ஞாயிறு, 18 நவம்பர், 2012

ஞாயிறு 176:: ஆத்தோரம் மணலெடுத்து ...


                     
கவிதை எழுதுங்க! 
  

19 கருத்துகள்:

  1. கால்பட்டோ நீரடித்தோ
    கலைந்து விடுமெனத் தெரிந்தே
    பிஞ்சுக் கரங்கள் எழுப்பும்
    கலைநயம் மிக்க மணல் வீடுகள்.
    காலத்துக்கும் கலையாமல்
    பூவாசமாய் நெஞ்சோடு நின்று விடும்
    உவகை தந்த நினைவுகள்.

    பதிலளிநீக்கு
  2. ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...


    தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்...


    வெய்யிலிலே குளிர்ந்திருக்கும் வேணியிலே கொதியிருக்கும்...

    கையகளம் கதவிருக்கும் காற்றுவர வழியிருக்கும்...

    வழி மேலே விழியிருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும்...


    மணிக் கதவை திறந்து வைப்போம் மாமனுக்கு விருந்து வைப்போம்...

    அணி மணியாய் எடுத்து வைப்போம் கை நிறையா தேன் கொடுப்போம்...

    பதிலளிநீக்கு
  3. மணலினிலே மலைகட்டி
    மலையினிலே சிலை வைத்து
    சிலைக்கு ஒரு பெயர் சூட்டி
    சிங்காரமாய் மாலையிட்டு
    கும்பிட்டு வரும் குழந்தைகளே

    நீங்கள் கும்பிடும் சாமி மணல் சாமி இல்லை
    மனம் கேட்டதைக் கொடுக்கும் மலைச் சாமி
    உச்சியிலே உட்கார்ந்திருக்கும் உச்சிப் பிள்ளையார்.
    கவிதையெல்லாம் வராதுங்க:)

    பதிலளிநீக்கு
  4. எங்கள் ப்ளாக்18 நவம்பர், 2012 அன்று PM 1:13

    ராமலக்ஷ்மி கலக்கிட்டீங்க! நல்லா இருக்கு கவிதை.

    லக்ஷ்மி ஒரு வரிக் கவிதையா? நன்றி.

    இராஜராஜேஸ்வரி வாழ்க்கைப் படகு ஓட்டிட்டீங்க!

    வல்லிசிம்ஹன் கடைசி வரி மட்டும் பொய்! மற்றதெல்லாம் கவிதை. கவிதைக்குப் பொய் அழகு?

    பதிலளிநீக்கு
  5. அது வாழ்க்கைப் படகு இல்லை. வாழ்க்கை வாழ்வதற்கே:)

    பதிலளிநீக்கு
  6. எங்கள் ப்ளாக்18 நவம்பர், 2012 அன்று PM 4:28

    // வல்லிசிம்ஹன் said...
    அது வாழ்க்கைப் படகு இல்லை. வாழ்க்கை வாழ்வதற்கே:)//
    கரெக்ட். உங்கள்
    நினைவாற்றல் அபாரம்!

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. சின்னஞ்சிறு கைகளால்
    சிங்காரமாய் வீடு கட்டி
    வண்ண வண்ண பூக்களால்
    அலங்காரம் செய்து
    ஆனந்தமாய் விளையாடும்
    வாழ்வு மீண்டும் வந்திடுமோ?

    பதிலளிநீக்கு
  9. எங்கள் ப்ளாக்18 நவம்பர், 2012 அன்று PM 5:02

    புதுகை செல்வா - ஆமாம் அந்த நாட்கள் இனிமையானவை.

    பதிலளிநீக்கு
  10. வெடிச்சத்தமில்லாத
    தருணத்தில்தான்
    நம் வீடுகள் கட்டுப்பட்டது
    நாங்கள்....
    அந்த வீட்டை நினைத்து நினைத்து
    இப்போ அழுகிறோம்.

    நாங்கள் கண்ட கனவின்
    வலியூறியதன் வடு
    அந்த வீட்டின்
    மண்ணோடு மண்ணாக
    கலந்ததுண்டு.

    போகட்டும்...
    மாலைகளணிந்த
    இம்மண்ணிலிருந்து
    மீண்டும் முளைவிடும்
    எமது சுதந்திரம்!!!

    பதிலளிநீக்கு
  11. //நீங்கள் கும்பிடும் சாமி மணல் சாமி இல்லை
    மனம் கேட்டதைக் கொடுக்கும் மலைச் சாமி.. //

    மனம் வாரிச்சொரிந்த வரிகள்!
    வல்லி சிம்ஹன்! ஹேட்ஸ் ஆஃப்!

    பதிலளிநீக்கு
  12. புதைக்கப்பட்ட பூனைக்குட்டி
    பிள்ளையாட்டத்தின்
    எண்ணிக்கை புரியாமல்.

    பதிலளிநீக்கு


  13. நல்லவேளை, எனக்குக் கவிதை வராது.

    ரசிக்கவைக்கும், மனதை நெகிழ வைக்கும் கவிதைகளை படிக்க வாய்ப்பு தந்த எங்கள் ப்ளாகிற்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  14. கவிதை எழுதுவோம் என்று தான் வந்தேன்.. ஹேமாவின் கவிதை நெஞ்சை அடைக்கிறது.

    மணல்வீடு குலையுமேன்றோ
    மனவீடு கட்டிவைத்தோம்.

    தணல்மேடு எரியுதென்றோ
    நனவோடு தகித்திருந்தோம்

    நுணல்பாடு பாம்போடென
    கனவோடு காத்திருப்போம்.

    பதிலளிநீக்கு
  15. கட்டுவது
    கலைவதும், கலைக்கபடுவதும்
    இயல்புதான்,
    விளையாட்டில் மட்டுமல்ல
    வாழ்கையிலும் கூட .

    பதிலளிநீக்கு
  16. நன்றி ஜீவி சார்.
    சொல்லிச் செய்வார் சிறியோர் என்பது போல யாராவது சொன்னால் தான் மனம் விழித்துக் கொள்ளும் போலிருக்கிறது.
    பூனைக்குட்டியா. துரை! அதிர்ச்சி கொடுப்பதில் சிகப்புரோஜா.
    ஹேமா நலம் திரும்பட்டும்.
    மீனாக்ஷி அதி அற்புதமான எண்ணங்கள்.

    பதிலளிநீக்கு
  17. நன்றி வல்லி மேடம். நான் மிகவும் ரசிக்கும், மதிக்கும் நீங்கள் எல்லோருமே இதில் கவிதை எழுதி இருந்தீர்கள். முதல் கவிதையாக ராமலக்ஷ்மி எழுதியதை
    படித்ததுமே நான் இந்த விளையாட்டுக்கு வரவேண்டாம் என்றிருந்தேன். :) மிகுந்த தயக்கத்துடன்தான் கடைசியில் எழுதினேன். உங்கள் பாராட்டு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. என்னுடையதும் ஒரு கவிதையா உங்களுக்கு தெரிஞ்சுதே அதுக்கே நான் உங்களுக்கு நன்றி சொல்றேன். :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!