வியாழன், 10 ஜனவரி, 2013

புத்தகக் கண்காட்சி முன்னோட்டம்.

             
நாளை முதல் 36 வது புத்தகக் கண்காட்சி சென்னையில் தொடக்கம். 11-1-2013 முதல் 23 -1-2013 வரை.
                 
இந்தமுறை நந்தனம் YMCA மைதானத்தில். 
 
                                      

1 கோடி புத்தகங்களுடன் என்கிறது செய்தி. வாசகர்கள் தாங்கள் வாங்க விரும்பும் புத்தகம் எங்கு கிடைக்கும் என்று அறிய, புத்தகத்தின் தலைப்போ, பதிப்பகமோ ஏதாவது ஒன்று தெரிந்தாலும் தேடுவதற்கு வசதியாக தொடுதிரைக் கணினி வாயிலிலேயே ஏற்பாடு செய்திருக்கிறார்களாம் இந்தமுறை.

                                           

750 அரங்குகள். தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் வட மாநிலங்கள், ஜப்பான் போன்ற இடங்களிலிருந்தும் 250 தமிழ் பதிப்பாளர்கள், 127 ஆங்கிலப் பதிப்பாளர்கள், 37 ஊடகப் பதிப்பாளர்கள், 36 புரவலர் அரங்குகள் என 450 பங்கேற்பாளர்கள் விறபனைக்கு வைக்கின்றனராம்.
                                                  

மாற்றுத் திறனாளிகளுக்குச் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாக பபாசித் தலைவர் சொல்கிறார். நடக்க முடியாத வயாதனவர்களுக்கும் இந்த வசதி வழங்கப் பட்டால் நல்லது. சென்றமுறை போதுமான அளவு இல்லையென்று நினைவு. இந்த முறை எப்படியிருக்கிறதோ, பார்க்கலாம்.

அகில இந்திய வானொலி அரங்கும், பொதிகைத் தொலைக் காட்சி அரங்கும் அருகருகே இந்த முறை அமைந்திருப்பதாக பொதிகைத் தொலைக்காட்சியில் திரு திருப்பூர்க் கிருஷ்ணனுக்கு அளித்த பேட்டியில் திரு வைரவன் (செயலாளர்), திரு வெங்கடாசலம் ஆகியோர் தெரிவித்தனர்.


அரங்குகள் 100 ச. அடி, 200 ச.அடி, 300 ச. அடி அளவில் பதிப்பகங்களின் புத்தகத் தேவைக்கேற்ப வழங்கப் பட்டிருக்கிறதாம்.

                                        

சங்க உறுப்பினர்கள் 480 பேருக்கு சுற்றறிக்க அனுப்பப்பட்டு, முன்னுரிமை வழங்கப் பட்டிருக்கிறதாகவும், விரிவாக செய்தித் தாள்களில் விளம்பரம் செய்தால் அனைவருக்கும் அரங்குகள் வழங்க முடியாது என்றும் சொன்னார்கள்.

இம்முறை புத்தகத் திருவிழா இன்னும் கூடத் தள்ளித் திறக்க ஆலோசிக்கப் பட்டாலும் டிசம்பரில் நடைபெறும் சங்கீத சீசனுக்காக முன்கூட்டியே திட்டமிட்டு எப்படி வெளியூர், மற்றும் முக்கியமாக வெளிநாட்டு ரசிகர்கள் வருகின்றனரோ அதே போல இந்தக் கண்காட்சிக்காகவும் வரத் திட்டமிட்டிருக்கும் வெளிநாட்டு ரசிகர்களை - பொங்கல் விடுமுறையை உபயோகித்து வருபவர்கள் - ஏமாற்றாமல் அந்தத் தேதிகள் கவர் செய்து தொடங்கி விட்டனராம்.


வேலை நாட்களில் பகல் 2.30 முதல் இரவு 8.30 வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கண்காட்சி நடைபெறும். 
                                          
                                                        
                                             

வழக்கமாக 5 வழங்கப்படும்  விருதுகளுடன் குழந்தைகளுக்காக அறிவியல் புனைவுகள் எழுதும் நெல்லை சு முத்து வழங்கிய 1,00,000 ரூபாய் நன்கொடையை வைத்து சிறுவர் அறிவியல் இலக்கிய விருது ஒன்றும் இந்தமுறை வழங்கப் படுகிறதாம். இம்முறை அந்த விருது வழங்கப்படும் நூல் மேரி கியூரி பற்றிய சித்திரக் கதைக்கு என்றார் திரு வைரவன்.

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் பதிப்பகங்கள் வரிசைக்கு இடம் கொடுக்க நினைத்தால் சென்னையிலேயே இடமிருக்காது என்றார். முந்திக் கொள்பவர்களுக்குத்தான் வாய்ப்பு என்றார்.

                                         

'மின்னல் வரிகள்' கணேஷ் எழுதிய 'சரிதாயணம்' புத்தகம் 'டிஸ்கவரி புக் பாலஸ்' அரங்கில் கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். என்ன விலை கணேஷ்?

மேலும் கணேஷ் சொல்லியுள்ள படி பதிவர்கள் கவியாழி கண்ணதாசன் அவர்கள் புத்தகமும், கோவை மு. சரளா அவர்கள் புத்தகமும் வெளியாகி, இந்தப் புத்தகக் கண்காட்சியில் வாங்கலாம் என்று தெரிகிறது. அருணா செல்வம் எழுதியுள்ள 6 கவிதைத் தொகுப்புகள் மணிமேகலைப் பிரசுரத்தில் கிடைக்கும் என்று அவர் கணேஷ் பக்கத்தில் பின்னூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இதயம் பேத்துகிறது கே ஜி ஜவர்லால் மொழிபெயர்த்து எழுதியுள்ள இரண்டு புத்தகங்கள் புத்தகச் சந்தையில் கிடைக்கின்றன. மௌனத்தின் அலறல், தன்னாட்சி. இடம் கிழக்குப் பதிப்பகம். 

     

புத்தகக் கண்காட்சிக்குப் போக நினைப்பவர்கள் கையைத் தூக்கலாம். வாங்க விரும்பும் புத்தக லிஸ்ட் இங்கும் கொடுத்தால் இங்கு படிப்பவர்களுக்கும் தாங்கள் என்ன புத்தகம் வாங்கலாம் என்பதற்கு டிப்ஸ் கிடைக்கலாம்.

விகடன் இயர் புத்தகத்துக்கு ஏக விளம்பரம்... எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். 'ஸ்ரீ
வைஷ்ணவம்', மௌனியின் மறுபக்கம், 'அறம்'  ஜெமோ சிறுகதைத் தொகுப்பு, ஸுஜாதா விஜயராகவன் எழுதிய சங்கீதம் பற்றிய நாவல் ஆடியோ சிடியில்(பெயர் என்ன?) போன்றவை மனதில் இருக்கின்றன. அதிகம் கையைக் கடிக்காமல் இருக்க வேண்டும். இம்முறை ரொம்ப வாங்கக் கூடாது என்று எண்ணம். 'சுகா' ஏதாவது புதிய புத்தகம் எழுதியிருக்கிறாரோ?

                         

23 கருத்துகள்:

  1. அருமை! தகவல்களுக்கு நன்றி.

    பால கணேஷுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

    வர முடியவில்லை என்ற மனக்குறை எனக்கு:(

    பதிலளிநீக்கு
  2. என் ‘சரிதாயணம்’ புத்தகம் பர்ஸ்க்கு எளிதான விலையாக ரூ.60தான். அதைப் பற்றி இங்கு கண்டதில் மகிழ்வோ மகிழ்வு. மிக்க நன்றி. (நீங்க வெச்சிருக்கற என் படத்தைப் பாத்து யாரும் பயந்துக்காம இருந்தா சரி. ஹி... ஹி...) விகடன் பிரசுரம் எழுத்தாளர் சுஜாதா சிறப்பு மலர் வெளியிட்டிருக்கிறார்கள். அவசியம் வாங்கிப் படியுங்கள். மற்றும் நம் கோவைப் பதிவர்களான அகிலாவின் புத்தகம் ‘சின்னச் சின்ன சிதறல்கள்’ என்ற தலைப்பிலும், ஜீவாவின் புத்தகம் ‘கோவை நேரம்’ என்ற தலைப்பிலும் களத்தில் குதிக்க இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  3. "வல்லமை" மின்னிதழ் ஆசிரியர் ஆன பவளசங்கரியின் நான்கு புத்தகங்களும், திரு தமிழ்த்தேனி, கிருஷ்ணமாச்சாரியின் வெற்றிச் சக்கரம் நூலும், விசாலம் ராமன் அவர்களின் ஒரு நூலும் புத்தகக் கண்காட்சியில் வெளியீடு காண்கிறது. பவளசங்கரியின் புத்தகம் பழநியப்பா ப்ரதர்ஸ் என நினைவு. மற்றும் பல தெரிந்தவர்களும் சொல்லி இருக்கிறார்கள். சிறந்த நூலகர் விருது பெறும் திரு திருவேங்கடமணி அவர்களும் தெரிந்தவரே. விருது விழாவின் அழைப்பிதழும் அனுப்பி வைச்சிருக்கார். எங்கே, சென்னையில் இருந்தாலே போனதில்லை. :)))) போயிட்டு வந்து எழுதுங்க. போன வருஷம் ஒரு ஸ்டாலுக்கு அண்ணா பெண் வேலை செய்தாள். இந்த வருஷம் அவள் நிரந்தர வேலைக்குப்புதிய தலைமுறைக்குப் போயிட்டதாலே போக முடியாது. பார்க்கப் போவாளோ என்னமோ! :))))

    பதிலளிநீக்கு
  4. பால கணேஷுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். ஒரு நிமிஷம் "யாரு இந்தத் தாத்தா?" பார்த்த முகமா இருக்கேனு நினைச்சேன். :P :P :P :P :)))))

    பதிலளிநீக்கு
  5. ஆஹா..... பவளசங்கரி,தமிழ்த்தேனீ, விசாலம் அம்மா அனைவருக்கும் இனிய பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. தகவலுக்கு நன்றி. புத்தகக் கண்காட்சி பற்றிய பதிவுகளை ஏக்கத்துடனே படிக்கிறேன்.அந்த சமயத்தில் சென்னைக்கு வர முடியுமா என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  7. தமிழ்ப் புத்தகங்களை டவுன்லோடி செய்யும் தமிழ்த்தேனீ தளமும், இந்தத் தமிழ்த்தேனியும் வேறு வேறு என எண்ணுகிறேன். நான் சொல்லும் இந்த தமிழ்த்தேனீ பல தொலைக்காட்சித் தொடர்களிலும், "சிவாஜி" (ரஜினி படம்) படத்தில் ஷ்ரேயாவுக்கு மானேஜராகவும் நடித்தவர்.

    பதிலளிநீக்கு
  8. ஹிஹி, டவுன்லோடிங் என்பதில் "ங்" விட்டுப் போயிருக்கு. நோ இம்பொசிஷன்! :))))))

    பதிலளிநீக்கு
  9. // Geetha Sambasivam said...
    ஹிஹி, டவுன்லோடிங் என்பதில் "ங்" விட்டுப் போயிருக்கு. நோ இம்பொசிஷன்! :))))))//

    நான் ஒப்புக்கமாட்டேன். எனக்கு மட்டும் இம்போசிஷன், பெஞ்சு மேல ஏறி நில்லு என்றெல்லாம் நீங்க சொன்னீங்க. நீங்க இம்போசிஷன் எழுதணும்.. ஆம்மாம் ...:))

    பதிலளிநீக்கு
  10. பாலகணேஷ்,விசாலம்,பவளசங்கரி அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள். எனக்குத் தெரிந்தவர் புத்தகம் வெளிவந்தால் நன்றாக இருக்கும்.உடனே வாங்கிடலாம். சந்தியா பதிப்பகத்தார் வெளியிடுகிறார்கள். பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  11. கீதா மேடம்... ஒரு யூத்தைப் போய் தாத்தான்னா நினைசசீங்க... கர்ர்ர்ர்! ஏய்... யாரங்கே... ஸ்ரீரங்கத்துக்கு ஒரு டிக்கெட் போடுப்பா...

    பதிலளிநீக்கு
  12. //நான் ஒப்புக்கமாட்டேன். எனக்கு மட்டும் இம்போசிஷன், பெஞ்சு மேல ஏறி நில்லு என்றெல்லாம் நீங்க சொன்னீங்க. நீங்க இம்போசிஷன் எழுதணும்.. ஆம்மாம் ...:))//

    மாட்டேனே, இன்னிக்குப் பாஸ்போர்ட் ரினிவலுக்குப் போயிட்டு வந்தேனா! அதான் கொஞ்சம் அசதி. "ங்" அடிச்சேன். ஆனால் வலு இல்லாததால் விழலையாக்கும். (எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்குப்பா)

    பதிலளிநீக்கு
  13. தமிழ்த்தேனீயையும் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணுமே வல்லி??

    பதிலளிநீக்கு
  14. @பாலகணேஷ், ஹிஹிஹி, படத்தைப் பார்த்தால் அப்படித்தோணிச்சாக்கும். இதுக்காகவா ஸ்ரீரங்கம் வரப் போறீங்க? வாங்க, வாங்க, வை.கோ வீட்டில் அடை சாப்பிட அனுப்பி வைச்சுடலாம். :))))))

    பதிலளிநீக்கு
  15. ஆஹா... அடைன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும் கீதா மேடம். திருச்சி நண்பர்களை சந்திக்க அவசியம் பிப்ரவரியில வர்றேன். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

  16. இதயம் பேத்துகிறது கே ஜி ஜவர்லால் மொழிபெயர்த்து எழுதியுள்ள இரண்டு புத்தகங்கள் புத்தகச் சந்தையில் கிடைக்கின்றன. மௌனத்தின் அலறல், தன்னாட்சி. இடம் கிழக்குப் பதிப்பகம்.

    பதிலளிநீக்கு
  17. எங்கள் ப்ளாக்10 ஜனவரி, 2013 அன்று PM 7:54


    இந்த விவரம் பதிவில் படத்துடன் இணைக்கப் பட்டுள்ளது!

    பதிலளிநீக்கு
  18. புத்தக கண்காட்சி பற்றி பகிர்வு நன்று. அருணா செல்வம் புத்தகங்கள் எனக்கு புதிய தகவல் நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  19. எனக்குத் தெரிந்த பதிவர்கள் திரு பால கணேஷ், திரு ஜவஹர், அருணா செல்வம் இவர்களின் புத்தகங்கள் வெளி வர இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது.

    புகைப் படம் எப்படி இருந்தால் என்ன, கணேஷ்? உங்கள் ட்ரேட்மார்க் சிரிப்பு இருக்கிறதே!

    பதிலளிநீக்கு
  20. இந்தக் கண்காட்சியில் நான் வாங்க நினைத்திருக்கும் புத்தகங்கள்

    சிரிதாயணம்
    வாத்தியார் மூலம் தெரிந்து கொண்ட சுஜாதா சிறப்பு மலர்
    சுகாவின் வேணு வனம்
    ராஜ நாராயணணின் கிருஷ்ணவேணி
    ஜோ டி க்ருஸ் எழுதிய ஆழி சூழ் உலகு
    சுரேகாவின் தலைவா வா

    இது போக சாம்பவ இடத்தில் தென்படும் எனக்குப்பிடித்த புத்தகங்கள்

    பதிலளிநீக்கு
  21. தகவல்களுடன் அருமையான முன்னோட்டம். கணேஷுக்கும் சக பதிவர்களுக்கும் வாழ்த்துகள்!

    அப்டேட்ஸும் தாருங்கள்:)!

    பதிலளிநீக்கு
  22. பாலகணேஷ்,விசாலம்,பவளசங்கரி அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள். இந்த வருஷம் புத்தக கண்காட்சி மிஸ் பண்றது ரொம்ப வருத்தமாதான் இருக்கு. அடுத்த வருஷம் பாக்கலாம்.

    ராமலக்ஷ்மி சொன்ன மாதிரி தயவு பண்ணி அப்டேட்ஸும் தாருங்கள். எந்த ஸ்பெஷல் கெஸ்ட் எல்லாம் பாத்தீங்கன்னும் கொஞ்சம் சொல்லிடுங்க. :))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!