திங்கள், 21 ஏப்ரல், 2014

திங்க கிழமை 140421 :: கொஞ்சம் குடித்துப் பார்ப்போம்!

   
(தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த பதிவு!)

எல்லோருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் ! 

இந்த ஸ்ரீ ஜெய வருடத்தில் நீங்கள் எல்லோரும் எல்லா நலனும் பெற்று, இன்புற வாழ வேண்டும் என்று உளமாற வாழ்த்துகிறேன். 
                            
திங்க எதுவும் தோன்றாததால், குடிக்கப் புறப்பட்டுவிட்டேன்! 
    
(முகநூலில் அரங்கேறியது) 
                                                                

நான் ஒரு இன்ஸ்டண்ட் காபி இரசிகன். 

                                                          
         

கொஞ்ச நாட்களுக்கு ப்ரு காபி அருந்திப் பார்த்தேன். ஊஹூம் - சரியில்லை. 

                                                              
  
பிறகு சன் ரைஸ். ஏதோ பரவாயில்லை. இப்போதெல்லாம் கூட, சென்னையிலிருந்து கிளம்பி பிருந்தாவன் அல்லது டபிள் டெக்கர் ரயிலில் பெங்களூர் வரும்பொழுது, கையோடு குரோம்பேட்டை நாகப்பா நகர் பி என் ஆர் ஸ்டோரில் இரண்டு ரூபாய் சன் ரைஸ் காபிப் பொடி பொட்டலம் வாங்கி ஸ்டாக் வைத்திருப்பேன். சென்ட்ரல் இரயில் நிலையம் ஐந்தாவது பிளாட்ஃபாரம் அருகே உள்ள ஆவின் பூத்தில், ஏழு ரூபாய்க்கு ஒரு கப் ஆவின் பால் வாங்கி, அதில் இரண்டு ரூபாய் சன் ரைஸ் பாக்கட்டிலிருந்து, அரை அல்லது முக்கால் அளவுப் பொடியைக் கொட்டி, ஒரு சூப்பர் காபி தயார் செய்து குடித்துவிட்டு ரயில் ஏறுவேன். 
                
பிறகு என்னுடைய இரசனை நெஸ்கபே கிளாசிக் என்று ஆயிற்று. 
                                                              

இப்போ லேட்டஸ்ட் நரசுஸ் இன்ஸ்டண்ட் காபி - சுவைத்துப் பார்த்தேன். அடா டா டா - அருமையாக உள்ளது. (பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே!) இதை விட சுவையான காபி கிடைக்கும் வரை, இனி நரசுவை தொடரலாம் என்ற எண்ணத்தில் உள்ளேன்.  
                                                       
                                             Photo: நான் ஒரு இன்ஸ்டண்ட் காபி இரசிகன். 
   
கொஞ்ச நாட்களுக்கு ப்ரு காபி அருந்திப் பார்த்தேன். ஊஹூம் - சரியில்லை.  

பிறகு சன் ரைஸ். ஏதோ பரவாயில்லை. இப்போதெல்லாம் கூட, சென்னையிலிருந்து கிளம்பி பிருந்தாவன் அல்லது டபிள் டெக்கர் ரயிலில் பெங்களூர் வரும்பொழுது, கையோடு குரோம்பேட்டை நாகப்பா நகர் பி என் ஆர் ஸ்டோரில் இரண்டு ரூபாய் சன் ரைஸ் காபிப் பொடி பொட்டலம் வாங்கி ஸ்டாக் வைத்திருப்பேன். சென்ட்ரல் இரயில் நிலையம் ஐந்தாவது பிளாட்ஃபாரம் அருகே உள்ள ஆவின் பூத்தில், ஏழு ரூபாய்க்கு ஒரு கப் ஆவின் பால் வாங்கி, அதில் இரண்டு ரூபாய் சன் ரைஸ் பாக்கட்டிலிருந்து, அரை அல்லது முக்கால் அளவுப் பொடியைக் கொட்டி, ஒரு சூப்பர் காபி தயார் செய்து குடித்துவிட்டு ரயில் ஏறுவேன். 

பிறகு என்னுடைய இரசனை நெஸ்கபே கிளாசிக் என்று ஆயிற்று. 
     
இப்போ (இன்று) லேட்டஸ்ட் நரசுஸ் இன்ஸ்டண்ட் காபி - சுவைத்துப் பார்த்தேன். அடா டா டா - அருமையாக உள்ளது. (பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே!) இதை விட சுவையான காபி கிடைக்கும் வரை, இனி நரசுவை தொடரலாம் என்ற எண்ணத்தில் உள்ளேன்.

(நல்லா பாருங்கப்பா - நர்சு இல்லை; நரசு) 
            

25 கருத்துகள்:

  1. //நல்லா பாருங்கப்பா - நர்சு இல்லை; நரசு// ஹஹஹா

    பதிலளிநீக்கு
  2. அப்ப நீங்க இன்னும் ஆவியோட கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி குடிச்சு பார்க்கலேன்னு நினைக்கிறேன்.. http://www.kovaiaavee.com/2013/09/s.html

    பதிலளிநீக்கு
  3. பேஷ்... பேஷ்... ரொம்ம்ம்ப நன்னா இருக்கு...

    பதிலளிநீக்கு
  4. காஃபி பிரியையான எனக்கு நல்ல சேதி. இப்பலாம் ப்ரூ அவ்வளவா டேஸ்ட் இல்ல.

    பதிலளிநீக்கு
  5. ஹாஹாஹா, காலம்பர பார்த்தப்போ போஸ்ட் இல்லை. ரொம்ப லேட்டா எழுந்து காஃபி குடிச்சிருக்கீங்க. :)))

    பதிலளிநீக்கு
  6. முகநூலிலேயே இது குறித்துக் கருத்து எழுதிட்டேன். அதே தான் இங்கேயும். நரசூஸ்' ரொம்ப ரொம்ப நன்னா இருக்கு, பேஷ், பேஷ் தான். ப்ரூவில் சிகரி எப்போவுமே அதிகம் இருக்கும். ஆகையால் ப்ரூ கிட்டேக்கூட போறதில்லை. இன்ஸ்டன்ட் என்றால் நெஸ்லே தான். இப்போக் கொஞ்ச நாட்களாக கான்டினென்டல் காஃபி சிசிஎல் ப்ராடக்ட்ஸ் என்னும் கம்பெனி மூலமாக ஆந்திராவின் குண்டூரில் இருந்து வருது. அதுவும் நல்லாவே இருக்கு.

    பதிலளிநீக்கு
  7. முகநூலிலும் காஃபி குடிச்சுண்டே படிச்சுப் பின்னூட்டம் போட்டேன். இங்கேயும்! :)))))

    பதிலளிநீக்கு

  8. அவசர ஆத்திரத்துக்கு (?) இன்ஸ்டண்ட் காஃபி உபயோகிப்பதுண்டு. ஆவின் பால் வாங்கி ரயில் நிலையத்தில் காஃபி.... நல்ல ஐடியாவாக இருக்கே.

    பதிலளிநீக்கு
  9. நரசூஸுக்கு ஒரு முறை மாறி பார்த்துட வேண்டியதுதான்! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. நரசூஸ் நல்லாத்தான் இருக்கு

    ஆனால் பர்ஸ் காலியாகிவிடும்
    வீடு முழுவதும் பாட்டில்கள் நிரம்பிவிடும்.

    இருந்தாலும் பில்ட்டர் காப்பிக்கு ஈடு இணை கிடையாது.

    பதிலளிநீக்கு
  11. நரசூஸ் கிடைக்கும்போது பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. ஃபில்டர் காஃபிக்கும் நரசூஸ் நல்லா இருக்கும். அடுத்து காஃபி டே(இங்கே ஶ்ரீரங்கத்தில்) சென்னையில் அம்பத்தூரில் டாடா கூர்க் நல்லா இருந்தது. காஃபி பத்திப் பதிவே போட்டிருக்கேனே, வந்து பாருங்க! காஃபி வித் கீதா என்ற தலைப்பில் பாருங்க.sivamgss.blogspot.com பாருங்க. :)

    பதிலளிநீக்கு
  13. நாங்க ஊருக்குப் போறச்சே எல்லாம் வீட்டிலிருந்தே காஃபி எடுத்துட்டுப் போயிடுவோம். :))) குறைந்த தூரப் பயணத்துக்குச் சரியா இருக்கும். வட மாநிலங்கள் போறச்சே தான் பிரச்னையே!

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    பதிலளிநீக்கு
  15. நாங்க பில்டர் காப்பி பிரியர்கள். வெளியூரில் வேறு வழியில்லை என்றால் இன்ஸ்டன்ட். மற்றபடி பில்டர் காப்பி தான்!
    எப்போதும் கோத்தாஸ் காப்பி தான் வாங்குவோம். இங்கு கோயம்புத்தூர் காப்பி பொடி கடை ஒன்று புதிதாக ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு கால் கிலோ வாங்கிப் பார்த்தோம். ஊஹூம், மறுபடி கோத்தாஸ்!

    பதிலளிநீக்கு
  16. மதுரைக்கு வாங்க ,விசாலம் காபி குடிச்சுப் பார்த்து சொல்லுங்க !
    கொசுறு தகவல் ..சுப்ரமணிய சாமி மதுரைக்கு வரும் போதெல்லாம் இங்கே இருந்து பார்சல் காபி போகுமென தகவல் !

    பதிலளிநீக்கு
  17. அத்தனை காபியும் நல்ல சுவை.
    எனக்குக் பால் இல்லாவிடில்
    சுவைக்காது.
    வேதா. இலங்காதிலகம்

    பதிலளிநீக்கு
  18. சாமிகளா ! ப்ரீதி காஃபி ஃபில்டர் (டைமரோட ) வாங்கி வச்சுக்கும் ! ரத்திரி பத்துமணீக்கு காஃபி பொடிய போட்டுட்டு 5.30 டைம் வச்சுட்டு படுத்துரும் ! "டாண்" நு ஒர்கவுட் ஆகி உம்மை வாசனை எழுப்பிடும் 5.30 மணிக்கு ! அருமையான டிகாக்ஷன் ! சுடசுட கிடைக்கும் ! பால விட்டு குடிக்க வேண்டியதுதான் உம்ம வேலை !---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  19. எங்க வீட்டிலேயும் ப்ரீதி காஃபி மேக்கர் டைமரோடத் தான் வைச்சிருக்கோம். ஆனால் இரண்டு பேருக்கு அதில் கிடைக்கும் டிகாக்‌ஷன் இரண்டு நாளைக்கு வருது! அதனாலும், ஃபில்டர் காஃபி மோகத்தினாலும் யாரானும் அதிகப்படி விருந்தினர் வந்தால் தான் காஃபி மேக்கரையே எடுப்பதுனு வைச்சிருக்கோம். :)))) ஆனால் டிகாக்‌ஷன் அருமையாக இறங்கும். சந்தேகமே இல்லை.

    பதிலளிநீக்கு
  20. காஃபி மேக்கரிலேயே பேப்பர் ஃபில்டர் எனில் அதை மாற்றிவிட்டு தேநீர் தயாரிக்கலாம். ஒருமுறை யு.எஸ்ஸில் ஒரு ஹோட்டலில் தங்கினப்போ ரைஸ் குக்கரில் சாதம் வைச்சுட்டு காஃபி மேக்கரில் மிளகு, ஜீரகம் உடைத்துப் போட்ட ரசம் கூட வைத்தேன். :)))))

    பதிலளிநீக்கு
  21. பெருங்காயம் போடக் கூடாது. காஃபி மேக்கரில் பெருங்காய வாசனை போகாது. :)))

    பதிலளிநீக்கு
  22. ஏன் சன்ரைஸ் காப்பி குடிச்சி பார்க்கலையா??

    பதிலளிநீக்கு
  23. எனக்கு ஏனோ இன்ஸ்டண்ட் காஃபி பிடிப்பதில்லை! :)

    பதிலளிநீக்கு
  24. நானும் நரசு’ஸ் இன்ஸ்டண்ட்தான்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!