புதன், 27 பிப்ரவரி, 2013

அலேக் அனுபவங்கள் 17:: முட்டை போட்டியா?

                                
அசோக் லேலண்டில் அது ஒரு வெயில் கால மதிய நேரம். கால் நடையாக காண்டீன் வரை சென்று, நாற்பது பைசா சாப்பாடு சாப்பிட்டு, கால்நடையாக என் பணி இடம் திரும்பினேன். (இரண்டு பேர்களுக்கு கருத்துரை பதிய பாயிண்ட் கிடைத்து விட்டது என்று நினைக்கின்றேன். பார்ப்போம்!)
 
வெயில் காலங்களில், வெளியே சுற்றிவிட்டு வந்தால், இரண்டு புகலிடங்கள் அந்த நாட்களில் மிகவும் பிரசித்தம். ஒன்று நகல் யந்திரம் உள்ள அறை. மற்றது மேலாளர் அறை.   
 
அந்த அறைகள் குளிர் பதன எந்திரங்கள் கொண்ட அறைகள் என்பதால், (தமிழுல சொன்னா ஏ சி ரூம்!) வெயிலுக்கு இதமாக, சற்று இளைப்பாறலாம். 
             
மதிய நேர டிஸ்கஷனுக்காக என்றே கூட சில பேப்பர்களை எடுத்து வைத்துவிடுவோம். சில நாட்களில், மேலாளர் சாப்பிட செல்வதற்கு முன்பாகவே போய் சாப்பிட்டு வந்து , அவர் அறையை விட்டு கிளம்புவதற்குள், அங்கே தஞ்சம் புகுந்து, "நீங்க போய் சாப்பிட்டுவிட்டு நிதானமா வாங்க சார், எப்போ ஈ டி (Executive Director) வந்து கேட்டாலும், ' மானேஜர் இப்போதான் சாப்பிடப் போனார்' என்று சொல்லிவிடுகிறேன்!"  என்று சொல்லி விடுவேன். மானேஜருக்கும் அந்த டீலிங் ரொம்பப் பிடிச்சிருந்தது!  
              
ஒரு நாள், இப்படி மேலாளர் அறைக்குள் நான் நுழைந்த தருணத்தில், அவர் போனில், "முட்டை போட்டியா?" என்று கேட்டுக் கொண்டிருந்தார். சரி, யாரோ சத்துணவுக்கூட ஆயாவோடு போனில் உரையாடுகிறார் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டேன்.  
              
தொடர்ந்து அவர், "அதாம்பா எல்லோரும் செய்யறதுதானே. அதைத்தான் கேட்டேன். முட்டை போட்டியா?" என்றார். பிறகுதான் கவனித்தேன் அவர் பேசிக் கொண்டிருந்தது, வெளித் தொலை பேசி இல்லை. டிபார்ட்மெண்டுகளுக்கிடையே பேசப் பயன் படுகின்ற, உள் தொலைபேசி. (internal telephone) 'இதேதடா விசித்திரமாக இருக்கிறதே! அசோக் லேலண்டில், அடை காக்கும் கோழிகளை கூட அப்பாயிண்ட் செய்கிறார்களா'  என்று ஆச்சரியத்துடன் அந்த ஆந்திரா யுனிவெர்சிடி அதிகாரியை நோக்கினேன்.  
               
அப்புறம், 'அப்படியே மறுமுனையில் ஒரு கோழி பேசிக் கொண்டிருந்தாலும், இவருக்கு கோழி பாஷை தெரியாதே!' என்று நினைத்தேன். இதற்குள், மறுமுனையில் பேசிக்கொண்டிருந்தவர், இவர் என்ன கேட்கிறார் என்று புரியாமல், பக்கத்தில் யாராவது தமிழ் தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களிடம் போனைக் கொடுக்கும்படி கேட்டிருப்பார் போலிருக்கு. அதிகாரி என்னிடம் போனைக் கொடுத்தார். 
             
நான் போனை கையில் வாங்கி, காதில் வைத்து, 'ஹலோ?' என்று வாயால் கேட்டேன். மறுமுனையில் பேசிக் கொண்டிருந்தவர், 'திட்டமிடுதல்' (Planning Department) பகுதி நண்பர். எனக்கும் தெரிந்தவர்.
             
என் குரலை அடையாளம் கண்டு கொண்டு, "கௌதமா - அவர் என்ன கேட்குறாருன்னு எனக்குப் புரியல. நீ கேட்டு விளக்கமா சொல்லு" என்றார்.   
               
நான் அதிகாரியை பார்த்தேன். அவர் சொன்னார்: "அவரு திருப்பதி போயிட்டு வந்தாராம். அதுதான், (தலையைக் காட்டி) முட்டை போட்டு வந்தாரா' என்று கேட்டேன்" என்றார். 
         
நான் போனில், அந்த நண்பரிடம், "அது ஒண்ணுமில்லே சார். நீங்க திருப்பதி போயிட்டு வந்திருக்கீங்களே, மொட்டை போட்டு வந்திருக்கிறீர்களா' என்று கேட்கிறார் சார்" என்றேன். அவர் மறுமுனையில் சிரித்த சிரிப்பில், என் கையில் இருந்த ரிசீவர் அதிர்ந்தது. 
                      
***************  **************  ************** 
            
அதே அதிகாரியின் சம்பந்தப் பட்ட மற்றுமொரு சுவையான அனுபவம்: 
             
எங்களுடைய (பழைய) 370 எஞ்சின் கிராங்க் ஷாப்டில், ஒரு சிறிய மாற்றம் செய்து, அதை ஒரு ட்ரயல் பேட்ச் உற்பத்தி செய்து, தமிழகத்தில் பல பகுதிகளில் அந்த கிராங்க் ஷாப்ட் பொருத்தப்பட்ட எஞ்சின், பேருந்துகளில் சோதனை ஓட்டம் நடந்து கொண்டிருந்தது. எல்லா இடங்களிலிருந்தும் கிடைத்த அறிக்கைகள், சம்பந்தப்பட்ட எஞ்சின்கள் குறை ஏதுமின்றி, நன்றாக இயங்கிக் கொண்டுள்ளன என்பதுதான்.  
              
மூத்த அதிகாரிகளின் உயர்மட்டக் குழு சந்திப்பின் போது, இந்த விவரங்கள் அளிக்கப்பட்டன. அப்பொழுது ஒரு (வடக்குப் பகுதி சர்விஸ்) அதிகாரி, இந்த மாற்றம் செய்யப்பட்ட எஞ்சின் உள்ள பேருந்துகள், எங்கே அதிக அளவில் சோதனை ஓட்டம் ஓடிக் கொண்டிருக்கின்றன? என்று கேட்டார்.  
              
இந்த ஆந்திர அதிகாரி, உடனே மீட்டிங் ரூமிலிருந்து, அந்த பிராஜெக்ட் இன்சார்ஜ் (நாராயணசாமி என்று ஞாபகம்) ரூமிற்கு போன் செய்து, விவரங்கள் கேட்டு அறிந்தார். ஒரு காகிதத்தில் விவரங்களை எழுதிக் கொண்டார்.  
                   
மீட்டிங் ரூமில் இருந்த அனைத்து உயர் அதிகாரிகளிடமும், பெருமையாக சொன்னார். "இந்த மாற்றம் செய்யப்பட்ட என்ஜின் உள்ள வண்டிகள், அதிக அளவில் ஓடிக் கொண்டிருப்பது, தஞ்சை பெருமாள் டிரான்ஸ்போர்ட். " 
                  
சிலர், சரி என்று தலை ஆட்டி கேட்டுக் கொண்டனர். சிலர் புருவம் உயர்த்தினர். ஒருவர் மட்டும் கேட்டார், "அது என்ன புதுசா இருக்கு? நான் கேள்விப் பட்டதே இல்லையே!"   
                    
நம் அதிகாரி, போன் செய்து பிராஜெக்ட் இன் சார்ஜை, மீட்டிங் அறைக்கு உடனே வரும் படி அழைத்தார்.  
                  
மீட்டிங் ஹாலுக்கு சென்ற பிராஜெக்ட் இன்சார்ஜிடம், எல்லோரும், "யாருப்பா அந்த தஞ்சை பெருமாள்? நீங்க பாட்டுக்க புதுப் புது ஆட்களிடம் சோதனை வண்டிகளை கொடுத்து சோதனை செய்தால், நாளைக்கு வேறு பெரிய கஸ்டமர்களுக்கு அந்த மாற்றங்கள் நம்பகமானவை என்று எங்களால் எப்படி நிரூபிக்க முடியும்?" என்றெல்லாம் கேள்விகள் கேட்க, பிராஜெக்ட் இன் சார்ஜ் கூறினார். "சார், அது தஞ்சை பெருமாள் டிரான்ஸ்போர்ட் இல்லை; தந்தை  பெரியார்  டிரான்ஸ்போர்ட்  கார்ப்பரேஷன்!"   
                     

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 2 2013


பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால், அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள். 
 
இங்கு ஒரு மாறுதல்.
   

எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்...  
==================================================================== 


                                                    

1) இந்த வருட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புவது? 

=========================================================




2) அபரிமிதமான விஞ்ஞான வளர்ச்சி அழிவைத் தராதா? (சுஜாதாவிடம் கேட்கப்பட்ட கேள்வி!)

===========================================================



3) கதை முதலில் வந்திருக்குமா? கவிதை முதலில் வந்திருக்குமா?

=============================================================

படங்கள் : நன்றி இணையம்.
               

திங்கள், 25 பிப்ரவரி, 2013

கௌரவம் காத்தல்.

                                              
அவ்வப்போது நாம் செல்லும் மணவிழாக்கள் நம்மை பல மாதிரியாக பாதிக்கின்றன. நிச்சயமாக வசதியான புள்ளி என்று தெரிந்த இடத்தில் அவர்கள் ஆடம்பரமாக செய்யும் விழா நிகழ்ச்சிகள் "இங்கு எனக்கும் ஒரு இடம் கிடைத்ததே " என்று மகிழ வைக்கின்றன.  வெகு நாட்களுக்கு முன்பு என் உறவினர் வீட்டுத் திருமணத்தில் மு.க.ஸ்டாலின் வந்து பெரிய சலசலப்பை ஏற்படுத்தினார்.  அவர் என்னைப் பார்த்து சிரித்த பொழுது எனக்குள் ஏற்பட்ட உணர்ச்சி என்ன என்று விவரிப்பது கஷ்டம்.  பயத்தம்பருப்புக்கு பதிலாக முந்திரிப்பருப்பு போட்டு செய்ததோ என்று எண்ண  வைக்கிற பொங்கலை  காலையில் சாப்பிடும்போது ஒரு சின்னஞ்சிறு பொறாமை தலை தூக்குமோ? 
                 
" எங்க வீட்டுக் கல்யாணத்துக்கு பத்தாயிரம் ரூபாய்க்குக் குறைச்சலா புடவை எடுத்தா பெரிய பிரச்னை வந்துடும் " என்று என் நண்பர் ஒருவர் சொல்லி என் எரிச்சலைத் தூண்டினார். " எங்கள் வீட்டுக் கல்யாணத்தில் எல்லாப் புடவையும் சேர்த்து பத்தாயிரத்துக்குக் கொஞ்சம் குறைவாக வர மாதிரி பார்த்துக்குவோம் " என்று அவரிடம் சொல்லிக்கொள்ள ஒருபுறம் ஆசையாகவும் மறுபுறம் வெட்கமாகவும் இருந்தது. 
                    
( "வர தட்சணை கொடுக்க வக்கு இல்லாதவங்க இஞ்சினீயர் மாப்பிள்ளையை ஏன் தேடணும், அவங்க யோக்கியதைக்கு ஏற்றாற்போல் கிளார்க் சம்பந்தம் பாக்க வேண்டியதுதானே " என்று சொல்லக் கேட்டு நான் நாணியதை முன்பே குறிப்பிட்ட தாக நினைவு.)
               
இதற்கு மறுபுறம் நடுத்தர வசதி அல்லது அதற்கும் கொஞ்சம் மட்டாக இருக்கிற இடத்தில் ஆடம்பரமாக கல்யாணம் செய்து தடபுடல் செய்யும்போது மனம் சற்றே சஞ்சலம் அடைகிறது.  இந்த அளவு பணம் இந்த மாதிரி செலவு செய்வது சரிதானா என்ற கேள்வி மனத்தைக் குடைகிறது. அதிகமாக கடன் பட்டு அல்லது சேமிப்பைக் கரைத்து முதலீடு அல்லாத " வெட்டி " செலவு செய்வது வெறும் கௌரவத்துக்கு மட்டும்தானா ?  சில சமயம் மாப்பிள்ளை அல்லது பெண் அல்லது இருவருமே தம் நண்பர்கள் மற்றும் சிலரை இம்ப்ரெஸ்  செய்ய படாடோபம் செய்வதை கண்டிப்பாக்கி விடுகிறார்கள். இது எந்த அளவுக்கு சரியானது?
                 
இளைய தலைமுறை அப்பு ஜேசி பப்பு கூடு என்று  கௌரவத்துக்கு  இடம் கொடுக்கிறார்கள். என்று தோன்றுகிறதே தவிர குடும்பத்தில் மற்றவர்களுக்கும் அதே உந்துதல் இருப்பதையும் காண முடிகிறது. 
                  
ஒரு காலத்தில் ஒரு பத்திரிகைக்கு பத்து ரூபாய் மொய் வரும் என்று கணக்கு போட்டு லாபம் பார்ப்பது உண்டு.  இப்போது அப்படி இல்லை. பத்திரிகைக்கே நாற்பது ரூபாய் ஆகிறது.  சாப்பாடு முன்னூறு, டிபன் இருநூறு டின்னர் நானூறு என்று விலையைக் கேட்ட வுடனே சாப்பிட்டது ஜீரணம் ஆகி விடுகிறது.  
                
ஒரு மன மாற்றம் தேவையோ?  
 
:: ராமன்.
                   

சனி, 23 பிப்ரவரி, 2013

பாசிட்டிவ் செய்திகள் 17/2 முதல் 23/2 வரை


எங்கள் B+ செய்திகள்.     

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும். 

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....  
====================================================================


1) காரைக்கால் பள்ளி மாணவன் வடிவமைத்துள்ள சூரிய ஒளி மருந்து தெளிப்பான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.                                   

                                                     Like here first -->> @[433124750055265:274:இன்று ஒரு தகவல். Today A Message.]
காரைக்கால் பள்ளி மாணவன் வடிவமைத்துள்ள சூரிய ஒளி மருந்து தெளிப்பான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது...

மனித சக்தி, பெட்ரோல் சக்தி கொண்டு இயங்கும் ஸ்பிரேயர்களுகு மாற்றாக சூரிய ஒளியில் இயங்கும் பூச்சி மருந்து தெளிபானை உருவாக்கிய காரைக்காலை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் முகேஷ் நாராயணன் வடிவமைத்துள்ளார்...

நம் வாழ்த்துக்களை முகேஷ் நாராயணனுக்கு பகிர்வோம்...!

நன்றி : Sinu Vasan.

மனித சக்தி, பெட்ரோல் சக்தி கொண்டு இயங்கும் ஸ்பிரேயர்களுகு மாற்றாக சூரிய ஒளியில் இயங்கும் பூச்சி மருந்து தெளிப்பானை உருவாக்கிய காரைக்காலை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் முகேஷ் நாராயணன் வடிவமைத்துள்ளார்.

2) தனி ஒருவராய் மலை பாதை அமைத்த நட்சத்திர உழைப்பாளி திரு.தசரத் மான்ஜி..! இது ஒருபேரரசன் தன் காதலுக்காக 20000 ஆட்களை அமர்த்தி 22 ஆண்டுகள் கட்டி எழுப்பி, இன்று ஆயிரக்கணக்கான உலக மக்கள் அதிசயிக்கும் தாஜ்மகால் அல்ல. ஒரு விவசாயக் கூலி தனியொரு மனிதனாய் 22 ஆண்டுகள் உழைத்து 60 கிராம மக்களின் வாழ்க்கையை எளிமையாக்க வடித்த காதல் சின்னம்.

                         Like here first -->> @[433124750055265:274:இன்று ஒரு தகவல். Today A Message.]
தனி ஒருவராய் மலை பாதை அமைத்த நட்சத்திர உழைப்பாளி திரு.தசரத் மான்ஜி..!

இது ஒருபேரரசன் தன் காதலுக்காக 20000 ஆட்களை அமர்த்தி 22 ஆண்டுகள் கட்டி எழுப்பி, இன்று ஆயிரக்கணக்கான உலக மக்கள் அதிசயிக்கும் தாஜ்மகால் அல்ல. ஒரு விவசாயக் கூலி தனியொரு மனிதனாய் 22 ஆண்டுகள் உழைத்து 60 கிராம மக்களின் வாழ்க்கையை எளிமையாக்க வடித்த காதல் சின்னம்.

பீகாரில் கயா மாவட்டத்தின் கெலார் என்ற கிராமத்தைச் சேர்ந்த திரு.தசரத் மான்ஜி ஒரு நிலமில்லாத விவசாய கூலி. அன்பு மனைவி பாகுனி தேவி வீட்டிற்கு அருகில் மலையின் மறுபுறம் குடிக்கத் தண்ணீர் கொண்டு வரும்போது விழுந்து அடிபட்டார். சிறிது நாட்களில் சுகவீனப்பட, மலையைச் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்குக் கூட்டிச் சேர்க்குமுன்பே மனைவி இறந்துபோனாள். 

இந்த மலையின் குறுக்கே ஒரு பாதை இருந்திருந்தால் தன் மனைவி இறந்துபோயிருக்கமாட்டாள் என்று உறுதியாக நம்பினார் திரு.தசரத் மான்ஜி. 

கெலார் கிராமத்திலிருந்து வஜீரகஞ் என்ற ஊர் சுற்றுப் பாதையில் எண்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அங்குதான் இவர்களுக்கான மருத்துவ மனை இருந்தது. வஜீரகஞ்க்கு 13 கி.மீ.தொலைவில் பாதை அமைக்க முடியும். ஆனால் யாரும் அதை செய்ய முன்வரவில்லை. விளைவு 30 அடி அகலம், 360 அடி நீளத்திற்கு ஒரு பாதையை உருவாக்கும் பணியை 1959 ஆண்டு மேற்கொண்டார். 

மக்கள் இவரை பைத்தியகாரனாக பார்த்தார்கள் சேர்ந்து உழைக்கவரவில்லை ஆனாலும் விடாமுயற்சியால் மலையை உடைத்து பாதையை 1981 ஆண்டு முடித்தார். 

60 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று 13 கிலோமீட்டரில் நகரத்தை அடைகிறார்கள். அன்றாடம் 8 கி.மீ தூரம் பள்ளிக்கு நடந்த அக்கிராமத்தின் குழந்தைகள் 3 கிலோ மீட்டரில் இன்று பள்ளியை அடைகிறார்கள். 

வழக்கம் போல் வாழ்ந்த காலம் வரை அந்த மாமனிதனின் உழைப்புக்கு மதிப்பளிக்காத அரசாங்கம், 18 ஆகஸ்ட் 2007 அன்று இறந்த அவருடைய உடலை மட்டும் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தது.

இன்றைய நவநாகரீக மனிதனை எடுத்துக் கொள்ளுங்கள் எல்லாவற்றையும் பணத்தால் கணக்கிட்டு எதை சேமிக்க வேண்டுமோ அதனை சேமிக்காமல் இயற்கையை சுரண்டி தானும் அழிந்து எல்லா ஜீவராசிகளையும் அழிக்கிறான். 

தன்னலம் பாராட்டாது மக்களுக்காக உழைத்த பெரியவர் திரு.தசரத் மான்ஜி அவர்களின் உழைப்பை நினைவுகூர்வோம்...!
பீகாரில் கயா மாவட்டத்தின் கெலார் என்ற கிராமத்தைச் சேர்ந்த திரு.தசரத் மான்ஜி ஒரு நிலமில்லாத விவசாய கூலி. அன்பு மனைவி பாகுனி தேவி வீட்டிற்கு அருகில் மலையின் மறுபுறம் குடிக்கத் தண்ணீர் கொண்டு வரும்போது விழுந்து அடிபட்டார். சிறிது நாட்களில் சுகவீனப்பட, மலையைச் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்குக் கூட்டிச் சேர்க்குமுன்பே மனைவி இறந்துபோனாள்.

இந்த மலையின் குறுக்கே ஒரு பாதை இருந்திருந்தால் தன் மனைவி இறந்துபோயிருக்கமாட்டாள் என்று உறுதியாக நம்பினார் திரு.தசரத் மான்ஜி.

கெலார் கிராமத்திலிருந்து வஜீரகஞ் என்ற ஊர் சுற்றுப் பாதையில் எண்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அங்குதான் இவர்களுக்கான மருத்துவ மனை இருந்தது. வஜீரகஞ்க்கு 13 கி.மீ.தொலைவில் பாதை அமைக்க முடியும். ஆனால் யாரும் அதை செய்ய முன்வரவில்லை. விளைவு 30 அடி அகலம், 360 அடி நீளத்திற்கு ஒரு பாதையை உருவாக்கும் பணியை 1959 ஆண்டு மேற்கொண்டார்.

மக்கள் இவரை பைத்தியகாரனாக பார்த்தார்கள் சேர்ந்து உழைக்கவரவில்லை ஆனாலும் விடாமுயற்சியால் மலையை உடைத்து பாதையை 1981 ஆண்டு முடித்தார்.

60 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று 13 கிலோமீட்டரில் நகரத்தை அடைகிறார்கள். அன்றாடம் 8 கி.மீ தூரம் பள்ளிக்கு நடந்த அக்கிராமத்தின் குழந்தைகள் 3 கிலோ மீட்டரில் இன்று பள்ளியை அடைகிறார்கள்.

வழக்கம் போல் வாழ்ந்த காலம் வரை அந்த மாமனிதனின் உழைப்புக்கு மதிப்பளிக்காத அரசாங்கம், 18 ஆகஸ்ட் 2007 அன்று இறந்த அவருடைய உடலை மட்டும் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தது.  
                   
3)  காஸ் சிலிண்டரில் எரிபொருள் குறைவதை ஒலி எழுப்பி உணர்த்தும் கருவியை, அரசு பள்ளி மாணவர் கண்டுபிடித்துள்ளார்.கோவை மாவட்டம், பேரூர், மாதம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர், சந்துரு. இவர், பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், காஸ் சிலிண்டரில் எரிபொருள் குறைவதை, ஒலி எழுப்பி உணர்த்தும் கருவியை கண்டறிந்துள்ளார்.கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்த, இவரது படைப்பை, பள்ளி தலைமையாசிரியர் சுகந்தி, சக ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.
                          சிலிண்டரில் எரிபொருள் குறைவதை உணர்த்தும் கருவி : அரசு பள்ளி மாணவர் கண்டுபிடிப்பு

காஸ் சிலிண்டரில் எரிபொருள் குறைவதை ஒலி எழுப்பி உணர்த்தும் கருவியை, அரசு பள்ளி மாணவர் கண்டுபிடித்துள்ளார்.கோவை மாவட்டம், பேரூர், மாதம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர், சந்துரு. இவர், பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், காஸ் சிலிண்டரில் எரிபொருள் குறைவதை, ஒலி எழுப்பி உணர்த்தும் கருவியை கண்டறிந்துள்ளார்.கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்த, இவரது படைப்பை, பள்ளி தலைமையாசிரியர் சுகந்தி, சக ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

மாணவர் சந்துரு கூறியதாவது:காஸ் சிலிண்டர் காலியாவதை முன்பே தெரிந்து கொண்டால், "புக்கிங்' செய்து காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதைக் கருத்தில் கொண்டு, கண்டுபிடிப்பை உருவாக்கினேன். எடை பார்க்கும் தராசில், சுழலும் தகட்டில் ஒரு தகடு இணைக்கப்பட்டுள்ளது.காஸ் சிலிண்டரை வைக்கும் போது, அதிக எடையின் காரணமாக, சுழலும் தட்டு, இடதுபுறமாக சுழலும். சிலிண்டரில் காஸ், குறைய குறைய, வலது புறமாக சுழல ஆரம்பிக்கும். சிலிண்டரிலுள்ள கேஸ் தீரும் நிலைக்கு சற்று முன், தராசில் இணைக்கப்பட்டுள்ள ஒலி எழுப்பும் கருவி, ஒலியை எழுப்ப துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார். 

மாணவர் சந்துரு கூறியதாவது:காஸ் சிலிண்டர் காலியாவதை முன்பே தெரிந்து கொண்டால், "புக்கிங்' செய்து காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதைக் கருத்தில் கொண்டு, கண்டுபிடிப்பை உருவாக்கினேன். எடை பார்க்கும் தராசில், சுழலும் தகட்டில் ஒரு தகடு இணைக்கப்பட்டுள்ளது.காஸ் சிலிண்டரை வைக்கும் போது, அதிக எடையின் காரணமாக, சுழலும் தட்டு, இடதுபுறமாக சுழலும். சிலிண்டரில் காஸ், குறைய குறைய, வலது புறமாக சுழல ஆரம்பிக்கும். சிலிண்டரிலுள்ள கேஸ் தீரும் நிலைக்கு சற்று முன், தராசில் இணைக்கப்பட்டுள்ள ஒலி எழுப்பும் கருவி, ஒலியை எழுப்ப துவங்கும்.


4) நீண்ட பைஜாமா குர்தா.. கையில் ஒரு சூட்கேஸ். விமான நிலையத்தின் வெளியே தன்னைக் கடந்து செல்பவர்களிடம் “எக்ஸ்கியூஸ் மீ.. சார் ஒரு நிமிடம்” எனச் சொல்லி சூட்கேசைத் தூக்கிக் காண்பிக்கிறார் அந்த வாலிபர். சூட்கேசின் வெளிப்புறத்தில் ‘அரேபியாவில் ஆடு மேய்த்தவன்’ என எழுதப்பட்டிருந்தது. இவர் மனநலம் சரியில்லாதவரா.. என்ற ஐயம் தான் நமக்கும் முதலில் எழுந்தது. அவரிடம் பேசியபோது.. அவரது உயரத்தை விட அவர் மீதான மதிப்பு பன்மடங்கு அதிகரித்தது.
                                                   அரேபியாவில் ஆடு மேய்த்தவர் (வேண்டாம் வெளிநாட்டு மோகம்!)


நீண்ட பைஜாமா குர்தா.. கையில் ஒரு சூட்கேஸ். விமான நிலையத்தின் வெளியே தன்னைக் கடந்து செல்பவர்களிடம் “எக்ஸ்கியூஸ் மீ.. சார் ஒரு நிமிடம்” எனச் சொல்லி சூட்கேசைத் தூக்கிக் காண்பிக்கிறார் அந்த வாலிபர். சூட்கேசின் வெளிப்புறத்தில் ‘அரேபியாவில் ஆடு மேய்த்தவன்’ என எழுதப்பட்டிருந்தது. இவர் மனநலம் சரியில்லாதவரா.. என்ற ஐயம் தான் நமக்கும் முதலில் எழுந்தது. அவரிடம் பேசியபோது.. அவரது உயரத்தை விட அவர் மீதான மதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. 
அவர் பெயர் சேரன். கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்தவர். பொங்கல் தினத்தன்று நாம் அவரிடம் பேசினோம்.. அன்றைக்கும் சூட்கேஸ் சகிதம் மெரீனா பீச்சிற்கு கிளம்பிக்கொண்டிருந்தார்.. இனி சேரன் நம்மிடம்..
“திட்டக்குடியில், மனைவி, மகனுடன் வசித்து வருகிறேன். தொடக்கத்தில் டெய்லர் வேலை செய்து சிலருக்கு வேலைகொடுத்து வந்தேன். 1994களிலேயே ஆறாயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் சம்பாதித்து வந்தேன். வெளிநாடு போவதற்கு கடன் வாங்கி ஏஜெண்டிடம் எண்பதாயிரம்” கொடுத்தேன். ‘வெளிநாட்டிலும் டெய்லர் வேலைதான் பார்ப்பேன்’ என ஏஜெண் டிடமும் ஸ்டிரிக்டாகச் சொன்னேன். அவரும் ‘என்ன தம்பி அப்படி சொல்லிட்டீங்க. அங்க உங்களை ஆடுமாடு மேய்க்கவா அனுப்பப் போறோம். டெய்லரிங் விசா தான் வாங்கித் தரு வோம்.’ என்றார். இதெல்லாம் 1995-ல் நடந்தது.
நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு, வெளிநாடு போக ஏற்பாடு செய்துவிட்டதாகச் சொல்லி கூட்டிட்டுப் போனாங்க. 
மும்பையில் விமானம் ஏறி ரியாத்தில் இறங்கினோம். அங்கிருந்து அல்பஹா என்ற ஊருக்கு கூட்டிட்டுப் போனாங்க. அங்கிருந்து நூற்றைம்பது கி.மீட்டர் தொலைவிலுள்ள காடும் மலையும் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு ஏராளமான டென்ட் கொட்டகைகள் இருந்தன. சில கட்டடங்களும் இருந்தன. அதில் ஒரு கட்டட உரிமையாளர் முன்பாக என்னைக் கொண்டு போய் நிறுத்தினாங்க. மின்சார வசதி இல்லாத பகுதி அது.. ‘இங்கு நமக்கு என்ன வேலை தரப்போறாங்க..’ என யோசித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது என்னை கூட்டிச் சென்ற டிரைவரிடம் அங்கிருந்த உரிமையாளர் ஏதோ சொல்ல அவர் என்னிடம் அதை மொழி பெயர்த்தார். ‘உனக்கு இங்கு ஆடு மேய்க்கிற வேலை. மாசம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம். அந்தச் சம்பளமும் ஆறு மாதத்துக்குப் பிறகு தான்.’ என்றார். எனக்கு பூமியே பிளந்து அதுக்குள்ளாற நான் விழறது மாதிரி தோணுச்சு.
‘எனக்கு டெய்லர் வேலை. செலவு போக மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம்னு சொல்லித்தானே கூட்டியாந்தீங்க..’ எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘ஆடுமேய்க்கத்தான் மூன்றாண்டு ஒப்பந்தம் போட்டு உன்னைக் கூட்டிவந்தோம். எங்களை மீறி நீ வெளியில் போகமுடியாது. அப்படி போனால் நாங்க சொல்லவில்லையென்றாலும் கூட போலீசார் உன்னை கைது செய்வார்கள்..’ என மிரட்டியதோடு பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டார்கள். ஒரு தகரக் கொட்டகையைக் காண்பித்து, அங்கு போய் தங்கிக்கொள்.. என்றார்கள்.
இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தேன். அதிகாலையில் தூங்கிவிட்டேன். முதலாளி வந்து பிரம்பால் அடித்து எழுப்பினார். கொஞ்சம் காய்ந்து போன ரொட்டித்துண்டுகளையும் ஐந்து லிட்டர் தண்ணீர் கேனையும் தந்து அறுபது ஆடுகளைக் காண்பித்து ‘மேய்ச்சுட்டு வா..’ என்றார். காலை எட்டு மணிக்கு கொளுத்தும் வெயிலில் ஆடுகளோடு கிளம்பினேன். மாலை ஏழு மணிக்கு களைச்சு போய் திரும்பினேன். கொஞ்சம் அரிசியும் பருப்பும் தந்து சமைச்சு சாப்பிட்டுக்கோ.. என்றார்.
மறுநாள் காலை ஐந்து ஜோடி வெள்ளை நிற பைஜாமா குர்தா தந்து ‘போட்டுக்கோ.. இதை போட்டுட்டு தான் ஆடு மேய்க்கப் போகணும்’ என்றார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஷேக் மாதிரி கற்பனை செய்து கொண்டேன். கம்பீரமாக நடந்து ஆடு மேய்க்கப்போனேன். அன்று மாலை வீடு திரும்பியதும் முதலாளி என்னை ஏற இறங்க பார்த்துட்டு கடுப்பானார். கோபத்துடன் உள்ளே போனவர் பிரம்புடன் வந்து என்னை விளாசினார். காரணம் புரியாமல் அடி வாங்கிக்கொண்டேன்.
“எதுக்கு அடிச்சீங்க-?’ என்றேன். வெள்ளை பைஜாமாவில் ஒட்டியிருந்த அழுக்கைக் காண்பித்து, ‘ஆடு மேய்க்க அனுப்பினால் ஒரு இடத்தில் உட்கார்ந்து வேலை பார்த்திருக்கிறாய்.. இனி அப்படி நடந்தால் தொலைச்சுப்போடுவேன்’ என்றார். அப்போது தான் அவர் வெள்ளை நிற பைஜாமா தந்ததன் மர்மம் புரிந்தது. 
என்னைப் போல தமிழர்கள் பலர் ஆடு மேய்ப்பதைப் பார்த்தேன்.
ஆறு மாதம் முடிந்ததும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் தந்தார்கள். அது என் சாப்பாட்டுக்கே செலவானது. அதுவும் பாதி வயிறுக்குத் தான் சாப்பிட முடிந்தது. கொஞ்சம் அதிகமாக சம்பளம் தாருங்க.. என்றால் போலீசில பிடித்து கொடுத்துடுவேன் என மிரட்டினாங்க. என்னைப் போல லட்சக்கணக்கான தமிழன் அங்கு இப்படி வேலை செய்கிறான். நகர்புறங்களில் வாழும் தமிழன் காரைத் துடைத்தும் கடைகளைப் பெருக்கி கழுவிவிட்டும் சொற்பமாக சம்பாதிக்கிறான். யார் முகத்திலும் நீங்கள் சிரிப்பைப் பார்க்கமுடியாது. அங்கிருக்கும் தமிழர்களிடையே ஒற்றுமையும் பரஸ்பர அன்பும் இருந்தாலும் யாருக்கும் யாராலும் பொருளாதாரரீதியாக உதவி செய்யமுடியாது. கவலையைத் தான் பகிர்ந்து கொள்ள முடியும்.
மூணு வருசத்துக்குப் பிறகு டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பினாங்க. ஊருக்கு வந்ததும் எனக்கு மனதே சரியில்லை. ஏமாத்திப் போட்டாங்களே..ங்கிற வருத்தம். கூட்டிட்டுப் போய் ஆடு மேய்க்க வைச்சுட்டாங்களேன்னு கோபம். குடிக்க ஆரம்பித்தேன். ஒருநாள் எனக்குள் தெளிவு பிறந்தது. ‘எதுக்கு குடிக்கணும். நம்மைப் போல பிறர் பாதிக்காமல் இருப்பதற்கான சமூகச் சேவையைச் செய்யலாமே’ எனத் தோன்றியது. உடனடியாக சில மாத குடிப்பழக்கத்தை உதறினேன். 
என்ன செய்யலாம் என யோசித்தபோது தான் சூட்கேசில் ‘வெளிநாட்டில் ஆடுமேய்த்தவன்’ என எழுதி வலம் வந்தேன். பலர் பார்த்துக் கேட்டார்கள். விஷயத்தைச் சொன்னேன். வெளிநாடு செல்வதால் ஏற்படும் விளைவுகளை விளக்கினேன். நம் உழைப்பை உள்ளூரிலேயே கொடுக்கலாமே என்றும் அறிவுறுத்தினேன். 1998-லேயே இந்தப் பிரசாரத்தைத் தொடங்கிட்டேன். அரேபியாவில் ஆடுமேய்த்த அதே சீருடையில் தான் என் பிரசாரம் இன்றைக்கும் தொடர்கிறது.
இப்பவும் மாதத்துக்கு பதினைந்து நாள் சென்னை மெரீனா பீச், கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட், விமானநிலையம் மற்றும் தமிழகத் திலிருந்து வெளிநாடுகளுக்கு விமானம் செல்லும் விமானநிலையங்களுக்கு இதே சூட்கேசோடு போகிறேன். துண்டு நோட்டீஸ் கொடுக்கிறேன். 
இந்த சூட்கேஸ் சமாச்சாரத்தால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் என் மனைவி தையல் தொழில் செய்து குடும்பத்தை நடத்தத் தொடங்கிவிட்டாள். இப்படி பெட்டியோடு போறது மனதுக்கு ஆறுதலாகவும் சமூக சேவையாகவும் இருக்கிறது. என்னை அப்படியே விட்டுவிடுன்னு என் மனைவியிடம் சொல்லிவிட்டேன். ‘என் கூட வர்றப்ப மட்டும் இந்த சூட்கேஸைக் கொண்டு வராதீங்க..’ என்றாள். இப்போது அதற்கும் ஓ.கே. நானும் அவ்வப்போது டெய்லர் வேலை பார்க்கிறேன்.
ஆரம்பத்தில் தனி மனிதனாக பிரசாரம் செய்து வந்த என் பின்னால் வெளிநாடு போய் நொந்து வந்தவர்களும் சமூக ஆர்வலர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். மூன்றாண்டுகளுக்கு முன்பு என்னையொத்த கருத்தைக் கொண்ட சிலரை இணைத்து மீட்பு அறக்கட்டளை உருவாக்கினேன். அவரவர் சம்பாதிக்கும் பணத்திலிருந்து கொஞ்சம் போட்டு அதை நடத்திட்டு வர்றோம். 
வெளிநாட்டில் சிக்கித் தவிப்பவர்கள் குறித்து தகவல் வந்தவுடன் களத்தில் இறங்கிவிடுவோம். இதுவரை எழுநூறு பேரை மீட்டிருக்கிறோம். 
டிசம்பர் மாதம் மலேசியாவில் இறந்த அழகப்பன், பெருமாள் என்கிற இரு தொழிலாளர்கள் உடலை அரசின் செலவில் இங்கு கொண்டு வந்தோம். எங்கள் தொடர் முயற்சியால் அரசே இறங்கி வந்து செய்த வேலை இது. 
நான் இப்ப சொல்றது ரொம்ப முக்கியம் சார்” எனப் பீடிகையோடு தொடர்ந்தார்.. “தன் பிள்ளை நல்லா படிக்கணும்னுதான் நினைக்கணுமே தவிர வெளிநாட்டில் வேலைக்குப் போய் சம்பாதிக்கணும்னு பெற்றோர்கள் நினைக்கக்கூடாது. இதை வலுவா சொல்லுங்க சார்..” என்றவாறே பெட்டியுடன் கிளம்பினார் சேரன். 

Special thanks to
- கபிலன்                                       
அவர் பெயர் சேரன். கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்தவர். பொங்கல் தினத்தன்று நாம் அவரிடம் பேசினோம்.. அன்றைக்கும் சூட்கேஸ் சகிதம் மெரீனா பீச்சிற்கு கிளம்பிக்கொண்டிருந்தார்.. இனி சேரன் நம்மிடம்..
“திட்டக்குடியில், மனைவி, மகனுடன் வசித்து வருகிறேன். தொடக்கத்தில் டெய்லர் வேலை செய்து சிலருக்கு வேலைகொடுத்து வந்தேன். 1994களிலேயே ஆறாயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் சம்பாதித்து வந்தேன். வெளிநாடு போவதற்கு கடன் வாங்கி ஏஜெண்டிடம் எண்பதாயிரம்” கொடுத்தேன். ‘வெளிநாட்டிலும் டெய்லர் வேலைதான் பார்ப்பேன்’ என ஏஜெண் டிடமும் ஸ்டிரிக்டாகச் சொன்னேன். அவரும் ‘என்ன தம்பி அப்படி சொல்லிட்டீங்க. அங்க உங்களை ஆடுமாடு மேய்க்கவா அனுப்பப் போறோம். டெய்லரிங் விசா தான் வாங்கித் தரு வோம்.’ என்றார். 


இதெல்லாம் 1995-ல் நடந்தது.
நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு, வெளிநாடு போக ஏற்பாடு செய்துவிட்டதாகச் சொல்லி கூட்டிட்டுப் போனாங்க. 


மும்பையில் விமானம் ஏறி ரியாத்தில் இறங்கினோம். அங்கிருந்து அல்பஹா என்ற ஊருக்கு கூட்டிட்டுப் போனாங்க. அங்கிருந்து நூற்றைம்பது கி.மீட்டர் தொலைவிலுள்ள காடும் மலையும் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு ஏராளமான டென்ட் கொட்டகைகள் இருந்தன. சில கட்டடங்களும் இருந்தன. அதில் ஒரு கட்டட உரிமையாளர் முன்பாக என்னைக் கொண்டு போய் நிறுத்தினாங்க. மின்சார வசதி இல்லாத பகுதி அது.. ‘இங்கு நமக்கு என்ன வேலை தரப்போறாங்க..’ என யோசித்துக் கொண்டிருந்தேன்.


அப்போது என்னை கூட்டிச் சென்ற டிரைவரிடம் அங்கிருந்த உரிமையாளர் ஏதோ சொல்ல அவர் என்னிடம் அதை மொழி பெயர்த்தார். ‘உனக்கு இங்கு ஆடு மேய்க்கிற வேலை. மாசம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம். அந்தச் சம்பளமும் ஆறு மாதத்துக்குப் பிறகு தான்.’ என்றார். 


எனக்கு பூமியே பிளந்து அதுக்குள்ளாற நான் விழறது மாதிரி தோணுச்சு.

‘எனக்கு டெய்லர் வேலை. செலவு போக மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம்னு சொல்லித்தானே கூட்டியாந்தீங்க..’ எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘ஆடுமேய்க்கத்தான் மூன்றாண்டு ஒப்பந்தம் போட்டு உன்னைக் கூட்டிவந்தோம். எங்களை மீறி நீ வெளியில் போகமுடியாது. அப்படி போனால் நாங்க சொல்லவில்லையென்றாலும் கூட போலீசார் உன்னை கைது செய்வார்கள்..’ என மிரட்டியதோடு பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டார்கள். ஒரு தகரக் கொட்டகையைக் காண்பித்து, அங்கு போய் தங்கிக்கொள்.. என்றார்கள்.


இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தேன். அதிகாலையில் தூங்கிவிட்டேன். முதலாளி வந்து பிரம்பால் அடித்து எழுப்பினார். கொஞ்சம் காய்ந்து போன ரொட்டித்துண்டுகளையும் ஐந்து லிட்டர் தண்ணீர் கேனையும் தந்து அறுபது ஆடுகளைக் காண்பித்து ‘மேய்ச்சுட்டு வா..’ என்றார். காலை எட்டு மணிக்கு கொளுத்தும் வெயிலில் ஆடுகளோடு கிளம்பினேன். மாலை ஏழு மணிக்கு களைச்சு போய் திரும்பினேன். கொஞ்சம் அரிசியும் பருப்பும் தந்து சமைச்சு சாப்பிட்டுக்கோ.. என்றார்.


மறுநாள் காலை ஐந்து ஜோடி வெள்ளை நிற பைஜாமா குர்தா தந்து ‘போட்டுக்கோ.. இதை போட்டுட்டு தான் ஆடு மேய்க்கப் போகணும்’ என்றார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஷேக் மாதிரி கற்பனை செய்து கொண்டேன். கம்பீரமாக நடந்து ஆடு மேய்க்கப்போனேன். 


அன்று மாலை வீடு திரும்பியதும் முதலாளி என்னை ஏற இறங்க பார்த்துட்டு கடுப்பானார். கோபத்துடன் உள்ளே போனவர் பிரம்புடன் வந்து என்னை விளாசினார். காரணம் புரியாமல் அடி வாங்கிக்கொண்டேன்.

“எதுக்கு அடிச்சீங்க-?’ என்றேன். வெள்ளை பைஜாமாவில் ஒட்டியிருந்த அழுக்கைக் காண்பித்து, ‘ஆடு மேய்க்க அனுப்பினால் ஒரு இடத்தில் உட்கார்ந்து வேலை பார்த்திருக்கிறாய்.. இனி அப்படி நடந்தால் தொலைச்சுப்போடுவேன்’ என்றார். அப்போது தான் அவர் வெள்ளை நிற பைஜாமா தந்ததன் மர்மம் புரிந்தது. 


என்னைப் போல தமிழர்கள் பலர் ஆடு மேய்ப்பதைப் பார்த்தேன்.
ஆறு மாதம் முடிந்ததும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் தந்தார்கள். அது என் சாப்பாட்டுக்கே செலவானது. அதுவும் பாதி வயிறுக்குத் தான் சாப்பிட முடிந்தது. கொஞ்சம் அதிகமாக சம்பளம் தாருங்க.. என்றால் போலீசில பிடித்து கொடுத்துடுவேன் என மிரட்டினாங்க. என்னைப் போல லட்சக்கணக்கான தமிழன் அங்கு இப்படி வேலை செய்கிறான். நகர்புறங்களில் வாழும் தமிழன் காரைத் துடைத்தும் கடைகளைப் பெருக்கி கழுவிவிட்டும் சொற்பமாக சம்பாதிக்கிறான். யார் முகத்திலும் நீங்கள் சிரிப்பைப் பார்க்கமுடியாது. அங்கிருக்கும் தமிழர்களிடையே ஒற்றுமையும் பரஸ்பர அன்பும் இருந்தாலும் யாருக்கும் யாராலும் பொருளாதாரரீதியாக உதவி செய்யமுடியாது. கவலையைத் தான் பகிர்ந்து கொள்ள முடியும்.


மூணு வருசத்துக்குப் பிறகு டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பினாங்க. ஊருக்கு வந்ததும் எனக்கு மனதே சரியில்லை. ஏமாத்திப் போட்டாங்களே..ங்கிற வருத்தம். கூட்டிட்டுப் போய் ஆடு மேய்க்க வைச்சுட்டாங்களேன்னு கோபம். குடிக்க ஆரம்பித்தேன். 


ஒருநாள் எனக்குள் தெளிவு பிறந்தது. ‘எதுக்கு குடிக்கணும். நம்மைப் போல பிறர் பாதிக்காமல் இருப்பதற்கான சமூகச் சேவையைச் செய்யலாமே’ எனத் தோன்றியது. உடனடியாக சில மாத குடிப்பழக்கத்தை உதறினேன். 

என்ன செய்யலாம் என யோசித்தபோது தான் சூட்கேசில் ‘வெளிநாட்டில் ஆடுமேய்த்தவன்’ என எழுதி வலம் வந்தேன். பலர் பார்த்துக் கேட்டார்கள். விஷயத்தைச் சொன்னேன். வெளிநாடு செல்வதால் ஏற்படும் விளைவுகளை விளக்கினேன். நம் உழைப்பை உள்ளூரிலேயே கொடுக்கலாமே என்றும் அறிவுறுத்தினேன். 


1998-லேயே இந்தப் பிரசாரத்தைத் தொடங்கிட்டேன். அரேபியாவில் ஆடுமேய்த்த அதே சீருடையில் தான் என் பிரசாரம் இன்றைக்கும் தொடர்கிறது.

இப்பவும் மாதத்துக்கு பதினைந்து நாள் சென்னை மெரீனா பீச், கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட், விமானநிலையம் மற்றும் தமிழகத் திலிருந்து வெளிநாடுகளுக்கு விமானம் செல்லும் விமானநிலையங்களுக்கு இதே சூட்கேசோடு போகிறேன். துண்டு நோட்டீஸ் கொடுக்கிறேன். 


இந்த சூட்கேஸ் சமாச்சாரத்தால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் என் மனைவி தையல் தொழில் செய்து குடும்பத்தை நடத்தத் தொடங்கிவிட்டாள். இப்படி பெட்டியோடு போறது மனதுக்கு ஆறுதலாகவும் சமூக சேவையாகவும் இருக்கிறது. என்னை அப்படியே விட்டுவிடுன்னு என் மனைவியிடம் சொல்லிவிட்டேன். ‘என் கூட வர்றப்ப மட்டும் இந்த சூட்கேஸைக் கொண்டு வராதீங்க..’ என்றாள். இப்போது அதற்கும் ஓ.கே. நானும் அவ்வப்போது டெய்லர் வேலை பார்க்கிறேன்.


ஆரம்பத்தில் தனி மனிதனாக பிரசாரம் செய்து வந்த என் பின்னால் வெளிநாடு போய் நொந்து வந்தவர்களும் சமூக ஆர்வலர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். மூன்றாண்டுகளுக்கு முன்பு என்னையொத்த கருத்தைக் கொண்ட சிலரை இணைத்து மீட்பு அறக்கட்டளை உருவாக்கினேன். அவரவர் சம்பாதிக்கும் பணத்திலிருந்து கொஞ்சம் போட்டு அதை நடத்திட்டு வர்றோம். 


வெளிநாட்டில் சிக்கித் தவிப்பவர்கள் குறித்து தகவல் வந்தவுடன் களத்தில் இறங்கிவிடுவோம். இதுவரை எழுநூறு பேரை மீட்டிருக்கிறோம். 


டிசம்பர் மாதம் மலேசியாவில் இறந்த அழகப்பன், பெருமாள் என்கிற இரு தொழிலாளர்கள் உடலை அரசின் செலவில் இங்கு கொண்டு வந்தோம். எங்கள் தொடர் முயற்சியால் அரசே இறங்கி வந்து செய்த வேலை இது.
நான் இப்ப சொல்றது ரொம்ப முக்கியம் சார்” எனப் பீடிகையோடு தொடர்ந்தார்.. “தன் பிள்ளை நல்லா படிக்கணும்னுதான் நினைக்கணுமே தவிர வெளிநாட்டில் வேலைக்குப் போய் சம்பாதிக்கணும்னு பெற்றோர்கள் நினைக்கக்கூடாது. இதை வலுவா சொல்லுங்க சார்..” என்றவாறே பெட்டியுடன் கிளம்பினார் சேரன்.  


[முகநூலிலிருந்து அப்படியே எடிட் செய்யாமல்!]

5) நீதிபதிகளுக்கு முன்னே செங்கோல் ஏந்தியபடி செல்லும் டவாலி சேவகர்கள் முறையை தனக்கு வேண்டாம் என்று தான் பணியில் சேர்ந்த உடனேயே எழுதிக் கொடுத்து நிறுத்திய தற்காலிகத் தலைமை நீதிபதி திரு சந்துரு, 'இந்த நடைமுறை நீதிபதிகளின் டாம்பீகத்துக்காக மனித ஆற்றலை வீணடிக்கும் செயல். செங்கோல் ஏந்திச் செல்லும் வேலையை மட்டும் இந்த டவாலிகளுக்குக் கொடுத்துவிட்டு, அவர்களுக்கு மக்கள் பணத்தில் ஊதியம் கொடுக்கப்படுகிறது. இதனால், மக்களுடைய வரிப் பணமும் அந்த டவாலிகளின் மனித ஆற்றலும் வீணடிக்கப்படுகிறது’ என்று விளக்கம் அளித்தார். தனக்கும் தனது வீட்டுக்கும் அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பையும் ஏற்க மறுத்த நீதிபதி சந்துரு, 'நீங்கள் இதுபோல் 60 நீதிபதிகளின் வீடுகளுக்கு 300 காவலர்களை நியமித்துள்ளீர்கள். இவர்களுக்கு இங்கு எந்த வேலையும் இல்லை. இந்த 300 காவலர்களையும் நீங்கள் சரியாகப் பயன்படுத்தினால், ஒட்டுமொத்த தென்சென்னையின் பாதுகாப்பையே சரிசெய்து விடலாம்’ என்று காவல் துறைக்கு ஆலோசனையும் வழங்கினார்.

                    
 
ஓய்வுபெறும் நீதிபதிகளுக்குப் பிரிவு உபசார விழா நடத்துவது வழக்கம். இந்த விழாவில், ஓய்வுபெறும் நீதிபதியை அனைவரும் வாழ்த்திய பிறகு, ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் விருந்து நடைபெறும். இந்த விழாவும் தனக்கு வேண்டாம் என்று மறுத்து, உயர் நீதிமன்றத் தற்காலிகத் தலைமை நீதிபதிக்கு நீதிபதி சந்துரு கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில், 'என்னுடைய கடமையைத்தான் நான் செய்தேன். அதற்கு விழா தேவைஇல்லை. மக்களுடைய பணத்தை ஐந்து நட்சத்திர ஹோட்டல் விருந்தில் விரயம் ஆக்குவது தவறு’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.    
    

புதன், 20 பிப்ரவரி, 2013

வெ ஆ நிர்மலா, அர்னாப், கொஞ்சும் சலங்கை, பொதிகை, முரசு - வெட்டி அரட்டை


'மானாட மயிலாட'களைப் பார்த்து விட்டு பொதிகையில் 'கொஞ்சும் சலங்கை' பார்க்க சுவாரஸ்யமாகவும் ஆறுதலாகவும் இருந்தது. 

                                                   

ஞாயிறு காலை 11 மணி சுமாருக்கு சேனல்களை அலசுகையில் பொதிகையில் மைக்கும் கையுமாக, பாந்தமாகப் புடைவையில் மென்குரலில் பேசிக் கொண்டிருந்த வெண்ணிற ஆடை நிர்மலாவைக் கண்டதும் ரிமோட்டை ஓரமாக வைத்து விட்டு என்ன என்று பார்த்தபோது நிகழ்ச்சி சுவாரஸ்யமாகத்தான் இருந்தது.

                                              

ஆரம்பம் எப்போதிலிருந்து என்று தெரியவில்லை. அநேகமாக 10.30 முதல் 11.30 வரையாக இருக்கலாம் என்று அனுமானம். பரத நாட்டிய ஸ்லாட் முடிந்திருக்க வேண்டும். நான்கு பெண்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி.


                           
வெ.ஆ. நிர்மலா மென்மையான குரலில் அப்போது ஆடி முடித்திருந்த பெண்ணைக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார். என்ன கேள்விகள்?
                               
"கருணையை அபிநயம் பிடிம்மா..."

"கூந்தலை எப்படி அபிநயம் பிடிப்பே... ஊஹூம்... நீ அபிநயம் காட்டுவது சீவாத கூந்தல். சீவிய கூந்தலை எப்படி காட்ட வேண்டும்?" அபிநயம் பிடித்துக் காட்டுகிறார்.

"இரவு என்பதை எப்படி அபிநயத்தில் கொண்டு வருவே?"

இது மாதிரியான கேள்விகள் பார்ப்பவர்களை இரவை எப்படி அபிநயத்தில் காட்ட முடியும் என்று யோசிக்க வைத்து, சுவாரஸ்யமாக்குகிறது. 

                                            

அடுத்த ரவுண்டில் நாட்டுப் பாடல்கள் பாடி ஆடினார்கள் குழந்தைகள். கால்களில் சலங்கை கட்டாமல் ஆடிய பெண்ணை 'ஏனம்மா' என்று கேட்க அவர் ஓடிஸா நடனத்தில் அப்படித்தான் வழக்கம் என்று சொல்ல, 'அப்புறம் நீ தாளத்துக்குச் சரியாக காலை வைக்கிறாய் என்று எப்படிம்மா தெரியும்?' என்று மென்மையாகக் கேட்டார். லெக்கின்ஸ் போட்டு ஆடிய பெண்ணை மென்மையாகக் கடிந்து கொண்டு மார்க் கிடைக்காது என்று அறிவுறுத்தினார். அவருடன் அமர்ந்திருந்த இன்னொரு நடுவர் மாது யாரென தெரியவில்லை.

நாட்டுப் பாடல் ரவுண்ட் முடிந்ததும் கேள்விச் சுற்று. தாளங்கள் எத்தனை, என்னென்ன பீட், 'நீ ஒரு தாளம் சொல்லி ஆடி விட்டு, அப்புறம் அதையே இன்னொரு தாளத்தில் ஆடும்மா' என்று எல்லாம் சோதித்துப் பார்த்தார்.

நிச்சயம் மாறுதலான நிகழ்ச்சி. இதே பொதிகையில் ஞாயிறு இரவு 9 மணிக்கு பிரபல கர்னாடக இசைப் பாடகர்களைப் பற்றி வரும் 'காற்றினிலே வரும் கீதம்' நிகழ்ச்சியும் வருகிறது (எங்கள் ப்ளாக்கில் இந்நிகழ்ச்சி பற்றியும் முன்னரே பகிர்ந்திருக்கிறோம்).

நீயா நானா போலவே பொதிகையிலும் ஒரு நிகழ்ச்சி உண்டு அதன் பெயர் நினைவில் இல்லை. அதுவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

                                       

பொதிகையில் சனி இரவுகளில் வரும் BSNL ஸ்போர்ட்ஸ் குவிஸ் பார்த்திருக்கிறீர்களோ... டாக்டர் சுமந்த் வி ராமன் இந்நிகழ்ச்சியை நடத்தும் அழகு, வேகமான பேச்சுக்கள் ரசிக்க வைக்கும். (சமீபத்தில் இந்நிகழ்ச்சியை விழித்திருந்து பார்க்கவில்லை. மிகவும் நேரம் கழித்துப் போடுவது ஒரு மைனஸ்).    
===============================================

'நினைவெல்லாம் நித்யா' படத்தில் எஸ் பி பி குரலில் 'நீதானே எந்தன் பொன்வசந்தம்' பாடலைக் கேட்டு ரசித்த செவிகளுக்கு சமீப காலமாக அதே பாடலை கவுதம் மேனன் குரலில் நீதானே எந்தன் பொன்வசந்தம் படத்தில் பாடுவதை முழுதாக சேனல்களில் போடுவதைக் கேட்க கடுப்பாக இருக்கிறது. ஒரிஜினல்களை ரீமிக்ஸ் செய்வதே பிடிப்பதில்லை. இது மாதிரிக் கொலைகளை என்ன செய்ய? 

       

இதே போல 100க்கு 100 படத்தில் வரும் பி. சுசீலா பாடிய 'நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்' பாடலைக் கன்னா பின்னா என்று தழுவி 'கண்ணா லட்டு திங்க ஆசையா' படத்தில் ஆண்குரலில் பாடும் பாடலையும் கேட்க எரிச்சல் வருகிறது. ஒரிஜினலை விட்டு விட்டு, இது மாதிரி நகல்களை விழுந்து விழுந்து ரசிக்கும் சின்னஞ்சிறிசுகளைப் பார்க்கவும் அதே...அதே...  
====================================

பங்களாதேஷ் பிரீமியர் லீக் பார்க்க பாவமாக இருக்கிறது!

=====================================

                                    

முரசு மற்றும் சன் லைஃப் தொலைக் காட்சிகளில் பழைய பாட்டு, பழைய பாட்டு என்று கேட்டுக் கொண்டிருந்தால்,  மீண்டும் மீண்டும் அதே லிஸ்ட் கேட்டு அலுத்து விட்டது.     
===============================


                                                   

டிஜிட்டல் கேபிள் , அரசு கேபிள் என்றெல்லாம் குழப்பி இப்போது கேபிள்காரர்களே கொடுக்கும் சேனல்களில் செய்திச் சேனல்கள் எங்கெங்கோ பிரிந்து கிடக்க, அர்நாபை மட்டும் பார்க்க விடாமல் வேறு செய்து விட்டார்கள். இன்னும் பல சேனல்கள் காணோம். வந்தவரைக்கும் பார்க்கிறோம். பாட்டு கேட்க ரெண்டு சேனல், நியூஸ் பார்க்க ஆங்கிலத்தில் 3, தமிழில் 2, தேவைப் பட்டால், தேவைப்பட்டால் மட்டும் படம் பார்க்க ஓரிரு சேனல்கள்... போதும்.   
                                      

திங்கள், 18 பிப்ரவரி, 2013

வானொலி நினைவுகள்.


அந்நாட்களின் மூன்று (என்று சொல்லலாமா) பெரிய பொழுது போக்குகளில் வானொலிக்கு முக்கிய இடம். மற்ற இரண்டு சினிமா, பத்திரிகைகள்!

                                                  

வீட்டின் உயரமான இடத்தில் வைக்கப் பட்டிருக்கும் எங்கள் வீட்டு ஹாலண்ட் பிலிப்ஸ் வால்வ் ரேடியோ.  எங்களுக்கு எட்டக் கூடாதாம்! அப்பா அலுவலகம் செல்லும்வரை அது எங்களுக்கு எட்டாதுதான். 

                                                       

அப்புறம் மேஜை மேலே ஸ்டூல் போட்டு ஏறி ரேடியோவைக் கைப்பற்றியபின் எங்கள் ராஜ்ஜியம்தான். பக்கத்து வீட்டு ராஜத்தின் 10 வயது சித்தி மகள் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, ஈரக் கைய்களைப் பாவாடையில் துடைத்தபடி வந்துவிடுவாள்! அப்புறம் அன்பு சகோதரர்கள் ஒலிச்சித்திரம் கேட்டு அழுவது தினசரி வாடிக்கை. அப்புறம் செல்வராஜ், ராஜா, அம்பி, சந்தனத்துரை என்று ஒரு பட்டாளம் கூடி விடும்! "நீங்கள் கேட்க இருப்பது..." என்று கேப் விடுவார் கே எஸ் ராஜா. "வசந்தமாளிகை" என்று சிவாஜியின் குரல் ஒலிக்கும். தொடர்ந்து ஒலிக்கும் கே எஸ் ராஜா குரல்..."திரைவிருந்து"....
                                                      
               

எங்கள் தங்க ராஜா பட முடிவை தயவு செய்து படம் பார்த்தவர்கள் மற்றவர்களுக்குச் சொல்லி விடாதீர்கள் என்று கெஞ்சுவார்!  காட்சியும் கானமும் என்று ஒரு நிகழ்ச்சி. ஒரு பாடலைப் போடுமுன் அந்தப் பாட்டுக்கு முன்னால் வரும் வசனங்களை வெளியிட்டு விட்டு, பாட்டு போடுவார்கள். ஞாயிற்றுக் கிழமை முழுநீளத் திரைப்பட ஒலிச்சித்திரங்கள்... நினைத்துக் கூடப் பார்த்ததில்லை, பின்னாட்களில் சினிமாவை வீட்டுக் கூடத்திலேயே காண்போம் என்று!

வானொலி நேயர்களுக்கு சிலோன் ரேடியோ ஒரு வரப்பிரசாதம். இந்தியாவில், தமிழகத்தில் கேட்க முடியாத பல பாடல்கள் சிலோன் ரேடியோவில் கேட்க முடியும். பிரபல நடிகர்களின் பேட்டிகள், பாட்டுக்குப் பாட்டு என்று யோசித்து யோசித்து பல புதுமையான, ரசிக்க வைத்த நிகழ்ச்சிகள்.

வாரப் பத்திரிகைகளுக்கு இணையாக விற்பனை ஆகும் வானொலி. கொஞ்சம் லேட்டாகப் போனால் கடைகளில் காலியாகி விடும். அடுத்த பதினைந்து நாட்களுக்கு என்னென்ன நிகழ்ச்சிகள் வானொலியில் என்று விவரம் இருக்கும். கேட்க வேண்டிய நிகழ்ச்சிகளை முன்னாலேயே படித்து மார்க் செய்து வைப்போம். சில சமயம் நேயர் விருப்பத்தில் என்னென்ன பாடல்கள் போடப் போகிறார்கள் என்று படங்கள் பெயர் கூடப் போட்டிருக்கும். அடுத்த பாடல் என்று நாங்கள் சொல்வது சரியாக இருக்கும்போது தோழர்கள் வியப்பால் விழி விரிப்பார்கள்! 15 தினங்களுக்கு ஒருமுறை வெளிவரும் வானொலியில் அவ்வப்போது சிறுகதைகளும் வெளிவரும்.
                                              

மாநிலச் செய்திகள், தமிழில் செய்திகள்.. டெல்லி அஞ்சல் என்று செய்திகள் கவனமாகக் கேட்போம். சரோஜ் நாராயணசுவாமி குரலில் செய்திகள் பிரபலம்.

சுசித்ரா. சங்கர், ராஜு, ரவி, சுஜாதா வரும் ஹார்லிக்ஸ் குடும்பம், பினாகா கீத்மாலா, உங்கள் விருப்பம், ஒலிச்சித்திரம், ஞாயிறு நாடகங்கள் அகிலபாரத நாடக விழா, இசைக் கச்சேரிகள், ரங்காவளி, மன் சாஹே கீத், மனோ ரஞ்சன், சாயா கீத், சித்ரபட் சங்கீத், ஆப் கே ஃபர்மாயிஷ்...

ஏதோ காரணத்தால் வானொலி ரிப்பேராகி கடைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அந்த இடம் வெறுமையாக இருக்கும் நாட்கள் எங்களுக்கு வெறுமையானவை. 

மதுரை வானொலியில் என் குரலும் ஒலித்திருக்கிறது! இளையபாரதம் நிகழ்ச்சியில் கடிதங்களைப் படிக்க வைத்து பணம் கொடுத்து அனுப்பினார்கள். இளையபாரதம்... நேயர் கடிதங்கள்... வாசிப்பது / வாசித்தது என்று என் பெயர் சொன்னபோது அடைந்த புளங்காகிதம்! தெரு முழுக்கச் சொல்லி வைத்திருந்ததில் தெரு முழுக்க என் குரல் வீட்டுக்கு வீடு கேட்டது ஒரு த்ரில்!!
                                       

"வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில் ஆவலுடன் குழுமியிருக்கும்..." என்று தொடங்கி அறிவிப்பைத் தொடங்கும் கே எஸ் ராஜா எங்கள் அபிமான அறிவிப்பாளர். அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம்.. சென்னையில் கூத்தபிரான் (வானொலி அண்ணா).

விவித் பாரதியின் நிகழ்ச்சிகள் இளையவர்களுக்கு விருந்து. 'இன்பமூட்டிடும் கோக கோலா... இன்பமூட்டிடும் ஜோக்... பிக்னிக்கு விருந்து பார்ட்டி... யாவருக்கும் மகிழ்வூட்டி... இன்பமூட்டிடும் கோக கோலா..' பாடல் இன்னும் நினைவில்! எழுபதுகளின் இறுதியில் இளையராஜா ஆட்சி வந்தபோது ரேடியோ படாத பாடு பட்டது. 

                                                       

வானொலியில் கிரிக்கெட் வர்ணனை  கேட்பது தனிக்கதை!

தினமணிக் கதிரில் சென்ற வருடம் வானொலியின் பவளவிழா ஆண்டு என்று படித்த போதும், ஆதி வெங்கட் கோவை2தில்லி பதிவில் வானொலி பற்றி எழுதியிருந்தபோதும், சமீபத்தில் இரண்டு இடத்தில் வானொலி பற்றிப் படித்ததும் (இரண்டில் இன்னொன்று ஜீவி சார் சமீபத்தியத் தொடரான கனவுப் பதிவில்... ஒன்று எது என்று நினைவிலில்லை!) வானொலி பற்றி நினைவுகளைப் பகிர வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. சொன்னது கொஞ்சம். சொல்லாதது நிறைய!

எங்கள் இளமை நினைவுகளில் வானொலிக்கு(ம்) தவிர்க்க முடியாத இடம்.


இதுவரை சொன்னது எங்கள் நினைவுகள்... இனி பின்னூட்டத்தில் உங்கள் நினைவுகள்....

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

ஞாயிறு - 189 :: வித்தியாசங்கள் கண்டுபிடியுங்கள்!


 

 
 
மேலே உள்ள படத்திற்கும், அதற்கும் மேலே உள்ள படத்திற்கும் குறைந்த பட்சம் 7 வித்தியாசம் உள்ளன.
கண்டுபிடியுங்கள்.
கருத்துரை பதியுங்கள்!
 


சனி, 16 பிப்ரவரி, 2013

பாசிட்டிவ் செய்திகள் 10/2/2013 முதல் 16/2/2013 வரை


எங்கள் B+ செய்திகள்.     

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும். 

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....
====================================================================

1) குடிசை வீட்டில் வசித்தாலும் மல்யுத்தப் போட்டிக்குத் தேர்வாகியுள்ள ஈரோடு மூலப்பாளையம் முத்துசாமிக் காலனியில் வசிக்கும் செல்லப்பன் என்பவர் மகனான 23 வயது குமார்.       

                                                          
                       
 இவர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உடற்கல்வியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். மல்யுத்த வீரரான மகேந்திரகுமார் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றுள்ளார்.

இவர் மணிப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில் 63 கிலோ பிரிவில் பங்கேற்று முதல் பரிசான தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து வருகிற ஜூன் மாதம் கொரியாவில் நடைபெறும் சர்வதேச மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ள மகேந்திரகுமாருக்கு அழைப்பு வந்துள்ளது.

மகேந்திரகுமாரின் தாயும், தந்தையும் சாதாரண கூலித்தொழிலாளர்கள். இவர்கள் தங்களுக்கு கிடைக்கும் குறைந்த அளவு கூலிப் பணத்தில் தங்களது ஒரே மகனான மகேந்திரகுமாரை படிக்க வைத்து வருகிறார்கள். பெற்றோருடன் குடிசை வீட்டில் வசிக்கும் மகேந்திர குமார் கொரியா சென்று போட்டியில் பங்கேற்க லட்சக் கணக்கில் செலவாகும். அந்த அளவுக்கு அவரது பெற்றோருக்கு வசதி இல்லாததால் அவர் இன்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு சர்வதேச போட்டியில் பங்கேற்க தமிழக அரசின் நிதி உதவியை பெற்றுத்தரும்படி கேட்டு மனு கொடுத்தார். தொடர்புக்கு, மகேந்திரன் : 960055533

2) கையிருப்புத் தொகை ரூபாய் 1,080. 00 : வங்கி இருப்பு ரூபாய் 9,720. 00
மொத்தச் சொத்து மதிப்பு... ரூபாய் 2,20,000. 00

இது, திரிபுரா மாநிலத்தை ஆளும் முதல்வர் மாணிக் சர்க்கார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), அவர்களுடைய சொத்துக் கணக்கு! வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிடும் மாணிக் சர்க்கார், வேட்பு மனுவில் இந்தத் தகவல்களை தந்திருக்கிறார். இதில் மொத்த சொத்து என்று குறிப்பிடப்பட்டிருப்பது, இவருக்குச் சொந்தமாக இருக்கும் தகரக் கூரை வேயப்பட்ட 432 சதுர அடி வீடுதான். இதனுடைய மதிப்புதான் 2 லட்சத்தி 20 ஆயிரம் ரூபாய். இது அவருடைய தாயார் வழியில் வந்த சொத்து!                                  
 


  இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. எல்லாருக்குமே ஐந்து இலக்கங்களை தாண்டிய சம்பளம்தான். நாட்டிலேயே மிகமிக குறைவாக சம்பளம் வழங்கப்படுவது திரிபுராவில்தான். மாதச் சம்பளம் 9,200 ரூபாய். இதை அப்படியே கட்சியிடம் கொடுத்து விடுவார் மாணிக் சர்க்கார். கட்சிக்கு தன் உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு, கட்சியிலிருந்து வழங்கப்படும் உபகாரச் சம்பளம் மட்டுமே இவருக்கு உண்டு. அந்த வகையில் மாணிக் சர்க்காருக்கு மாதம் 5,000 ரூபாய் தரப்படுகிறது.     
                
 என்னதான் முட்டி மோதிக் கணக்குப் போட்டாலும்... முதல்வர் மற்றும் அவருடைய மனைவி ஆகியோருடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 27 லட்ச ரூபாயைத் தாண்டவில்லை.
                    
அடச்சே... நம்ம ஊரில், சும்மா நான்கு தெருவுகளை உள்ளடக்கிய கவுன்சிலர் பதவியில் உட்கார்ந்திருப்பவர்களில் பலருக்கும் பல கோடிகளில் சொத்துக்கள் இருக்கின்றன. மாத வருமானமே பல லட்சங்களில். ஓயாமல் பறப்பது டாடா சுமோ, இன்னோவா, சைலோ... போன்ற சொகுசு கார்களில்தான். இந்த மனுஷன் என்னடாவென்றால், சொந்தமாக ஒரு கார் கூட இல்லாமல், முதல்வர் பதவியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். ஏற்கெனவே மூன்று முறை தொடர்ந்து முதல்வராக அமர்ந்திருக்கும் இவர், நான்காவது முறையாகவும் போட்டியிடுகிறார்.
இப்படியும் ஒரு முதலமைச்சர்!
          
'ம்க்கும்... மத்ததெல்லாம் பொண்டாட்டி பேர்ல, பினாமி பேர்ல இருக்கும்' என்று அவசரப்பட்டுவிடாதீர்கள்...
                    
மத்திய அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் இவருடைய மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யா... ஓய்வூதிய பலன்களாக பெற்ற வகையில் நிலையான வைப்புத் தொகையாக 23 லட்சத்தி 58 ஆயிரத்து 380 ரூபாய் வைத்திருக்கிறார். கையிருப்பு தங்கம் 20 கிராம். இதன் மதிப்பு, ரூபாய் 72, 000. கையிருப்பு ரொக்கம் 22 ஆயிரத்து 15 ரூபாய். ஆக மொத்த மதிப்பு 24 லட்சத்தி 52 ஆயிரத்தி 395 ரூபாய்.   

3) "பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், லஞ்ச, ஊழலற்ற ஆட்சி அமையவேண்டும், தேசிய நதிகளை இணைக்க வேண்டும்' என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, முதியவர் ஒருவர், ஆத்தூரில், சைக்கிள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கினார்.   
                  
 சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, பழனியாபுரி கிராமத்தை சேர்ந்தவர் பழனிமுத்து, 57. சமூக ஆர்வலரான இவர், திருமணம் செய்து கொள்ளாமல், பல்வேறு சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, அரசு, உடனடியாக மதுவை தடை செய்து, பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து, இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாயிகளே, விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை அளிக்க வேண்டும்.      
           
                  
                  

இந்திய நதிகளான, கங்கை, காவிரியை இணைக்க வேண்டும். விவசாயத்தை மேம்படுத்த, மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலை, 11 மணியளவில், ஆத்தூர் காந்தி சிலையில் இருந்து, பெரம்பலூர் வரை, சைக்கிளில், விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை துவக்கினார்.

தொடர்ந்து, ஆத்தூர், நரசிங்கபுரம், வாழப்பாடி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர் வழியாக, வரும், 24ம் தேதி, ஆத்தூரில் பயணத்தை முடித்துக் கொள்கிறார்.

விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட பழனிமுத்து கூறியதாவது:

நதிநீர் இணைக்க வேண்டும், விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்தல், பூரண மதுவிலக்கு அமல்படுத்தல் போன்ற அத்தியாவசிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சைக்கிளில் பிரச்சாரம் துவக்கியுள்ளேன். தினமும், 50 கி.மீ., தூரம் சென்று, 100 பேரிடம் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கியபடி, 750 கி.மீ., தூரம் கடந்து சென்று, 5,000 மக்களிடம், நோட்டீஸ் வழங்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.  
                 
4) பெங்களூரு நகரில், ஆட்டோ ஓட்டி, பிழைப்பு நடத்திய பெண், வழக்கறிஞராகி, சாதனை படைத்துள்ளார்.வெங்கடலட்சுமி, 40, பெங்களூரு நகர வீதிகளில், ஆட்டோ ஓட்டும் பெண்களில் ஒருவர்.  
             
                  
                      
 பட்டப்படிப்பு முடித்திருந்த இவர், வழக்கறிஞராக வேண்டும் என, சிறு வயதிலிருந்தே விரும்பினார்.எனினும், பட்டப்படிப்பு முடித்ததும், திருமணம், குழந்தை, வாழ்க்கையை ஓட்ட, ஆட்டோ ஓட்ட வேண்டிய நிர்பந்தம் போன்ற கட்டாயங்களால், நேரடியாக அவரால், வழக்கறிஞர் ஆக, தேவையான படிப்பை படிக்க முடியவில்லை.கடந்த, 13 ஆண்டுகளாக, ஆட்டோ ஓட்டி வரும் வெங்கடலட்சுமி, தினமும் காலை, 8:00 மணிக்கு, தன் பணிகளை துவக்கி விடுவார். 8:30 மணிக்கு, மகளை, பள்ளியில் கொண்டு விடும் இந்த பெண், 10 கி.மீ., தூரத்தில், பசவேஸ்வர் நகரில் உள்ள, பாபு ஜெகஜீவன் ராம் சட்ட கல்லூரியில், எல்.எல்.பி., படிக்க, ஆட்டோவிலேயே செல்வார்.வகுப்புகள் மதியம் முடிந்ததும், கறுப்பு, வெள்ளை சீருடையை கழற்றி, வீட்டில் போட்டு விட்டு, ஆட்டோ டிரைவருக்குரிய, காக்கி சீருடையை அணிந்து, ஆட்டோ ஓட்ட செல்வார்.

5) 83 வயது ஷீலா கோஷ்.   

                   
                
இதய நோய் காரணமாக சில மாதங்களுக்கு முன்னால் இவரது ஒரே மகன் இறந்து விட, இப்போதும் உழைத்து உண்கிறார். தினமும் மாலையில் பாலி கோல்கட்டாவிலிருந்து பஸ்ஸில் வந்து சிப்ஸ் விற்கும் இவர் " இந்த வயதில் பஸ்ஸில் வந்து பிழைப்பைக் கவனிப்பதில் ஒரு கஷ்டமுமில்லை எனக்கு" என்கிறார். இந்தச் சூழ்நிலையில் வேறு யாராக இருந்தாலும் பிச்சையெடுக்க ஆரம்பித்திருப்பாகள். இவர் மானம் சுயமரியாதையை பெரிதும் மதித்திறார். கடைசி வரை உழைத்துச் சாப்பிடுவதில் உறுதியாக இருக்கிறார்.

6) காயம் பட்ட ஒருவரது அனுபவம். எல்லோருக்கும் உதவலாம்! "நேற்று வனத்தோட்டம் ஒன்றை தணிக்கை செய்து வரும்போது ஒரு புல்லின் காய்ந்த குச்சி பிளந்து எனது விரலை அறுத்து விட்டது! (இந்த புல் ஏறக்குறைய 4 - 5 அடி உயரம் வளரும் ! காயம் சற்றே ஆழமானதால் இரத்தம் நிற்கவில்லை! கையிலிருந்த பஞ்சை வைத்து அமுக்கியும் கட்டுப்படவில்லை! உடனே எனது வனச்சரகர் திரு. அங்குமிங்கும் தேடி ஒரு செடியின் இலையை பறித்து வந்தார்! அதை கசக்கி அதன் சாறை காயத்தில் விட்டார்! சற்று நேரத்தில் இரத்தம் நின்று விட்டதுடன் வெட்டுக்காயமும் ஒட்டிக்கொண்டது!   
                  
                

இதன் பெயர் அரிவாள்மனை பூண்டு அல்லது வெட்டுக்காயப்பூண்டு தாவரவியல் பெயர் . Tridax procumbens .  இதன் புகைப்படம் மேலே உள்ளது! தேடிப்பாருங்கள்! கிராமங்களில் வயதானவர்கள் இதை நன்கு அறிவார்கள்!" 
              
7) நூற்பாலைகளில் தரத்தை மேம்படுத்துவதற்கு கண்டறிந்த கருவியை உற்பத்தி செய்ய, மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்கள் கைகொடுக்காததால், கண்டுபிடிப்பாளர் வேதனையில் உள்ளார்.                                           
  
 

                                                          
திருப்பூர் மாவட்டம், உடுமலை எஸ்.வி., புரம் பகுதியில் வசிப்பவர் கனகராஜ், 71; ஸ்பின்னிங் மில் பிட்டர். ஸ்பின்னிங் மில்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவத்தில், நூலின் தரத்தை மேம்படுத்த "நியு மோட் நைப் செபரேட்டர்' எனும் எளிய கருவியை உருவாக்கினார்.கருவியை, மைய விலக்கு விசை தத்துவத்தில் வடிவமைத்து, ஸ்பின்னிங் இயந்திரத்தின் ஸ்பிண்டில்களில் பொருத்துமாறு அமைத்துள்ளார். இக்கருவி நூற்பாலையில், வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.இதை அதிகளவில் உற்பத்தி செய்ய மத்திய, மாநில அரசுகளின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளிடம் ஊக்குவிப்பு நிதிக்காக விண்ணப்பித்தார்.மத்திய அரசின் தொழில் நுட்ப தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்ட அதிகாரிகளிடம் இக்கருவி குறித்து தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

கோவை தனியார் கல்லூரியில் நடந்த நேர் காணலில், கருவி உற்பத்தி குறித்த திட்ட கருத்துருவை அளித்தார். இது ஏற்கப்பட்டு, மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்டத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது.இக்கருவியை உற்பத்தி செய்ய, 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை ஒதுக்கீடு செய்வதாகவும், இந்நிதி கோவையிலுள்ள தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்ட மையத்திற்கு அனுப்பப்படும்; அம்மையத்தில் கனகராஜ் கருவியை உற்பத்தி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால், இவரது கண்டுபிடிப்புகள் செயல்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளன.இதே போல், புவியீர்ப்பு விசையை அடிப்படையாக கொண்டு மின் உற்பத்தி மற்றும் மனித வள மேம்பாட்டிற்கான கருவியை தயாரிக்கும் முயற்சியில் இவர் ஈடுபட்டு வருகிறார்.

இது குறித்து கனகராஜ் கூறுகையில், ""பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் போதிய ஊக்குவிப்பு இல்லாமல் வெளியுலக பயன்பாட்டிற்கு வருவதில்லை. பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்ட கருவியை உற்பத்தி செய்ய பத்தாண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறேன். முதியோர் உதவி தொகை ஒன்றே எனக்கு வருவாயாக உள்ளது. போதிய நிதி உதவி அளித்தால், எனது கண்டுபிடிப்பு கருவிகள் அனைவருக்கும் பலனளிக்கும் வகையில் செயல்பாட்டிற்கு வரும்,'' என்றார்.

8) ஒடிசாவில், டீக்கடைக்காரர் ஒருவர் சுமார் 60 ஏழை குழந்தைகளுக்கு தனது சொந்த செலவில் கல்வி அளித்து வருகிறார்.

                            

ஒடிசா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்தவர் பிரகாஷ் ராவ். அங்குள்ள சேரிப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். பதினொன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள பிரகாஷ், அதற்கு மேல் படிக்க வசதியில்லாததால் படிப்பை கைவிட்டு விட்டார். தற்போது டீக்கடை நடத்தி வரும் அவருக்கு படிப்பின் அருமை நன்றாக தெரியும். அவர் டீக்கடை வைத்திருக்கும் பகுதியில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகள். அன்றன்றைக்கு தொழிலுக்குச் சென்றால் தான் அவர்களுக்கு வருமானம். இதனால் அவர்களின் குழந்தைகள் படிக்க வசதியின்றி, தெருக்களில் சுற்றித்திரிவதைக் கண்டு வேதனையடைந்த பிரகாஷ், அவர்கள் படிப்பதற்காக சிறு பள்ளி ஒன்றை அமைத்துள்ளார். அதில் தற்போது 3ம் வகுப்பு வரை கல்வியளிக்கப்பட்டு வருகிறது. 3ம் வகுப்புக்கு மேல் குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க, பிரகாஷ் உதவி செய்து வருகிறார்.

               
இப்பள்ளியில் சுமார் 60 ஏழை குழந்தைகள் படித்து வருகின்றன. குழந்தைகளுக்கு கல்வியளிக்க 4 டீச்சர்களை நியமித்துள்ள பிரகாஷ், அவர்கள் நான்கு பேருக்கும் சம்பளமாக ரூ. 10 ஆயிரம் தந்து வருகிறார். மேலும், சம்பளம், மற்ற செலவுகள் எல்லாம் சேர்த்து மாதம் ஒன்றிற்கு அவருக்கு ரூ. 20 ஆயிரம் செலவாகி வருகிறது. இவை அனைத்தையும் தனது டீக்கடையிலிருந்து மட்டுமே எடுத்து செலவிட்டு வருகிறார் பிரகாஷ். தனது பள்ளிக்காக இதுவரை யாரிடம் பணஉதவி அவர் கேட்டதில்லை.            

வியாழன், 14 பிப்ரவரி, 2013

முக்கண் முதன்மை!

            
ரெக்கார்டு நோட்டுப் புத்தகம்  செட் ஸ்கொயர் கருப்பு மை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு 10 மிமீ அல்லது 12 மிமீ எது பார்டருக்கு நன்றாக இருக்கும்.  ஒரு கோடு போட்டால் போதுமா  இல்லை இரண்டு கோடுகள், அதிலும் ஒன்று மட்டும் அழுத்தமாக .... என்று இப்படி உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது அம்மா வந்தாள்.
 

  
"மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு சும்மா தானே உட்கார்ந்திருக்கே ?  ஒரு வேலை செய்யேன். " என்றாள். 
            
" உம் சொல்லு, நீ சொல்லி நான் செய்யாமல் போயிருக்கேன் இல்லை தப்பிக்கத்தான் முடியுமா? சீக்கிரம் சொல்லு.   எனக்கு ஒரு 5 பக்க ரெகார்டு வேலை இருக்கு."
          
"தேங்காய் சேவைக்கு பாக்கி எல்லாம் ரெடி.  நீ போய் பரசுராமன் கடையிலிருந்து ஒரு தேங்காய் வாங்கி வந்துடு."
   
நான் என்னுடைய மானசீக பைக்கில் [அதாங்க, வி வடிவத்தில் ரப்பரில் வார் போட்ட சிங்கப்பூர் செருப்பு ] ஏறிப்பறந்தேன்.
        
பரசுராமன் மளிகை வாசலில் பைக்கை நிறுத்தி ஸ்டாண்டு போட்ட பின் தான் கடை இன்னும் திறக்க வில்லை என்பதைக் கவனித்தேன்.  பின்னர் தான் அன்று வியாழக்கிழமை என்பதும் நினைவுக்கு வந்தது.  அவர் கடைக்கு வாராந்தர விடுமுறை.  பரகத் ஸ்டோர் வெள்ளியன்று தான் விடுமுறை என்பது நினைவுக்கு வர பைக்கை மீண்டும் ஸ்டார்ட் செய்து மாரியம்மன் கோவிலருகே போனதும் இங்கேயே வாங்கிப் போனால் என்ன என்று எண்ணம் வர, 
            
அங்கேயே வாங்கியும் விட்டேன். பரசுராமன் கடையில் என்றால் அவர் ஒன்றை எடுத்து ஓரமாக வைத்து விட்டு மற்றொன்றை எடுத்து காதுக்கு நேரே ஆட்டிப் பார்த்து பிறகு மூன்றாவதாக ஒரு காயை எடுத்து முன்னதுடன் மோதி சப்தத்தில் திருப்தி அடைந்தால்  மட்டுமே நம்மிடம் தருவார். தேங்காய்க் குவியல் நமக்கு எட்டும் தூரத்தில் இருக்காது.  ஆனால் இங்கே கடைக்காரர் தேங்காய குன்றின் பின் ஒளிந்து கொண்டு நீயே எடுத்துக்கோ என்று சொன்னதற்கு காரணம் அவர் சோம்பேறித்தனமா, இல்லை காலை உணவு அருந்திக் கொண்டிருந்ததால் எச்சில் கையால் கொடுக்க வேண்டாம் என்று நினைத்தாரா, இல்லை, வாடிக்கையாளர் அவருக்கு வேண்டியதை அவரே தேர்வு செய்யட்டும் என்ற ஜனநாயக பாதுகாவலரா என்றெல்லாம் யோசனைகள் செய்யாமல், அம்மன் கோவிலுக்கு நேர்ந்து கொண்டவர்கள் வாங்கிப் போவதுதான் நமக்கும் எல்லாமே நன்றாகத்தான் இருக்கும் என்று கைக்கு வந்ததை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். 
              
பஞ்சு கிருஷ்ணனுக்கு எப்போது எதிரில் வரலாம் வரக் கூடாது என்று பாகுபாடுகள் எல்லாம் இல்லை.  வந்தால் ஒரு அரை மணி நேரம் எதாவது கேள்விகளாக கேட்டுக் கொண்டே இரு[அறு?]ப்பான்.   
                 
அன்று பேசியதெல்லாம் இன்றும் நினைவுக்கு வருகிறது  நாங்கள் எதையும் விட்டு வைக்கவில்லை.  கே லூசக்கின் லா ஆஃப் கம்பைனிங் காஸ் வால்யூம்சிலிருந்து இந்திய நிலக்கரிக்கும், இங்கிலாந்து கரிக்கும் உள்ள வித்தியாசங்கள் நெய்வேலியில் எடுக்கப் படும் பழுப்பு நிலக்கரி இப்படி நிறைய பேசிய பின், நானும் உங்க வீட்டுப் பக்கம்தான் வருகிறேன், 104 பாலுவிடம் பழைய புத்தகம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்ல அவ்வளவு நேரம் அம்மாவைக் காக்க வைத்து விட்டோமே என்ற குற்ற உணர்வுடன் மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்.  பெயருக்குத்தான் பஞ்சு - பறக்க எல்லாம் மாட்டான். மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து எறும்பு போலத்தான் நடப்பான். 
        
ஒரு வழியாக கிழக்கு மடவிளாகத்தில் முனையில் அவனை விட்டு விட்டு, வீட்டுக்குள் வந்து அம்மாவிடம் தேங்காயைக் கொடுத்து விட்டு ரெகார்டு நோட்டு பென்சில் பேனாக்களில் கவனம் செலுத்தினேன்.
              
மீண்டும் அம்மா.  கையில் உடைத்த தேங்காய்  பாண்டியன் சபையில் சிலம்பைக் கையில் வைத்துக் கொண்டு நீதி கேட்கும் கண்ணகி போன்ற  முக பாவம்.  
              
"கடைக்காரர் தானே எடுத்துக் கொடுத்தார் ? இல்லை நீயே எடுத்தியா ?"
               
"நான்.... நான் ,,, தான் எடுத்தேன்." 
         
"நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன்? நல்லா தட்டிப் பார்த்து, கனம் அதிகமில்லாமல் உள்ளே நீர் ஆடணும்னு .....? போ, போய்க் கொடுத்து விட்டு வேறு வாங்கி வா.  பரசுராமன் கட்டாயம் மாற்றிக் கொடுப்பார். " 
       
"அம்மா இன்னிக்கு வியாழக் கிழமை"  
   
"வியாழக் கிழமைன்னா ...?"
  
" பரசுராமன் கடை லீவு!"  
             
"பின்னே இதை எங்கே வாங்கினே ?" 
  
"மாரியம்மன் கோவில் வாசல்லே."
           
"அவரும் மாற்றிக் கொடுப்பார்; நீ போய் கேட்டுப் பார்."
    
"எனக்கு நிறைய வேலை...இருக்கும்மா"   
     
"பஞ்சு கிருஷ்ணனுடன் வம்பளக்கும் பொழுது இந்த வேலை எல்லாம் இங்கேயே தானே இருந்தது ?" 
            
 அம்மாவிடம் பேசி ஜெயிக்க முடியாது!
             
அதுக்காக எல்லோருமா பரசுராமன் ? இந்தக் கடைக்காரர் என்னைப் பார்க்கவே இல்லை - நானும் அவரைப் பார்க்கவில்லை. எனக்கு வேறு யாராவது அங்கே உட்கார்ந்திருந்தால் கூட தெரியாது!
             
"போ, போய் கேட்டுப்பார்."
                   
'ஏதோ கண்ணகி சாபம் எதுவும் கொடுக்காமல் அந்தப்புறம் போனது நாம் செய்த பாக்கியம்' என்று மீண்டும் சென்று, சென்றார் - கண்டார் - வென்றார் வந்தார் என்பது போல திரும்பி வந்து தம்பி தங்கையுடன் தேங்காய் சேவை சாப்பிட்டது இன்றும் பசுமை.
    
இந்த நினைவுகளை இப்பொழுது தூண்டி விட்ட கடல் டிஸ்டிரிப்யூடர்களுக்கு நன்றி.