திங்கள், 20 ஜனவரி, 2014

திங்க கிழமை 140120 :: தோட்லி!

தேவையான பொருட்கள்: 

வெண் புழுங்கல் அரிசி : மூன்று கப்.
முழு வெள்ளை உளுந்து : ஒரு கப். 
வெந்தயம் : இரண்டு தேநீர்க்கரண்டி அளவு.
தேவைக்கேற்ப பொடி உப்பு. 
மைக்ரோ வேவ் ஓவன் (சிலர் அவன் என்று சொல்வார்கள்) 
பவர் சப்ளை: தேவையான அளவு, தேவையான நேரத்தில்! 
ஹார்லிக்ஸ் வாங்கிய பொழுது இலவசமாகக் கிடைத்த கண்ணாடி பவுல்.     


முதல் நாள் மதியம் பன்னிரண்டு மணிக்கு, ஒரு கப் உளுந்து, மூன்று கப் வெண் புழுங்கல் அரிசி ஆகியவைகளை நல்ல தண்ணீரில் ஊறவைக்கவும். அரிசி ஊறும்பொழுது, அதனுடன் இரண்டு தேக்கரண்டி வெந்தயம் போட்டு அதையும் சேர்த்து ஊறவைக்கலாம். 

மாலை நான்கு மணிக்கு, ஊறிய உளுந்தை மிக்சியிலோ / வெட் கிரைண்டரிலோ நைசாக அரைக்கவும். 

ஊறிய அரிசி & வெந்தயத்தையும் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

இரண்டு மாவையும் கலக்கி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். 

உப்பு சேர்த்த மாவை மீண்டும் கலக்கி, ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி விடவேண்டும். 

மறுநாள் காலையில் தான் நாம் செய்ய வேண்டிய தோட்லி. 

கண்ணாடி பவுலில் பாதி அளவுக்கு மாவை ஊற்றவும். எச்சரிக்கை: முக்கால் அளவு / முழு அளவு எல்லாம் மாவு ஊற்றாதீர்கள். வெப்பத்தினால் பொருட்கள் விரிவடையும் என்கிற அறிவியல் விதியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கண்ணாடி பவுல் கெட்டியான, காற்றுக் குமிழிகள் இல்லாத கண்ணாடியாக இருக்கவேண்டும். 
    

மாவு ஊற்றப்பட்ட கண்ணாடி பவுலை, மைக்ரோ வேவ் சுழல் கண்ணாடித் தட்டின்   மேலே வைத்து, ஓவனை மூடி, பிறகு 'ஆன்' செய்யவும். 
     

ஒன்றரை நிமிட நேரம் செட்டிங் போதும். 

மாவுக் கிண்ணம் சுழலும் பொழுதே, கண்ணாடிக் கதவின் மூலமாகப் பார்த்தால், மாவு உப்பி வருவதும், மேற்புறத்தில் சிறிய காற்றுக் கொப்புளங்கள் வருவதும் தெரியும். 
     

ஒன்றரை நிமிட நேரம் போதவில்லை என்றால், மேலும் அரை நிமிடம் ஓவனை ஓட்டவும். 

அவ்வளவுதான்! தோட்லி தயார்! 

தோசை சைசில் ஊற்றி, எண்ணை இல்லாமல் / ஆவி இல்லாமல் இட்லி வார்ப்பது போல் செய்யப் படுகின்ற இந்த சிற்றுண்டிக்கு தோட்லி என்று பெயர் கொடுத்துள்ளேன். 

தோட்லியை, சற்று ஆறியவுடன், கிண்ணத்திலிருந்து அப்படியே ஸ்பூனால் எடுத்து சாப்பிடலாம். 
               

21 கருத்துகள்:

  1. ஆஹா! தோட்லி பெயரே வித்தியாசமாக இருக்கே... :)

    இதுக்கு சைட் டிஷ் என்ன?

    இட்லிக்கும் தோட்லிக்கும் என்ன வித்தியாசம்?

    சரி! சரி! ஒருநாள் சாப்பிட உங்க வீட்டுக்கு வந்துட வேண்டியது தான்...:)))

    பதிலளிநீக்கு
  2. கஷ்டம்!! வெந்தய தோசை மாவிலே செய்யற குழி ஆப்பத்துக்கு தோட்லினு பேரா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நேத்திக்கு ராத்திரி கூட வெந்தய தோசை மாவிலே ஊத்தப்பம் மாதிரித் தான் பண்ணினேன். :)))) சாப்பிடலாம் வாங்க பக்கத்திலே வெந்தய தோசை செய்முறை போட்டிருக்கேன் போய்ப் பாருங்க! :)

    பதிலளிநீக்கு
  3. ஆதி, ஒரு வித்தியாசமும் இல்லை! :)))) சர்க்கரை உள்ளவங்களுக்கு இந்த வெந்தய தோசை மாவிலேயே இட்லியும் செய்து கொடுக்கலாம். நான் கொஞ்சம் அலங்காரம் செய்து இட்லித் தட்டில் வேக விடுவேன். காரட் துருவல், தேங்காய்த் துருவல் சேர்த்து, பச்சைப்பட்டாணி (இருந்தால்( சேர்த்துக் கொண்டு, சுக்கு, மிளகு, ஜீரகம் உடைத்துப் போட்டுவிட்டு கடுகு, ப.மி. இஞ்சி, கருகப்பிலை, கொ.மல்லி எல்லாம் போட்டுக் கொஞ்சம் காஞ்சீபுரம் இட்லிக்குத் தம்பினு சொல்றாப்போல் பண்ணிக் கொடுக்கலாம். தொட்டுக்கக் காரசாரமா தக்காளிச் சட்னி அல்லது கத்திரி, முருங்கை, தக்காளி, வெங்காயம் சேர்த்த கொத்சு!(பருப்பில்லாமல் பண்ணிய கொத்சு)

    பதிலளிநீக்கு
  4. வெறும் பயத்தம்பருப்பையும் இதே போல் ஒரே ஒரு கைப்பிடி அரிசி, அரைக்கைப்பிடி உளுந்து, வெந்தயம் சேர்த்து அரைத்துக் கொண்டு இப்படியே தோட்லியோ, இட்லியோ, தோசையோ பண்ணலாம். இதுவும் சர்க்கரை ஃபாக்டரியை உடம்பிலேயே வைச்சுட்டு நடமாடறவங்களுக்கு நல்லது.

    பதிலளிநீக்கு
  5. ஆனா ஒண்ணு, மேலே சொன்ன இரண்டு செய்முறைகளுக்கும் நம்ம ரங்க்ஸ் அசைந்து கொடுக்க மாட்டார். அவருக்கு வெந்தய தோசையாகத் தான் வேணும்! இதெல்லாம் நீ பண்ணிச் சாப்பிட்டுக்கோனு சொல்லிடுவார்! :)))))

    பதிலளிநீக்கு
  6. இந்த மாவிலேயே வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி கருகப்பிலை, தேங்காய்க் கீற்றுக்கள் சேர்த்துக் கடுகு தாளித்துக் கொண்டு குழி ஆப்பச் சட்டியில் ஊற்றி எடுத்தால் குழி ஆப்பம். இப்போல்லாம் நான் ஸ்டிக் சட்டியே வந்தாச்சு! :)))) நான் இரும்புச் சட்டியில் தான் ஊத்துவேன்!

    பதிலளிநீக்கு
  7. ஆஹா! ஒரு கேள்விக்கு பதிலாக இத்தனை ரெசிபிக்களா!! நன்றி மாமி...:)

    ஆனா அங்க மாமா மாதிரியே இங்க ரோஷ்ணியும் இதுக்கெல்லாம் அசைந்து கொடுக்க மாட்டாள்...:)))

    இனிமே இதை எப்போவுமே செய்ய மாட்டேன்னு பிராமிஸ் பண்ணு என்பாள்....:)))

    பதிலளிநீக்கு
  8. அவனில் நாம் சாப்பிடும் அயிட்டம் எப்படி செய்வது என யோசித்திருந்தேன் . நல்ல ஐடியா தோட்லி.

    பதிலளிநீக்கு
  9. Geetha Sambasivam அவர்களின் குறிப்புகளுக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  10. I have the following..
    வெண் புழுங்கல் அரிசி : மூன்று/2 கப்.
    முழு வெள்ளை உளுந்து : ஒரு கப்/2.
    வெந்தயம் : இரண்டு/2 தேநீர்க்கரண்டி அளவு.
    தேவைக்கேற்ப/2 பொடி உப்பு.
    No மைக்ரோ வேவ் ஓவன் (சிலர் No அவன் too )
    பவர் சப்ளை: தேவையான அளவு, தேவையான நேரத்தில்! sufficient..
    ஹார்லிக்ஸ் வாங்கிய பொழுது இலவசமாகக் கிடைத்த கண்ணாடி பவுல். -- Not received.

    If I use above will I get atleast half of what you got ?

    பதிலளிநீக்கு
  11. அது சரி, முக்கியமானதை விட்டுட்டேனே! காலம்பரயே நினைச்சேன், அரணை புத்தியா, மறந்து தொலைஞ்சிருக்கேன். :)))))


    நாங்க ஹார்லிக்ஸே ஓசியில் தான் வாங்கறோம். ஹிஹிஹி, ஓட்ஸ் வாங்கறச்சே ஹார்லிக்ஸ் இலவசமாக் கொடுக்கறாங்களா, அப்போத் தான் வாங்கறோம். ஆகவே அந்த பவுல் இலவசமாக் கொடுக்கமாட்டேங்கறாங்களே! என்ன செய்யலாம்?? தோட்லிக்கு மாவை எதில் ஊத்தறது!!

    டவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  12. ஹார்லிக்ஸோட இலவசமாக் கிடைச்ச பவுல்ல செஞ்சதுங்கறதால தோட்லியையும் ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியே சாப்பிடணுமா என்ன :-)))))

    பதிலளிநீக்கு
  13. //ஆவி இல்லாமல் இட்லி வார்ப்பது // ஆவியை பிரிக்கும் முயற்சியை சங்கம் கண்டிக்கிறது.. ;-)

    பதிலளிநீக்கு
  14. நான் கூட என்னமோ ஏதோன்னு நினைச்சு வந்து பார்த்தா.. இட்லிக்கும் தோசைக்கும் கல்யாணம்! கொடுமை கொடுமை! இந்த பூலோகத்திலேயே நீங்க மட்டுந்தான் இந்த தோட்லியை சாப்பிடுவீங்க வேறு ஒருத்தருக்கும் பிடிக்காது! ;-) நடக்கட்டும்! இனி இந்தப்பக்கம் வருவே டீ அனன்யா?

    பதிலளிநீக்கு
  15. இது என்னமோ புது டிஷ் அப்படின்னு நினைத்து இங்கே வந்தேன்.... அதே இட்லி! :((((

    பதிலளிநீக்கு
  16. நன்றாக இருக்கிறது இட்லி.
    செய்ய எளிதாக இருக்கிறது செய்து பார்க்கிறேன்.
    எங்கள் அம்மாவீட்டில் ஏணை இட்லி என்று சொல்வார்கள் இலைவடாம் தட்டு போல் இருக்கும் ஏணி போல் இருக்கும் அதில் ஒவ்வொரு தட்டையையும் வைத்து இட்லி பானையில் வைத்து வேகவைத்து எடுப்பார்கள்.(அவித்து ) ஒரே சமயத்தில் ஏழு இட்லி செய்யலாம்.
    மினி ஊத்தப்பம் போல் இருக்கும்.
    நடுவில் வெல்லம், அல்லது கருப்படி துண்டு வைத்தால் சினை இட்லி என்பார்கள்.
    தோசை, இட்லி மாதிரி என்பதால் தோட்லியா?
    நன்றி.

    பதிலளிநீக்கு
  17. தோசை ப்ளஸ் இட்லி தோட்லியா.சுவாரஸ்யமா இருக்கு. பதிவுக்கு கீதாவின் பின்னூட்ட ஊக்கம் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  18. கோமதி அரசு சொல்லி இருக்கும் ஏணை இட்லியை மதுரையில் ரோட்டோர இட்லிக்கடைகளில் பார்க்கலாம். வெள்ளை வெளேர் ஏணை இட்லிகளுக்குச் செக்கச் செவேர் என்று சிவப்பான மிளகாய் வைத்து அரைச்ச தேங்காய்ச் சட்னியை அபிஷேஹம் செய்து தருவாங்க. நாக்கில் நீர் ஊறப் பார்த்து ரசிச்சிருக்கேன். சாப்பிட்டதில்லை. :)))))

    பதிலளிநீக்கு
  19. எழில், மைக்ரோவேவ் அவனில் இட்லி வைக்கிறதுக்குனே இட்லித் தட்டுகள் மைக்ரோவேவ் செட்டோடு கிடைக்குதே! நான் எங்க அப்புவுக்கு அதில் தான் இட்லி அவசரத்துக்கு வைப்பேன். சாதம் வைக்கக் கூடப் பாத்திரம் கொடுத்திருக்காங்களே! வைக்கிறதில்லை. :)))) எப்போவானும் அவசரத்துக்கு உ.கி. கா.ஃப். வேகப் போடுவேன். இப்போக் கொஞ்ச நாளா எடுத்து வைச்சாச்சு! திரும்ப எப்போக் கீழே வருமோ தெரியாது. சப்பாத்தி மாவில் நிறைய நெய் அல்லது வெண்ணை போட்டுப் பிசைஞ்சு உப்பு, மிளகு சேர்த்துச் சப்பாத்தியா இட்டு வைச்சால் (சதுரம், சதுரமாக் கட் பண்ணி வைங்க) கரகர மிளகு பிஸ்கட் ரெடி. இது என்னோட திடீர் கண்டுபிடிப்பு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!