ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

ஞாயிறு 196:: ஆடாத மனமும் உண்டோ?


               
எதைக் கண்டு ஏங்குகிறாய் 
மயிலே..?
வெளியிலிருக்கும் 
வெப்பத்துக்கு 
தாகத்துக்குக் கூட 
நீரில்லை 
சிறையாயிருந்தாலும் 
உள்ளேயே வந்து விடுகிறேன் 
என்று 
ஒற்றைக் கால் தவமோ...?

  
=========================================

மானே...
உள்ளே என்ன செய்கிறாய்?
நீயும் வாயேன்.
மானாட, மயிலாட 
என்று ஆடலாம்!


=========================================

வானிலை அறிக்கையைக் 
கொஞ்சம் 
சத்தமாக வையுங்கள் 
ரமணன் சொல்கேட்டு 
மழை வரும் நாள் 
அறிந்து 
ஆடுகிறேன்..


=========================================

இந்த மயில் 
ஆட 
வேண்டுமென்றால் 
எங்கள் ப்ளாக் 
ஆ'சிரி'யர்கள் 
பாட வேண்டும்...

       
எங்கள் ப்ளாக் ஆ'சிரி'யர்கள் 
பாடினால், 
எங்கள் ப்ளாக் வாசகர்கள் 
ஓடிவிடுவார்களே!! 
              

19 கருத்துகள்:

  1. ஆஹா,போட்டிப் படம் ரெடியோ ரெடி, தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    பதிலளிநீக்கு
  2. மயில் ரொம்ப அழகு. மயில் பாடல் இன்னும் அழகு.
    மானையும் போட்டு இருக்கலாமே!!

    எங்கள் ப்ளாக் ரசிகர்கள் எதற்கும் அஞ்சார்..அதனால் தைரியமாகக் கலைகளை வளர்க்கலாம்!!

    பதிலளிநீக்கு


  3. வனவிலங்கு பூங்கா என்னும் சிறையில் இருந்தாலாவது நீர் கிடைக்கும் என்று தவம் இருக்கிறதோ!

    மயில் ஆட கொண்டல் மேகம் வேண்டும். அதனால் தான் ரமணன் இன்று மழைவரும் சொல்ல மாட்டாரா என்று ஏங்கிறது .

    எங்கள் பிளாக் ஆசிரியர்கள் மழை பாட்டு பாடுங்கள் கண்டிப்பாய் மயில் ஆடும், மான் ஆடும். எங்கள் பிளாக் வாசகர்கள் மனம் குளிர்வார்கள்.

    கவிதைகள் எல்லாம் மிக நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. மன்னாதி மன்னன்ல வாத்யார் பாட்டைப் பத்தி எதாச்சும் எழுதியிருப்பீங்களோன்னு வேகமா வந்தா... இங்க அழகு மயிலும் அதற்கான 3 கவிதைகளும்! அருமை!

    பதிலளிநீக்கு
  5. மயிலார் அழகு. கவிதைகளும் அருமை.

    பாடுங்கள் பாடுங்கள், கேட்க ஆவலாகக் காத்திருக்கிறோம்:)!

    பதிலளிநீக்கு
  6. அழகான படம்... அதற்கேற்ற கவிதை வரிகளும் அருமை... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. இந்த மயில்
    ஆட
    வேண்டுமென்றால்
    எங்கள் ப்ளாக்
    ஆ'சிரி'யர்கள்
    பாட வேண்டும்...

    ஆடாத மனமும் உண்டோ?

    பதிலளிநீக்கு
  8. இனிய வணக்கம்!

    http://subbuthatha.blogspot.de/2013/04/blog-post_7.html

    மேற்படி வலைப்பூப் பதிவரான சுப்பு ஐயாவினால் உங்கள் வலைப்பூ தெரிந்துவந்தேன்.

    இங்கு உங்கள் மயில் கவிதைகள் அருமையாக இருக்கிறது.

    ஒற்றைக்கால் நாரைபோல் ஒற்றைக்கால் மயில் படமும் அழகு. அதற்கான 4 கவிதைகளும் அழகோஅழகு!
    மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள்!

    உங்கள் கவிதைகளுக்கு சுப்பு ஐயா தன்குரலில் பாடி இன்னும் மெருகேற்றி உள்ளார். அவருக்கும் என் மனமார்ந்த பாரட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  9. படக்கவிதை சிறப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. நன்றி இளமதி
    சுப்புத் தாத்தா மிக அருமையாக பாடியிருக்கிறார்.
    எங்கள் ப்ளாக் சைடு பாரிலும் சுப்புத் தாத்தாவின் வலைப் பதிவு சுட்டியை இணைத்துவிட்டோம்.

    பதிலளிநீக்கு
  11. யாரது? வாத்தியாரின் பாடலை மட்டும் நினைவு கூறுவது?
    நடிகர் திலகம் 'மாதவிப் பொன் மயிலாள்' பாடக் கூடாதா?

    தோகை மயில் படம் அழகு!
    கீதாவின் படம் பார்க்க ஜூட்!

    பதிலளிநீக்கு
  12. பாடித்தான் யூட்யூபில் போட்டுக் காட்டுங்களேன். அதற்கும் போட்டி வருகிறதா, பார்க்கலாம். (எப்படியிருந்தாலும் 'எங்கள்' ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான்!)

    பதிலளிநீக்கு
  13. எங்கள் பிளாக் குழுவினர் பாடினால் கீதாவும் பாடுவார்கள் கேட்க ஆவலாக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. @ கோமதிம்மா,

    இந்த டீல் நல்லாருக்கே:)! காத்திருப்போம்.

    பதிலளிநீக்கு
  15. //பாடித்தான் யூட்யூபில் போட்டுக் காட்டுங்களேன். அதற்கும் போட்டி வருகிறதா, பார்க்கலாம். (எப்படியிருந்தாலும் 'எங்கள்' ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான்!)//

    ஜீவி சார், என்னை மாட்டி விடணும்னு அவ்வ்வளவு ஆசையா? நல்லா இருக்கே கதை! :))))

    பதிலளிநீக்கு
  16. //எங்கள் பிளாக் குழுவினர் பாடினால் கீதாவும் பாடுவார்கள் கேட்க ஆவலாக இருக்கிறேன்.//

    நான் பாடிடுவேன். அதை யாரும் கேட்க மாட்டீங்க. :)))))) அப்புறமா என்னோட பதிவுக்குப் பின்னூட்டம் போடக் கூட ஆளிருக்காது. :)))))

    பதிலளிநீக்கு
  17. ரா.ல. ம்ஹூம், நான் வரலை இந்த ஆட்டத்துக்கு. :)))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!