திங்கள், 6 ஜனவரி, 2014

'திங்க' கிழமை 140106:: ரசத்தில் தேர்ச்சி கொள்!


தேவையான பொருட்கள்: 
  



துவரம் பருப்பு ஐம்பது கிராம்.
மிளகு 14
மிளகாய் வற்றல் 4
சீரகம் இரண்டு கிராம் (அரை தேக்கரண்டி) + ஒரு கிராம் (தாளிக்க) 
தனியா ஐந்து கிராம்.(ஒரு தேக்கரண்டி) 
மஞ்சள் பொடி ஒரு கிராம் (இரண்டு சிட்டிகை) 
ஒரு எலுமிச்சம் பழம்.
தாளிக்க / வறுக்க சிறிது நெய் / எண்ணை. 
கடுகு இரண்டு கிராம் (அரை தேக்கரண்டி) 
பொடி உப்பு : தேவைக்கேற்ப. 
கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை சிறிதளவு. 
இரண்டு சிறிய, சுத்தமான கைக்குட்டை (அளவுள்ள மெல்லிய துணி) 

       
ரெடியா? ஆரம்பிக்கலாமா? 
               
# துவரம் பருப்பை எண்ணை அல்லது நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள்.
             
# அது ஆறிய பிறகு, அம்மா கொடுத்த இலவச மிக்சியில் 'விப்பரில்' ஐந்து வினாடிகள் ஓட்டி இரண்டொன்றாக உடைத்துக் கொள்ளுங்கள், பருப்பை. (மிக்சியை அல்ல) 
           
# உடைத்த துவரம்பருப்பை. ஒரு சுத்தமான துணியில் இட்டு, தளர்த்தியாக முடிச்சுப் போட்டு வையுங்கள்.  
               

# மிளகு, மிளகாய் வற்றல், தனியா, சீரகம் (அரைத் தேக்கரண்டி அளவு) எல்லாவற்றையும் தனித் தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும். 
            
# மேற்கண்ட மிளகு, மிளகாய்,  தனியா, சீரகம் பொருட்களோடு மஞ்சள் தூளை சேர்த்து, நன்றாகக் கலக்கி, மற்றொரு துணியில் இட்டு, தளர்த்தியாக முடிச்சுப் போட்டு வையுங்கள். 
              
# ஒரு பாத்திரத்தில், அரை லிட்டர் தண்ணீர் கொதிக்க வைக்கவும். 
           
# தண்ணீர் கொதி வந்ததும், அதில் துவரம்பருப்பு கட்டிய துணியை அப்படியே இறக்கி வைக்கவும். 
      
# ஒரு நிமிடம் கழித்து, மற்ற துணி முடிச்சையும் அந்தத் தண்ணீரில் இறக்கவும். 
    
# பருப்பு (துணி முடிச்சில் உள்ளது) வேகும் வரை வெயிட் பண்ணவும். 
            
# துவரம் பருப்பு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, இரண்டு துணி முடிச்சுகளையும் கிடுக்கிப் பிடிப் போட்டு வெளியே எடுக்கவும். 
              
# துணிப் பொருட்கள் ஆறியவுடன், அவற்றை  (அ கொ) மிக்சியில் இட்டு,  (எச்சரிக்கை: துணியை சேர்த்து அரைக்காதீர்கள்) அடுப்புப் பாத்திர பருப்புத் தண்ணியை கொஞ்சமாக விட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். 
              
# அரைத்த கலவையை, சிறிதளவு தண்ணீரில் கரைத்து, வடிகட்டி எடுத்து, வடிகட்டிய நீரை அடுப்புப் பாத்திரத்தில் உள்ள பருப்புத் தண்ணீருடன் சேர்த்து விடவும். 
          
# பாத்திரத்தில் உள்ள ரசத்திற்கு தேவையான அளவு உப்புப் போடவும். 
          
# ரசத்திற்கு கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை போடவும். 
             
# கடுகு சீரகம் இவற்றைத் தாளித்து, ரசத்தில் போடவும். 
         
# ரசம் சூடு ஆறியதும், அதில் ஒரு எலுமிச்சம்பழத்தை நறுக்கி, சாறு பிழிந்து கொள்ளவும். 
   
சுவையான ரசம் தயார்! 
                     

26 கருத்துகள்:

  1. தேர்ச்சி கொள்ளப் பயிலவேண்டும்
    உங்கள் பதிவின் மூலம் இன்று முயல்கிறேன்
    (இன்று சுய நளபாகச் சூழல் )
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. யாராலே இத்தனை வேலை செய்ய முடியும்? சூடாப் பண்ணி வைங்க. வந்து சாப்பிட்டுக்கறேன். தொட்டுக்கச் சுட்ட அப்பளாம் உளுந்து அப்பளாம்+அரிசி அப்பளாம், நெய் தடவி! அப்பளாம் கருகக் கூடாது! ஆமா, சொல்லிட்டேன்! :)

    பதிலளிநீக்கு
  3. ரசம் வைப்பதை "ரசத்தோடு" சொல்லியிருக்கிறீர்கள்..

    பதிலளிநீக்கு
  4. அடடா.... இதுவல்லவோ ரசம்....

    செய்து பார்த்துடவேண்டியது தான்!

    பதிலளிநீக்கு
  5. ippo gas vikkira vilaiyile ivvalavu neram kothikka vaicha, gas seekkiram theernthudume! ninga vangi thareengkala? :P :P :P

    பதிலளிநீக்கு
  6. என்ன சார் இன்னிக்கு உங்க சமையலா ? :-))))

    பதிலளிநீக்கு
  7. பருப்பை துணியில் முடிச்சு போடும் ரகசியம் என்ன?
    வெள்ளை நிறத்தொரு துணியால் இல்லை வேறு ஏதும் இருக்கலாமா? எங்கம்மா கொடுத்த மிக்சியா ஜெக்கம்மா கொடுக்காத மிக்சியா?

    பதிலளிநீக்கு
  8. அது ஆறிய பிறகு, அம்மா கொடுத்த இலவச மிக்சியில் 'விப்பரில்' ஐந்து வினாடிகள் ஓட்டி இரண்டொன்றாக உடைத்துக் கொள்ளுங்கள், பருப்பை. (மிக்சியை அல்ல) /
    அம்மா கொடுக்கும் இலவச மிக்சி இல்லையே என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
  9. அது ஆறிய பிறகு, அம்மா கொடுத்த இலவச மிக்சியில் 'விப்பரில்' ஐந்து வினாடிகள் ஓட்டி இரண்டொன்றாக உடைத்துக் கொள்ளுங்கள், பருப்பை. (மிக்சியை அல்ல) //ஐயா வாங்கிக்கொடுத்த மிக்ஸியில் அரைக்கலாமா?

    ரசத்தை பற்றி இத்தனை ரசனையுடன் சொல்லி இருப்பது இருப்பது ரசிக்கத்தக்கது.

    பதிலளிநீக்கு
  10. ஜலதோஷம், கொஞ்சம் ஜுரம் வராப்பலயும் இருக்கு... அதனால..செய்து தயாரா வைங்க... இதோ வந்துகிட்டே இருக்கேன்..:))

    பதிலளிநீக்கு
  11. த்லைப்பின் சிலேடையை இப்பத்தான் கவனிச்சேன்.. நன்று.

    பதிலளிநீக்கு
  12. தேர்ச்சி பெறதான் வேண்டும்:)! நல்ல குறிப்பு.

    பதிலளிநீக்கு
  13. ரசமான "திங்க" கிழமை பதிவை படித்ததும் செவ்"வாய்" எச்சில் ஊறுகின்றது.

    பதிலளிநீக்கு
  14. நீங்க காஸ் ஏஜன்சி எடுத்திருக்கிறீர்களோ.
    ஹ்ம்ம் கொடுத்து வைத்தவர்கள் இந்த ரசத்தைக் சாப்பிடுங்கப்பா:)

    --
    அன்புடன்,
    ரேவதி.நரசிம்ஹன்

    பதிலளிநீக்கு
  15. துணி எதுக்குன்னு துணிவா சொல்லுங்க..

    ஆமா இதைப் பாத்தா நாலு முழம் வேட்டி போல இருக்கே? அதைத் தவிர ரெண்டு மெலிய கைக்குட்டையா ?
    பருப்பை தொங்கவிட்டு பார்த்ததே இல்லை சுவாமி.

    பதிலளிநீக்கு
  16. //பருப்பை துணியில் முடிச்சு போடும் ரகசியம் என்ன?
    வெள்ளை நிறத்தொரு துணியால் இல்லை வேறு ஏதும் இருக்கலாமா? எங்கம்மா கொடுத்த மிக்சியா ஜெக்கம்மா கொடுக்காத மிக்சியா?//
    இந்த ரசத்திற்கு, முடிச்சு ரசம் என்று மற்றொரு பெயர் உண்டு. முதலில் முடிச்சு போடப்பட்டு, அந்த எஸ்சென்ஸ் கொதிக்கும் தண்ணீரில் இறங்கிய பிறகு, முடிச்சுகளில் இருக்கின்ற பொருட்களை மீண்டும் மிக்சியில் இட்டு நைசாக அரைக்க வேண்டும் என்பதால், துணியும் முடிச்சும். சுலபமாக கலெக்ட் செய்து, அரைக்கலாம்.

    வெள்ளை நிறத்துத் துணியாக இருப்பது உத்தமம். கைக்குட்டையில் கரப்பு முட்டை, காராமணி விதை போன்ற அந்நிய பொருட்கள் இருந்தால், சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம்.

    மிக்சி ஜெ அம்மா கொடுத்திருந்தாலும், ஜெக்கம்மா கொடுத்திருந்தாலும், ஜீன்ஸ் போட்ட பெண்மணி வந்து 'ப்ரீத்திக்கு Non-guarantee என்று புன்னகையோடு சொன்னதை நம்பி வாங்கி இருந்தாலும் - எதை வேண்டுமானாலும் உபயோகித்து அரைக்கலாம்!

    பதிலளிநீக்கு
  17. அப்பாதுரை சார்!
    புனர்ப் புளி இரசம் விவரத்திற்கு, ஞாயிறு 235 பதிவையும், பின்னூட்டங்களையும் பார்க்கவும்!

    பதிலளிநீக்கு
  18. துணியோட எசன்ஸ் கொஞ்சம் பயமா இருக்கு kgg! முடிச்சு ரசம்னு இப்பத்தான் கேள்விப்படுறேன். கரப்பு முட்டையா.. விளையாடறீங்களா. நான் சைவம்.

    பதிலளிநீக்கு
  19. புணர்புளினு போர்ட் பார்த்ததும் ஏதோ கிளுகிளு சமாசாரம்னு நினைச்சு.. இப்பத்தான் விவரம் எல்லாம் படிச்சேன். புனர்னா 'மறு' என்ற பொருளில் ரசமா? ரைட்டு. சுவாரசியமான கும்மியை விட்டுட்டனே! கீதாம்மா சுப்பு சார் இப்படி பின்னியிருக்காங்க!

    பதிலளிநீக்கு
  20. இதுபோல் துணியில் மசாலா பொருட்களை இட்டு சமைப்பது ஹைதராபாதி பிரியாணி மட்டுமே என்று நினைத்திருந்தேன். ரசத்தில் இத்தனை ரசமா?

    பதிலளிநீக்கு
  21. இதுபோல் துணியில் மசாலா பொருட்களை இட்டு சமைப்பது ஹைதராபாதி பிரியாணி மட்டுமே என்று நினைத்திருந்தேன். ரசத்தில் இத்தனை ரசமா?

    பதிலளிநீக்கு
  22. ரஸத்தைப் பற்றிய ரஸமான பதிவு.ரஸம்,தெளிவாக இருக்கிரது. அரைத்து விட்டு சற்று குழப்பி விட்டீர்களோ. நல்ல ரஸம்.அன்புடன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!