Sunday, December 2, 2012

ஞாயிறு 178:: ஆனை 65

     
     

யானையின் தமிழ்ப்பெயர்கள்: 
1  யானை/ஏனை (கரியது)
2  வேழம் (வெள்ளை யானை)
3  களிறு
4  களபம்
5  மாதங்கம்
6  கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
7  உம்பர்
8  உம்பல் (உயர்ந்தது)
9  அஞ்சனாவதி
10 அரசுவா
11 அல்லியன்
12 அறுபடை
13 ஆம்பல்
14 ஆனை
15  இபம்
16 இரதி
17 குஞ்சரம்
18 இருள்
19 தும்பு
20 வல்விலங்கு
21 தூங்கல்
22 தோல்
23 கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
24 எறும்பி
25 பெருமா (பெரிய விலங்கு)
26 வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை 
வாரிப்போடுவது)
27 புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)
28 ஒருத்தல்
29 ஓங்கல் (மலைபோன்றது)
30 நாக
31 பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
32 கும்பி
33 தும்பி (துளையுள்ள கையை உடையது)
34 நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
35 குஞ்சரம் (திரண்டது)
36 கரேணு
37 உவா (திரண்டது)
38 கரி (கரியது)
39 கள்வன் (கரியது)
40 கயம்
41 சிந்துரம்
42 வயமா
43 புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
44 தந்தி
45 மதாவளம்
46 தந்தாவளம்
47 கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
48 வழுவை (உருண்டு திரண்டது)
49 மந்தமா
50 மருண்மா
51 மதகயம்
52 போதகம்
53 யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)
54 மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)
55 கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)
           
பெண் யானையின் பெயர்கள்: 
01 பிடி (அடக்கடவுளே! 'பிடி இடை' என்றால் யானை இடையா?)  
02 அதவை
03 வடவை
04 கரிணி
05 அத்தினி
   
யானைக்கன்றின் பெயர்கள்(இளமைப் பெயர்கள்): 
01 கயந்தலை
02 போதகம்
03 துடியடி
04 களபம்
05 கயமுனி
    
           (தகவலுக்கு நன்றி: விக்கிப்பீடியா) 
               

13 comments:

வல்லிசிம்ஹன் said...

வேழ முகத்தனைப் போற்ற வேண்டிய நாள் ஞாயிறுன்னு சொல்வாங்க.
மிகவும் பிடித்த வர் யானையார்.

தகவலுக்கு நன்றி எங்கள் ப்ளாக்.

Anonymous said...

Similarly, there are numerous beautiful words in. Tamil for " leaf " in. varous stages.

ராமலக்ஷ்மி said...

கூட்டமாக யானைகள். மிக அழகான காட்சி. இத்தனை பெயர்களா? அறியத் தந்ததற்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

யானையைப்போலவே பெயர் லிஸ்டும் பெரூசாத்தான் இருக்கு. நிறையப் பெயர்கள் இது வரை அறியாதவை. தகவலுக்கு நன்றி.

கோவை2தில்லி said...

யானையின் பெயர்கள் ஆச்சரியம்... தெரிந்து கொண்டேன்.

Geetha Sambasivam said...

ஹை யானை! ஜாலியா இருக்கு.

pudukai selva said...

அது சரி.... இந்த பெயரெல்லாம் நம்ம ஊர் யானைக்கு மட்டும் தானா...இல்லை ஆப்பிரிக்கா யானைக்கும் சேர்த்தா.... ஏனென்றால் இரண்டு இனத்திற்கும் வேறுபாடுகள் உண்டு என கேள்விப்பட்டிருக்கிறேன்......

s suresh said...

அடேயப்பா! இத்தனை பெயர்களா? தொகுத்து தந்தமைக்கு மிக்க நன்றி!

வெங்கட் நாகராஜ் said...

யானைக்கு இத்தனை பெயர்களா?... சிறப்பான படம் மட்டுமல்ல, சிறப்பான தகவலும் கூட.

திண்டுக்கல் தனபாலன் said...

சேமித்துக் கொண்டேன்... நன்றி...

மனோ சாமிநாதன் said...

இனிய தொகுப்பிற்கும் புகைப்படத்திற்கும் இனிய நன்றி!!

ஹேமா said...

அழகான யானைக்குடும்பங்கள்.இவ்வளவு பெயர்களா.?அறிந்திராத பெயர்கள்.நன்றி !

மீனாக்ஷி said...

எங்காளுக்கு இவ்வளவு பெயரா! ஹா!
யானையே அழகு. அதுலேயும் குட்டி யானை கொள்ளை அழகு. படம் சூப்பர்!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!