சனி, 24 நவம்பர், 2012

பாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் 18/11 to 24/11


எங்கள் B+ செய்திகள்.
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.... 
 ==============================================================
                
1) 'அணைக்கும் கரங்கள்' என்ற தொண்டு நிறுவனம் மூலம் சிறைக் கைதிகளுக்க்குக் கல்வி கற்றுத் தருகிறார் பேராசிரியர் நோவா. 1979 இல் கல்லூரிப் பேராசிரியர்களுக்குப் பணி பாதுகாப்புக் கோரி போராட்டம் நடத்தி சிறைக்குச் சென்றபோது புதிய கைதிகள், பழைய கைதிகள், அறியாமல் அவசரத்தில் குற்றம் புரிந்தவர்கள், வெளியில் வந்ததும் வேறு வழியின்றி மீண்டும் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் ஆகியோருக்கு கல்வி கற்பிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி அன்றைய முதல்வர் எம் ஜி ஆருக்குக் கடிதம் எழுதி அனுமதி பெற்று சில பேராசிரியர்களுடன் சென்று கல்வி கற்பித்து வருகிறாராம். 

 மருத்துவம், தொழில்துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் பட்டம் பெற்று பல மாணவர்கள் உருவாகியுள்ளனராம். கல்வி ஏறாதவர்களுக்கு கைத்தொழிலும் கற்றுத் தருவதோடு, தண்டனைக் காலம் முடிந்து வெளிவரும் கைதிகளுக்கு இதுவரை 1,200 திருமணங்கள் நடத்திக் கொடுத்துள்ளதாம் இந்த அமைப்பு. தினமலர் மற்றும் கல்கி.

2) தன்னுடைய படிப்படியான முன்னேற்றத்தைச் சொல்கிறார் கோவை பழமுதிர்சோலை நிறுவனர் நடராஜ். குடும்பச் சூழ்நிலை காரணமாக பட்டறை, மில் என்று மாறி மாறி செய்த பல பணிகளில் பழக்கடையும் ஒன்று, தலையில் வைத்து, தள்ளு வண்டியில் விற்று, தரைக் கடை வைத்து என படிப்படியாக முன்னேறி மக்களின் தேவையறிந்து இன்றைய காலத்திற்கேற்ப  வசதிகளுடன் பழ விற்பனை செய்து வருவதைப் பற்றி வந்திருக்கும் செய்தி தினமலர் சொல்கிறார்கள் பகுதியில்.


3) விவசாயத்தை முறையாகச் செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று நிரூபித்துக் காட்டியுள்ளனர் கரூர் அருகே உள்ள தட்டாம்புதூரைச் சேர்ந்த அக்கா, தம்பியான வினோதா, முருகானந்தம் இருவரும்.  விவசாயத்தை விட்டு வேறு வேலைகளுக்குச் செல்லும் இந்நாளில் எம் பி ஏ முடித்த வினோதா 10,000 ரூபாய் சம்பளம் என்று வந்த வேலையை உதறி, விவசாயத்தில் இறங்கி காலத்துக்கேற்ற மாதிரி பயிரிட்டு, முதலில் லாபம் கிடைக்காததால் கிண்டல் செய்த ஊராரின் ஆச்சர்யத்துக்கும் பாராட்டுக்கும் ஆளாகியுள்ளனர். முருகானாந்தமும் கல்லூரிப் படிப்பு முடித்து முழு மூச்சாய் விவசாயத்தில் இறங்கி அக்காவுடன் இணைந்து இந்த வெற்றிக்குக் காரணமாகியுள்ளார். முதலில் முருங்கை தர்பூசணி, கடலை பயிரிட்டு, அதுவும் இயற்கை உரங்களையே பயன் படுத்தி, லாபம் பார்த்தவர்கள் தற்சமயம் மலை வேம்பு பயிரிட்டுள்ளனராம். தினமலர் சொல்கிறார்கள் பகுதியிலிருந்து.


4) இ மெயிலைக் கண்டு பிடித்தது ஒரு தமிழர். அமெரிக்கவாழ் தமிழரான சிவா அய்யாதுரை, அதுவும் அவர் இதைத் தனது 14 வது வயதில்-1977இல் - கண்டு பிடித்த கதையை விரிவாகச் சொல்கிறது தினமணிக் கதிர்க் கட்டுரை. அதே போல 1993 இல் கிளிண்டன் வெள்ளை மாளிகைக்கு வரும் பல்லாயிரக் கணக்கான இ மெய்ல்களை தரம் பிரித்து, அது அதற்குண்டான பிரிவில் சேர்க்க வழி செய்யும் மென்பொருளை உருவாக்க முடியுமா என்று பரிசு அறிவித்தபோது பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்ட போட்டியில் தனிமனிதனாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விவரங்களையும் தருகிறது இந்தக் கட்டுரை. தமிழகத்தின் சித்த மருத்துவம் எப்படி அறிவியல் பூர்வமாகச் செயல் படுகிறது என்ற ஆராய்ச்சியில் தற்சமயம் ஈடுபட்டு வருகிறாராம்.


5) ஜேம்ஸ் கிம்டன் - ஆங்கிலேயர். 1925 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் நார்த் வேல்ஸ் கான்வே ஊரில் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தவர், வாழ்வதற்கே போராடி, பின்னர் துறவற சபை மூலம் படித்து ஓவிய ஆசிரியராகி, அப்புறம் கல்விப்பணிக்காக இலங்கை அனுப்பப் பட்டவர், சில பிரச்னைகள் காரணமாக பிறகு இந்தியா வந்து மதுரை நாகமலை புல்லூத்தில் 16 மாணவர்களுடன் 'பாய்ஸ் டவுன்' என்ற நிறுவனம் ஆரம்பித்து, தற்சமயம் 60 ஆண்டு காலமாக சேவையையே தன உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்வதை விளக்கமாகச் சொல்கிறது தினமணி ஞாயிறு இணைப்பு. கல்வி, தொழில், தொழுநோய் ஒழிப்பு என்று பல்வேறு வகைகளிலும் ஆதரவற்றோருக்கும் ஏழைகளுக்கும் சேவை புரிந்து வருகிறார் இவர்.


6) பொதுவாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பயனடைவோர் நிறையவே இருக்கிறார்கள் என்று தெரிகிறது. திருச்சியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மனைவி ஹேமமாலினி கணவரின் வருமானம் குடும்பத்துக்குப் போதுமானதாக இல்லாத நிலையில், தம்பியின் ஆலோசனையில் கணவரின் தயக்கத்தை தன்னுடைய தன்னம்பிக்கையால் வென்று, மிதியடித்  தொழில் தொடங்கி இன்னும் சில பெண்களுக்கும் முன்னுதாரணமாகவும், அவர்களுக்கும் கற்றுத் தந்தும் வெற்றிகரமாக நடத்தி வருமானம் வருவதையும் தினமலர் 'சொல்கிறார்கள்' பகுதியில் படிக்க முடிந்தது. திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளின் கழிவை கிலோ 25 ரூபாய் என்று 1000 கிலோ வாங்கி மேட் செய்வதையும்,  மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தான் பெற்ற பயிற்சிகள் இவற்றுக்கு எப்படி உதவின என்றும் சொல்கிறார்.


7) அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் பிரிட்டிஷ் கூட்டமைப்பும் இணைந்து, தமிழகம் மற்றும் லண்டன் கல்விக் குழுக்களிடையே இடையே வகுப்பறைகள் இணைப்பு என்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஜனவரியில் ஒப்பந்தமானதைத் தொடர்ந்து, லண்டன் கல்விக் குழுமம் சென்னையில் மேற்கொண்ட 5 நாள் ஆய்வில், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் 7 அரசுப் பள்ளிகள் சர்வதேச வகுப்பறை விருதைப் பெற்றுள்ளனவாம். தினமலர் செய்தி.


8) ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பை வெடித்து குழந்தை இறந்தது. ரத்தப்போக்கால் உயிருக்கு போராடிய பெண், ஆசிரியர் வழங்கிய ரத்ததானத்தால் உயிர் பிழைத்தார்.ராமநாதபுரம் அருகே சுப்புத்தேவன்வலசை சுரேஷ் மனைவி களஞ்சியராணி, 23. பிரசவத்திற்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் கர்ப்பப்பை வெடித்து ரத்தப்போக்கு அதிகமானது. ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. உயிருக்கு போராடிய இவருக்கு, உடனடியாக "பி பாசிடிவ்' ரத்தம் தேவைப்பட்டது. 

கர்ப்பப்பை வெடித்து குழந்தை பலி: உயிருக்கு : போராடிய பெண்ணை காப்பாற்றிய ஆசிரியர்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பை வெடித்து குழந்தை இறந்தது. ரத்தப்போக்கால் உயிருக்கு போராடிய பெண், ஆசிரியர் வழங்கிய ரத்ததானத்தால் உயிர் பிழைத்தார்.ராமநாதபுரம் அருகே சுப்புத்தேவன்வலசை சுரேஷ் மனைவி களஞ்சியராணி, 23. பிரசவத்திற்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் கர்ப்பப்பை வெடித்து ரத்தப்போக்கு அதிகமானது. ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. உயிருக்கு போராடிய இவருக்கு, உடனடியாக "பி பாசிடிவ்' ரத்தம் தேவைப்பட்டது. 

மருத்துவமனையில் இந்த வகை ரத்தம் இருப்பு இல்லை என ஊழியர்கள் கைவிரித்தனர். ராமநாதபுரம் மெல்வின் கேட்டரிங் கல்லூரி மாணவர்கள், ரத்தம் கொடுக்க திரண்டனர். 

இவர்களுக்கு ரத்தவகை கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டது.தகவலறிந்த குடும்பநல துணை இயக்குனர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் கூறியபின், ரத்தவங்கியில் அவசர தேவைக்காக வைத்திருந்த ஒரு பாட்டில் "பி பாசிடிவ்' ரத்தம் வழங்கினர்.

மேலும் ஒரு பாட்டில் ரத்தம் தேவைப்பட்டது. மெல்வின் கல்லூரி ஆசிரியர் முரளி, உடனடியாக மருத்துவமனை வந்து அதேவகை ரத்தம் வழங்கினார். இதை செலுத்திய பின் களஞ்சிய ராணி, உயிர் பிழைத்தார்.

மருத்துவமனையில் இந்த வகை ரத்தம் இருப்பு இல்லை என ஊழியர்கள் கைவிரித்தனர். ராமநாதபுரம் மெல்வின் கேட்டரிங் கல்லூரி மாணவர்கள், ரத்தம் கொடுக்க திரண்டனர். இவர்களுக்கு ரத்தவகை கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டது.தகவலறிந்த குடும்பநல துணை இயக்குனர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் கூறியபின், ரத்தவங்கியில் அவசர தேவைக்காக வைத்திருந்த ஒரு பாட்டில் "பி பாசிடிவ்' ரத்தம் வழங்கினர்.
மேலும் ஒரு பாட்டில் ரத்தம் தேவைப்பட்டது. மெல்வின் கல்லூரி ஆசிரியர் முரளி, உடனடியாக மருத்துவமனை வந்து அதேவகை ரத்தம் வழங்கினார். இதை செலுத்திய பின் களஞ்சிய ராணி, உயிர் பிழைத்தார். முகப்புத்தகத்திலிருந்து.

9) ஜார்கண்ட் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, ஓவியத்தில் பல விருதுகள் பெற்று வரும், மாற்றுத் திறனாளியான மேத்தப் ஆலமுக்கு உறுதுணையாக இருந்து, இன்று தானும் ஒரு ஓவியராக இருக்கும் அவர் சகோதரி நஸ்ரிம் பற்றிய செய்தி தினமலரில். தந்தை பில்டிங் காண்டிராக்டர். மேத்தப் பிறந்ததிலிருந்து மனவளர்ச்சி குன்றியிருந்தாலும் அவர் சுவற்றில் சாக்பீஸ், கரி வைத்து கிறுக்கும் படங்களில்  ஒரு நேர்த்தியைக் கண்டறிந்து, 8 ஆண்டுகளுக்கு முன்னால் ஓவியர் ராம்சுரேஷிடம் ஓவியம் பயிலவைத்ததையும், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள வைத்து விருது பெற வைத்ததையும், ஓவியம் வரையும்போது அடிக்கடி தம்பிக்கு கவனம் சிதறும் என்பதால் அருகில் இருந்து கவனித்துக் கொண்டதையும், ஒருநாள் தம்பியின் அடத்தினால் தானும் வரைய ஆரம்பித்து, அப்புறம் சேர்ந்தே வகுப்புகளுக்குச் சென்றதோடு, யுவகலா பாரதி விருது இருவரும் வாங்கியதையும், பிறகு பெங்களூரில் உள்ள கர்நாடக சித்ரகலா பரிஷத் அமைப்பு நடத்திய ஓவியக் கண்காட்சியில் இவர்களது 22 ஓவியங்கள் விற்பனையானதையும், தனது தம்பிக்காகத் தானும் தனது 2 அண்ணன்களும் திருமணமே வேண்டாம் என்று முடிவு செய்திருப்பதையும் சொல்கிறார் நஸ்ரிம்.
சென்றவார தேநீர் செய்தியில் அப்போது சேர்க்க முடியாத படம் இப்போது முகப்புத்தகத்திலிருந்து எடுத்து...   


            

26 கருத்துகள்:

  1. மெல்வின் கல்லூரி ஆசிரியர் முரளி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    மற்ற அனைத்து செய்திகளும் அருமை...

    திருப்பூர் டீ மாஸ்டர் பாலு அவர்களின் டீயும் குடித்தேன்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  2. அனைத்து செய்திகளுமே நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. பாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் - நம்பிக்கை விதைகளை விதைத்தது...

    பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  4. "பி பாசிடிவ்' ரத்தம் கொடையளித்தவர் எங்கள் B+ செய்திகளில் இடம்பிடித்தாரே !!

    பதிலளிநீக்கு
  5. 1.அருமையான மனிதர்
    4.அற்புதம்
    அணைத்து பாசிடிவ் செய்திகளும் பாசிடிவ் எனெர்ஜி தருகிறது

    பதிலளிநீக்கு
  6. இரத்தம் கொடுத்த திரு மெல்வின்

    திருப்பூர் டீ,
    பேராசிரியர் நோவாவின் தொண்டு
    அற்புதம்.
    எல்லா செய்திகளையும் சேகரித்துதரும் எபிக்கு பாசிடிவ் திலகம் என்ற பட்டம்.

    பதிலளிநீக்கு
  7. மருத்துவ பரிசோதனை தவிர மற்றவைகளில் பாஸிட்டிவ் என்பதே மகிழ்ச்சிதான்!!!

    பதிலளிநீக்கு
  8. வித்தியாசமான அருமையான முயற்சி. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  9. இ-மெயிலைக் கண்டுபிடித்தது தமிழர் என்பது எனக்கு புதிதான மகிழ்வான தகவல்

    பதிலளிநீக்கு
  10. - விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
    - கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
    - நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

    அந்த செய்தி என்று வருமோ..!!

    பதிலளிநீக்கு
  11. நல்ல செய்திகள்! பகிர்வுக்கு நன்றி. தொடர்ந்து தாருங்கள்.

    பதிலளிநீக்கு
  12. //இ மெயிலைக் கண்டு பிடித்தது ஒரு தமிழர். அமெரிக்கவாழ் தமிழரான சிவா அய்யாதுரை... //

    //அதே போல 1993 இல் கிளிண்டன் வெள்ளை மாளிகைக்கு வரும் பல்லாயிரக் கணக்கான இ மெய்ல்களை தரம் பிரித்து, அது அதற்குண்டான பிரிவில் சேர்க்க வழி செய்யும் மென்பொருளை உருவாக்க முடியுமா என்று பரிசு அறிவித்தபோது பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்ட போட்டியில் தனிமனிதனாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விவரங்களையும் தருகிறது இந்தக் கட்டுரை.//

    இந்த நிகழ்வை மனசில் ஓட்டிப் பாருங்கள்! எவ்வளவு தன்னம்பிக்கை! எவ்வளவு பெருமைக்குரிய செய்தி! படித்தவுடன் சந்தோஷம் பிடிபடவில்லை!

    பதிலளிநீக்கு
  13. எங்கள் ப்ளாகில் பாசிடிவ் செய்திகளை விரும்பிப் படிப்பேன். இந்த வாரம், இமெயில் கண்டுபிடித்தவர் பற்றிய செய்தி , விவசாயத்தில் ஈடுபடும் MBA படித்த வினோதா & முருகானந்தம், சிறைக் கைதிகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் பேராசிரியர் நோவா, ரத்ததானம் என்று அனைத்து செய்திகளும் ஒரு நம்பிக்கை தருவதுடன் நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
  14. அனைத்தும் அருமையான தகவல்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  15. *காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் 7 அரசுப் பள்ளிகள் சர்வதேச வகுப்பறை விருதைப் பெற்றுள்ளன...
    * 60 ஆண்டு காலமாக சேவையையே தன உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்வதை விளக்கமாகச்.....
    * விவசாயத்தை முறையாகச் செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம்....
    * இ மெயிலைக் கண்டு பிடித்தது ஒரு தமிழர்.
    நம்பிக்கையூட்டும் செய்திகளை வழங்கியதற்கு நன்றி......

    பதிலளிநீக்கு
  16. இ மெயில் கண்டுபிடித்தது ஒரு தமிழர் என்பது இப்பொழுதான் தெரியும். மிகவும் சந்தோஷமாகவும்,பெருமையாகவும் இருக்கிறது. நன்கு படித்தவர்கள் விவசாயத்தில் ஈடுபடுவது மிகவும் நிறைவை தருகிறது. எல்லாமே நல்ல செய்திகள். நன்றி.

    பதிலளிநீக்கு
  17. அனைத்து செய்தி தொகுப்புகளும் அருமை!

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. கூசாமல் பொய் சொல்லிப் பேர் வாங்குவோர் எல்லா இடத்திலும் உண்டு. இமெயிலைக் கண்டுபிடித்தது இவரென்றால் இன்டர்னெட்டைக் கண்டுபிடித்தது அல் கோர் தான்.

    யார் என்ன சொன்னாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் நம்முடைய விழுப்புணர்வு இருக்கிறதே..

    பதிலளிநீக்கு
  19. குரோம்பேட்டை குறும்பன்25 நவம்பர், 2012 அன்று AM 8:14

    // அப்பாதுரை said...
    ராமாயணம் எழுதியவர் யார்?//

    நீங்கதான்! (இங்கே!)

    பதிலளிநீக்கு
  20. good one குரோம்பேட்டை குறும்பன்..

    (எனவே, ராமாயணத்தை எழுதியது நான் தான் என்று இனி உலகம் அறியட்டும் :)

    ஹ்ம்.. அதுக்கு யாராவது பெருமைப் படுவாங்களா?

    பதிலளிநீக்கு
  21. இமெயிலைக் கண்டு பிடித்தது தமிழரா?????????????

    மற்றச் செய்திகள் எல்லாமே அருமை. பகிர்வுக்கு நன்றி.

    அதென்ன தேநீர்ச் செய்தி! காலங்கார்த்தாலே டீ குடிச்சாச்சு. தேநீர்ச் செய்தியைத் தான் பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
  22. இமெயிலைக் கண்டு பிடித்தது தமிழரா?????????????

    மற்றச் செய்திகள் எல்லாமே அருமை. பகிர்வுக்கு நன்றி.

    அதென்ன தேநீர்ச் செய்தி! காலங்கார்த்தாலே டீ குடிச்சாச்சு. தேநீர்ச் செய்தியைத் தான் பார்க்கணும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!