ஞாயிறு, 19 மே, 2013

ஞாயிறு 202 :: காலையில் குடிப்பது என்ன?

           
         
வண்ணத்துப் பூச்சி! 
    
வாழ்வது என்னவோ இரு வாரங்கள்! 
ஆனால் 
தாழ்வது இல்லை, 
தலை கனத்து அலைவதில்லை!  
   

வாழும் நாளெல்லாம் 
வண்ணமலர்க் காட்டில் 
மலரோடு மலராய்,
மணம் பரப்பி! 
               
தேர்தல் நாளிலும் 
தேவை நேரத்திலும் 
மாறுதல் வேண்டியும் 
மனிதருக்கு மது விலக்கு!
   
எந்த நாட்டிலும் 
எந்த நாளிலும், 
எந்த நேரத்திலும் 
இல்லை அது உனக்கு! 
      

13 கருத்துகள்:

  1. படமும் அழகு, கவிதையும் அழகு.

    பதிலளிநீக்கு
  2. பூப்பூவாப் பறந்து போகும் பட்டுப் பூச்சி அக்கா
    நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா!!
    அவ்வளவு அழகான பட்டாம்பூச்சிக்குத் தேர்தல் பயம் இல்லை.தேர்ந்தெடுத்த ஆளைப் பார்த்துப் பயப்படவும் தேவை இல்லை.இரண்டுவாரமெ வாழ்ந்தாலும் நல்வாழ்வு கிடைக்கிறது.

    நமக்கும் அந்த மாதிரி வாழ்வு கிடைக்க வேண்டும்.
    படமும் பாட்டும் அருமை.

    பதிலளிநீக்கு
  3. படமும் ஒப்பிட்டவிதமும்
    மிக மிக அருமை
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. வண்ணத்துப் பூச்சியைப் போலவே அழகான கற்பனை.

    பதிலளிநீக்கு
  5. பேஷ் பேஷ்., ரொம்ப நன்னாருக்கு..!

    பதிலளிநீக்கு
  6. பேஷ் பேஷ்., ரொம்ப நன்னாருக்கு..!

    பதிலளிநீக்கு
  7. வாழும் நாளெல்லாம்
    வண்ணமலர்க் காட்டில்
    மலரோடு மலராய்,
    மணம் பரப்பி! //

    கவிதை அருமை .கவிதை சொல்லும் நீதியும் நன்றாக இருக்கிறது.

    வாழும் காலத்தில் நம் கண்ணுக்கும், மனதுக்கும் மகிழ்ச்சி அலையை பரப்பி செல்கிறது.

    பதிலளிநீக்கு
  8. /தாழ்வது இல்லை,
    தலை கனத்து அலைவதில்லை!


    வாழும் நாளெல்லாம்
    வண்ணமலர்க் காட்டில்
    மலரோடு மலராய்,
    மணம் பரப்பி! /

    உண்மை. அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
    படமும் அருமை.

    பதிலளிநீக்கு

  9. வாழும் நாளெல்லாம்
    வண்ணமலர்க் காட்டில்
    மலரோடு மலராய்,
    மணம் பரப்பி!
    அழகான வண்ணத்துப்பூச்சி
    அருமையான கவிதை ..!

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா19 மே, 2013 அன்று PM 2:22

    kadaisi varigal arumai...nalla kavithai..

    பதிலளிநீக்கு
  11. அழகான படம்! அருமையான கவிதை! கலக்குங்க! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!