வெள்ளி, 14 ஜூன், 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 130614


காட்சி ஒன்று கானம் நான்கு! 'இவர்' சொல்லிக் கொடுப்பார். 'அவர்' கற்றுக் கொண்டு வேறு இடத்தில் பாடி பரிசு வாங்குவார்.

1) மிலன் திரைப் படத்தில் முகேஷ்-லதா மங்கேஷ்கர். 'சாவன்  கா மஹீனா'



2) பிராப்தம் படத்தில் டி எம் எஸ்-சுசீலா. 'சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து...'



3) ஆனந்தராகம் படத்தில் கே ஜே யேசுதாஸ்-ஜானகி. 'மேகம் கறுக்குது.. மழைவரப் பார்க்குது....' ஒரே மாதிரிக் காட்சியமைப்பு!


4) ரிக்ஷா மாமா படத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம்-ஜானகி. 'வைகை நதியோரம்...'



5) காட்சி ஒன்று என்ற வரிக்கு இந்தப் பாட்டு ஒத்து வராது. அப்புறம் ஏன் ஐந்தாவதாக இந்தப் பாட்டு? 60 களில் வந்த, ஒன்றாவதாகச் சொல்லப் பட்டிருக்கும்  'மிலன்' படப் பாடலான  'சாவன் கா மஹீனா...' வை வெகு திறமையாக தமிழில் காபி அடித்த பாடல்.  யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று நினைத்திருப்பார் தேவா!!  குறிப்பாக சரணத்தைக் கேளுங்கள் (கேட்பீர்கள்தானே!) காபியை நன்றாகக் கண்டுபிடிக்கலாம்!  [ஜோதிகாவின் டான்ஸ் இதில் ஒரு சுவாரஸ்யம்]
 
    

9 கருத்துகள்:

  1. அருமையான பதிவு.பாடல்களின் இசையும் காப்பியும் இன்றும் தொடரத்தான் செய்கிறது

    பதிலளிநீக்கு
  2. ஆனந்த ராகம் என்றும் ஆனந்தம் தான்... காப்பி எங்கும் எதிலும்...!

    பதிலளிநீக்கு
  3. சின்ன திருத்தம்

    மான் குட்டியே தேவா இல்லை லாலல லலலா லாலா புகழ் எசுஏ ராச்சுக்குமார்

    பதிலளிநீக்கு
  4. அந்தக் காலத்து மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள் ஜெய்சங்கர், எல்.விஜயலக்ஷ்மி நடிச்சது எல்லாம் சினிமாவும், காப்பி தான், பாடல்களும் காப்பி தான். :)))) தமிழிலே நல்ல சினிமானு எதைச் சொல்ல முடியும்?? ஓரிரு படங்களைத் தவிர, என் கண்ணோட்டத்தில் வீடு, குட்டி, மல்லி, காஞ்சிபுரம் ஆகியவை நல்ல சினிமானு சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  5. ஒரெ ஒரூ வித்தியாசம். வேதா காப்பி படித்து பாடப்பட்ட ப்பாடல்களும் கொஞ்சம் கொண்டாடப்பட்டன. இதில் என்ன வேடிக்கை என்ன என்றால் அது ஆங்கில டியூனிலிருந்து இந்திக்கு வந்து தமிழுக்குத் தாவும்.
    க்வாண்டோ க்வாண்டோனு ஒரு ஒரு ஆங்கிலப் பாடல் ,கொஞ்சம் நில்லடி என் கண்ணே,கூந்தல் தொட்ட்டுப் பேசும் நேரம்''னு வந்தது.
    ''கம்செப்டம்பர்''தீம் வந்தால் என்னோடு இங்க வா தென்றலே''னு ஈஸ்வை குரலில் ஒலித்தது.

    பதிலளிநீக்கு
  6. காப்பியோ, டீயோ, நல்ல பாடல்கள்.
    கேட்டு ரசிக்கலாம்.
    நம் மறதியின் மேல் அத்தனை நம்பிக்கை இசையமைப்பாளர்களுக்கு!

    இன்னொரு சொல்லித்தரும் போட்டு: எம்ஜி ஆர்., ஜெயலலிதா பாடும் 'கண்ணே, கனியே, முத்தே, மணியே அருகே வா...'

    பதிலளிநீக்கு
  7. பின்னூட்டங்களுக்கு அனைவருக்கும் நன்றி.

    திருத்தத்துக்கு நன்றி பனிமலர்.

    வல்லிம்மா.. கம் செப்டம்பர் பாடல் ஹிந்தியிலும் காபி செய்யப் பட்டது... மாதுரியின் அழகான நடனத்தோடு!!!! ராஜா திரைப்படத்தில் 'நஜரு மிலே' என்ற பாடல்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!