சனி, 8 மார்ச், 2014

பாஸிட்டிவ் செய்திகள்





1) ஏலகிரி ஹோட்டல். “பணத்துக்காக வாழறதில்லிங்க; வாழறதுக்குதாங்க பணம்” பெரிய தத்துவத்தை எளிதாகச் சொல்கிறார் இந்த ஓட்டலின் உரிமையாளர் நாகராஜ்.

2) உழைப்புக்கோர் ஆரோக்கிய சுஜித்.

3) அன்றைய குழந்தைத் தொழிலாளி. இன்றைய பொறியியல் பட்டதாரி!

        
                                              

 
4) சாதிக்க வயது ஒரு தடையல்ல! 40 வயதிலும் சாதிக்கலாம் சி.ஏ.! சி.ஏ., தேர்வில், 45 வயதில், முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றிருக்கும் மணிமேகலை: என் சொந்த ஊர், செட்டிநாட்டில் உள்ள ஓக்கூர். அப்பா, கோயம்புத்தூரில் பிசினஸ் செய்து வந்ததால், இங்கே தான் பி.காம்., படித்தேன். சி.ஏ., படிக்க வேண்டும் என்ற சின்ன ஆசை, மனதுக்குள் இருந்தது. ஆனால், பி.காம்., கடைசி ஆண்டு படிக்கும் போதே, கல்யாணம் ஆகி விட்டது. 

                                                       

 
அப்புறம், சி.ஏ., விஷயத்தையே மறந்து விட்டேன். கணவர் வேலை காரணமாக, முதலில், மும்பை, பிறகு, ஆப்பிரிக்கா நாடு என இடம் மாறவே, 15 ஆண்டுகள், அவருடன், அங்குமிங்கும் சென்றேன். 2003ல், இந்தியா திரும்பினோம். மகன் இன்ஜினியரிங் காலேஜில் சேர்ந்தபோது, அவ னுக்காக, கோயம்புத்தூரில் தங்கியிருந்தேன். பக்கத்து வீட்டுப் பெண்கள், சி.ஏ., சேர்ந்து படித்தது தெரிந்ததும், அடி ஆழத்தில் புதைந்து, கிட்டத்தட்ட மறைந்து போன ஆசையை, துளிர்விடச் செய்தது.
 
40 வயதில் படிப்பா என, நான் தயங்கின போது, 'இந்த வயசுல நீ சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் ஆனா, எங்களுக்குத் தானே பெருமை'ன்னு சொல்லி, கணவர் உட்பட அனைவரும், பக்கபலமா இருந்தனர். சி.ஏ., இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தபோது, சிறிய வயதினருடன், அம்மா வயதில் இருந்த எனக்கு, ஆரம்பத்தில் என்னவோ போல தான் இருந்தது. ஆனா, அனைவரிடமும் சேர்ந்து, விவாதித்து, குழுவாக படிக்கத் துவங்கியதும், கொஞ்சம் கொஞ்சமாக என் தயக்கங்கள் விலகின. 'இன்டர்' பிரிவில் ஏழு, 'பைனல்' பிரிவில் எட்டு என, இரண்டிலும் சேர்ந்து, 16 பேப்பர் எழுத வேண்டும். ஒன்றில், 'பெயில்' ஆனா கூட, திரும்ப அந்த குரூப் மொத்ததையும் எழுத வேண்டும். என்னுடன் சேர்ந்த பெண்கள், 'இன்டர், பைனல்' பிரிவை சேர்த்து எழுதினர். நான், தனித்தனியா எழுதினேன். அதனால, இன்டர் முடிச்சு, பைனல் வரும் போது, என்னுடன் படித்த யாருமே இல்லாததால், குரூப் ஸ்டடி மற்றும் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாமல் கஷ்டப்பட்டேன்.

கோச்சிங் சென்டர், ஆன்-லைனில் படித்து, 2013ல், வெற்றிகரமாக முடித்தேன். கோவை, பெங்களூரு கம்பெனிகளில் இருந்து, வேலைக்கான அழைப்புகள் வந்துள்ளன. இப்போதைக்கு, மதுரை போய், கணவருடன், 'செட்டில்' ஆக வேண்டும். அங்கேயே, தனியாகவோ, 'பார்ட்னர்ஷிப்'லயோ, 'பிராக்டிஸ்' ஆரம்பிக்க வேண்டும் என்ற, ஐடியா இருக்கிறது!


5) தனியார் பள்ளியில் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிப்ப தை நிறுத்தி, அரசு பள்ளியிலேயே நிறைவான கல்வி பெற உதவும், தலைமை ஆசிரியை சுகிகலா
 
                                                            Photo: அரசு பள்ளிக்கு விளம்பரமா!

தனியார் பள்ளியில் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிப்பதை நிறுத்தி, அரசு பள்ளியிலேயே நிறைவான கல்வி பெற உதவும், தலைமை ஆசிரியை சுகிகலா: 

நான், காஞ்சிபுரம் மாவட்டம், ஆத்தனஞ் சேரியில் உள்ள, ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறேன். ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில், எட்டுஆசிரியர்கள் பணியாற்றுகிறோம்.கடந்த, 1962ல் துவங்கப்பட்ட இப்பள்ளி, 2012ல், பொன் விழாவை கொண்டாடியது. 

2013-14ம் கல்வியாண்டில், இங்கு, ஆங்கில வழிக் கல்வியை, புதிதாக அறிமுகம் செய்தோம்.'பள்ளி கட்டணம், டொனேஷன், வேன் கட்டணம் என, ஆயிரக்கணக்கில் பணத்தை தனியார் பள்ளியில் செலவழிப்பதை நிறுத்தி, உங்கள் குழந்தைகள் நிறைவான கல்வி பெற, இந்த அரசு பள்ளியில் சேருங்கள்' என, துண்டு பிரசுரம் வெளியிட்டு, இப்பள்ளியை விளம்பரப்படுத்துகிறோம். அதற்கேற்ப, தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை, இங்கும் செய்து தந்துள்ளோம். 

இதனால், இந்த கல்வியாண்டில் மட்டும், 43 குழந்தைகள், முதல் வகுப்பில் சேர்ந்து உள்ளனர். ஆனால், கடந்த ஆண்டு வெறும், 20? பேர் தான் சேர்ந்தனர். ஆங்கில வழிக்கல்வியின் அறிமுகமும், அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களுமே, இக்கூடுதல் சேர்க்கைக்கு காரணம். தமிழ் வழி, ஆங்கில வழி என, பாகுபாடின்றி தரமான கல்வியை, எல்லா அரசு பள்ளியிலும் கொடுத்தால், பொதுமக்கள் தனியார் பள்ளிகளை நிச்சயம் நாட மாட்டார்கள். அதற்கு, எங்கள் அரசு பள்ளி, ஒரு சாட்சியாக இருக்கும். 

இங்கு படிக்கும் குழந்தைகள், தூய்மையான காற்றை சுவாசித்து, ஆரோக்கியமாக இருக்க, பள்ளி வளாகத்தில் மூலிகை தோட்டம் அமைத்தோம். திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களும், காலை, 8:30? மணி முதல், 9:30 மணி வரை, 'ஸ்போக்கன் இங்கிலிஷ்' வகுப்புகள் எடுக்கிறோம்.மேலும், தினமும் மதியம், 12:00 மணிக்கு, 'யோகா' பயிற்சி தருகிறோம். சிறப்பு வகுப்புகள் மூலம், தினமும் பாட்டு, நடனம், கணினி மற்றும் நுண்ணறிவு திறனை வளர்க்கும் விளையாட்டுகளையும் சொல்லி தருகிறோம். 

இதற்காக, ஒவ்வொரு மாதமும், 13 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. என்னுடைய, ஆசிரியர் பணியை பாராட்டும் விதமாக, 2012-13ம் ஆண்டிற்கான, ஜனாதிபதியின், 'நல்லாசிரியர் விருது' கிடைத்தது. மேலும், தமிழக அரசின், 'சிறந்த பள்ளி'க்கான விருதும், கடந்த ஆண்டு, எங்கள் பள்ளிக்கு கிடைத்த தில், பெருமை அடைகிறோம்.

[தினமலர் - 'சொல்கிறார்கள்' பகுதியிலிருந்து]


6) சர்வதேசப் பெண்கள் தினமான இன்று, எழுத்துலகில் சாதனைகள் பல செய்துவரும், பல்வேறு திறமைகள் அமையப்பெற்ற  நம் வாசக பெண் நண்பர்கள் - மூத்த பதிவர் சொல்லுகிறேன் காமாட்சி அம்மா, 'எல்லோரும் இனிதாக வாழவேண்டும்' என்று எப்போதும் சொல்லும் அன்பே உருவான வல்லிம்மா,   எண்ணங்களையும், ஆன்மீகத்தையும், புகைப்படங்களையும், பயண விவரங்களையும், சமையல் விவரங்கள், கண்ணன் கதையும் என்று தனித் தனி ப்ளாக்குகளில் எழுதி கலக்கி வரும் கீதா மேடம்,  அழகிய கதைகள் எழுதும் ஹேமா (HVL), அறிவுசார் பதிவுகள் எழுதும் ஹுஸைனம்மா, கவிதாயினி ஹேமா

பல்சுவைப்பதிவுகள் வழங்கும் கோமதி அரசு மேடம், விவேகானந்தர் அச்சுப்புத்தகமும், சாதாம்மணிகள் மின்புத்தகமும் வெளியிட்டிருக்கும், பல்வேறு தளங்களிலும் சளைக்காமல் எழுதி வரும் ரஞ்சனி நாராயணன் மேடமும்,  அரட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம், துளசி கோபால் மேடம், அருணா செல்வம்,  கதம்ப உணர்வுகள் மஞ்சுபாஷிணி சம்பத்குமார், மாலாவின் எண்ணங்கள்  இஷா மாலா,

middleclassmadhavi அன்னபட்சி, ங்கா உள்ளிட்ட புத்தகங்களும், பல்வேறு பெண்கள் பத்திரிகையிலும் எழுதி வரும் திருமதி தேனம்மை லக்ஷ்மணன், கோவில் அனுபவங்கள், படித்த புத்தகங்கள், சமையல் என்று எழுதி வரும் திருமதி ஆதி வெங்கட், சிறந்த புகைப்பட நிபுணரும், அடைமழை, இலைகள் பழுக்காத உலகம் புத்தகங்கள் எழுதியவரும், பல்வேறு தளங்கள், பல்வேறு பத்திரிககைளில் எழுதி வரும் திருமதி ராமலக்ஷ்மி ராஜன், அதே போன்றே புகைப்பட நிபுணர்,  பல்வேறு தளங்களில் எழுதுபவர், 'சிறகு விரிந்தது' கவிதைப் புத்தகம் வெளியிட்டிருப்பவர் அமைதிச்சாரல் திருமதி சாந்தி மாரியப்பன் அவர்கள்,  

ஆன்மீகப் பதிவர் ராஜராஜேஸ்வரி மேடம் , இமாவின் உலகம் இமா, கற்றலும் கேட்டலும்   திருமதி ரேவதி வெங்கட்,  தென்றல் சசிகலா கீதமஞ்சரி, சமீபத்திய டிவி புகழ், முகநூல் பிரபலம் அனன்யா மகாதேவன்,  எங்கள் காசு சோபனா ஏஞ்சலின்  உள்ளிட்ட அனைத்து பெண் பதிவர்களுக்கும் எங்கள் வாழ்த்துகள். 

உங்கள் சாதனைகள் தொடரட்டும். மென்மேலும் சிகரங்கள் தொட 'எங்கள்' வாழ்த்துகள்.

24 கருத்துகள்:

  1. க்ண்முன்னே திகழும் சாதனையாளர்களுடன் //ஆன்மீகப் பதிவர் ராஜராஜேஸ்வரி மேடம் //
    என்று எமது பதிவையும் குறிப்பிட்டதற்கு இனிய நன்றிகள் .. மகிழ்ச்சி..!

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் அறிமுகப் படுத்திய அனைவருக்கும் மட்டுமல்லாது விடுபட்ட திருமதி .அருணா செல்வம் அவர்களுக்கும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  3. எல்லா பெண் பதிவர்களுக்கும், மற்ற சாதனையாளர்களுக்கும் என் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  4. பாசிட்டிவ் செய்திகளுடன், பாசிடிவ் ஆக வாழ்க்கையை எதிர்கொள்ளும் பெண்மணிகளையும் (பதிவர்கள்) வாழ்த்தியது சந்தோஷமாக இருக்கிறது.

    நன்றி எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கு!

    எல்லோருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  5. கற்றலும் கேட்டாலும் பதிவாளர் ராஜி இல்லையோ? நிஜப்பெயர் ரேவதியா?

    பதிலளிநீக்கு
  6. துளசியை விட்டுட்டீங்களே? :)))) அவங்க தான் பதிவுலகின் பிதாமஹி! எங்களுக்கெல்லாம் வழிகாட்டி. இங்கே இடம் பெற்ற, இடம் பெறாத அனைத்து சிநேகிதிகளுக்கும் என் வாழ்த்துகள். மகளிர் தினம் என்னைப் பொறுத்தவரையில் தினமும் வருகிறது. தினம் தினம் மகளிர் தினம் தான். :)))))))

    பதிலளிநீக்கு
  7. இன்றைய பாசிடிவ் செய்திகளில் பெண்கள் மட்டுமே இடம்பெற்றிருப்பார்கள் என நினைத்தேன். ஆண்களுக்கும் இடம் கொடுத்து இருக்கிறீர்கள். ஹாஹா! எல்லாமே அருமையான பாசிடிவ் செய்திகள். முக்கியமாக மணிமேகலையிடம் பொறாமையே வந்துவிட்டது. :))))

    பதிலளிநீக்கு
  8. பாஸிட்டிவ் செய்துகள் அருமை...
    அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  9. இன்றைய பாஸிட்டிவ் செய்திகள் அருமை... நன்றி... +

    சிறப்பான மகளிர் வலைப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  10. "பணத்துக்காக வாழறதில்லிங்க; வாழறதுக்குதாங்க பணம்” பெரிய தத்துவத்தை...."

    --- இந்த வரிகளை திருப்பிப் திருப்பி பதினைந்து இருபது தடவைகள் மனசுக்குள் சொல்லிப் பாருங்கள்.ஒரு அதிசயம் நிகழும். பணம்- வாழ்க்கை இந்த இரண்டுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்று மறைந்து மங்கிப் போய் எஞ்சியிருக்கிற ஒன்று மட்டும் பிரதானப்பட்டு மனசை ஆக்கிரமிக்கும்.

    பதிலளிநீக்கு
  11. பாஸிட்டிவ் செய்திகள் படிக்கையில் மகிழ்ச்சி. பெண் பதிவர்களின் சிறப்புகளைச் சொல்லி அறிமுகம் செய்த நேர்த்தி அழகு! (ரேவதி வெங்கட்...? அது ‘க.கே.’ லாஜி, ஸாரி... ராஜி மேடத்தின் இயற்பெயரா?)

    பதிலளிநீக்கு
  12. மகளிர்களுக்கு ஒரு மகுடம்...

    மகளிர் தின வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு

  13. முதலில் எல்லா பெண் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள் எல்லா பெண்பதிவர்களுக்கும் என்று எழுதுகிறேன். ஏனென்றால் பெயர் குறிப்பிடும்போது பல பெய்ர்கள் மிஸ் ஆகும். இன்று விடிந்ததும் முதலில் என் மனைவிக்கு வாழ்த்துச் சொன்னேன். என்னை சகித்துக் ஒண்டு ஏறத்தாழ ஐம்பது வருடங்களாகக் குடித்தனம் செய்துவருகிறார் என்பதே சாதனை அல்லவா.

    பதிலளிநீக்கு
  14. மிகவும் அருமையான செய்திகள்.

    அனைத்துப் பெண் பதிவர்களுக்கும் என் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்.

    திரு. ஜீவி ஸார் அவர்களின் கருத்து மிகச்சரியாக உள்ளது. என்னையும் அது மேலும் சிந்திக்க வைத்தது. அவருக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

    இன்றைய தங்களின் பதிவுக்கும், பகிர்வுக்கும் என் நன்றிகள். பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  15. பாஸிட்டிவ் செய்திகள்

    அருமையான பதிவு. நிறைய அற்புதமான, மன நிறைவளிக்கும் செய்திகள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி எங்கள் Blog

    பதிலளிநீக்கு
  16. அனைத்தும் நம்பிக்கையூட்டும் செய்திகள்! பெண்பதிவர்கள் அறிமுகம் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  17. //இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!//


    கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் ( ஒரு வாரம் கூடத் தவறாது) அன்னை புவனேஸ்வரி, காஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாட்சி, காசி விசாலட்சி, தையல் நாயகி, ஆனந்த வள்ளி, என உலகெங்கும் அருள் மழை பொழியும் அன்னை பார்வதி யின் அருள் வேண்டி,
    மேடம் கவிநயா அவர்கள் தனது வலைப்பதிவான அம்மன் பாட்டில் எழுதி வருகிறார்.
    www.ammanpaattu.blogspot.com
    இவரது பெயரை இந்த பட்டியலில் காண வில்லையே ?

    சுசீலா மேடம் அவர்கள் தமிழ் மழை பொழிகிறார் தனது வலைப்பதிவுகளில். அண்மையில் இவர் வலைச்சர ஆசிரியராகக் கூட இருந்தார்.

    மீராவின் வாழ்க்கையையே கவிதையாக எழுதியவர் மஞ்சுபாஷினி.
    ஒரு டாக்டர் டெல்பின் விக்டோரியா நீங்கள் படிக்கவில்லையா ?
    She is a role model for all gynaecologists.
    இவர்களையும் காணவில்லை
    . http://lifeexperiencenhospital.blogspot.in/

    மூத்த வலை பதிவாளர் லக்ஷ்மி ?
    நீங்கள் குறிப்பிட்ட அத்தனை எழுத்தாளர்கள் எல்லோருமே மிகச் சிறந்த வலைபதிவாளர்கள். . அவர்கள் எல்லோருக்கும்
    வாழ்த்த வயதில்லை என்று சொல்லக்கூடாது.
    எனக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன்.

    நூறு வயது வாழ்ந்து இன்னும்
    நூறு நூறு அதாவது 10000 பதிவு இலக்காக கொள்ளுங்கள் .

    சுப்பு தாத்தா.
    www.Sury-healthiswealth.blogspot.com

    பதிலளிநீக்கு
  18. அத்தனை பேர்களையும் ஒரே இடத்தில். நன்றி. மகளிர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

  19. நேர்ச் (பாஸிட்டிவ்) செய்திகள்
    ஒரு
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  20. பாஸிட்டிவ் செய்திகள் பகிர்வுக்கு நன்றி.

    வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி:)! அத்தனை பெண் பதிவர்களுக்கும் மகளிர்தின நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  21. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. ஏலகிரி, மிகவும் ரம்யமான இடம். மக்கள் மிகவும் தன்மையானவர்கள்.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. ஹிஹிஹி அ.வ.சி. இப்போத் தான் மறுபடி வந்து படிக்கையில் துளசி பெயரைப் பார்த்தேன். ஹிஹிஹி, என்னோட அந்தப் பின்னூட்டத்தைக் கண்டுக்காதீங்க! :))))))

    பதிலளிநீக்கு
  24. சிறப்பான செய்திகள்.....

    அனைவருக்கும் எனது வாழ்த்துகளும்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!