Saturday, October 19, 2013

நல்ல செய்திகள் - சென்ற வாரம்



1) வனத்தை பலவகையிலும் இன்றைய மனித இனம் அழித்து நாசம் செய்துவரும் இந்நாளில் வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் நம்மை நோக்கி வன வெளிநடப்புச் செய்யும் காட்சி தெரியும். அங்கு வாழும் பழங்குடி மக்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல உதவும் 'யுவ பரிவர்த்தன்' இந்திரா கொய்தாரா. மாற்றங்களைக் குழந்தைகளிடமிருந்து, குறிப்பாகப் பெண் குழந்தைகளிடமிருந்து தொடங்குகிறார்.
                                                               

2) தற்கொலைக்கு முயன்ற குடும்பம். அதிலிருந்து மீள கடைசியாக ஒரு முயற்சிஎடுத்த பெண், தன்னுடன் தன்போன்றே கஷ்டப்பட்ட பல குடும்பங்களுக்கும் வழிகாட்டிய சம்பவம். லதா நடராஜன்.
                                  

                                           

3) முடங்கிப்போகாத ஜெனித்தா ஆன்டோ.
                                              
                                                

4) சமூகத்துக்கு உதவியாக வாழும் பத்மினி கோபாலன்.

                                                     


5) ஆதரவற்றோரைக் காப்பாற்றும் நெசவாளர் சொக்கலிங்கம்.
                                           


6) தானும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தும், தன்னைப் போல பிறர் பாதிக்கப் படக்கூடாது என்று விழிப்புணர்வை ஊட்டும் தமிழ்.
                                                  
                                   

7)  கடமையில் மனிதம் மாறாமல் மறைந்த மாமனிதர்.
                                                        

8)  தைரியத்துக்கு ஒரு நிர்மலா.  
                                                       


9) அரியானாவின் அதிசய கூகிள் சிறுவன்!
 
                                        


10) ஒரு சாதாரண விவசாயியான தங்கசாமி ஏராளமான மரங்களை வளர்த்துப் பணக்காரர் ஆன கதை.
                                             


11) வதனப்புத்தகத்தை வைத்து ஒரு நல்ல செயல்.


12) புதிய கண்டுபிடிப்பு நிகழ்த்தியிருக்கும் மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி மாணவர்தீபக் . ( 'கொஞ்ச நஞ்சம் குனிந்து நிமிர்ந்து வேலை செய்து, ஆரோக்கியம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் கெடுக்கறாங்கப்பா' என்று கமெண்ட் போடக் கூடாது!) 

                                      


19 comments:

Anonymous said...

வணக்கம்
காலையில் நல்ல செய்திகள்தான்... பதிவு அருமை வாழத்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

mathsmagicmahadevan2k said...

nalla karuthukkal nuntri melum melum thodaravum mahadevan bgl

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் நல்ல செய்திகள்... நல்லதொரு தொகுப்பிற்கு நன்றிகள்... பாராட்டுக்கள்...

sury Siva said...

அதிசய கூகிள் சிறுவன் பற்றி வதநப்புத்தகத்தில் ஒரு கமெண்டுக்கு உங்கள் பதிலைப் படித்தேன்.

அதையும் ரசித்தேன்.

இது போன்று ஒரு ஐந்து வயது கூட நிரம்பாத சிறுமி ஒரு ஐநூறு ராகங்களை சரியாக ஒரு பத்து பதினைந்து வினாடிகளில் அந்த ராகம் பாடிய உடன் சொல்லுகிறாள்.

நான் ஒரு பத்து வருடம் முன் ஒரு சிறுவன் ஒன்பது வயது தான் அவனுக்கு. அவனை எனது சக ஊழியர் முதல்வர் அறைக்கு அழைத்து வந்திருந்தார்.

திருக்குறளில் இருந்து எந்த குறளையும் அந்த குறளின் முதல் வார்த்தையைச் சொன்னால் இந்த பையன் உடனே சொல்கிறான்.

இது பாசிடிவ் என்று சொல்வதை விட அட்மிரபிள் என்று சொல்ல லாம்.

இது பற்றி , அதாவது இது போன்றவர்களின் மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதி எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய ஆய்வுகள் எல்லாமே இருக்கின்றன. ஒரு மணி நேரம் கூட பேசலாம். ஆனால் போரடிக்கும்.
ஆளை விடுடா என்று ஓடிவிடுவீர்கள்.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com

கவியாழி கண்ணதாசன் said...

எனது இன்றைய பதிவும் பெண்களை சிறப்பித்துதான்.வாழ்த்துக்கள் ஸ்ரீராம்

இராஜராஜேஸ்வரி said...

நல்ல செய்திகள் வழங்கிய எங்கள்பிளாக் வாழ்க..!

அபயாஅருணா said...

அனைத்தும் நல்ல செய்திகள்

Ramani S said...

அருமையான படிப்பவரிடத்தும்
நேர்மறை சிந்தனையை ஏற்படுத்திப்போகும்
அற்புதமான பகிர்வுக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் said...

இத்தனை நல்லவர்களும்,அறிவாளிகளும் நம்மிடையே இருக்கும்போது நமக்கு
குறைகள் குறையும் வாய்ப்புகள்
அதிகம். படிக்கப் படிக்க உற்சாகம் தான்

ஸ்ரீராம். said...

நன்றி ரூபன்.

நன்றி mathsmagicmahadhevan2k

நன்றி DD

நன்றி சுப்பு தாத்தா. பாசிட்டிவ் என்பதைவிட அட்மிரபிள் என்று சொல்லலாம் என்ற உங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன்.

நன்றி கவியாழி கண்ணதாசன்

நன்றி RR மேடம்.

நன்றி அபயா அருணா (முதல் வருகை?)

நன்றி ரமணி ஸார்.

நன்றி வல்லிம்மா.

சே. குமார் said...

நல்ல செய்திகள் அனைத்தும் மிகவும் நல்ல செய்திகள்...
பகிர்வுக்கு நன்றி அண்ணா.

T.N.MURALIDHARAN said...

செய்திகளுக்கான இணைப்பு கொடுப்பது நல்ல விஷயம் என்றாலும் இணைப்போடு செய்தி பற்றி கொஞ்சம் கூடுதல் விவரங்கள் இருந்தால் நன்றாக இருக்கும்.(பழைய மாதிரியே)

Durai A said...

நன்று

s suresh said...

சிலது அறிந்தது! சில அறியாதவை! வெறும் இணைப்போடு நிறுத்தாமல் முன்பு போல தங்கள் ஸ்டைலில் சுருக்கமாக பகிரலாமே! நன்றி! இணைப்புகளுக்கு சென்று படிக்க நேரம் எடுக்கிறது!

ராமலக்ஷ்மி said...

நம்பிக்கை தரும் நல்ல செய்திகள். நன்றி.

ஹுஸைனம்மா said...

//வெறும் இணைப்போடு நிறுத்தாமல் முன்பு போல தங்கள் ஸ்டைலில் சுருக்கமாக பகிரலாமே//

வழிமொழிகிறேன். :-)

//வதனப்புத்தகம்//

‘முகப்புத்தகம்’ என்பதைவிட இது கொஞ்சம் க்ளாஸிக்காக இருக்கு. :-)

கூகிள் சிறுவன் - சிறுவனின் முயற்சி பாராட்டபப்டவேண்டியது. அவமானத்தால் என்பதைவிட, ஆர்வத்தின் காரணமாய் தேடல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பு.

ஆனால், ‘தெரியவில்லை’ என்று சொல்வது அவ்வளவு அவமானகரமானதா? ஒரு ஐந்தே வயதான சிறுவனுக்கு அவமானம் குறித்தெல்லாம் சொல்லித் தந்தது யார்?

கோமதி அரசு said...

வெறும் இணைப்போடு நிறுத்தாமல் முன்பு போல தங்கள் ஸ்டைலில் சுருக்கமாக பகிரலாமே////

நானும் வழி மொழிகிறேன்.
எனக்கும் உங்கள் கருத்துக்களுடன் வழங்கிய பழைய பாசிட்வ் செய்திகள் மிகவும் பிடித்தது ஸ்ரீராம்.
எல்லாம் மிக தன் நம்பிக்கை, விடாமுயற்சியை குறிக்கும் நல்ல செய்திகள்.
நன்றி.

ஸ்ரீராம். said...

நன்றி சே. குமார், TNM, அப்பாதுரை, 'தளிர்' சுரேஷ், ராமலக்ஷ்மி, ஹுஸைனம்மா, கோமதி அரசு. அனைவருக்கும் நன்றி.

TNM, 'தளிர்' சுரேஷ், ஹுஸைனம்மா, கோமதி அரசு எல்லோரும் பாஸிட்டிவ் செய்திகளை பழைய ஸ்டைலில் கேட்டிருக்கிறீர்கள். அப்படி எழுதினால் பதிவு நீளமாகி விடுகிறது. யாரும் பார்ப்பதில்லை. வாசகர் எண்ணிக்கைக் குறைந்து விடுகிறது. ஆனாலும் முடிந்தவரை ஒரு சுருக்க அறிமுகம் கொடுக்க முயற்சி செய்கிறேன்.

நம்பள்கி மற்றும் சீனு இந்தச் செய்திகளை ஒரு லேபிளில் தொகுக்கச் சொல்லி யோசனை சொல்லியிருந்தார்கள். அது எனக்குப் புரியாததால் செய்யவில்லை! மன்னிக்கவும்.

sury Siva said...

thatha is still vertical.

why did u leave him in your NANDRI

MEENACHI PAATTI

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!