சனி, 31 ஆகஸ்ட், 2013

சென்றவார பாஸிட்டிவ் செய்திகள்..



1) ஈர நெஞ்சத்தின் இந்தவார நற்செயல்.
                                          


2) "வழியா இல்லை பூமியில்" - வசந்தி மேகநாதனின் சாதனைகள்.
                                             



3) மீண்டும் வழியா இல்லை பூமியில்தான்... இவை இரண்டுமே குங்குமம் தோழியில் வந்ததன் பகிர்வுதான். ஏரோப்ளேன் ஓட்டும் பெண்கள் இருக்கிறார்கள். பஸ், கார் ஓட்டும் பெண்கள் இருக்கிறார்கள். டிராக்டர் ஓட்டும் 3 பெண்களைப் பற்றி அறிய....
                                                   


4) 11 தினங்களில் சர்க்கரை அளவைக்  கட்டுப்படுத்திய லண்டன்காரர்.
                                            

                                            

5) அமெரிக்கத் தமிழ்ப் பத்திரிகை பாராட்டியிருக்கும் கோவை சமூக சேவகர் மகேந்திரன் அவர் தம் நேரத்தையும்  ஓ பொருளையும் செலவிட்டு சுமார் 100 பேருக்கு அனாதையாக திரிந்தவர்களை குடிம்பத்துடன் சேர்த்து வைப்பது, விபத்தில் அடி பட்டவரை மருத்துவ மனையில் சேர்த்து உற்றார் உறவினருக்கு செய்தி தெரிவிப்பது, அனாதையாக மரித்தவர்களை அடக்கம் செய்வது இப்படி பல  செய்திருக்கிறார். திருப்பூரை சேர்ந்த அறம் டிரஸ்ட் "அறச் செம்மல்" என்றொரு பட்டம் தந்து கௌரவப் படுத்தி இருக்கின்றனர்.
                                          



6) மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகிலுள்ள, திரளி ஊராட்சி மன்றத்தின், தலைவியாக பணியாற்றும்  ஊராட்சி தலைவி சந்திரா,  கணவர், முன்னாள் ராணுவ வீரர், முதியோர் கல்வி, மாணவர்களுக்கு இலவச பாடம் எடுப்பது, சான்றிதழ் மற்றும் இலவச திட்டங்களுக்கான விண்ணப்பங்களை, பூர்த்தி செய்யவும் உதவுவது,  செயல்களால்  பெற்று ஊ.ம.,த ஆகி, ஊராட்சிக்கு உட்பட்ட வரைபடம் மூலம், 50 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதை அறிந்து, மதுரையில், அரசியல் செல்வாக்கு மிக்கவர்களிடமிருந்து, மிரட்டல்கள் வந்தும், பெண்ணாக இருந்தும், துணிச்சலுடன் செயல்பட்டு, நடவடிக்கை எடுத்து,  நிலத்தை மீட்டு, அதில் மழைநீர் சேமிப்பு குளம், பண்ணை குட்டை, மீன் குட்டை ஏற்படுத்தி, ஊராட்சியின் வருவாயை அதிகரித்து என பல்வேறு சாதனைகள் செய்திருக்கிறார்.
                                                         


7) கைலாசபுரத்தில் IG ஆபீஸ் பின்புறம் ரோட்டரி க்ளப் உதவியுடன்  நடிகர் எஸ் வி சேகர் சேவை. 9 உரிமை கோரப்படாத உடல்கள் அடக்கம்.


                                                  



8) சூரிய ஒளி மின்சக்தியிலும், தொடர்ந்து காற்றிலும் சுழலும் மின்விசிறியை வடிவமைத்திருக்கும்,  பத்தாம் வகுப்பு மட்டுமே முடித்துள்ள, மாணவர்கள் புருசோத்தமன், மங்களராஜ், விவேக் ஆகியோர் 

                                           



9) ஒரு கையாலேயே சுவாமி சிலைகள் செய்யும் தன்னம்பிக்கை இளைஞர் பாண்டி.


                                         




10) கொசுவின் வளர்ச்சியைத் தடை செய்ய, சப்பாத்திக் கள்ளி உதவும் என்று கண்டுபிடித்து புதுச்சேரி, பாரிஸ் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய போட்டியில் வென்ற காஸ்ட்ரோ.

                                             

12 கருத்துகள்:

  1. அனைத்து பாஸிட்டிவ் செய்திகளுமே அருமை என்றாலும் சிறுவர்களின் சாதனைகள் அற்புதம்! அதுவும் ஒரு கையை இழந்து மறு கையினாலேயே சிற்பம் செய்வது சாதாரண சாதனையில்லை. மனசு ஒரு நிமிடம் கனமானது.

    சர்க்கரை நோயும் க்ளாகோமா என்ற கண் நோயும் என்றுமே குணப்படுத்த இயலாது. கட்டுக்குள் மட்டுமே என்றைக்கும் வைத்துக்கொள்ள இயலும்.

    பதிலளிநீக்கு
  2. ஸ்ரீமதி மனோ சொல்வது நிஜமே. சர்க்கரை கட்டுக்குள் இருப்பதே பெரிய
    சாதனைதான்.
    பத்தாவது படிக்கும் மாணவர்களின் சாதனை வாழட்டும் கனவு நிஜமாகட்டும்.
    ஒரு கையால் ஐங்கரத்தனை உருவாக்கும் கலைஞனுக்கு வணக்கம்.
    எஸ்வி சேகரையும் சமூக ஆர்வலராகப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
    திருமதி சந்திரா மதுரைப் பெண்.எல்லாம் செய்யவல்லவர்.செழிக்கட்டும் அவரது முயற்சிகள்.அறச்செம்மல் மகேந்திரனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. அனைத்துத் தகவலும் அற்புதம்.அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்

    பதிலளிநீக்கு
  4. சர்க்கரை குறித்த உங்கள் பதிவை முகநூலில் படித்தேன். இது ஒண்ணும் அதிசயம் இல்லைனே சொல்வேன். ஆனால் தொடர்ந்து அதே அளவில் இருக்க வேண்டும். இதே போல் ஃப்ரூட்டேரியன் ஆக இருந்த எங்கள் நண்பர் அஷ்வின் ஜி என்பவர் சில தினங்கள் முன்னர் சர்க்கரை அதிகரிப்பால்/மாரடைப்பால் மிகவும் ஆபத்துக்குள்ளான நிலைக்கு ஆளானார். ரயில்வே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் உணவுக் கட்டுப்பாடு+மருந்துகளோடு டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.

    இயற்கை மருத்துவம், மற்றும் காய்கறிகள், பழங்களே சில ஆண்டுகளாக அவர் உணவு. ஆனாலும்........... :(

    பதிலளிநீக்கு
  5. கட்டுக்குள் வைத்திருப்பதே சாதனை தான் இல்லையா? ஆனாலும் சில சமயம் தொடர்ந்து இயற்கை உணவுகளை எடுத்து வந்தாலும் சர்க்கரை அளவு ஏறும், ஏறுகிறது என்பதே உண்மை. :(

    பதிலளிநீக்கு
  6. சர்க்கரை நோயோ, ஆஸ்த்மாவோ எதானாலும் தொந்திரவு செய்யாமல் பார்த்துக் கொள்ளலாமே தவிர முற்றிலும் குணம் ஆகாது! :)))

    பதிலளிநீக்கு
  7. பாசிடிவ்வான செய்திகளை தொகுத்து அளிக்கும் உங்கள் செயல் பாராட்டுக்குரியது.தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  8. உங்கள் கண்ணில் பட்ட நல்ல விஷயங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    ஒரு கையால் சிற்பம் வடிக்கும் பாண்டி அவர்களுக்கு இறைவன் எல்லா நலன்களையும், வளங்களையும் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. எல்லோரையும் சென்றடைய வேண்டிய செய்திகள் அருமை...

    பதிலளிநீக்கு
  10. அந்த வடஅமெரிக்க தமிழ்ப் பத்திரிகை
    'தென்றல்' தானே?..

    'கெக்கேபிக்கே' என்றிருக்காது. நம்மூர் 'அமுதசுரபி' மாதிரி கனமான உள்ளடக்கம் கொண்ட பத்திரிகை.

    பதிலளிநீக்கு
  11. பகிர்வுக்கு நன்றி. சாதனையாளர்களுக்குப் பாராட்டுகளும், சமூக ஆர்வலர்களுக்கு வாழ்த்துகளும். அற்புதமாக சிற்பம் வடிக்கிறார் பாண்டி. அரசு தடை செய்தும் மணல் திருட்டு நிற்காமல், அதிக விலைக்கு விற்பனையாவதுதான் நடக்கிறது என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!