வியாழன், 3 ஜனவரி, 2013

பஸ் டே, எஸ் வி சேகர், கேபிள் டிவி, - வெட்டி அரட்டை

          
ஒன்றாம் தேதி முதல் திடீரென கேபிள் டிவிக்காரர்கள் இணைப்பைத் துண்டித்துக் கொண்டார்கள். செட் டாப் பாக்ஸ் இருந்தால்தான் இனி இணைபபாம். அப்படியும் வேறு சிலருக்குக் கொடுத்திருக்கிறீர்களே என்று கேட்டபோது, அவர்களெல்லாம் செட் டாப் பாக்ஸுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள் என்றார்கள்.
                                                      

அரசாங்கமே கேபிள் டிவி தொழிலை நடத்தக் கூடாது என்று டிராய் சொன்னபின் இந்த செட் டாப் பாக்ஸ் பிசினஸ் எல்லாம் என்னவென்று புரியவில்லை. டிஷ் டிவிக்களில் எது நல்ல கனெக்ஷன் என்று ஆராய்ந்து வருகிறேன். டாடா ஸ்கை வாங்குங்க என்று சிலரும், ஏர் டெல் என்று சிலரும் சொல்ல, சன் டைரக்ட் வாங்கிடுங்க என்று சிலரும் சொல்கிறார்கள்! SCV இடமே மறுபடி மாட்டத் தயக்கமாக இருக்கிறது. மதிக்கவே மாட்டார்கள். ஏதோ ஒன்று... பத்தாம் தேதிக்குள் வாங்கினால் 1000 ரூபாய் ஸ்க்ராட்ச் கார்ட் வாங்கி  விஸ்வரூபம் பார்த்து விடலாம்! 20 பேரிடம் 100, 100 ரூபாய் என்று கலெக்ட் செய்து லாபம் கூடப் பார்த்து விடலாம்! :)))

நடுவில் கலைஞர் டிவி உட்பட பல சேனல்களில் தொகுப்பாளினிகள் மற்றும் தொகுப்பாளர்கள் செய்யும் தமிழ்க் கொலை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. இன்று தமிழ்நாட்டில் ழ, ல, ள, உச்சரிப்பைச் சரியாகச் சொல்வோர் என்று பார்த்தால் பத்து சதம் கூடத் தேறுவார்களா என்பது சந்தேகமே என்று தோன்றுகிறது. பேசுகிறேன் என்று அவர்கள் புரியும் தமிழ்க்கொலையை 'மிஸ் தமிழ்த்தாய்' மன்னிக்கட்டும்!


ஒரு தலைப்பில், அல்லது ஒரு கருவில் படம் வெற்றியடைந்தால் அதே பாணியில் பல படங்கள் வருமே, அது போல இது கற்பழிப்பு சீசன் போலும். இந்தியா முழுதும் தினம் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது இந்தக் குற்றம். செய்தியைப் படிக்கும் 100 பேரில் ஒருவருக்கு, அல்லது 1000த்தில் ஒருவருக்கு தானும் அந்தக் குற்றத்தை நிகழ்த்திப் பார்க்க வேண்டும் என்று தோன்றும் போலும். 

குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்பது இவர்களுக்கு தைரியம் அளிக்கிறது போலும். செய்தித் தாள்களில், டிவிக்களில் இந்தச் செய்தி வராமல் நிறுத்தவும் முடியாதே... இந்தச் சீரழிவுகளுக்கு இந்தக் காலத் திரைப்படங்களும் டிவி சீரியல்களும் கூடக் காரணமாயிருக்கலாம். வயது வித்தியாசமின்றி, 14 வயதுச் சிறுவன் 4 வயதுக் குழந்தையை, இன்னொருவன் 45 வயதுப் பெண்மணியை, கல்லூரி மாணவியை, பள்ளி மாணவியை என்று எல்லாத் தரப்பிலும் இந்தச் செய்தி வந்தவண்ணம் இருக்கிறது. பெண் குழந்தை வைத்திருப்பவர்கள் வயிற்றில் ஒவ்வொரு நிமிடமும் பட்டாம்பூச்சி பறந்து கொண்டிருக்கும் இந்நிலை என்று மாறுமோ? 

மாறுமா? அதற்கு நாமும் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து நம் பத்திரத்தை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

பஸ் டே கொண்டாட்டங்களைத் தடை செய்வது போல புத்தாண்டுக் கொண்டாட்டங்களையும் தடை செய்தால் தேவலாம். 
                                                    
பொது இடங்களில் கொண்டாட்டம் என்ற பெயரில் நடைபெறும் அத்துமீறல்கள் கஷ்டத்தைக் கொடுக்கின்றன. நீங்கள் ஏன் அங்கு போகிறீர்கள் என்று கேட்கலாம். வேறு வேலையாக நாம் அந்தப் பக்கம் செல்வது சில சமயம் கட்டாயமாகி விடும்போது இவற்றைத் தவிர்க்க முடிவதில்லை.

எஸ் வி சேகர் நாடகம் 'காதுல பூ' வாணி மகாலில். சிரிப்பு வரவில்லை. ஆனாலும் பின்னால் ஒருவர் விழுந்து விழுந்து சிரித்து அமோக ஆதரவளித்துக் கொண்டிருந்தார். முதல் முறை பார்க்கிறார் போலும்!
நீ.....ண்ட நாட்களுக்குப் பின் நாடகம் பார்த்த அனுபவம். 
                                              
இதற்கு முன்னால் பற்பல வருடங்களுக்கு முன்னால் தஞ்சையில் மெரீனாவின் 'தனிக்குடித்தனம்', 'மாப்பிள்ளை முறுக்கு' பார்த்தது. கூத்தபிரான், பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோர் நடித்தது. ஆர் எஸ் மனோகர் நாடகங்கள் பார்க்க முடியாமல் போனது வருத்தம்தான். எஸ் வி சேகர் நாடகக் கலெக்ஷனில் என்னென்ன நல்ல காரியங்கள் செய்கிறோம் என்று சொன்னபோது நெகிழ்ச்சியாக இருந்தது.

                   

22 கருத்துகள்:

  1. நம் பத்திரத்தை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. தொட்டுக் கொள்ள நிறைய விஷயங்களைப் பரப்பி, அவற்றின் நடுவே கொஞ்சம் சாதம் வைத்தாலும் அதற்கான சுவை அமிர்தம் தான்!

    கேபிள் டிவியில் ஆரம்பித்து, கொலைக்குள்ளாகும் தமிழ் உச்சரிப்புகளைக் கோடிகாட்டி, சமீபத்திய குற்றமும் தண்டனையும்-க்கு வந்து, புத்தாண்டு கொண்டாட்டங்களில் நின்று எஸ்.வி.சே.யில் முடிக்கிற மாதிரி காட்டி, பழம்பெரும் நாடக மேடை மேதைகளைப் பற்றி மறக்காமல் நினைவு கூர்ந்தது கச்சிதமாக அமைந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  3. //விஸ்வரூபம் பார்த்து விடலாம்//

    அந்நேரம் கரெக்டா கரண்ட் கட் ஆனா...??!!

    // இது கற்பழிப்பு சீசன் போலும் //
    இப்போன்னு இல்லை, எப்பவுமே சீஸன்தான்!! என்ன இப்ப அடிச்ச ஆழி அலையால, இது கொஞ்சம் வெளியே வருது, அவ்வளவுதான். ஏற்கனவே டில்லி பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நகரம், கற்பழிப்புகளில் முதலிடம்னு “பெருமை”கள் முன்னாடியே கிடைச்சிருக்கு. (அதுக்காக, டில்லி தவிர்த்த இந்தியா பெண்களுக்கு உகந்ததுன்னு அர்த்தமில்லை!!) அப்போ அதை யாரும் கண்டுக்கலை/நம்பலை. இப்போ நம்பியே ஆகணும்!! :-((((

    என்னது, பஸ் டே-வை தடை செஞ்சுட்டாங்களா, அப்படியா?

    என்ன சார், புத்தாண்டுக் கொண்டாட்டத்தைத் தடை செய்யணுமா? ரெடியா இருங்க... பழமைவாதி, ஆணாதிக்கவாதி, ரசனை இல்லாதவர், “இத நிறுத்திட்டா, அவங்களும் நிறுத்திடுவாங்களாமா?”... etc. etc.. தாக்குதல்களை எதிர்கொள்ள!! :-))) :-(((

    பதிலளிநீக்கு
  4. டிஷ் டிவி தேவலை. டாட்டா ஸ்கை வறுத்து எடுக்கிறது.
    நாடகங்களை முன் போல ரசிக்க முடியவில்லை.
    ரேடியோவில் கேட்ட நாடகங்கள் எத்தனையோ நன்றாக இருக்கும்.

    எத்தனையோ அவலங்களை நிறுத்த வேண்டும் எங்கே ஆரம்பிப்பது என்று தான் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  5. கேபிள் டிவியை அரசு ஏற்று நடத்துவதில் எந்தத் தடையும் இல்லை என மதுரை உயர்நீதி மன்றத் தீர்ப்பே உள்ளது. வசதியாக அதை ட்ராய் மறந்துவிட்டது. என்ன காரணம் எனச் சொல்ல வேண்டியதில்லை. :)))) இங்கே எல்லாம் அரசு கேபிள் தான்.

    பதிலளிநீக்கு
  6. இப்படிக் கட்டாயப் படுத்து செட்டாப் பாக்ஸ் வாங்க வைப்பது அநியாயமாக இருக்கிறது! இதைத் தட்டிக் கேட்பார் இல்லாமல் எல்லாரும் தொலைக்காட்சி மோகத்துக்கு அடிமையாகி விட்டோம். :((((

    நான் தொலைக்காட்சி பார்த்தால் பொதிகையோ, தூர்தர்ஷன் நேஷனலோ, தூர்தர்ஷன் லோக்சபாவோ பார்ப்பேன். சென்னையில் இருந்த வரை தூர்தர்ஷன் பாரதி வரும். நல்ல நிகழ்ச்சிகளாகப் பார்க்கலாம். அதில் ஒருமுறை காஷ்மீரின் சைவத்தைப் பற்றிய வரலாற்றுச் சித்திரம் பார்த்தோம். அருமை. பல கோயில்கள் அழியும் நிலையில்! :(((((

    பதிலளிநீக்கு
  7. இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களைப் பற்றி நிறைய எழுதியாச்சு. முன்னெல்லாம் இந்த மாதிரி யாரும் போக மாட்டாங்க. பெற்றோர் தடையும் சொல்வாங்க. இப்போது பெற்றோரே தடுப்பதில்லை போல! தடுத்தாலும் இன்றைய இளைஞர்கள் அதையும் மீறிக் கொண்டு செல்வார்களோ என்னமோ! :(((

    பதிலளிநீக்கு
  8. நான் கல்யாணம் ஆனதும் முதன் முதல் வெளியே போய்ப் பார்த்த பொழுதுபோக்கு நிகழ்வே தனிக்குடித்தனம் நாடகம் தான். கூத்தபிரான், பூர்ணம் நடிப்பில் தான் பார்த்தேன். அம்பத்தூரிலேயே ஆண்டாள் அரங்கம் என்னும் அரங்கில் நடைபெற்றது. :))))ஆர்.எஸ்.மனோகரின் நாடகங்களைத் தொலைக்காட்சியில் பார்த்திருக்கேன். இப்போப் பொதிகை என்னும் பெயரில் இருக்கும் தொலைக்காட்சி சென்னைத் தொலைக்காட்சியாக இருக்கையில் நிறையப் போட்டிருக்காங்க. அதிலே சாணக்கியன் எனக்குப் பிடித்தது.

    பதிலளிநீக்கு
  9. எஸ்.வி.சேகர் இப்போதெல்லாம் பொறுமையைச் சோதிக்கிறார். அதுக்கு மாது பாலாஜி கொஞ்சம் பரவாயில்லை. ஒரு சில தொலைக்காட்சி சானல்களிலும், பொதிகையிலும் அவ்வப்போது வருகிறது.

    பதிலளிநீக்கு
  10. புத்தாண்டு கொண்டாட்டங்களில் எனக்கும் உடன்பாடில்லை தான்.

    பதிலளிநீக்கு
  11. சுவையான பகிர்வு! கற்பழிப்பு குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கொண்டு வர வேண்டும்! இங்கு அம்மா முன் மொழிந்துள்ளார் பார்ப்போம்! எங்கள் ஊர் அரசு கேபிள் படு மோசம்!

    பதிலளிநீக்கு
  12. எங்கள் ப்ளாக்3 ஜனவரி, 2013 அன்று PM 7:56


    நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்...


    பதிலளிநீக்கு
  13. எங்கள் ப்ளாக்3 ஜனவரி, 2013 அன்று PM 7:59


    நன்றி ஜீவி சார்...

    படித்து ரசித்ததை அருமையாக வர்ணனை செய்திருக்கிறீர்கள். சிலசமயம் இலையில் பரிமாறப் பட்டிருப்பவை பார்க்க அழகாக இருக்கும், சாப்பிடத் தொடங்கினால் 'சப்'பென்று போய் விடும்... இசைவிழா கேன்டீன்கள் போல... ! வெட்டி அரட்டை அடித்து ரொம்ப நாட்களாகி விட்டது!

    பதிலளிநீக்கு
  14. எங்கள் ப்ளாக்3 ஜனவரி, 2013 அன்று PM 8:05


    வருக ஹுஸைனம்மா..

    அந்நேரம் சென்னையில் கரண்ட் கட் ஆகாது! மற்ற ஊர்களிலும் சரி செய்ய தமிழக அரசு 1000 மெகா வாட் தனியாரிடம் வாங்க முயற்சி எடுத்து வருகிறதாம்!

    கடந்த ஒரு வார காலமாக செய்தித் தாள்கள் பார்த்தால் க.செய்திதான் இடத்தை ஆக்ரமிக்கிறது. டெல்லியில் குறிப்பிட்ட சம்பவத்துக்குப் பின் அந்தச் சம்பவம் பற்றியெரியும் நிலையிலும், ஒரு பெண் இரவு 11 மணிக்கு மேல் வீட்டில் கோபித்துக் கொண்டு கிளம்பி பஸ்ஸில் ஏறுகிறாள்... என்ன சொல்ல?

    //ரெடியா இருங்க... பழமைவாதி, ஆணாதிக்கவாதி, ரசனை இல்லாதவர், “//

    அப்படி யாரும் சொல்ல மாட்டாங்க... என்று நம்புகிறேன்! :)))

    பதிலளிநீக்கு
  15. எங்கள் ப்ளாக்3 ஜனவரி, 2013 அன்று PM 8:07


    வருக வல்லிம்மா..

    டாட்டா ஸ்கை, ஏர்டெல், சன் டைரக்ட், இவற்றைத் தொடர்ந்து இன்று வீடியோகானும், டிஷ் டிவியும் சொன்னார்கள். டிஷ் இல் ரெகார்டிங் வசதி உள்ளதாம்... இதற்கிடையில் மாலை 6 மணிக்கு மேல் அவர்கள் கேபிள் இணைப்பு பழைய மாதிரி கொடுத்து விட்டார்கள்...! எனவே இப்போதைக்கு சட்டி வாங்கும் யோசனைத் தள்ளி வைக்கப் படுகிறது!

    பதிலளிநீக்கு
  16. எங்கள் ப்ளாக்3 ஜனவரி, 2013 அன்று PM 8:28



    வருக கீதா மேடம்...

    1) ட்ராய் முடிவுகள் மக்களைக் குழப்புகின்றன.

    2) அடிமையாகாவிட்டாலும் செய்திகளுக்கும், அவ்வப்போது ரிலாக்செஷனுக்கும் தொல்லைக்காட்சி தேவையாய்த்தான் இருக்கிறது. பார்ப்பது பெரும்பாலும் தைம்ட்ஸ் நவ், அவ்வப்போது ஆதித்யா, வார இறுதி நாட்களில் பழைய பாடல்கள்....!

    3) // இன்றைய இளைஞர்கள் அதையும் மீறிக் கொண்டு செல்வார்களோ என்னமோ! :((//

    ஆம், அதுதான் நடக்கிறது. டெல்லி சம்பவத்தில் கூட குற்றம் சாட்டப்பட்ட ஒருவன் வீட்டில் வெளியிலேயே வராமல் அழுது கொண்டு இருக்கிறார்களாம். - செய்தி.

    4) தனிக்குடித்தனம் நாடகத்தில் பூர்ணம் - அவரது மனைவி பேசும், காசை மிச்சம் பிடிக்க பஸ் பின்னாலேயே ஓடி வந்ததாகச் சொல்ல, ஆட்டோ பின்னால் ஓடி வந்திருந்தால் காசு இன்னும் அதிகமாக மிச்சமாகியிருக்கும் ஜோக்கும், 'நின்னா கால் வலிக்கிறதுன்னு சொன்னேளா' ஜோக்கும் மனதில் நிற்கின்றன! குடைநாயுடுவும்!

    5) திங்கட்கிழமை மாது ப்ளஸ் டூ. பார்க்கும் எண்ணம் இல்லை. புதுசாக எதுவும் போடாமல் போட்டதையே போட்டு கடுப்பேற்றுவது அலுப்பு தருகிறது! :))

    பதிலளிநீக்கு
  17. எங்கள் ப்ளாக்3 ஜனவரி, 2013 அன்று PM 8:29


    நன்றி சசிகலா.

    நன்றி 'தளிர்' சுரேஷ்.

    பதிலளிநீக்கு
  18. இப்போது நிகழ்ந்த குற்றத்தின் பின்னணியில் எப்போதோ நடந்து குற்றவாளி தப்பித்துப் போன விஷயத்தை எடுத்துக் கொண்டு நேற்று ஓர் செய்தி சானல் பார்வையாளர்களை வாட்டி வதைத்த கொடுமையை என்ன சொல்ல?
    இதை முதல் முதலாக நாங்கள் தான் எக்ஸ்போஸ் செய்தோம் என்ற பெருமை வேறு!

    எங்களைப் போன்ற வெளியூர்காரர்கள் டிஷ் காரர்கள் கொடுக்கும் தமிழ் சானல்களைப் பார்த்து திருப்திப் பட்டுக் கொள்வதை தவிர வேற வழியில்லை.

    தமிழ் நாடகங்களில் நகைசுவை வறண்டு விட்டதோ என்று தோன்றுகிறது.

    'வண்ணக் கோலங்கள்' சேகரை இப்போது காணவே காணும்!

    எல்லோரையும் பழைய நினைவுகளை அசை போட வைத்துவிடீர்கள்.

    பதிலளிநீக்கு
  19. இங்கே கேபிள் டிவி வழக்கம்போல் செயலாற்றுகின்றன. செட் டாப் பாக்ஸ் வைக்கச் சொல்லி கேட்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் நாங்கள் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் டாடா ஸ்கைக்கு மாறிவிட்டதற்குக் காரணம், அவ்வப்போது எழும் காவேரி பிரச்சனைகளின் போது நாட்கணக்கில் கேபிள் தமிழ் சேனல்களை நிறுத்தி விடும்.

    ---

    பொது அமைதிக்கு இடையூறு என்கிற அடிப்படையில் இரவுக் கொண்டாட்டங்கள் தடை செய்யப்படுவது எல்லா விதத்திலும் நல்லது என்பது என் எண்ணமும்.
    ----

    எஸ்.வி. சேகர் நாடகம் சில வருடங்கள் முன் பெங்களூர் செளடய்யா மெமோரியல் அரங்கில் பார்த்திருக்கிறேன். பெயர் மறந்து விட்டது. இங்கு ரஞ்சனிம்மா கருத்தோடு ஒத்துப் போகிறேன்.
    ----

    பதிலளிநீக்கு
  20. எங்க ஏரியா கேபிள் காரர்கள் அரசு டிவி வருது என்றும் அதே அளவு பணம் தான் ; செட் அப் பாக்ஸ் தேவையில்லை என சொல்லிருக்காங்க; பெரும்பாலான சானல் வருமென்றும் சொல்றாங்க நீங்களும் செக் செய்யவும்; ஓரிரு மாதம் அதை பார்த்துட்டு சரி வராவிடில் செட் அப் பாக்ஸ் செல்லலாம் என நினைத்துள்ளேன்

    பதிலளிநீக்கு
  21. பெண் குழந்தை வைத்திருப்பவர்கள் வயிற்றில் ஒவ்வொரு நிமிடமும் பட்டாம்பூச்சி பறந்து கொண்டிருக்கும் இந்நிலை என்று மாறுமோ?

    மாறுமா? அதற்கு நாமும் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து நம் பத்திரத்தை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். //

    ஆம், நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் உண்மை.

    பதிலளிநீக்கு
  22. சமீபத்தில் airtel எங்க வீட்டில வாங்கினோம் நல்ல இருக்கு சார்.. விஸ்வரூபம் நான் கண்டிப்பா அரங்குல தான் பார்ப்பேன்... மிஸ் தமிழ் தாய் உசுர கையில பிடிச்சிட்டு இருக்காங்க... இதுல எங்க இருந்து நம்மள மன்னிக்க... அடுத்த முறை நாடகங்களுக்கு சென்றால் என்னையும் அழைத்து செல்லவும்... நான் இதுவரை நாடகங்கள் பார்த்தது இல்லை.. நாடகங்கள் பற்றி madrasbhavan.com சிவா தொடர்ந்து எழுதி வருகிறார். நேரம் இருந்தால் படிக்கவும்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!