Saturday, February 15, 2014

பாஸிட்டிவ் செய்திகள் - சென்ற வாரம்


 
1) திண்டுக்கல் அருகே, முகநூல் நட்பில் கருத்துப் பரிமாறி, விவசாயம் சார்ந்த துறையில் ஆர்வம் காட்டி, வெள்ளாடு வளர்ப்பில் இலாபம் பார்க்கும் பொறியாளர்கள். 
 


 
2) டெல்லியில் ஏழைக் குழந்தைகளுக்கு ஆங்கிலம் போதிக்கும் தமிழ்ப் பெண் பற்றி சரோஜ் நாராயணசுவாமி.
 
3)“அரசுசாரா தொண்டு நிறுவனத்தில் சேர்வதற்காக நான் அரசாங்க வேலையை ராஜினாமா செய்தபோது என் நேர்மையைச் சந்தேகித்தவர்கள்தான் அதிகம். அப்போது எனக்கு அது வேதனையளித்தாலும், எங்கள் அமைப்பின் மூலம் நாங்கள் கண்ட மாற்றங்கள் அந்தக் காயங்களுக்குக் களிம்பு பூசிவிட்டன” என்று எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் இயல்பாகப் பேசுகிறார் கல்பனா.
 
 


 
4) நாளிதழ்களையும் ஊடகங்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டு பிரபலமானவர்களின் கரிசனத்தோடு எத்தனையோ தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஆனால் விளம்பர வெளிச்சம் படாமல், பத்தாண்டுகளுக்கும் மேலாக குழந்தைத் தொழிலாளர்களையும் படிப்பை இடையில் நிறுத்திவிடும் குழந்தைகளையும் கண்டெடுத்து, அவர்களின் படிப்பைத் தொடரும் சேவையில் ஈடுபட்டு வருகிறது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ‘வேர்கள்’ தன்னார்வ அமைப்பு. இதன் நிறுவனர், அறங்காவலர் நளினி மோகன். கல்வியால் பல தடைகளைத் தகர்த்து, வங்கிப் பணியில் இருப்பவர்.
 
 

 
5) ஃபிராங்க்ளினின் கண்டு பிடிப்பு. நீலகிரியில் பயன்படுத்தப்பட்ட இக்கருவியை உருவாக்க ஓராண்டு உழைப்பும், ரூ.1 லட்சமும் செலவானது. எதிர்காலத்தில் இந்தத் தொகை குறையலாம். ஒருமுறை மட்டும் செலவிடப்படும் இத்தொகை வாழ்நாள் முழுக்க சம்பந்தப்பட்ட பகுதி மக்களை பாதுகாக்கும் அம்சமாகும்'' என்றார் பிராங்க்ளின்.
 
 

 
6) மனதில் உறுதி இருந்தால்... தேவிகா 
 
 


 
6) 1 ரூபாய்க்கு 5 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர். ஒரு பேரூராட்சியின் சாதனை. 
7) கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக சேவை மனப்பான்மையுடன் இருபது ரூபாய் மட்டுமே ஆலோசனை கட்டணமாக பெற்று அதிகாலை வேளையில் ஏழைகளுக்கு சிகிச்சை தரும் மருத்துவர் அய்யா P நாராயண சாமி அவர்கள். 
 
 


அய்யா அவர்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை யில் பல வருடங்கள் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி தற்போது துணைநிலை இயக்குனராக உள்ளார். இவரைப் போல் சர்வீஸில் உள்ள அநேக மருத்துவர்கள் மாட மாளிகையில் வாழும் போது இவர் மட்டும் எளிமையான வாழ்க்கையை பழைய வீட்டிலேயே வாழ்கிறார்...!!

8) 2,200 ரூபாய் மதிப்புள்ள கருவியை நம் வண்டியில் பொருத்தினால் இவ்வளவு லாபமா! கண்டுபிடித்த மாணவனுக்குப் பாராட்டுகள்.14 comments:

Rupan com said...

வணக்கம்
ஐயா.
எல்லாத் தகவலும் ஒரு கனம் சிந்திக்கவைக்கிறது.. பகிர்வுக்கு.. வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Bagawanjee KA said...

marutthuvar parriya link varavillaiye ?

திண்டுக்கல் தனபாலன் said...

எங்க ஊர் தகவல் உட்பட அனைத்திற்கும் நன்றி...

இராஜராஜேஸ்வரி said...

பாசிட்டிவ் செய்திகளுக்குப் பாராட்டுக்கள்..!

சாந்தி மாரியப்பன் said...

நாலு நல்ல விஷயங்களைக் கேட்கும்போது ரொம்ப சந்தோஷமாயிருக்கு, பாராட்டுகள்..

s suresh said...

அனைத்தும் அருமையான செய்திகள்! பகிர்வுக்கு நன்றி!

ராமலக்ஷ்மி said...

நல்ல செய்திகள். பேரிடர்களைத் தவிர்க்கக் கூடியதாக ஃப்ராக்ளினின் கண்டுபிடிப்பு! சேவை மனப்பான்மையுடன் எளிய மக்களிடம் பேருக்கு மிகக் குறைந்த கட்டணம் வாங்குகிறவராக பெங்களூரில், எங்கள் குடும்ப மருத்துவரும்.

rajalakshmi paramasivam said...

அனைத்து செய்திகளும் நம்பிக்கை ஊட்டுவையாக இருக்கின்றன. நன்றி பகிர்விற்கு.

கீத மஞ்சரி said...

மனத்துக்கு இதமாகவும் தன்னம்பிக்கையூட்டுவனவாகவும் செய்திகள் ஒவ்வொன்றையும் திரட்டிப் பதிவிட்டமைக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ரூபாய்க்கு சரவணன் கண்டுபிடித்துள்ள மெஷின் மிகவும் அற்புதம்.காரைக்க்கால் வைத்தியருக்கு என் நமஸ்காரங்கள். எங்கள்ப்ளாகின் இன்னோரு சேவை அனைத்து பதிவுகளையும் அப்டேட் செய்வது. எனக்கு எத்தனை பயனுள்ளதாக இருக்கிறது என்பதை இங்க சொல்லித்தான் ஆகணும்.நன்றி மா.

கோமதி அரசு said...

எல்லா செய்திகளுமே நல்ல செய்திகள்.
ஆடு வளர்ப்பு படித்து விட்டால் ஏஸி ரூமில் தான்வேலை பார்ப்போம் என்று இல்லாமல் வெள்ளாடு வளர்ப்பு செய்வது ஆச்சிரியமானது.
ஏழைக்குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுப்பது மகிழ்ச்சி.
அறங்காவலர் நளினி மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
தேவிகாவின் கணிணி படிப்பும் அவரின் மன உறுதியும் பாராட்டபடவேண்டும்.

நல்ல மாடலாக இருந்து இருக்கிறார் அவரைப்பார்த்து அவர் ஏரியாவில் எல்லோரும் முன்னேறி உள்ளர்ர்களே!
தேவிகாவுக்கு வாழ்த்துக்கள்.

Geetha Sambasivam said...

சிறப்பான சேவை செய்யும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

தொடர

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமையான செய்திகள்.....

பகிர்ந்து கொண்ட உங்களுக்குப் பாராட்டுகள்.....

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!