சனி, 22 டிசம்பர், 2012

பாசிட்டிவ் செய்திகள் 16/12 முதல் 22/12/2012 வரை.


எங்கள் B+ செய்திகள்.
 
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
 
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
 
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....

=======================================================================

1) கோவை கொங்குநாடு அறிவியல் கல்லூரி வளாகத்தில் இந்திய அறிவியல் கழகத்தின் நூற்றாண்டு விழாவை, தென்பிராந்திய அளவில் கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியும், இந்திய அறிவியல் கழக கோவைப்பிரிவும் இணைந்து நடத்திய மாணவர் அறிவியல் கண்காட்சி'யில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் கரூர் வெற்றி வினாயகா மெட்ரிக் பள்ளி மாணவர் பாரத். ரயில் விபத்து தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார். "டிரைன் வே டிராக்கர்' என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ரயில்கள் விபத்தின்றி தடுக்கப்படலாம் என்பது இவரது கண்டுபிடிப்பு.இதற்கு "வேவ் டிரான்ஸ்மிஷன் ஆன்டெனா' பொருத்தப்பட்ட ஒரு ரயில் பெட்டி போதும். ஆளில்லாத இந்த ரயில் பெட்டி, ஒரு "ரோபோ ரயில்' போல் செயல்பட்டு, பயணிகள் ரயிலின் முன்னால் சென்று கொண்டிருக்கும். பயணிகள் ரயிலுடன் "ரேடியோ பிரிக்குவன்சி வேவ்' தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, ரோபோ ரயில் குறிப்பிட்ட இடைவெளியில் முன்னோக்கி சென்று கொண்டிருக்கும்.ரயில் தண்டவாளத்தில் சேதம் மற்றும் இதர பாதிப்புகள் இருந்தால், ரோபோ ரயில் தானாகவே நின்று, பின்னால் வரும் ரயிலுடன் தொடர்பு துண்டிக்கப்படும். அப்போது, அந்த ரயிலும் தானாகவே நின்று, விபத்தில் இருந்து காப்பாற்றப்படும். இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள மாணவர் பாரத் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

நியூட்டனின் புவியீர்ப்பு விசை குறித்த விதியை, புதிய கண்ணோட்டத்தில் கண்டுபிடித்துள்ளனர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி முதுகலை இயற்பியல் (எம்.எஸ்.சி.,) மாணவர்கள். எந்த பொருளும் மேலிருந்து கீழே விழும் என்பது, புவியீர்ப்பு விசையின் அடிப்படை கோட்பாடு. ஆனால், இந்த புதிய கண்டுபிடிப்பில், கீழே இருக்கும் ஒரு பொருள் மேல்நோக்கி நகரும் விந்தையை காணலாம். இதற்கு தேவை இரண்டு புனல்கள்; இரண்டு பி.வி.சி.,குழாய்கள். வாய் பகுதியில் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட புனல்கள், குழாய்களை தாங்குதளமாக கொண்டு மேல்நோக்கி நகருகின்றன. "புவிஈர்ப்பு விசைக்கு எதிராக, ஒரு பொருள் நகருவதை போன்ற உணர்வு ஏற்பட, கண்களின் "இடமாற்று தோற்றப்பிழை' என்ற இயற்பியல் தத்துவமும் ஒரு காரணம்,' என, இந்த அற்புத கண்டுபிடிப்பின் பின்னணியை விளக்கி, பார்வையாளர்களின் கண்களை விரிய வைக்கின்றனர், மாணவர்கள்.

தமிழகத்தின் இன்றைய முக்கிய பிரச்னையே மின் பற்றாக்குறை தீர, சாலை போக்குவரத்தில் இருந்தும் மின்சாரம் தயாரிக்கலாம் என்கிறார், சோபியா ஜென்னிபர் என்ற மாணவி. இவர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில், ஸ்பீடு பிரேக்கருக்கு பதிலாக காற்று செலுத்தப்பட்ட ரப்பர் குழாய்களை பதிக்க வேண்டும். இந்த "ஸ்பீடு பிரேக்கர்' வழியாக வாகனங்கள் செல்லும்போது, டயர் அழுத்தம் காரணமாக, அதிக விசையுடன் காற்று உள்ளே செல்கிறது. ஒவ்வொரு முறையும் அழுத்தப்படும் காற்று, சாலையோரத்தில் நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள, "ஸ்டோரேஜ் டேங்க்'ல் சேமிக்கப்பட்டு, அருகில் உள்ள காற்றாலையை இயங்க வைக்கிறது. இங்கு இயந்திர ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்பட்டு, மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.தமிழக சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு சிறிது நேரம் கூட ஓய்வில்லாத நிலையில், இந்த தொழில்நுட்பத்தால் மின்சாரம் தயாரிப்பது, பெருமளவில் பலனைத் தரும் என எதிர்பார்க்கலாம்.

2) பெண் குழந்தைகளுக்காக, "பாதை' என்ற காப்பகத்தை நடத்தும், அமல் - சுனிதா இருவரும் சென்னையைச் சேர்ந்த தம்பதிகள். பெற்றோரிடம் சேர முடியாத பெண் குழந்தைகளைப் பொறுப்பேற்று, பிறப்புச் சான்றிதழ் பெறுவதிலிருந்து அனைத்துக்கும் பொறுப்பேற்று அவர்களை நல்ல நிலைக்குக் கொண்டு வர பாசிட்டிவ் அப்ரோச்சே காரணம் என்கிறார்கள். 

                             
                 



3) ரஞ்சனா என்ற, பார்வையற்ற பெண். தமிழக அரசு நடத்திய, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்று, சேலம் மாவட்டம், வலசையூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்ஆசிரியையாகச் சேர்ந்துள்ளார்.
                                                  


"வேண்டாம் இந்த பிள்ளை' என, உறவுகள் கூறியபோது, "நானிருக்கிறேன்' என, அந்த குழந்தையை வளர்த்து, ஆசிரியை பணியில் அமர வைத்ததில், அவருடைய தாய்க்கு முக்கிய பங்கு உண்டு. பார்வையற்ற நிலையில், பி.எட்., வரை படித்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, தற்போது பணியில் சேர்ந்துள்ளார், ரஞ்சனா.சேலம், அஸ்தம்பட்டி, மணக்காடு பகுதியைச் சேர்ந்த சதாசிவம், புஷ்பலதா தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்தவர் ரஞ்சனா, 23. இரண்டரை வயது வரை, தலை தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு, "இந்த குழந்தை தேறாது' என, உறவுகள் ஒதுக்கியபோது, "10 மாதம் சுமந்த மகளை, மண்ணுக்கு அனுப்ப மாட்டேன்' என, மருத்துவமனைக்கு அலைந்து மீட்டெடுத்தார் அவருடைய தாய். சேலம் சாரதா வித்யா மந்திர் பள்ளியில், ஆர்வமுடன் படித்த ரஞ்சனாவால், கல்வியை தொடர முடியாதவாறு, கண்ணில் ஏற்பட்ட வலி கொடுமைப்படுத்தியது. அதன்பின், செவ்வாய்பேட்டையில் உள்ள அரசு விழியிழந்தோர் பள்ளியில், "பிரெய்லி' முறையில் தன்னுடைய படிப்பை தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மதுரையில் உள்ள இந்திய பார்வையற்ற மாணவர்களுக்கான பள்ளியில் படித்தார். பத்தாம் வகுப்பில், 338 மதிப்பெண்களும், பிளஸ் 2வில், 954 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தார். பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற்று, அப்பள்ளியின் முதல் மாணவியாக வந்தார். சேலம் சாரதா கல்லூரியில், பி.ஏ., பட்டம் பெற்று, பின், குமாரபாளையம் அரசு பி.எட்., கல்லூரியில், கவுன்சிலிங்கில் வெற்றி பெற்று, சேர்ந்தார். ஆங்கிலப் பாடப் பிரிவு எடுத்து படித்து, பட்டத்தையும் வாங்கினார்.சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தனியார் அகடமியில், பயிற்சி பெற்றார். முதல் கட்டமாக நடத்தப்பட்ட தேர்வில் தோல்வியடைந்த போதும், இரண்டாம் கட்டமாக நடந்த தேர்வில், 150 மதிப்பெண்ணுக்கு, 95 மதிப்பெண் வாங்கி வெற்றி பெற்றார். (தினமலர்)


4) பெயர் B M ராம்ப்ரசாத். வயது 64. ஊர் பெங்களுரு.
Mico ( now Bosch) கம்பெனியில் 39 வருடம் assistant finance manager ஆக வேலை பார்த்து விட்டு, தற்சமயம் நீங்கள் இவரை 5th main cross road of the AREKERE LAYOUT near Bannergatta Road, பெங்களுருவில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதைக் காணலாம் என்கிறது முக நூலில் படித்த ஒரு செய்தி. தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5.30 முதல் 7.30 வரையும் இந்தச் சேவையைச் செய்கிறாராம் இவர். 9th cross main road டில் வசிக்கும் இவர் இந்த சேவைக்காக தினமும் இங்கு வருகிறாராம்.(முகநூல்)

                                


 
5) கமுதி:ராமநாதபுரம், கமுதி அருகே விக்கிரபாண்டியபுரத்தைச் சேர்ந்த சிலையழகு என்பவர், துபாய்க்கு சென்று, அங்கு இறந்தார். 
                                          
மாவட்ட நிர்வாகம், அமைச்சர், எம்.எல்.ஏ., உதவாத நிலையில், கிராமத்தினர் வழங்கிய 50 ஆயிரம் ரூபாய் மூலம், அவரது உடல் சொந்த ஊர் வந்தது. அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாகவும், 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி, உடலை பெற்றுக்கொள்ளுமாறு, டிச.,14 ல், கட்டுமான ஏஜன்சியினர், சிலையழகு குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால், அவரது குடும்பத்தினர் பணமின்றி தவித்தனர். சிலையழகு. அ.தி.மு.க., பிரதிநிதியாக இருந்தார்.  முதுகுளத்தூர் எம்.எல்.ஏ., முருகன் (அ.தி.மு.க.,), அமைச்சர் சுந்தரராஜை சந்தித்து, உதவுமாறு கிராமத்தினர் முறையிட்டு, உதவி எதுவும் கிடைக்காத நிலையில், அந்த கிராமத்தினர், வீடு, வீடாக பணம் வசூலித்துக் கிடைத்த 50 ஆயிரம் ரூபாயை, நிறுவனத்திற்கு அனுப்பி, உடலை வரவழைத்து, கிராமத்தினர் செலவில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. சிலையழகிற்கு மனைவி காளிமுத்து, மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். (தினமலர்)
                           


6) சிவகாசி: மழை வேண்டி "மரக்கன்றுகள் நடுங்கள், தற்கொலையை வெல்வோம்' என்ற கோஷத்துடன், மூன்று சக்கர சைக்கிளில்மாற்றுத்திறனாளி பிரசாரம் செய்கிறார். திருநெல்வேலி மாவட்டடம் இட்டாமொழியை சேர்ந்தவர் நெல்சன், 29. அஞ்சல் வழி மூலம், பி.காம்., முடித்துள்ள இவர் மூன்று சக்கரவண்டியில் கிராமம், கிராமமாக சென்று பிரசாரம் செய்கிறார்.
                                              
தினமும் 15 முதல் 20 கி.மீ.,தூரம் பயணிக்கிறார். இவர் கூறுகையில், "" 2005ல் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து, 2010ல் துணை ஜனாதிபதியிடம் விருது பெற்றுள்ளேன். படிப்பு மட்டும் வாழ்க்கை அல்ல. படிப்பு என்பது நமதுதிறமை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பு என கருத வேண்டும். ஏதோ ஒரு காலண்டர் சொல்லும் கட்டு கதையை நம்பி ,உலகம் அழியும் என நம்புகின்றவர்கள், முதலில் வாழ்வதற்கு தேவையான மழை பெற, மரக்கன்றுகளை நடுங்கள், என்பதை வலியுறுத்துகிறேன்,'' என்றார். ஒவ்வொரு ஊருக்கும் செல்லும் போது, பிரசார பயணத்தை துவக்கி வைக்க வரும் வி.ஐ.பி.,க்கு,ஒரு மரக்கன்று கொடுத்து விடைபெறுகிறார்.


7)
தமிழில் நாவல் எழுதி, இலக்கியத்திற்கான விருது பெற்றுள்ளார் முசிரியைச் சேர்ந்த திருநங்கை ப்ரியா பாபு. ஒவ்வொருவருக்கும் 15 வயதிற்கு மேற்பட்டுதான், பாலினம் பற்றிய சுய சிந்தனை ஏற்படும் என்ற நிலையில் இவரை அனைவரும், கேலிப் பொருளாகவே பார்த்ததில் மனம் வெதும்பி தற்கொலைக்கு முயன்று, காப்பாற்றப் பட்டு, சமூகத்தில், விளிம்பு நிலையில் வாழும், இவரைப் போன்ற திருநங்கைகள் மத்தியில், விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றி, எழுத்தாளர் சு.சமுத்திரம், திருநங்கைகள் பற்றி எழுதிய, "வாடா மல்லி' என்ற நூல் படித்தவர் இவரும் எழுத்தாளராக முக்கியக் காரணமாக அமைய,  திருநங்கையாக மாறத் துடிக்கும் மகனுக்கும், அவனது தாய்க்கும் இடையே நடக்கும் மனப் போராட்டத்தை," மூன்றாம் பாலின் முகம்' என்ற நாவலில், எழுதி விருது பெற்றுள்ளார். திருநங்கை எழுதிய முதல் தமிழ் நாவல் இது தான்.
                                                       

இந்நூலைப் பாராட்டி, சிறந்த இலக்கியத்திற்கான விருதை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்கியது. "திருநங்கையர் வழக்காறுகள்' என்ற குறும்படத்தையும் இயக்கி, சென்னையில், "வானவில்' அமைப்புடன் இணைந்து, திருநங்கைகளுக்கு, எழுதுவதற்கு பயிற்சி அளிப்பது, கட்டுரை, சுயசரிதை, ஆய்வுக் கட்டுரை எழுதுவது தொடர்பாக, பயிற்சி தருவதில், ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளது, இந்தியாவின் பட்டிதொட்டிகளில் பயணம் செய்து, "கண்ணாடி' கலைக் குழு மூலம், விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி என்றும் திருநங்கைகளுக்கு, வாக்காளர் அடையாள அட்டை பெற்று தருவது, மத்திய, மாநில அரசுகள் வழங்கும் இலவச திட்டங்களை பெறுவது தொடர்பான தகவல்கள் தருவது என, பல்வேறு பிரச்னைகளுக்கு குரலும் கொடுத்து, திருநங்கைகள் குறித்த ஆவணங்கள் திரட்டி, நூலகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவர் அந்நூலகத்தை திருநங்கைகள் தினமான, ஏப்ரல், 15 அன்று, திறக்க இருப்பதாகச் சொல்கிறார். 'இது, மறைவிற்கு பிறகும் என்னை நினைவுபடுத்த உதவும்' என்கிறார்.


8) ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் மழை நீரை சேகரித்து ஓராண்டு வரை பயன்படுத்தி வருகின்றனர். 100 ஆண்டுகளாக இப் பழக்கம் உள்ளது.

                                               
ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது எஸ்.பி.பட்டினம். இதையொட்டி கடற்கரை என்பதால், கிணறுகளில் உப்பு தண்ணீர் தான் கிடைக்கிறது. குடிநீருக்காக ஏங்கும் மக்கள், மழைநீரை சேகரிக்க முடிவு செய்தனர். 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள இப்பகுதியில், பெரும்பாலான வீடுகளில் குடிநீருக்காக தனி அறை கட்டி, அதில் 1,000 முதல் 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி அமைத்துள்ளனர். மழை பெய்யும் போது மாடியிலிருந்து கீழே குழாய் மூலம் தொட்டியில் தண்ணீர் சேகரிக்கின்றனர். தண்ணீர் கெட்டுப்போகாமல் இருக்க சுட்ட செங்கற்களை தொட்டியில் போட்டு வைக்கின்றனர். இந்த தண்ணீரை, அடுத்தாண்டு மழை பெய்யும் வரை பயன்படுத்துகின்றனர். அடுப்பு மூட்டி எழும்பும் புகை, மண்பானை வைத்து மூடப்படும். சில மணி நேரம் கழித்து மண்பானையில் மழை நீர் ஊற்றி ஆற வைத்து குடித்தால் சுவை அருமையாக இருக்குமாம்.

9) புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் கிராமத்தைச் சொந்த ஊராகக் கொண்ட பிரகதாம்பாள், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் பவுண்டேஷன் வழங்கும், கிராமப்புற சாதனையாளர் விருதை பெற்றுள்ளார். சோறு சாப்பிடக் கூடக் கஷ்டப்படும் வறுமை உள்ள பெரிய குடும்பத்தில் பிறந்து, விவசாயத்தில், ஆடுதுறை வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில், லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்தவரை மணந்து, (டிப்ளமோ முடித்தவர், 750 ரூபாய் சம்பளம்), வருமானம் போதாமல் கஷ்டப்பட்ட நிலையில், தையல் வேலை, கூடை பின்னுவது, கைவினைப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்வது என, பணம் சம்பாதித்த்திருக்கிறார்.

                                               
நான்காண்டு களுக்கு பின், வம்பன் வேளாண் ஆராய்ச்சி நிலையத்துக்கே, கணவர், டிரான்ஸ்பர் செய்யப்பட, அங்கு, 16 பேர் சேர்ந்து, 10 ஆயிரம் சேமிப்போடு, மகளிர் சுய உதவிக் குழு ஆரம்பித்து, வம்பன் ஆராய்ச்சி நிலையத்தில், ஐந்து நாள் காளான் வளர்ப்பு பற்றி, பயிற்சி எடுத்துக் கொண்டவர், காளான் வளர்ப்புக்கு தேவையான அனைத்தையும் தெரிந்து கொண்டு, வங்கிக் கடன் வாங்கி, குழு உறுப்பினர்கள் சேர்ந்து, காளான் வளர்ப்பு தொழில் துவங்கியுள்ளவர், "இப்போது, இந்த தொழிலில், மாதம், 25 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கிறது. தினமும், நான்கு அல்லது மூன்று மணி நேரம் தான் வேலை செய்கிறோம். ஒவ்வொருத்தரின் பங்களிப்பை பொறுத்து, லாபத்தை பங்கிட்டு கொள்வோம்.உழைக்கிற நேரத் தை கூட்டினால், லாபமும் அதிகம் பெறலாம்.இதுவரை, 100 பெண்களுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி கொடுத்திருக்கேன்" என்கிறார். (தினமலர் சொல்கிறார்கள் பகுதி)

12 கருத்துகள்:

  1. அத்தனை செய்திகளும் அருமை... கொங்கு மாணவர்கள் ஆராய்சிகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன

    பதிலளிநீக்கு
  2. அத்தனை செய்திகளும் அருமை... தொகுப்பிற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. அனைத்து செய்திகளும் சிறப்பு. பார்வைய்ற்ற பெண் பாராட்டுக்குரியவர்.

    பதிலளிநீக்கு
  4. மற்ற நாட்களை விட இப்போது (டெல்லி, தமிழக பலாத்காரச் செய்திகள்) இந்தச் செய்திகள் நம்பிக்கையின்மையைச் சற்று குறைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  5. அனைத்தும் சிறப்பான தகவல்கள்! நானும் சிலதை படித்துள்ளேன்! முழுமையான தொகுப்புக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  6. அத்தனை செய்திகளுமே சிறப்பான செய்திகள்.

    தொடரட்டும் பாசிட்டிவ் செய்திகள்.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் பாசிடிவ் செய்திகள் மனதிற்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றன.
    இத்தகைய மனிதர்களால் தான் உலகம் இன்னும் நம்பிக்கையுடன் சுழல்கிறது என்று தோன்றுகிறது.

    வாராவாரம் பாசிடிவ் செய்திகளை தொகுத்து வழங்கும் உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்!

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் பகிர்ந்து கொண்ட விஷ்யங்கள் நவரத்தினங்கள்.

    நல்லதே கண்போம், நல்லதையே சொல்வோம் என்று சொல்வது அருமை. பாசிடிவ் செய்திகள் எல்லாம் மனதுக்கு உற்சாகம் ஏற்ப்படுகிறது.

    விடா முயற்சி, பிறருக்கு உதவும் குணம் , மனிதநேயம் எல்லாம் கலந்து இருந்த நவரத்தினங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  9. ராமநாதபுரத்தில் தண்ணீர் எடுத்து வரலாறு படைக்கிறார்கள். விவசாயிகளுக்கும் இதுபோல செய்ய முடிந்தால் / மாணவர்கள்ன் ஆற்றல் வியப்படைய வைக்கிறது.

    இப்பொழுது வரும் தில்லி செய்தி ,தில்லியே திரண்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக முறையிடுகிறதுதான். போராட்டம் நடக்கும் வேகத்தைப் பர்த்தால் சுரூக்கவே இன்னோரு பாசிடிவ் செய்தி கிடைக்கலாம்.

    பதிலளிநீக்கு
  10.  ராம்பிரசாத்தின் பணி பாராட்டுக்குரியது. அவர்  தொப்பை கண்ணை உறுத்துகிறது unfortunately.

    பதிலளிநீக்கு
  11. நம்பிக்கை தரும் நல்ல செய்திகள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!