செவ்வாய், 30 ஏப்ரல், 2013

உள் பெட்டியிலிருந்து 4 2013


ஜோக்க்காம்...

1) இண்டர்வியூ எடுப்பவர் : "எந்த உயிரினம் வானில் பறந்தாலும் பூமியில் குழந்தை பெறும்?"
                                           

 

மிஸ்டர் எக்ஸ் : [பதில் தெரிந்த உற்சாகத்துடன் சத்தமாக] "ஏர்ஹோஸ்டஸ்"

 

2) பார்ட்டி முடிந்து வழக்கம்போல லேட்டாகத் திரும்பிய கணவனிடம் மனைவி, "என்னை நாலு நாளுக்குப் பார்க்க முடியலைன்னா என்ன பண்ணுவீங்க?"
 
                                              

 

எதிர்பாராமல் ஒரு பரிசா..கணவன் குதூகலமாக "நன்றாயிருக்குமே" என்றான்.

திங்கள் கடந்து செவ்வாய் புதன் வியாழன் என்று தாண்ட இப்போது கணவன் முகத்தில் இருந்த வீக்கம் சற்றே மறைய, ஆம்... 4 நாட்களுக்குப் பின் இன்று அவனால் மனைவியை ஓரக் கண்ணால் பார்க்க முடிகிறது!

 

3) மனைவி சொல்வதைக் கேட்டுத் தலையாட்டிக் கொண்டிருப்பது என்பது நெட்டில் Terms and conditions படிப்பது போன்றது. புரிகிறதோ, இல்லையோ 'I agree' தான்!

 

4) எனக்கும் அவளுக்கும் நட்பு இல்லை, பகை இல்லை, காதல் இல்லை, மோதல் இல்லை, உறவு இல்லை, பிரிவு இல்லை, அன்பு இல்லை, கோபம் இல்லை,... ஆனால் நான் யாரிடமும் பேசுவதற்கு அவள் விடுவது இல்லை! "your account balance is too low. You are not allowed to make a call"நு சொல்கிறாள். என்ன செய்ய?!

 

5)அமெரிக்கா : "நாங்கள்தான் நிலவில் முதலில் கால் வைத்தோம்"

ஆஸ்திரேலியா : "வீனஸ்ல நாங்கள்தான் முதல்"

இந்தியா : "சூரியன்ல நாங்கள்தான் முதல்"

ஆஸ்த்., அமெரிக்கா : "பொய் சொல்லாதீங்க... எரிஞ்சி போயிருப்பீங்க"

இந்தியா :"
இது தெரியாதா... நாங்கள் ராத்திரில இல்லை காலை வச்சோம்"

========================

குழப்பமான ஓட்டத்தை விட நம்பிக்கையான மென் நடை எவ்வளவோ நல்லது. யாரையும் பின்பற்ற வேண்டாம், ஆனால் எல்லோரிடமிருந்தும் பாடம் கற்போம்.

 
                                                      

 

நம்முடைய, புன்னகையின் பின்னால் இருக்கும் சோகம்,
கோபத்தின் பின்னால் இருக்கும் அன்பு,
மௌனத்தின் பின்னே இருக்கும் அர்த்தம்
இவற்றை அறிந்தவனே நம் நண்பன்.

 
                                                       

 

நேற்றைய பொழுதில் நாம்தான் அவர்கள் வாழ்வில் முக்கியமானவர்கள் என்ற நிலையிலிருந்து இன்று நாம்தான் அவர்கள் வாழ்வில் மிக வேண்டப் படாதவர்கள் என்ற நிலை வந்தால் வாழ்வின் மிகக் கடினமான தருணம் அதுதான்.
 
                                                        

 

சரியான முடிவு உங்கள் நம்பிக்கையையும், தவறான முடிவு உங்கள் அனுபவத்தையும் அதிகரிக்கிறது.
 
                                                        

 

ஒரு புதிய உறவு நம் வாழ்வை அழகாக்கினாலும் நாம் இழந்த ஒரு நெருங்கிய சொந்தத்தை அது நிச்சயம் நிரப்புவதில்லை.

காதல்


"நீ என்னைக் காதலிக்கிறாயா?"

"ஆம்"

"எவ்வளவு?"

"நிறைய...நிறைய"

"நான் என்ன சொன்னாலும் கேட்பாயா?"

 
                                                       

 

"ஆம்... நிச்சயமாக"

"அப்போ இந்த மாடியிலிருந்து குதி"


"சரி,," விளிம்பு வரை நடந்தவன் திரும்பினான். "வா... வந்து என்னைத் தள்ளி விடு"

நம்பிக்கை.

=======================


                                               

 

பிரார்த்தனை செய்வதற்குமுன் நம்புங்கள்.
பேசுமுன் கேளுங்கள்.
செலவழிக்குமுன் சம்பாதியுங்கள்.
எழுதுமுன் யோசியுங்கள்.
கைவிடுமுன் முயற்சி செய்யுங்கள்.

==============================

மனிதன் உடல்நலத்தைப் பற்றிக் கவலைப் படாமல் சம்பாதிக்கிறான். பின்னாளில் சம்பாதித்ததை அந்த உடல்நலத்தைக் காக்கவே செலவிடுகிறான்!

 
                                              

 

கதவு மூடியிருக்கிறதே என்று தயங்கி நிற்காதீர்கள். சில பூட்டாத கதவுகள் உங்கள் முயற்சி என்னும் சிறு தள்ளலுக்காகக் காத்திருக்கின்றன.

                                          

 

நேற்றைய சண்டை இன்றைய உறவை / நட்பை பாதிக்காத நட்பே சிறந்த  நட்பு.

குற்ற உணர்வு கடந்த காலத் தவறுகளை சரி செய்வதுமில்லை. கவலைகள் எதிர்காலத்தை வளமாக்குவதும் இல்லை. வாழப் பழகுவோம்!

 
                                         

 

அசாதாரணமான விஷயங்களைச் சாதாரணமாகச் செய்யத் தேவையில்லை. சாதாரண விஷயங்களை அசாதாரணமாக செய்தால் போதும்.

                                      

 

ஒரு பொய் சொல்லி ஒரு நட்பை இழப்பது எளிது. அந்த நட்பை மீண்டும் பெற 1000 உண்மைகள் கூட உதவுவதில்லை.

 

"நானழகா நிலவழகா" காதலி கேட்டாள்.
 
                                           

 

"தெரியாது... ஆனால் உனைப் பார்க்கும்போது நிலவின் நினைவு வருவதில்லை. நிலவைப் பார்க்கும்போது உன் நினைவு வருகிறது"

 

கண்களால் காணும்போதும் புரியவில்லை!
கைகளால் எடுத்தும் தெரியவில்லை!!
யோசித்தாலும் விளங்கவில்லை!!!
இது என்ன என்ன? அன்பா, நட்பா காதலா?

                                     

 

அடப் போங்கப்பா... பரீட்சை வினாத்தாள்!

 

மனித மனங்கள் வினோதம்தான். அவர்கள் அறிவைப் பற்றி கர்வம் இருக்கும் அளவு அவர்களின் கர்வம் பற்றிய அறிவு இல்லை!

 

வெற்றியை நோக்கி..

                                                            
 
முடிவே தெரியாத
பாதையில்
பயணிக்கிறேன்...
முடிவில் நீ இருப்பாய்
என்று நம்பி!

19 கருத்துகள்:

  1. உள் பெட்டியில் இருந்து வந்தவை அனைத்தும் பொக்கிஷங்கள் ....
    நம்பிக்கையான மென் நடை ..சிம்ப்ளி சூப்பர்ப் !!!!

    பதிலளிநீக்கு
  2. ஜோக்குக்கள் சிரிக்க வைத்தன. தத்துவங்கள் சிந்திக்க வைத்தன! அருமையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. 3) மனைவி சொல்வதைக் கேட்டுத் தலையாட்டிக் கொண்டிருப்பது என்பது நெட்டில் Terms and conditions படிப்பது போன்றது. புரிகிறதோ, இல்லையோ 'I agree' தான்! //

    hihihiசொந்த அனுபவமோ? :)))))

    பதிலளிநீக்கு
  4. //நேற்றைய சண்டை இன்றைய உறவை / நட்பை பாதிக்காத நட்பே சிறந்த நட்பு//

    ஆமா இல்ல?.

    பதிலளிநீக்கு
  5. //நேற்றைய பொழுதில் நாம்தான் அவர்கள் வாழ்வில் முக்கியமானவர்கள் என்ற நிலையிலிருந்து இன்று நாம்தான் அவர்கள் வாழ்வில் மிக வேண்டப் படாதவர்கள் என்ற நிலை வந்தால் வாழ்வின் மிகக் கடினமான தருணம் அதுதான்.//

    உண்மை.

    பதிலளிநீக்கு
  6. கதவு மூடியிருக்கிறதே என்று தயங்கி நிற்காதீர்கள். சில பூட்டாத கதவுகள் உங்கள் முயற்சி என்னும் சிறு தள்ளலுக்காகக் காத்திருக்கின்றன.

    Nice...

    பதிலளிநீக்கு
  7. //நேற்றைய பொழுதில் நாம்தான் அவர்கள் வாழ்வில் முக்கியமானவர்கள் என்ற நிலையிலிருந்து இன்று நாம்தான் அவர்கள் வாழ்வில் மிக வேண்டப் படாதவர்கள் என்ற நிலை வந்தால் வாழ்வின் மிகக் கடினமான தருணம் அதுதான்.//

    எத்தனை கசப்பான உண்மை இது! ஆனால் நிறைய பேருக்கு கிடைக்கும் உன்மையான நிகழ்வும் இது தான்!!

    பதிலளிநீக்கு
  8. ராத்திரியில் காலை வைத்ததும் (என்ன ஒரு சமாளிப்பு...?) காதல் நமபிக்கையும் மிகவும் அருமை...

    தத்துவங்கள் அனைத்தும் பிரமாதம்....

    அடப் போங்கப்பா... இப்படியா அசத்துறது...? வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  9. ஒரு புதிய உறவு நம் வாழ்வை அழகாக்கினாலும் நாம் இழந்த ஒரு நெருங்கிய சொந்தத்தை அது நிச்சயம் நிரப்புவதில்லை. //
    கசப்பாயிருந்தாலும் உண்மை.

    அநேக செய்திகளையும் நகைச்சுவையையும் உள்ளடக்கிய இன்பாக்ஸ் பல உண்மைகளைத் தருகிறது. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  10. ஒரு புதிய உறவு நம் வாழ்வை அழகாக்கினாலும் நாம் இழந்த ஒரு நெருங்கிய சொந்தத்தை அது நிச்சயம் நிரப்புவதில்லை. //

    உண்மை.



    அடப் போங்கப்பா... பரீட்சை வினாத்தாள்!//
    நல்ல நகைச்சுவை.

    //பிரார்த்தனை செய்வதற்குமுன் நம்புங்கள்.
    பேசுமுன் கேளுங்கள்.
    செலவழிக்குமுன் சம்பாதியுங்கள்.
    எழுதுமுன் யோசியுங்கள்.
    கைவிடுமுன் முயற்சி செய்யுங்கள்.//

    மிக அருமை.
    எல்லாம் நன்றாக இருக்கிறது ஸ்ரீராம்.






    பதிலளிநீக்கு
  11. காதல், நகைச்சுவை,நக்கல், வாங்கல், புத்திமதி, நீதி என்று வகைக்கொன்றாக சிறந்தவைகளைத் தேர்ந்தெடுத்து இப்படி நிறையத் தூவுவது நல்ல டிரிக். நல்லதாகவும் இருக்க வேண்டும்; மற்றவர்கள் குறிப்பிடாததாகவும் இருக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் மேலிருந்து கீழ், கீழிறுந்து மேல் என்று படிக்கத் தூண்டுகிறதல்லவா? சுமாரானவற்றை யும் வார்த்தைகள் அமைப்பில் சூப்பரப் ஆக்கிய முயற்சிகளை மறக்காமல் பாராட்டத்தான் வேண்டும்.

    யார் யார் எதைத் தேர்ந்தெடுத்து ரசிக்கிறார்கள் என்பதை வைத்து அவர்களைப் பற்றி சொல்லக் கூடிய ஜோதிடம் ஒன்று இருக்கு. உள் பெட்டியில் தேடிப்பாருங்கள். கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  12. //ஒரு பொய் சொல்லி ஒரு நட்பை இழப்பது எளிது.

    இதைப் புரிந்து கொண்டவர்கள் வெகு வெகு சிலரே. எந்த உறவிலும் நேர்மை நாணயம் தேவை, நட்பில் இன்னும் அதிகம் தேவை. அடிபட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. //மனிதன் உடல்நலத்தைப் பற்றிக் கவலைப் படாமல் சம்பாதிக்கிறான். பின்னாளில் சம்பாதித்ததை அந்த உடல்நலத்தைக் காக்கவே செலவிடுகிறான்!//

    எக்காலத்திலும் உண்மை.

    பதிலளிநீக்கு
  14. சிரிக்க வைக்கவும், சிந்திக்க வைக்கவும், ரசிக்க வைக்கவும் தவறவில்லை ஸ்ரீராம். உள்பெட்டி தந்த அத்தனை விஷயங்களுக்குமே ஒரு பெரிய ‘ஓ’ போடுறேன்!

    பதிலளிநீக்கு
  15. அனைத்துமே அருமை.... ரசித்தேன்..

    உள் பெட்டி விஷயங்கள் தொடரட்டும்.....

    //மனைவி சொல்வதைக் கேட்டுத் தலையாட்டிக் கொண்டிருப்பது என்பது நெட்டில் Terms and conditions படிப்பது போன்றது. புரிகிறதோ, இல்லையோ 'I agree' தான்!
    //

    அது சரி... :)))

    பதிலளிநீக்கு
  16. உள்பெட்டி சமாச்சாரங்கள் அத்தனையும் உற்சாகம் தந்தன.. இன்னைக்கு ராத்திரி விட்டுப் போன பதிவையெல்லாம் பார்க்கணும்.
    மீண்டும் மோகன்ஜி

    பதிலளிநீக்கு
  17. உள்பெட்டியிலிருந்த அனைத்துமே அருமை.

    பதிலளிநீக்கு
  18. /யாரையும் பின்பற்ற வேண்டாம், ஆனால் எல்லோரிடமிருந்தும் பாடம் கற்போம்./

    மிகச் சரி.

    ஜோக்ஸ், தத்துவங்கள் அனைத்தும் நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!