புதன், 20 பிப்ரவரி, 2013

வெ ஆ நிர்மலா, அர்னாப், கொஞ்சும் சலங்கை, பொதிகை, முரசு - வெட்டி அரட்டை


'மானாட மயிலாட'களைப் பார்த்து விட்டு பொதிகையில் 'கொஞ்சும் சலங்கை' பார்க்க சுவாரஸ்யமாகவும் ஆறுதலாகவும் இருந்தது. 

                                                   

ஞாயிறு காலை 11 மணி சுமாருக்கு சேனல்களை அலசுகையில் பொதிகையில் மைக்கும் கையுமாக, பாந்தமாகப் புடைவையில் மென்குரலில் பேசிக் கொண்டிருந்த வெண்ணிற ஆடை நிர்மலாவைக் கண்டதும் ரிமோட்டை ஓரமாக வைத்து விட்டு என்ன என்று பார்த்தபோது நிகழ்ச்சி சுவாரஸ்யமாகத்தான் இருந்தது.

                                              

ஆரம்பம் எப்போதிலிருந்து என்று தெரியவில்லை. அநேகமாக 10.30 முதல் 11.30 வரையாக இருக்கலாம் என்று அனுமானம். பரத நாட்டிய ஸ்லாட் முடிந்திருக்க வேண்டும். நான்கு பெண்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி.


                           
வெ.ஆ. நிர்மலா மென்மையான குரலில் அப்போது ஆடி முடித்திருந்த பெண்ணைக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார். என்ன கேள்விகள்?
                               
"கருணையை அபிநயம் பிடிம்மா..."

"கூந்தலை எப்படி அபிநயம் பிடிப்பே... ஊஹூம்... நீ அபிநயம் காட்டுவது சீவாத கூந்தல். சீவிய கூந்தலை எப்படி காட்ட வேண்டும்?" அபிநயம் பிடித்துக் காட்டுகிறார்.

"இரவு என்பதை எப்படி அபிநயத்தில் கொண்டு வருவே?"

இது மாதிரியான கேள்விகள் பார்ப்பவர்களை இரவை எப்படி அபிநயத்தில் காட்ட முடியும் என்று யோசிக்க வைத்து, சுவாரஸ்யமாக்குகிறது. 

                                            

அடுத்த ரவுண்டில் நாட்டுப் பாடல்கள் பாடி ஆடினார்கள் குழந்தைகள். கால்களில் சலங்கை கட்டாமல் ஆடிய பெண்ணை 'ஏனம்மா' என்று கேட்க அவர் ஓடிஸா நடனத்தில் அப்படித்தான் வழக்கம் என்று சொல்ல, 'அப்புறம் நீ தாளத்துக்குச் சரியாக காலை வைக்கிறாய் என்று எப்படிம்மா தெரியும்?' என்று மென்மையாகக் கேட்டார். லெக்கின்ஸ் போட்டு ஆடிய பெண்ணை மென்மையாகக் கடிந்து கொண்டு மார்க் கிடைக்காது என்று அறிவுறுத்தினார். அவருடன் அமர்ந்திருந்த இன்னொரு நடுவர் மாது யாரென தெரியவில்லை.

நாட்டுப் பாடல் ரவுண்ட் முடிந்ததும் கேள்விச் சுற்று. தாளங்கள் எத்தனை, என்னென்ன பீட், 'நீ ஒரு தாளம் சொல்லி ஆடி விட்டு, அப்புறம் அதையே இன்னொரு தாளத்தில் ஆடும்மா' என்று எல்லாம் சோதித்துப் பார்த்தார்.

நிச்சயம் மாறுதலான நிகழ்ச்சி. இதே பொதிகையில் ஞாயிறு இரவு 9 மணிக்கு பிரபல கர்னாடக இசைப் பாடகர்களைப் பற்றி வரும் 'காற்றினிலே வரும் கீதம்' நிகழ்ச்சியும் வருகிறது (எங்கள் ப்ளாக்கில் இந்நிகழ்ச்சி பற்றியும் முன்னரே பகிர்ந்திருக்கிறோம்).

நீயா நானா போலவே பொதிகையிலும் ஒரு நிகழ்ச்சி உண்டு அதன் பெயர் நினைவில் இல்லை. அதுவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

                                       

பொதிகையில் சனி இரவுகளில் வரும் BSNL ஸ்போர்ட்ஸ் குவிஸ் பார்த்திருக்கிறீர்களோ... டாக்டர் சுமந்த் வி ராமன் இந்நிகழ்ச்சியை நடத்தும் அழகு, வேகமான பேச்சுக்கள் ரசிக்க வைக்கும். (சமீபத்தில் இந்நிகழ்ச்சியை விழித்திருந்து பார்க்கவில்லை. மிகவும் நேரம் கழித்துப் போடுவது ஒரு மைனஸ்).    
===============================================

'நினைவெல்லாம் நித்யா' படத்தில் எஸ் பி பி குரலில் 'நீதானே எந்தன் பொன்வசந்தம்' பாடலைக் கேட்டு ரசித்த செவிகளுக்கு சமீப காலமாக அதே பாடலை கவுதம் மேனன் குரலில் நீதானே எந்தன் பொன்வசந்தம் படத்தில் பாடுவதை முழுதாக சேனல்களில் போடுவதைக் கேட்க கடுப்பாக இருக்கிறது. ஒரிஜினல்களை ரீமிக்ஸ் செய்வதே பிடிப்பதில்லை. இது மாதிரிக் கொலைகளை என்ன செய்ய? 

       

இதே போல 100க்கு 100 படத்தில் வரும் பி. சுசீலா பாடிய 'நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்' பாடலைக் கன்னா பின்னா என்று தழுவி 'கண்ணா லட்டு திங்க ஆசையா' படத்தில் ஆண்குரலில் பாடும் பாடலையும் கேட்க எரிச்சல் வருகிறது. ஒரிஜினலை விட்டு விட்டு, இது மாதிரி நகல்களை விழுந்து விழுந்து ரசிக்கும் சின்னஞ்சிறிசுகளைப் பார்க்கவும் அதே...அதே...  
====================================

பங்களாதேஷ் பிரீமியர் லீக் பார்க்க பாவமாக இருக்கிறது!

=====================================

                                    

முரசு மற்றும் சன் லைஃப் தொலைக் காட்சிகளில் பழைய பாட்டு, பழைய பாட்டு என்று கேட்டுக் கொண்டிருந்தால்,  மீண்டும் மீண்டும் அதே லிஸ்ட் கேட்டு அலுத்து விட்டது.     
===============================


                                                   

டிஜிட்டல் கேபிள் , அரசு கேபிள் என்றெல்லாம் குழப்பி இப்போது கேபிள்காரர்களே கொடுக்கும் சேனல்களில் செய்திச் சேனல்கள் எங்கெங்கோ பிரிந்து கிடக்க, அர்நாபை மட்டும் பார்க்க விடாமல் வேறு செய்து விட்டார்கள். இன்னும் பல சேனல்கள் காணோம். வந்தவரைக்கும் பார்க்கிறோம். பாட்டு கேட்க ரெண்டு சேனல், நியூஸ் பார்க்க ஆங்கிலத்தில் 3, தமிழில் 2, தேவைப் பட்டால், தேவைப்பட்டால் மட்டும் படம் பார்க்க ஓரிரு சேனல்கள்... போதும்.   
                                      

17 கருத்துகள்:

  1. நல்ல அலசல் அரட்டை...

    என்ன இருந்தாலும் திரைப்பட பாடல்கள் பொருத்தமட்டில் OLD is GOLD...

    பதிலளிநீக்கு
  2. //நிச்சயம் மாறுதலான நிகழ்ச்சி. இதே பொதிகையில் ஞாயிறு இரவு 9 மணிக்கு பிரபல கர்னாடக இசைப் பாடகர்களைப் பற்றி வரும் 'காற்றினிலே வரும் கீதம்' நிகழ்ச்சியும் வருகிறது (எங்கள் ப்ளாக்கில் இந்நிகழ்ச்சி பற்றியும் முன்னரே பகிர்ந்திருக்கிறோம்).//

    முன்னெல்லாம் விடாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போ அவர் மட்டும் பார்க்கிறார். என்னால் உட்கார முடியறதில்லை. :(

    பொதிகையிலேயே நிகழ்ச்சிகள் நன்றாகவே இருக்கும். சனிக்கிழமைகளில் மத்தியானமாய் 3-15க்கு ஆரம்பிச்சு நாலரை வரைக்கும் கர்நாடக சங்கீதக் கச்சேரிகள் ஒளிபரப்புவாங்க. அருமையான கச்சேரிகளைக் கேட்கலாம். இப்போக் கொஞ்ச நாட்களாய் திருவையாறு நிகழ்ச்சிகளைக் கொடுத்துட்டு இருக்காங்க. :))) தூர்தர்ஷன் இயக்குநர் யாரோ புதுசா மாறி வந்திருக்காங்க போலனு பேசிப்போம். நடுவிலே கொஞ்சம் மோசமா இருந்தது! :)))))

    பதிலளிநீக்கு
  3. பொதிகையில் பல நல்ல நல்ல நிகழ்ச்சிகள் வந்தாலும் ஏன்னோ மற்ற HD சணல்கள் தான் பார்க்க தோணுகிறது..

    பதிலளிநீக்கு
  4. பொதிகையில் எப்போதுமே நல்ல நிகழ்ச்சிகள் வரும்....

    ரீமிக்ஸ் எனக்கும் பிடிக்காத ஒன்று.

    பதிலளிநீக்கு
  5. படா டோப சேனல்களால் பொதிகையின் நல்ல நிகழ்ச்சிகள் காணாமல் போகின்றன! நீயா நானா போன்ற விவாத நிகழ்ச்சிகளை பொதிகையில் பார்த்துள்ளேன்! அருமையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  6. கொஞ்சும் சலங்கை குறித்துச் சொல்லவே இல்லையே. அப்போ வந்த சிவாஜியோட படம் எதுக்கோ (வீரபாண்டியக் கட்டபொம்மன்?) இதைப் போட்டியாச் சொல்வாங்க இல்லை? பிரம்மாண்டமான தயாரிப்பு. சிங்கார வேலனே தேவா பாட்டு நல்லா இருக்கும். கமலா லக்ஷ்மணன் என்றழைக்கப்பட்ட குமாரி கமலா தான் கதாநாயகி இல்லையா? படம் முடிவில் சிரிப்பாய் வரும். அதாவது கிளைமாக்ஸ் சிரிப்பு வரும்படியா இருக்கும். மறந்து போச்ச்ச். ஆனால் சங்கிலியில் கட்டிய சாவித்திரியும், கமலாவும் மட்டும் நினைவில் இருக்காங்க. நாட்டியமணியான கமலாவுக்கு நடிப்பு பூஜ்யம் என்பது அந்த ஒரே காட்சியில் தெரிந்துவிடும். :))))))))

    பதிலளிநீக்கு
  7. சாதாரணமாக தொலைக்காட்சி பார்ப்பதே இல்லை. அப்படிப் பார்த்தாலும் முரசு பார்க்கிறேன். பொதிகையும் சில சமயங்களில்....

    பதிலளிநீக்கு
  8. நன்றாகவே சேனல்களை அலசியிருக்கிறீர்கள். பொதிகையில் நிகழ்ச்சிகள் பார்ப்பது பிடிக்கும். இந்த கமர்ஷியல் பிரேக் அதிகம் இருக்காதல்லவா?

    நல்ல பதிவு .அருமையாக சேனல்களை பிரித்துப் போட்டு அலசிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  9. வெஆநி நிகழ்ச்சிக்கு யுட்யூப் லிங்க் தெரிஞ்சா குடுங்க.

    பதிலளிநீக்கு
  10. தொலைக்காட்சி நிகழ்சிகளின் நல்லதொரு அல்சல்.

    பதிலளிநீக்கு
  11. எங்கள் ஊரில் பொதிகை கிடைப்பதில்லை! அதனால் அதை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். இங்கே [ தஞ்சை] தற்போது வந்திருப்பதால் கொஞ்ச நாட்களுக்கு பொதிகையை ரசிக்கலாம். அதனால் இந்த செய்தி எனக்கு மிக உபயோகமானது! இனிய நன்றி உங்களுக்கு!!

    பதிலளிநீக்கு
  12. நானும் வெண்ணிறை ஆடை நிர்மலா நடத்தும் நிகழ்ச்சி பார்த்து இருக்கிறேன் நன்றாக இருக்கும்.

    நிறைய நிகழ்ச்சிகள் பொதிகையில் நன்றாக இருக்கும்.காலை மங்கல இசை, கர்நாடக இசை கச்சேரி, எல்லாம் நன்றாக இருக்கும்.
    பழையபாடல்கள் வைப்பார்கள் அதுவும் நன்றாக இருக்கும்.
    புதுவெள்ளம் என்று புதுபாட்டு பாட்டுவரிகள் கீழே வரும் அப்படியே படித்துக் கொண்டே கேட்டு மகிழலாம்.
    பொம்மலாட்டம், கரகாஆட்டம், போன்ற கிராமிய கலைகளும் நன்றாக இருக்கும்.
    ரீமிக்ஸ் என்று பழைய இனைமையான பாடல்களை கெடுப்பது எனக்கும் பிடிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  13. பொதிகை பொத்தி வைத்தது போல் ஆகிவிட்டது மற்ற சினிமா டி.வீகளால் நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  14. காலை மங்கல இசை, கர்நாடாக இசை, :காண்போம் கற்போம்: 12ம் வகுப்புக்கு மாதிரி வினா, விடைத்தாள் எல்லாம் நன்றாக இருக்கும்.
    இப்போது மாணவர்களுக்கு உதவும்.( 12 ம் வகுப்பு மாணவர்கள் பார்க்க நேரம் 5.30)

    பதிலளிநீக்கு
  15. //எங்கள் ப்ளாக்கில் இந்நிகழ்ச்சி பற்றியும் முன்னரே பகிர்ந்திருக்கிறோம்// பகிர்தலுக்கனா சுட்டி கொடுத்தால் மீண்டும் ஒருமுறை சுட்ட வசதியாய் இருக்கும்

    // ஒரிஜினலை விட்டு விட்டு, இது மாதிரி நகல்களை விழுந்து விழுந்து ரசிக்கும் சின்னஞ்சிறிசுகளைப் பார்க்கவும் அதே...அதே... // ஒரிஜினல் தெரியாத போது சின்னஜ் சிறுசுகள் என்ன செய்வதாம் :-)

    //பங்களாதேஷ் பிரீமியர் லீக் பார்க்க பாவமாக இருக்கிறது!//

    பங்களாதேஷ் பிரீமியர் லீக் பார்க்கும் உங்களைப் பாவமாக இருக்கிறது! ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  16. பொதிகையில் வரும் 'ஆரோக்கிய பாரதம்' நிகழ்ச்சி வெகு அருமை. திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நோய் பற்றிய மருத்துவர்களின் விளக்கங்கள் மிகவும் தெளிவாகவும், நிறைய தகவல்களையும் தருகிறது.அடுத்த நாள் காலை 11 - 11.3O வரை மறு ஒளிபரப்பும் உண்டு.

    இந்தியாவின் எல்லாப்பகுதிகளிலும் அந்தந்த மொழியில் ஒரே நேரத்தில் இந்த நிகழ்ச்சி ஒளி பரப்பாகிறது என்பது கூடுதல் தகவல்!

    இந்த நிகழ்ச்சியை யாரும் பார்ப்பதாகவே தெரியவில்லையே!

    என் வழி தனி வழி என்று பொதிகை ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை ஆர்பாட்டங்கள் ஏதுமில்லாமல் தன சேவையை தொடர்வது அதிசயம்தான்.

    பதிலளிநீக்கு
  17. பொதிகையிலே இந்த ஆரோக்கிய பாரதம் நிகழ்ச்சியா என்னனு தெரியாது. பூந்தமல்லி சாலையில் உள்ள சங்கரா ஆயுர்வேத மருத்துவமனையின் இயக்குநரின் ஆலோசனைகளையும் விளக்கங்களையும் தவறாமல் கேட்போம். மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி. இப்போக் கொஞ்ச நாட்களாக மின்வெட்டுக் கடுமையினால் பார்க்க முடியறதில்லை.:(

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!