வெள்ளி, 19 ஜூலை, 2013

வெள்ளிக்கிழமை வீடியோ :: 130719 :: கவிஞர் வாலி.

    
எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னைப் பார்த்து
மேடையே 
வையகம் ஒரு மேடையே
வேஷமே 
அங்கெல்லாம் வெறும் வேஷமே! 
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் 
நாம் கூத்தாடும் கூட்டமே
  



நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான்
ரயில் ஸ்நேகமா புயலடித்த மேகமா
  


கலைந்து வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

(எல்லோரும்)

கோவலன் காதை தன்னில் மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லையென்றால் கண்ணகி ஏது இன்று
மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே
மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவரும் நெஞ்சிலே
எது கூடுமோ எது விலகி ஓடுமோ

மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் 
நாம் கூத்தாடும் கூட்டமே     
(எல்லோரும்)

::கவிஞர் வாலி:: (29 - 10 - 1931 ~ 18 - 07 - 2013)  


                                

                     

13 கருத்துகள்:

  1. ஆழ்ந்த இரங்கல்கள். இப்படி ஒரு பாட்டு வந்திருக்கு?? கேட்டதில்லை. கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. இது ஏதோ ஹிந்தியிலே வந்த படம்போலத் தெரியுதே? ம்ம்ம்ம்ம் "அர்த்" ஸ்மிதா படீல், ஷபனா அஸ்மி நடிச்ச படமா? ஸ்மிதா கலக்கி இருப்பாங்க. அந்த அளவுக்கு இதிலே நல்லா இருக்குமா?

    பதிலளிநீக்கு
  3. ஆழ்ந்த அஞ்சலிகள்.

    வாலி 1000! வாழ்ந்த காலத்திலேயே சாதனைக்காக கெளரவிக்கப்பட்டதில் ஆறுதல்.

    பதிலளிநீக்கு
  4. வாலி
    நீ வாழி.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  5. வாலி க்கு ஏது இறப்பு.
    நமக்குத்தான் இழப்பு.
    எல்லோரும் சொல்லும் பாட்டு அற்புதம். மறுபடியும் படப்பாடல்கள் அனைத்துமே நன்றாகவே இருக்கும்.


    அடுத்தவந்த விடியோவும் அருமை.

    பதிலளிநீக்கு
  6. நமக்குத்தான் மாபெரும் இழப்பு.

    பதிலளிநீக்கு
  7. நல்ல பகிர்வு...

    கவிஞரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்...

    பதிலளிநீக்கு
  8. வாலி அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  9. அருமையான பாடல். எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்..

    பதிலளிநீக்கு
  10. ஆழ்ந்த இரங்கல்கள்.....

    அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் என்று மறையாது...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!