சனி, 7 செப்டம்பர், 2013

கடந்தவாரப் பாஸிட்டிவ் செய்திகள்.



1) ஒரே ஒரு ஊசியில் எல்லாவகை வலிகளையும் சரிப்படுத்தமுடியும் என்று நம்பிக்கையூட்டும் சென்னை மருத்துவர் பிரபு
                                                       


2) மதுவைத் துறந்த தருமபுரி இளைஞர்கள் பற்றிய செய்தி.

                                                         


3) எப்போதுமே குப்பையும் அழுக்கையும் தவிர்க்க முடியாமல் தவிக்கும் ராயப்பேட்டை, ஸ்டான்லி, உள்ளிட்ட சென்னை அரசு மருத்துவமனைகளை சுவாமி விவேகானந்தரின் 150–வது பிறந்த நாளையொட்டி ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் மக்கள் நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தலைமையில் 5 ஆயிரம் ஆன்மிக தொண்டர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
அரசு பொதுமருத்துவ மனையில் 2000 பேர் காலை முதல் மாலை வரை இந்த பணியை செய்தனர். குழாய் விளக்கு, மின் விசிறிகள், ஜன்னல் கம்பிகள், வார்டுகளுக்கு உட்புறமும், வெளிப்புறமும், வளாகத்தையும் தூய் மைப்படுத்தினார்கள்.


                                              


4) ஆசிரியர் தினத்தில் கண்ணில் பட்ட செய்தி. கேரளாவில் அப்துல் மாலிக் என்கிற 40 வயது ஆசிரியர் தினமும் கழுத்தளவு ஆற்று நீரில் டிபன்பாக்ஸ், பை போன்றவற்றுடன் நீந்திச் சென்று, மலை ஏறி பாடம் நடத்தி வருகிறார். பஸ் மூலம் வந்தால் அரை நாள் அதிலேயே போய்விடும் என்கிறாராம்.

                                      


5) நடிகர் கஞ்சா கருப்பு பற்றிய ஒரு பாஸிட்டிவ் செய்தி. தனது சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் கிராமங்களுக்கு இலவச ஆழ்துளைக் கிணறுகள் அமைத்துக் கொடுக்கிறாராம்.

                                                  

6) மதுவுக்கு எதிரான பிரச்சாரம்

                                              

15 கருத்துகள்:

  1. அப்துல் மாலிக் ஆசிரியர் நினைத்தால் வருத்தமாக இருக்கிறது... மற்ற அனைத்து பாஸிட்டிவ் செய்திகளுக்கும் நன்றி... (பொய் விடும்-போய் விடும்)

    பதிலளிநீக்கு
  2. டாக்டரின் முயற்சிகள் எல்லொரையும் அடையட்டும் அவர்களுக்கும் சக்தி கிடைக்க இறைவன் அருள் புரிவான்,
    மது ஒழிப்பும் தீவிரம் அடைவது ஆறுதல்.

    கோவில் உழவாரப் பணி செய்யும் அனைவருக்கும் வாழ்த்துகள். நீந்திச் செல்லும் ஆசிரியருக்குப் புதுவழி கூடக் கிடைக்கலாம்.நன்றக இருக்கட்டும்.
    கஞ்சா கருப்புக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். எபிக்கும் நற்செய்திகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ஆசிரியர் மாலிக் மற்றும் கஞ்சா கருப்புவின் செய்திகள் போற்றும்படியுள்ளது... ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  4. ஆசிரியர் மாலிக் மற்றும் கஞ்சா கருப்புவின் செய்திகள் போற்றும்படியுள்ளது... ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  5. அடுத்த மாதம் இதே ஆச்பத்திரிகளுக்குச் சென்று ஏன்யா அன்னிக்கு அத்தன பேரு வந்த சுத்தம் செஞ்சு கொடுத்துட்டு போனாகளே..நீங்க தொடர்ந்து செய்யக்கூடாதா அப்படின்னு

    அந்த சுத்தம் பண்றதுக்காக இருக்கும் நபர்களையோ அதற்கு இன் சார்ஜையோ கேட்டுவிடாதீர்கள்.

    இவர்கள் அவர்களது அடுத்த வருகைக்காக காத்திருக்கிறார்கள்.


    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  6. அது என்னவோ இது போன்ற ஊசிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.
    நல்ல பாசிடிவ்வான செய்திகளுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. நல்ல பாசிடிவ் தொகுப்பு.. அப்துல் மாலிக் மனிதருள் மாணிக்கம், மேலும் ஸ்டான்லி வளாகத்தை சுத்தம் செய்த தன்னார்வ அமைப்பிற்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  8. வலி போக்கும் ஊசி கண்டு பிடித்த டாக்டரின் சேவையால் நோயுற்றவர்கள் நலம் பெறட்டும்.டாக்டர் பிரபுக்கு வாழ்த்துக்கள்.

    மதுவைத் துறந்த தருமபுரி இளைஞர்கள்
    மிகவும் பாராட்ட வேண்டும் . மனஉறுதி எப்போதும் நிலைக்கட்டும்.
    ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் வாழ்க.
    கேரளா அப்துல் மாலிக் அவர்கள் ஆசிரியர் பணி உண்மையில் அறபணி
    தான், அவருக்கு வாழ்த்துக்கள்.
    நடிகர் கஞ்சா கருப்பு அவர்களின் சேவை வாழ்க வளர்க!
    மதுவுக்கு எதிரான பிரச்சாரம் நன்று.
    அனைத்து செய்திகளும் நல்ல பாஸிட்டிவ் செய்திகள் தான். நன்றி.

    பதிலளிநீக்கு
  9. நல்ல தொகுப்பு.

    ஆசிரியர் ஆச்சரியப்படுத்துகிறார்.

    ஒரே ஊசி, பின் விளைவுகள் இருக்குமோ என்றும் ஒரு ஐயம் வருகிறது.

    பதிலளிநீக்கு

  10. நன்றி DD.

    நன்றி பழனி.கந்தசாமி ஸார்.

    நன்றி கோவை ஆவி.

    நன்றி வல்லிம்மா.

    நன்றி வெற்றிவேல். நன்றி வெற்றிவேல். :)

    நன்றி சுப்புதாத்தா. கிளீன் செய்ய ஒரு அமைப்பு ரெடி என்றால் அதான் அவங்க இருக்காங்களே என்று மக்களும் குப்பை போடாலம்ளிருந்தால் சரி. 'அவர்கள் வந்து கிளீன் செய்வார்கள் நமக்கென்ன' என்று ஆஸ்பத்திரி நிர்வாகமும் அலட்சியம் காட்டாமலிருந்தால் சரி!

    நன்றி ஹேமா (HVL) //அது என்னவோ இது போன்ற ஊசிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.//

    என்னவோ சொல்கிறார். சோதனை செய்து பார்க்காமலா சொல்லியிருப்பார்கள்?

    நன்றி சீனு.

    நன்றி கோமதி அரசு மேடம்.

    நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  11. டாக்டரைப் பற்றிப் படித்தேன். சீக்கிரமே இந்த சிகிச்சை பலனளித்தால் நலமே! மற்ற பாசிட்டிவ் செய்திகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  12. வலி ஊசி - பின்விளைவுகள் இருக்குமென்று தோன்றினாலும், terminal stages-ல் இருப்பவர்களின் (மற்றும் அதுபோன்ற) வலியைக் குறைக்க உதவுமென்றால் நல்லதே...

    மதுவைத் துறந்தவர்கள், தொடர்ந்து துறவறத்தில் நிலைத்திருக்க பிரார்த்தனைகள்.

    நீந்திச் செல்லும் ஆசிரியர், மருத்துவமனை சுத்தம் செய்யும் செய்தி - ஆகியவை ‘பாஸிடிவ்’ செய்திகள் என்றாலும், இவற்றைச் செய்யவேண்டிய நிலையில் நாம் (நம் நாடு) இருக்கிறதென்பது வேதனை.

    சில கோரிக்கைகளுக்காக இந்த சாலைமறியல், போராட்டம் என்று ஈடுபடுபவர்கள், மருத்துவமனை போன்ற பொது இடங்களைச் சுத்தம் செய்வது போன்றவற்றைச் செய்யலாமே என்று தோன்றும். ஆனா.. எங்கே.. கேட்டா, “(அடுத்தவனை அடிச்சுட்டு, தானே)அழும் பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்”னு சொல்வாங்க!! :-(((

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!