எம் எஸ் விஸ்வநாதன் நிகழ்ச்சியில் அவர் பாடலை அவரே பாடியபோது பாவமாக இருந்தது. அவருக்கு வயதாகி விட்டது. அவர் பாடிய பாடல்களுக்கு இல்லை! நம்மால் அதை இப்போதும் தெரிவு செய்து கேட்க முடியும்...


1) "கங்கைக்கரைத் தோட்டம்..."
ஆரம்ப அறிமுக வரிகள் கேட்டு ஓடிவிடாதீர்கள்! ரெண்டு வரிகள்தான்... !!

"கண் திறந்து பார்த்தேன்... கண்ணன் அங்கு இல்லை... கண்ணீர் பெருகியதே...." ஆமாம் கேட்கும் நமக்கும்தான்!




2) "காவிரிக் கரையின் தோட்டத்திலே...."
என்ன ஒரு உற்சாகமான பாடல்...
 



3) "என்னை மறந்ததேன்...."
சோகம் சொல்லக் குரல் போதுமா, வரி போதுமா, டியூன் போதுமா... ஆஹா..



4) "உன்னை ஒன்று கேட்பேன்..."
வரிகள் பிரசித்தம். முதல் நாலு வரிகளில் தலைப்பாக வைத்து மணியன் தனிதனிக் கதைகளே எழுதியிருந்தார்!
"பேசாத பெண்மை பாடாது உண்மை... கண்ணை மெல்ல மூடும்... தன்னை எண்ணி வாடும்..."



5) "கண்ணன் வருவான்...."
"உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்... இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்.."


6) "காதல் சிறகைக் காற்றினில் விரித்து..."
"பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி.. பேச மறந்து சிலையாய் நின்றால்...."


7) "மாலைப் பொழுதின் மயக்கத்திலே...."
"இன்பம் கனவில் துன்பம் எதிரில்..."
"இளமையெல்லாம் வெறும் கனவு மயம்தான்... மயங்குது எதிர்காலம்..."

8) "கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல..."
"அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்.... அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்..."




மீனாக்ஷி... !  சமீபத்தில் 'மூன்றாம் சுழி'யில் பின்னூட்டத்தில் 'எங்கள் ப்ளாக்கில் பாடல்கள் பகிர்ந்து நாட்களாகி விட்டன' என்று சொல்லியிருந்தீர்கள்... இப்போது திருப்தியா? எல்லா பாடல்களும் (மறுபடியும்) கேட்டீர்களா?

பாடல்கள் பகிரும்போது வழக்கமாகவே தோன்றுவது இதுதான். யார் 'க்ளிக்' செய்து கேட்கப் போகிறார்கள்? அவர்களிடம் இல்லாத பாடல்களா? அப்புறம் ஏன் பகிர்வு? இதெல்லாம் எனக்குப் பிடிக்கும்... இன்னும் கூடப் பிடிக்கும்... உங்களுக்கும் இந்தப் பாடல்கள் இப்போது நினைவுக்கு வருகிறதா என்று நினைவூட்டத்தான்!

26 கருத்துகள்:

  1. எல்லாப் பாட்டுமே கேட்டிருக்கேன்.

    சுசீலாம்மாவின் பிசிறில்லாத குரல் தேனொழுகும் குரல். என்னோட ஃபேவரிட் காதல் சிறகைக் காற்றினில் விரித்து...
    :-)

    பதிலளிநீக்கு
  2. 'முத்துமணி மாலை' (ஸ்மால்கௌண்dar) -- எனக்கு பிடிச்ச பாடல்.

    பதிலளிநீக்கு
  3. பாடலில் உள்ள உணர்வை நம்மிடம் இடமாற்றம் செய்துவிடும் வல்லமை அவருக்கு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. நான் நிச்சயம் கிளிக் செய்து கேட்பேன். இந்த பாடல்கள் எல்லாம் என்னிடம் இருந்தாலும் பதிவில் கேட்கும்போது அது ஒரு தனி சந்தோஷம்தான். பாடல்களை பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.
    எல்லாமே அருமை.

    'மாலை பொழுதின் மயக்கத்திலே' தொடர்ந்து எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். 'தெளிவும் அறியாது, முடிவும் தெரியாது, மயங்குது எதிர்காலம்'...நெஞ்சை உருக வைக்கும் வரிகள்.
    'என்னை மறந்ததேன்' பாடல் மேல் எனக்கு ஒரு தனி காதலே உண்டு. பாடல் சோகம்தான். இருந்தாலும் அந்த சோகத்தில் ஆழ்ந்து போவதே ஒரு தனி சுகம்.
    ஒவ்வொரு பாடலை ரசிப்பது பற்றியும் ஒரு கட்டுரையே எழுதலாம். எல்லாம் அவ்வளவு அற்புதம்.

    மீண்டும்ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  5. நம்பர்.7 எனக்கு மிகவும் பிடித்த பாடல்!
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. பி சுசீலாவின் குரல் தேன். எப்போது கேட்டாலும் மனதில் அமைதி தரும். எனக்குப் பிடித்த சில பாடல்கள்.
    - மையேந்தும் விழியாட
    - காலமிது காலமிது
    - சொல்ல சொல்ல இனிக்குதுடா
    - மன்னவன் வந்தானடி
    - மறைந்து நின்று பார்க்கும் மர்மமென்ன
    சொல்லிக்கொண்டே போகலாம். ஆயிரத்துக்கும் மேலாக சேர்த்து, தினமும் இரண்டு மணி நேரம் காரில் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நிறைய எழுதுங்கள்.

    அன்புடன் வெங்கட்

    பதிலளிநீக்கு
  7. அழகான தொகுப்பு. மாலைப் பொழுதின் மயக்கத்திலே.. பாடலுக்கான சூழல் என்னவென ஒவ்வொரு முறையும் நினைப்பேன், படம் பார்த்திராததால்.

    பதிலளிநீக்கு
  8. @ராமலக்‌ஷ்மி - part 3 of
    http://5eli.com/Movie/bhagyalakshmi-tamil-movie-watch-online/

    பதிலளிநீக்கு
  9. சுசீலா அம்மாவின் பாடல்கள் இவ்வளவும்தானா...குறிப்பிட்டு இதுதானென்று சொல்லவே வரவில்லை.இசைக்களஞ்சியம் அவர்.நன்றி !

    பதிலளிநீக்கு
  10. ஏழாம் நம்பர் பாடலைத் தவிர வேறு எதையும் முழுவதுமாகக் கேட்டது இல்லை.... சார் புதுப் பாடல்களை எப்போது ஒளிபரப்புவீர்களோ # டவுட்டு

    பதிலளிநீக்கு
  11. எல்லாமே பிடித்த பாடல்கள்..

    சுசீலாம்மாவின் குரலுக்குக் கேக்கணுமா என்ன?. அதுவும் இரவின் அமைதியில் கேக்க இன்னுமே ருசிக்கும்.

    பதிலளிநீக்கு
  12. @ பாலராஜன்கீதா,

    நன்றி. பார்க்கிறேன்:)!

    பதிலளிநீக்கு
  13. அத்தனையும் என் பேவரைட். அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
  14. எல்லாமுமே அருமையான பாடல்கள்...

    வீட்டில் பி சுசீலா அவர்களின் கலெக்சன்கள் பல உண்டு...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  15. பாடியிருப்பது சுசீலாவா சுசீலா அம்மாவா?

    பதிலளிநீக்கு
  16. கேட்க கேட்க தெவிட்டாத குரல்.. பிசிறில்லாத குரல் வளம் அது சுசீலா அம்மாவின் தனித்துவம்.. அருமையானக பாடல் தொகுப்பு!!! எக்கலதிர்க்கும் பொருந்தும் பாடல் வரிகள்...
    தேன்குரலில் தெவிட்டாத ராகங்கள்.. பகிர்விற்கு நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  17. எங்கயோ போக வைத்துவிட்டீர்கள். சுசீலாம்ம பாடலில் தடுமாறியதை நல்ல வேளை நான் பார்க்கவில்லை. குரலா அது. தேமழை.
    இன்னும் பாடல்கள்
    1,உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம்(மணப்பந்தல்)
    ஒரே ராகம்ம்ம்ம்ம்ம்ம்(மணப்பந்தல்
    3,அம்மம்ம்ம ஆஆ....(வெண்ணிற ஆடை
    4,இதய வீணை தூங்கும்போது...(இருவர் உள்ளம்)
    கண்கள் எங்கே(கர்ணன்)
    5தண்ணிலவு தேனிறைக்க(ப ம போதுமா)
    உறவு என்றோரு சொல்லிருந்தால்(இதயத்தில் நீ

    கைவலிக்கிறது. ஆஆஆ'ஓராயியம் நாடகம் ஆடினாள்(சு என் சுந்தரி)
    ஒரு நாள் யாரோ(....

    பதிலளிநீக்கு
  18. எத்தனையோ குரல்கள் தமிழ் திரைப்பட உலகுக்கு வந்து விட்டன.என்றும் நிரந்தரமானவை டி.எம்.எஸ் & பி.சுசிலா.

    அப்போதைய காலகட்டத்தின் எம்.எஸ்.வி,ராமமூர்த்தியின் மெல்லிசை,கண்ணதாசனின் கவிதை,டி.எம்.எஸ் & பி.சுசிலா குரல் என இனி தமிழ் திரைப்படத்துக்கு அமையுமா என்பது சந்தேகமே.

    அது போன்ற வாய்ப்பு இளையராஜா,வைரமுத்து,பாலசுப்ரமணியத்துக்கு அமையும் வாய்ப்பு கிடைத்தது.காலம் நழுவ விட்டு விட்டது.

    பதிலளிநீக்கு
  19. மருக்கொழுந்து செடியில் எங்கே கிள்ளி முகர்ந்தாலும் ஒரே மாதிரியே மணக்கும். அதுபோலத்தான் சுசீலாவின் குரல். அந்தக் குரலின் இனிமையைக் கண்டுகொண்டு அவருக்கு எம்மாதிரியான பாடல்களையெல்லாம் கொடுத்து அந்தப் பாடல்களையெல்லாம் எந்நாளும் நின்று நிலைக்கும் வரமாகச் செய்யும் வித்தை அன்றைய விஸ்வநாதன்-ராமமூர்த்தி,மற்றும் பல்வேறு இசையமைப்பாளர்களுக்குத் தெரிந்திருந்தது. தவிர கவியரசர் வேறு தம் பங்கிற்கு காலத்தால் அழியாத வரிகளைப் பதித்து வைத்தார்.
    நல்ல தெரிவுகள்.வாழ்த்துக்கள்.
    இதே கருத்துக்களைத்தான் நான் என்னுடைய பதிவில் கொஞ்சம் வலியுறுத்திச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. நன்றி மோகன் குமார்..

    நன்றி ஆர் வி எஸ்...

    நன்றி மாதவன்..

    நன்றி ஹேமா (HVL)..

    நன்றி மீனாக்ஷி..

    நன்றி குட்டன்..

    நன்றி வெங்கட்...

    நன்றி ராமலக்ஷ்மி

    நன்றி பாலராஜன் கீதா

    நன்றி ஹேமா

    நன்றி சீனு..

    நன்றி அமைதிசாரல்...

    நன்றி பாலகணேஷ்...

    நன்றி திண்டுக்கல் தனபாலன்...

    நன்றி அப்பாதுரை..

    நன்றி சமீரா...

    நன்றி வல்லிசிம்ஹன்...

    நன்றி ராஜ நடராஜன்...

    நன்றி அமுதவன்...

    பதிலளிநீக்கு
  21. Melody Queen P Susheela அவர்களின் இணையதளத்தின் சுட்டி
    http://psusheela.org/
    FB பக்கம்
    http://www.facebook.com/pages/PSusheela/190406834353528

    பதிலளிநீக்கு
  22. நன்றி பாலராஜன் கீதா
    பி. சுசீலாவின் வலைப் பக்கம் அவர் பாடிய முழுமையான பாடல்கள் பட்டியலுடன் இருப்பது போலத் தெரிகிறது. ஆனால் அங்கேயே தரவிறக்க வசதியும் தரப் பட்டிருக்கலாம்! வலைப்பக்க, முகப்புத்தக அறிமுகங்களுக்கு நன்றி பாகீ!

    பதிலளிநீக்கு
  23. லட்டு மாதிரி இருக்கிறார் ஜெயலலிதா.

    பதிலளிநீக்கு
  24. @ பாலராஜன்கீதா,

    பாக்யலக்ஷ்மி பார்த்து விட்டேன்:)! மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!