திங்கள், 9 செப்டம்பர், 2013

அலுவலக அனுபவங்கள் - பெஞ்சமினும் சீனுவும்



அமைதியான ஒரு அலுவலக வேலை நாள். சிறிய சலசலப்பான குரல்களுடன் அலுவலகம் இயங்கிக் கொண்டிருந்தது.

திடீரென பக்கத்துக் கட்டத்திலிருந்து அழுகுரல் கேட்டது.

அதுவும் எங்கள் அலுவலகத்தின் பகுதிதான்.

"ஸார்....ஸார்... கேஷியர் பெஞ்சமின் செத்துப் போயிட்டார் ஸார்..." பியூன் கோவிந்த் ஓடிவந்து சொன்னான்.


'என்னடா இது.. கேஷியர் செத்துப்போனதுக்கு ஆஃபீஸ் மக்கள் இவ்வளவு அழுகிறார்களா?' அலுவலகத்திலேயே நிகழ்ந்திருக்கும் அவர் திடீர் மரணத்தை விட, இந்தக் கேள்வி மனதில் தலை தூக்கியது. ஏனென்றால் சனிக்கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் செத்துப்போன அலுவலக நண்பர்கள் வீட்டுக்கு வந்த சக ஊழியர்கள் அளவை விரல் விட்டு எண்ணி விடலாம்!

எப்போதும் அவரைச் சுற்றி நாலு பேராவது இருந்து கொண்டே இருப்பார்கள். அந்தப் பிரியம்தான் போலும்.


பெஞ்சமின் 'டர்ன் டியூட்டி' பார்க்கும் நாட்களில் உடன் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என்று வாங்கிக் கொடுப்பார் என்று கேள்விப்படும்போது ஆச்சர்யமாக இருக்கும். 

மற்றவர்கள் அவரைப்பற்றிச் சொல்லும்போது 'நீங்கள் அப்படி எல்லாம் வாங்கித் தருவது இல்லை' என்ற மறைமுகக் குற்றச்சாட்டு இருக்கும்.
என்ன செய்ய... எப்படி இருந்தாலும் இதற்காக என்னால் இப்படி எல்லாம் செலவு செய்ய முடியாது! அதனால் பெஞ்சமினை நினைத்து ஆச்சர்யமாக இருக்கும்.

பெஞ்சமின்....

கலகலப்பாகப் பேசுவார். பாக்கு மென்றுகொண்டே இருப்பார். யாரைப் பார்த்தாலும் சத்தமாக அவர் பெயர் சொல்லி அழைத்து ஏதாவது குசலம் விசாரிப்பார். எல்லோர் குடும்ப விவரமும் அவருக்கு அத்துபடி.

சம்பவ இடத்துக்குச் சென்றபோது பெஞ்சமின் உடல் ஒரு அறையில் கிடத்தப்பட்டிருக்க - 'மாஸிவ் அட்டாக்' காம் ஸார்... இப்போதான் டாக்டர் வந்து போனார்" பியூன் கோவிந்த் - அழுபவர்கள் வேறு அறையில் தனியாக அழுது கொண்டிருந்தனர். காரணமும் தெரிய வந்தது!

எல்லோருமே பெஞ்சமினுக்குக் கடன் கொடுத்தவர்கள். ஒவ்வொருவரும் புலம்பியதிலிருந்து ஒருவாறாக விஷங்கள் வெளிவந்தன.
சிக்கன் பிரியாணியும் மட்டன் பிரியாணியும் வாங்கித் தந்தது வசியம் பண்ணத்தான் என்று தெரிந்தது.

"குமார்... இந்த மாசத்தோட உன் சொஸைட்டி லோன் முடியுது... ஒண்ணு பண்ணு... புது லோன் அப்ளை பண்ணு.. அட, தலையைச் சொறியாதே.. உனக்கில்லை.. நான் வாங்கிக்கறேன். மாசாமாசம் உனக்குப் பிடித்தமாகிற தொகையை நான் உனக்குக் கொடுத்து விடுகிறேன். யார் கிட்டயும் சொல்லாதே...."
                                                  
                                                           

"வள்ளி! தீபாவளி முன்பணம் வேண்டாமா... நல்லது! நீ அப்ளிகேஷன் எழுதிக் கொடு. நான் எடுத்துக்கறேன். மாசா மாசம் தவணையை நான் உன் கையில் கொடுத்து விடுகிறேன். யார் கிட்டயும் சொல்லாதே..."

"ஹுசைன்..  இந்த மாசத்தோட ரிடையர் ஆகப் போறே... என் கையில் ரெண்டு லட்சம் ரூபாய் கொடு. மாசம் பத்து பெர்சண்ட் வட்டி தர்றேன். எல்லார் கிட்டயும் சொல்லிடாதே... எல்லாருக்கும் இதுமாதிரி என்னால தர முடியாது..ஏதோ உனக்காகத்தான்.."

இந்த 'யார் கிட்டயும் சொல்லாதே.. உனக்காகத்தான்' என்கிற மந்திர வார்த்தைகள்தான் சம்பந்தப்பட்டவர்களை யாரிடமும் சொல்லாமல் வைத்திருக்க வைத்தது போலும்!

இப்படி எல்லோரிடமும் வாங்கியிருக்கிறார் என்று தெரிந்தது. மிகவும் உஷார் பார்ட்டி என்று அறியப்பட்ட கீதா, ராஜி, ரஞ்சனி எல்லோரும் கூட எப்படி ஏமாந்தார்கள் என்று ஆச்சர்யமாக இருந்தது. 

இந்நிலையில் சீனு மட்டும் அசந்தர்ப்பமாகச் சிரித்துக் கொண்டிருந்தது ஆச்சர்யமாக இருந்தது. 

"என்ன சீனு சிரிக்கறே..?"
                                        
                                                            
                                        [ குடிப்பழக்கம் உடல்நலத்திற்குத் தீங்கானது ]

"நேற்றுதான் ஸார் 'பார்'ல வச்சு பெஞ்சமின் ஸார் கிட்ட பத்தாயிரம் வாங்கினேன். யாரும் இல்லை பக்கத்துல...இப்போ தர வேண்டியதில்லை பாருங்க!"

"என்ன சீனு... தப்பில்லை?"

"அவர் செஞ்சது...?"

பின்னாட்களில் பெஞ்சமின் மனைவி யாருக்கும் பணம் தரச் சம்மதிக்கவில்லை என்று தெரிந்தது. 'எனக்கு ஒன்றும் தெரியாது. என்கிட்டே அவர் அப்படி எதுவும் சொன்னதுமில்லை. பணம் தந்ததுமில்லை. சொஸைட்டி கடன் அவர் பேரிலா இருக்கு? உன் பேர்லதான... நான் எப்படித் தர முடியும்? தீபாவளி முன்பணம் உன்பேர்லதான போட்டே... நான் எப்படித் தரமுடியும்?' என்று சொல்லி விட்டாளாம்!

21 கருத்துகள்:

  1. குடிப்பழக்கம் உடல்நலத்திற்குத் தீங்கானது...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்

    கதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. அழகான பதிவு...

    குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் தீங்கானது...

    பதிலளிநீக்கு
  4. அழகான பதிவு...

    குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் தீங்கானது...

    பதிலளிநீக்கு
  5. இது எல்லாத்துலையும் டாப்பு ஒரு படத்த போட்டு அதுக்கு கீழ குடிபழக்கம் அட்வைஸ் போட்டீங்க பாருங்க அங்க இருக்கு உங்களோட ஹாஸ்யம்.. ஹா ஹா ஹா

    ஆமா பதிவுல ஏகப்பட்ட பேரு நம்ம சொக்காரங்க பேரா இருக்க மாதிரி இருக்கே, ராஜி, ரஞ்சனி, கீதா...

    அசந்தர்ப்பமாக சிரித்துக் கொண்டிருந்த அந்த சீனு யாரோ? :-)

    பதிலளிநீக்கு
  6. அலுவலக அனுபவங்கள் - பிளாக்கும் நமக்கு பார்ட் டைம் ஆகி போனதலா இதையும் அலுவலக அனுபவங்கள்ன்னு தலைப்பு வச்சிடீங்க போல...

    பதிலளிநீக்கு
  7. அலுவலக அனுபவம் நல்லாயிருக்கு...
    குடிப்பழக்கம் உடல்நலத்திற்கு தீங்கானது...

    பதிலளிநீக்கு
  8. எல்லோருமே பெஞ்சமினுக்குக் கடன் கொடுத்தவர்கள். ஒவ்வொருவரும் புலம்பியதிலிருந்து ஒருவாறாக விஷங்கள் வெளிவந்தன.
    சிக்கன் பிரியாணியும் மட்டன் பிரியாணியும் வாங்கித் தந்தது வசியம் பண்ணத்தான் என்று தெரிந்தது.//

    இப்படியும் மனிதர்களா! என்று இருக்கிறது அலுவலக அனுபவத்தை படிக்கும் போது.
    கடன் கொடுத்தவர்கள் பாடு கஷ்டம்.
    நல்ல விழிப்புணர்வு அனுபவம், இதை படித்தாவது ஏமாறாமல் இருக்கட்டும் மக்கள்.

    பதிலளிநீக்கு
  9. உயிருடன் இருந்த வரைக்கும் அவர் ராஜாவாகத்தான் வாழ்ந்திருக்கார்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல அனுபவம்.

    பகிர்வு முழுவதும் வந்த பெயர்கள் பதிவர்கள் [பெஞ்சமின் தவிர] பெயராகவே இருக்கிறதே என யோசித்துக் கொண்டிருந்தேன்! :)

    பதிலளிநீக்கு
  11. Beg பண்ணினானாம் சேகரு.. புடுங்கித் தின்னானாம் கொமாரு!!

    பதிலளிநீக்கு
  12. இது போல ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒவ்வொருவர் இருக்கிறார்கள்...

    ஆமா, ஏன் பதிவர்கள் பேரா கதையில வர்ற கேரக்டர்களுக்கு வச்சிருக்கீங்க... (அதில சீனுவை வில்லனாக்கியதற்கு எனது கண்டனங்கள்)

    பதிலளிநீக்கு
  13. இப்படியுமா.
    நல்ல பாடம்தான். ஏமாந்தவர்கள் பாடு எவ்வளவு கஷ்டம்:(

    பதிலளிநீக்கு
  14. ஏமாறாமல் இருக்க உதவும் பதிவு உங்கள் பதிவு. ஆனாலும் பெஞ்சமின் செய்தது .......

    பதிலளிநீக்கு
  15. எல்லோர்கிட்டேயும் ஜாக்கிராதையா இருக்கணும் போல!

    பதிலளிநீக்கு
  16. மனிதர்கள் பலவிதம். ஏமாற்றியவர் சாமர்த்தியசாலியாகி விட்டார். விழிப்புணர்வைத் தருகிற பகிர்வு.

    பதிலளிநீக்கு
  17. சரியாகச் சொன்னீர்கள்
    இதே கதாபாத்திரத்தை நான் என் பணிக்காலத்திலும்
    சந்தித்திருக்கிறேன்
    அவரும் போதை ஆசாமிதான்
    பதியவேண்டிய பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. இப்படியும் சிலர்! சுவையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  19. நான் அதெல்லாம் ஏமாறலையாக்கும். ஊரிலே இல்லையா, ஏமாந்ததா நினைச்சுட்டீங்க!:))))

    பதிலளிநீக்கு
  20. யார் கிட்டேயும் சொல்ல வேண்டாம்னு சொல்லிக் கேட்கிறச்சேயே சந்தேகம் வர வேண்டாமோ! :(

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!