திங்கள், 22 ஏப்ரல், 2013

வண்ணதாசன், பிரகாஷ்ராஜ், கமலஹாசன், கவிதா பப்ளிகேஷன்ஸ், மெட்ரோ ரயில், கல்கி - வெட்டி அரட்டை


ஒரு கதைத் தலைப்பையே கவிதையாக வைக்க முடியுமா? சென்ற வார விகடனில் வந்த வண்ணதாசன் எழுதிய சிறுகதையின் தலைப்பு 

                                           

 
'கனியான பின்னும் நுனியில் பூ'.

கதையைப் படிக்காமல் கொஞ்ச நேரம் தலைப்பையே யோசித்துக் கொண்டிருந்தேன்! அவர் மாதுளையைச் சொல்கிறார்.


=========================

தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி விஜய் டிவியில் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பிரகாஷ்ராஜுடன் முதலில் கமல் மட்டும் அப்புறம் கமல்-கௌதமி பங்கேற்றனர்.  'செட் - அப்'பா என்றும் தெரியவில்லை. 50,00,000 ஜெயித்தார். பெற்றால்தான் பிள்ளையா என்ற எய்ட்ஸால் பாதிக்கப் பட்ட குழந்தைகளை ரட்சிக்கும் நிறுவனத்துக்கும், கேன்சரால் பாதிக்கப் பட்டு டெர்மினல் ஸ்டேஜில் இருக்கும் நோயாளிகளைப் பார்த்துக் கொள்ளும் நிறுவனம் ஒன்றுக்கும் பணம் சேர்த்துக் கொடுக்க ஆடி ஜெயித்தது. ஒரு கோடி ஜெயித்து விடுவோம் என்று வந்தாராம். 'டைம்' முடிந்ததில் இவ்வளவுதான் கிடைத்தது, என்றாலும் பிரகாஷ்ராஜும் மற்றும் தமிழ் ரசிகப் பெருமக்களும் மிச்சம் ஐம்பது லட்சம் திரட்டித் தந்து விடுங்கள் என்றார்.

                                       


பிரகாஷ்ராஜுக்கு ஜெமோவின் 'அறம்' சிறுகதைத் தொகுப்பும் தொ ப வின் தமிழகம் அறியாத் தகவல்கள் நூலும் பரிசளித்தார்.

                                           


ஒவ்வொரு கேள்விக்கும் பதில்கள் சொல்லிக் கொண்டே வந்ததும், பதில்கள் தெரிவதற்கான காரணத்தைச் சொன்னதும், தெரியாத கேள்விக்கு 'சோ' வைத் துணைக்கழைத்ததும், இடையிடையே அவர்-கௌதமி உறவு மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் சொன்னவாறே பதில்கள் சொன்னது என்று சுவாரஸ்யமாகவே இருந்தது நிகழ்ச்சி.

மெட்ரோ ப்ரியா (என்றுதான் நினைக்கிறேன்) கமலிடம் பேசுகிறேன் என்று அதீத பக்தியில் கண்ணீர் மல்கப் பேசினார். ஒரு ஹக் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டார். (கணவர் கூட வேண்டாம், கமல் போதும் என்ற அர்த்தத்தில் பேத்தினார், மன்னிக்கவும், பேசினார்.) அடுத்து வந்த இன்னொரு விஜய்  டிவிப் பெண் எனக்கும் ஒரு ஹக் மற்றும் ஒரு முத்தமும் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டார்.

=========================================

                                                        

நாளை 23ம் தேதி உலகப் புத்தகத் திருநாளாம். 24ம் தேதி எழுத்து வேந்தர் ஜெயகாந்தனின் பிறந்தநாளாம். அதனோடு கூட கவிதா பப்ளிகேஷன்ஸ் தொடங்கிய நாள் 25-4 (37 ஆண்டுகளுக்கு முன்) இந்த மூன்று நிகழ்வையும் சேர்த்து கவிதா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தார் அந்த மூன்று நாட்கள் புத்தகம் வாங்க வருவோருக்கு 25% தள்ளுபடியில் அவர்கள் விரும்பும் கவிதா புத்தக நிலையப் புத்தகங்களை எடுத்துக் கொள்ளலாம் என்று விளம்பரம் செய்திருக்கிறார்கள்.(8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், சென்னை)

24/4 ஒரு கிரிக்கெட் பிரபலத்துக்கும் பிறந்தநாள்!


========================================================

கல்கி இந்த வருடத்துக்கான சிறுகதைப் போட்டியை அறிவித்துள்ளது. (HVL ஹேமா கவனிக்கவும்!)

கடைசி தேதி ஜூன் 15, 2013. ஆகஸ்ட் ஆண்டு மலரில் முடிவுகள் வெளியாகுமாம். முதல் பரிசு 10,000, இரண்டாம் பரிசு 7,500, மூன்றாவது பரிசு 5,000.


======================================================

பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரச் செய்திகளை மீடியாக்கள் தவிர்க்க வேண்டுமோ என்று தோன்றுகிறது. ஏனென்றால் இதுமாதிரிச் செய்திகளைப் படித்து/பார்த்து விட்டு தீய மனம் கொண்டோருக்கு ஒரு விழிப்புணர்வு வந்து விடுகிறதோ என்று தோன்றுகிறது. டெல்லியில் ஐந்து வயதுப் பெண் குழந்தைச் செய்தியைத் தொடர்ந்து கொல்கட்டாவில் 15 வயதுச் சிறுவன் 5 வயதுப் பெண் குழந்தையிடம் தவறாக நடக்க முயற்சித்திருக்கிறான். டெல்லியிலும் இன்னொரு சம்பவம்.

தண்டனைகள் உடனடியாகவும், கடுமையாகவும் ஆக்கப்படாவிட்டால் இவர்களுக்கெல்லாம் துளிர்த்துத்தான் போகும்.


===================================================================

மின்கம்பங்கள் பற்றாக்குறை தமிழகத்தில் விரைவில் தீர்க்கப்படும் என்று மின்துறை அமைச்சர் சட்டசபையில் சொன்னதை முதலில் படித்தபோது வழக்கம்போல மின்பற்றாக்குறை என்றுதான் நானும் படித்தேன். அப்புறம்தான் கம்பங்கள் கண்ணில் பட்டது!

     
    

இந்த ஜூனுக்குள் மின்பற்றாக்குறை சரியாகிவிடும் என்று சொல்லி வந்த அமைச்சர் சென்ற வாரம் இந்த வருட இறுதிக்குள் என்று கெடுவை நீட்டியிருக்கிறார்!!

=================================================================

இந்தவருட இறுதிக்குள் என்று படித்த இன்னொரு செய்தி சென்னையில் மெட்ரோ ரயில் ஓட்டம். இந்தவருட டிசம்பரில், தப்பினால் 2014 ஜனவரியில் கோயம்பேடு முதல் பரங்கிமலை வரையிலான மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கி விடுமாம்!
                        
==================================================================

வலைப்பக்கங்களைக் குறிப்பிடாமல் எந்தப் பத்திரிகையும் இருப்பதில்லை. இதை முதலிலிருந்தே செய்துவரும் விகடன் 'வலைபாயுதே' பகுதியில் படித்த சுவாரஸ்யமான ஒன்று.

                                                    
 
1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,நாராயணசுவாமி,16,17,18,19....

சுவாரஸ்யமான ட்விட்டர்வாசிகள்.

28 கருத்துகள்:

  1. சோ - வழக்கம் போல் கலக்கல் பதில்...

    மற்றவை விரைவில் நடக்கட்டும்..

    பதிலளிநீக்கு
  2. 'கனியான பின்னும் நுனியில் பூ'.
    தலைப்பு அருமை.

    //பிரகாஷ்ராஜுக்கு ஜெமோவின் 'அறம்' சிறுகதைத் தொகுப்பும் தொ ப வின் தமிழகம் அறியாத் தகவல்கள் நூலும் பரிசளித்தார்.//

    சென்னையிலிருந்து மயிலாடுதுறை வரும் போது படித்துக் கொண்டு வந்த புத்தகம் தானே அறம் ?


    பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரச் செய்திகளை மீடியாக்கள் தவிர்க்க வேண்டுமோ என்று தோன்றுகிறது//

    நீங்கள் சொல்வது போல் தண்டைகள் கடுமையாக்கப்படவேண்டும் அப்போது தான் மற்றவர்கள் பயப்படுவார்கள்.

    மூன்று விழாக்களுக்கு வாழ்த்துக்கள்.
    ஜெயகாந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.




    பதிலளிநீக்கு
  3. கனியான பின்னும் நுனியில் பூ'.

    கதையைப் படிக்காமல் கொஞ்ச நேரம் தலைப்பையே யோசித்துக் கொண்டிருந்தேன்! அவர் மாதுளையைச் சொல்கிறார்.


    கதைக்கு கவிதையான தலைப்பூ..

    நான் வாழைப்பூவை நினைத்தேன் ..

    பதிலளிநீக்கு
  4. கேள்விகள் சுலபமாக இருந்ததா? இதையே சாதாரணமா யாராவது ஜெயிச்சிருந்தா செட்டப்னு சந்தேகப்படுவோமா?
    பிரகாஷ்ராஜூக்கு தமிழ் படிக்கத் தெரியுமா என்ன? நிகழ்ச்சியை ஒன்றிரண்டு முறைப் பார்க்க நேரிட்டது (விதியை நம்பாதவன் கூடக் கொஞ்சம் ஆடிப்போனேன்). மிகவும் சிரமப்பட்டுத் தமிழில் பேசுகிறாரே? (கொஞ்சம் யோசிச்சுப் பாத்தா நான் கூட சிரமப்படுறேன். ஓகே, கப்சிப்.) கொடுத்ததோ கொடுத்தார் - ஜெமோ எழுதிய கடல் ஸ்க்ரிப்ட் கொடுத்திருக்கக் கூடாதோ? பிரகாஷ்ராஜ் இந்த நட்பே வேண்டாம்னு ஒதுங்கியிருப்பாரே?

    ஹேமா தான் கவனிக்கணுமா? நாங்கள்ளாம் கண்ணை மூடிக்கணுமா?
    கல்கி சிறுகதைப் போட்டி பத்தி இன்னொரு பதிவிலும் படித்தேன் - முரளிதரன்? ஒவ்வொரு கதையோடு கல்கியில் வெளிவந்த கூப்பன் அனுப்பணுமாமே? hello, how low! கல்கியை எவன் விக்கிறான் இங்கே தேடிப்போய் வாங்கி கட் பண்ணி அனுப்பி - பத்திரிகை விக்கணும்னா நல்லா நடத்த வேணாமோ? இதென்ன லாட்டரிச் சீட்டு போல cheap ட்ரிக்? யாருமே கேட்க மாட்டாங்க போலிருக்கு.




    பதிலளிநீக்கு
  5. //தண்டனைகள் உடனடியாகவும், கடுமையாகவும் ஆக்கப்படாவிட்டால் இவர்களுக்கெல்லாம் துளிர்த்துத்தான் போகும். //

    முதல்லே இதுக்கு பதில். இது குறித்துத் தான் +இல் சூடான விவாதம். :((((

    பதிலளிநீக்கு
  6. அந்தக் கமல், கெளதமி போட்டி, பேட்டியின் போது சென்னையில் தான் இருந்தேன். தம்பி விழுந்து விழுந்து பார்த்துக் கொண்டிருந்தார். நல்லவேளையா அவங்க வீட்டிலே 2 தொலைக்காட்சி இருக்கோ, நாங்க பிழைச்சோம். இதெல்லாம் தொலைக்காட்சியில் நடக்கிறது என்பதே அன்றுதான் எனக்குத் தெரியும். :)))))

    பதிலளிநீக்கு
  7. //கொடுத்ததோ கொடுத்தார் - ஜெமோ எழுதிய கடல் ஸ்க்ரிப்ட் கொடுத்திருக்கக் கூடாதோ? பிரகாஷ்ராஜ் இந்த நட்பே வேண்டாம்னு ஒதுங்கியிருப்பாரே?//

    அப்பாதுரை, செம காமெடி! ஹிஹிஹிஹிஹிஹி, ரசிச்சுச் சிரிச்சேன். :)))))

    பதிலளிநீக்கு
  8. //இதென்ன லாட்டரிச் சீட்டு போல cheap ட்ரிக்? யாருமே கேட்க மாட்டாங்க போலிருக்கு. //

    கொஞ்சம் படிக்கிறாப்போல் தான் இருந்தது. இப்போப் படிக்க முடியலை. நிறுத்தணும்! :(

    வாரப் பத்திரிகைகள் படிப்பதை விடப் படிக்காமல் இருத்தல் நல்லது.

    பதிலளிநீக்கு
  9. வாழைக்காய் பழமாகும் முன்னரே பூவை வெட்டிடுவோமே, அதனால் கனியான பின்னும் நுனியில் பூ, மாதுளைக்குத் தான் சரியா வரும்.

    பதிலளிநீக்கு
  10. // கணவர் கூட வேண்டாம், கமல் போதும் என்ற அர்த்தத்தில் பேத்தினார்.(no comma, but a Big Full stop please)//

    B****y Kamal is looking for this type of girls only....


    // இடையிடையே அவர்-கௌதமி உறவு //

    Romba Mukyam...!!

    பதிலளிநீக்கு
  11. கமல் - ஒரு கோடி நிகழ்ச்சி...

    அம்புலி! அம்புலி!

    பதிலளிநீக்கு
  12. சுவையான கதம்பம்! கனியான பின்பும் நுனியிலே பூ! அருமை! ரசித்தேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  13. /'கனியான பின்னும் நுனியில் பூ'. /

    அழகான தலைப்பு. இப்படி மாதுளையைப் படமெடுத்திருக்கிறேன்:).

    சுவாரஸ்யமான தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  14. @ Sury sir,

    கையெழுத்து இருக்கிறது! கருத்தைக் காணோம். ஏதாவது புதிரா?

    பதிலளிநீக்கு
  15. ஜீவி அவர்கள் எழுதியிருக்குறதும் சுப்பு அவர்கள் எழுதாம விட்டதும் புதிரா இருக்குது.

    பதிலளிநீக்கு
  16. ஏனோ கமல் பங்கேற்ற ஒரு கோடி எனக்கு சுவாரசியம் இல்லாமல் பட்டது. தன மனைவியை பிரிந்து, மற்றொரு பெண்ணுடன் வாழ்ந்து கொண்டு அவர மீதான காதலை (நம்மைப் பொறுத்த வரை நட்பை) இவ்வளவு தீவிரமாக பேசுபவர் நல்ல நடிகனாக மட்டுமே இருக்க முடியுமே தவிர நல்ல வழிகாட்டியாக இருக்க முடியாது என்ற எண்ணம் எனது மனதில் இருந்து கொண்டே இருந்தது.

    அவர் கேள்விக்கான பதில் மற்றும் விடைகான விளக்கம் அளித்தது ஸ்லம்டாக் படத்தை நியாபகப் படுத்தியது.

    பதிலளிநீக்கு
  17. தகவலுக்கு மிக்க நன்றி! (கல்கி போட்டி)
    நான் ஆ.வி யில் முதலில் படிப்பது வலைப்பாயுதே தான்! Very interesting.

    //பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரச் செய்திகளை மீடியாக்கள் தவிர்க்க வேண்டுமோ என்று தோன்றுகிறது.//

    எனக்கும்.
    மற்ற நாட்டினர், இந்தியர்களுக்கு இது மட்டுமே வேலை, என்பது போல நினைத்து விசாரிக்கிறார்கள். . .

    பதிலளிநீக்கு
  18. கனியான பின்னும் நுனியில் பூ வெகுவே அழகு...

    முதல் நாள் நடந்த போது மணியெல்லாம் பார்க்கவில்லை. இரண்டாம் நாள். 5000000 ஜெயித்த பின்னர் ஏனோ நேரம் முடிந்து விட்டது...:)

    ப்ரியாவும் திவ்யதர்ஷினியும் செய்தது வெறும் பேத்தல். உளறி கொட்டினார்கள்....:((

    பதிலளிநீக்கு
  19. இங்கு திரு முரளிதரனை இரண்டு விஷயங்களுக்காக குறிப்பிட வேண்டும். கல்கி சிறுகதைப் போட்டி பற்றிய முழு விவரமும் கொடுத்திருக்கிறார்.
    இரண்டாவது கமல் அன்று சொன்ன கவிதையை முழுக்க போட்டிருக்கிறார்.
    (......!)
    பிரகாஷ்ராஜ் முகபாவனையை யாருமே சொல்லவில்லையே!திடீரென்று கௌதமியை அவர் புகழ்ந்ததும், அவரை கௌதமி புகழ்ந்ததும்....

    எல்லோருமே நல்ல நடிகர்கள்!!!!!நல்லவேளை ஒரு நாள் மட்டுமே பார்த்தேன்!

    பதிலளிநீக்கு
  20. கோடி..... என்னத்த சொல்ல.... எதையாவது சொன்னா பழமைவியா[வாதி]ன்னு சொல்லுவாங்க!

    தலைப்பிலே கவிதை ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  21. //மெட்ரோ ப்ரியா (என்றுதான் நினைக்கிறேன்) கமலிடம் பேசுகிறேன் என்று அதீத பக்தியில் கண்ணீர் மல்கப் பேசினார். ஒரு ஹக் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டார். (கணவர் கூட வேண்டாம், கமல் போதும் என்ற அர்த்தத்தில் பேத்தினார், மன்னிக்கவும், பேசினார்.) அடுத்து வந்த இன்னொரு விஜய் டிவிப் பெண் எனக்கும் ஒரு ஹக் மற்றும் ஒரு முத்தமும் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டார்.// முகம் சுளிக்க வைத்த இந்த பகுதியை எப்படி இவ்வளவு சர்வ சாதாரணமாக சொல்ல முடிந்தது? நிச்சியம் செட்டப்பே தான் - Charity தானே, போகட்டும்ன்னு கொடுத்திருப்பார்கள் அதுவுமே ஒரு பப்ளிஸிட்டி தானே. நல்ல வேளை நேரமாயிடுத்துன்னு ஒரு கோடி மிஸ் இல்லாட்டி ரொம்பவே அப்பட்டமா தெரிஞ்சிருக்கும். @ மாதவன் அண்னா, வெல் செட்!

    பதிலளிநீக்கு


  22. புதிரா ! போச்சுடா !!
    எனக்கே ஒண்ணுமே புரியல்ல.. என்ன நடக்குது அப்படின்னு....

    ஒரு முழு பக்கத்துக்கு பின்னூட்டம் எழுதி பப்ளிஷ் பண்ணினேன்.
    ஊப்ஸ் சாரி அப்படின்னு வருது. திரும்பவும் ட்ரை அப்படின்னு சொல்லிது.
    சரி இரண்டாம் தரம் பப்ளிஷ் பண்ணினேன்.
    இப்ப கரென்ட் கட். யூபிஎஸ் கவைன் கவைன் அப்படின்னு கத்துது.
    ஏதோ காலனிலே ட்ரான்ஸ்ஃபர்மர் அவுட்.
    முப்பது நிமிசம் கழிச்சு திரும்பவும் பப்ளிஷ் பண்ணலாம்னு வந்தா,
    டைப் அடிச்ச மேட்டரை ஸேவ் பண்ணல. திரும்பவும் ரொம்ப‌
    நினைவுக்கு கொண்டு வந்து டைப் பண்ணி பப்ளிஷ் பண்ண ஆரம்பிச்சேன்.
    வாசல்லே காலிங்க் பெல் சத்தம்...விடாமே...

    காலிங் பெல் அட்டென்ட் கூட பண்ணாம என்ன அப்படி கம்ப்யூட்டர் அடிக்ஷன்
    அப்படின்னு அடியேன் பார்யாள் அலம்பல் பண்றாள்.

    அதையும் முடிச்சுட்டு, திரும்பவும் பண்ணலாம்னு வந்தா,
    அதற்குள்ளே நான் போட்டதெல்லாம் அழிஞ்சு போய் கையெழுத்து மட்டும் இருக்கும்
    ஒண்ணு மட்டும் வந்திருக்கு.

    என்னடா இது ! அப்படின்னு யோசனை பண்ணும்பொழுது.....
    இன்னொரு ட்ரைவிலே அந்த விஸ்வரூபம் ஸாங்க் கேட்குது....
    அதுவும் அந்த இடம்....

    சும்மா சொல்லலீக....சுத்தமா கேட்குது...

    மாயா...மாயா....மாயா....மாயா...

    வெலவெலத்துப்போச்சுதுங்க....
    என்ன இது வேற குரல் மாதிரி இருக்குதே பார்த்தா...
    பிரமையோ அப்படின்னு வேற சந்தேகம். இல்ல சுத்தமா அவுகதான் ...

    நம்ம அன்னிக்கு பாத்த மூணு பேரு.



    தி ப கௌ

    சாமி, நமக்கு இந்த வம்பு வோண்டாம்.

    சுப்பு தாத்தா..

    பதிலளிநீக்கு

  23. நன்றி D D

    நன்றி கோமதி அரசு மேடம்...

    //சென்னையிலிருந்து மயிலாடுதுறை வரும் போது படித்துக் கொண்டு வந்த புத்தகம் தானே அறம் ?//

    ஆமாம், ஆமாம்!

    நன்றி RR மேடம்..

    நன்றி அப்பாதுரை... கல்கிக்கு கதை அனுப்பும்போது கல்கியின் அந்தப் பக்கத்தையும் கிழித்து அனுப்ப வேண்டும்தான்! என்னவோ அல்ப விளம்பரம்!

    நன்றி கீதா மேடம்... பிளஸ்ல என்ன விவாதம் நடந்தது? கமல் காமெடி நன்றாயிருந்தது. அறம் ஒருமுறை படிக்கலாம். இணையத்தில் அவர் பக்கத்தில் வெளிவந்த கதைகள்தான் என்று நினைக்கிறேன்.

    நன்றி மாதவன்...பொழுது போணுமே....!!

    ஜீவி ஸார்... கமல் அவர்கள் வீட்டு மாடியில் அம்புலி சலூன் இருந்ததாகக் குறிப்பிட்டார் என்று நினைக்கிறேன். உங்கள் கதையில் வந்த அம்புலி சபாவுக்கு அதுதான் இன்ஸ்பிரேஷனா?

    நன்றி 'தளிர்' சுரேஷ்.

    நன்றி ராமலக்ஷ்மி. எனக்கு அந்தத் தலைப்பைப் படித்ததும் வயதான பின்னும் இளமை நினைவுகள் மனதில், அல்லது வயதானவர்கள் குழந்தைத் தனம் மாறாமலிருப்பது போன்ற எண்ணங்கள் ஏற்பட்டன!

    நன்றி சூரி சார்... நீங்கள் மொழியில் ஏதோ சேதி சொல்கிறீர்கள் என்று நினைத்து விட்டேன். மௌனமான கண்டனங்களாக நினைத்தேன்!

    நன்றி சீனு...

    //இவ்வளவு தீவிரமாக பேசுபவர் நல்ல நடிகனாக மட்டுமே இருக்க முடியுமே தவிர நல்ல வழிகாட்டியாக இருக்க முடியாது என்ற எண்ணம் //

    நடிகர்களையெல்லாம் வழிகாட்டிகளாக எண்ணுவதே தவறு! பொழுது போக்குக்கு மட்டும்தான் அவர்கள்! வேண்டுமானால் இப்படிச் செய்யக் கூடாது என்பதற்கு முன்னுதாரணமாகக் கொள்ளலாம்! :))

    நன்றி HVL ஹேமா. இம்முறையும் கல்கி சிறுகதைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற எங்கள் வாழ்த்துகள்.

    நன்றி திருமதி வெங்கட்.

    நன்றி அருணா செல்வம்.

    நன்றி ரஞ்சனி மேடம்.

    நன்றி வெங்கட்.

    நன்றி அநன்யா மகாதேவன்.

    நன்றி சூரி சார்... தி ப கௌ?

    பதிலளிநீக்கு
  24. +இல் அந்தக் கொடிய அரக்கன் அந்தக் குழந்தைக்குச் செய்த அநியாயங்களைப் பற்றிக் கூறிவிட்டு இவனுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தபோது அவன் மனநோயாளி ஆகவே இப்படிச் செய்ததற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கணும் என கென் சொல்ல, எனக்குக் கோபம்! :)))))) அதான் நடந்தது. அந்த + கிடைச்சால் தேடிப் போடறேன்.

    பதிலளிநீக்கு
  25. சுப்புத்தாத்தா, கமெண்டு போடுங்கோன்னா போஸ்டு போட்ருக்கேளே.. சுவையாத்தான் இருக்கு படிக்க. :)

    பதிலளிநீக்கு
  26. //கமல் அவர்கள் வீட்டு மாடியில் அம்புலி சலூன் இருந்ததாகக் குறிப்பிட்டார் என்று நினைக்கிறேன். உங்கள் கதையில் வந்த அம்புலி சபாவுக்கு அதுதான் இன்ஸ்பிரேஷனா? //

    கமல் அவர்கள்.. வரை கரெக்ட்.

    வீட்டு மாடியில்.. சரியில்லை.

    அம்புலி சலூன்.. கரெக்ட்

    எதுக்கும் சலூன் அம்புலி என்று கூகுளாரிடம் கேட்டால் ஓரளவு புரிபடலாம்.

    //உங்கள் கதையில் வந்த அம்புலி சபாவுக்கு அதுதான் இன்ஸ்பிரேஷனா?//

    கரெக்ட்.

    ஆனா ஒருத்தர் கூட அந்த ஷோவை உன்னிப்பாகப் பார்க்காமலா விட்டிருப்- பார்கள்? நம்ப முடியவில்லை.

    எப்படி கரெக்ட் என்பதை விளக்கலாம் ன்னா, நாளாகிவிட்டதால் யாருக்கும் ஈர்ப்பு இல்லை. மறுபடியும் அப்பாஜியே கிளறினால் பார்த்துக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!