Saturday, April 26, 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்


1) "வெற்றி நிச்சயம்  .. இது வேத சத்தியம்.." (ஒரு பாட்டில் அல்ல.. இவர் படும் பாட்டில்..கல்லூரி மாணவன் சுந்தரேசன்.
 
 
2) லட்சியத்தை அடைந்தது மட்டுமில்லை, அதைச் சிறப்பாகச் செயல்படுத்துவது இன்னும் சிறப்பு.சாதனையாளர் ஹக்கீம்.
 
 
 

4) மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வந்த வேலையை விட்டு விட்டு இயற்கை விவசாயத்துக்கு வந்த சிவகங்கை மாவட்டம் கல்லலை ஒட்டியுள்ள முத்துப்பட்டியைச் சேர்ந்த ரூசோ
 
 
5) கஷ்டம் என்று நினைத்தால்தான் கஷ்டம். பவானியின் தன்னம்பிக்கை.
 


 


7) செய்யும் வேலையை கடமைக்குச் செய்வதற்கும், மனமார அனுபவித்துச் செய்வதற்கும் உள்ள வித்தியாசம்! இவர் இரண்டாவது வகை!
 
 

13 comments:

Geetha Sambasivam said...

கடைசி மூணும் ஏற்கெனவே தெரியும் அப்பள பிசினசில் எங்க சொந்தக்காரர் ஒருத்தர் கூட இரண்டு பெண்கள்,ஒரு பையர் படிக்க வைச்சுக் கல்யாணம் செய்து கொடுத்து இன்று அனைவரும் உயர்ந்த நிலையில் இருக்காங்க. மற்ற இரண்டும் முக்கியமாய்ப் பார்வையற்ற ஹக்கீமும் சரி ஆதர்ஷ பட்டும் சரி பாராட்டுக்குரியவர்கள்

கோமதி அரசு said...

சுந்தரேசன் அவர்களின் கனவு நனவாக வாழ்த்துக்கள்.

தன்னம்பிக்கையுடன் மாணவர்களின் அககண்ணை திறக்கும் பாக்கியம் பெற்றவன் என்று சொல்லும் ஹக்கீம் அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

ஆதர்ஷ்பட்டுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். சிறிய வயதில் பிறருக்கு உதவும் மனம் படைத்த குழந்தையாக இருப்பது மகிழ்ச்சி.

முத்துப்பட்டியைச்சேர்ந்த ரூசோ அவர்களைப் பற்றி முன்பு படித்து இருக்கிறேன். இயற்கை விவசாயம்செய்வதற்கு வாழ்த்துக்கள்.

பூ போன்ற கைகள் முரடாக ஆனதால் தன் குழந்தை தன் கைகளில் இருக்கமாடாள் என்று இந்த மெக்கானிக் தாய் சொல்வது மிக வருத்தமாய் இருந்தாலும் பவானியின் தன்னம்பிக்கை வாழ்க!

“அடிமட்ட நிலையிலான யதார்த்தங்களை, இன்றைய இளம்தலைமுறையினர் நேரில் பார்த்து உணர்ந்திட்டால், அதுவே மக்களுக்குச் சேவைசெய்யும் விருப்பத்தை ஊக்குவிக்கும்” என்பது மந்தாகினியின் உறுதியான கருத்து.
மந்தாகினி அவர்கள் சொல்வது போல் தன் மகன் மருமகளையும் சமூக சேவைக்கு பயன்படுத்திக் கொள்வது பாராட்டுக்குரிய விஷ்யம்.
வாழ்த்துக்கள். தன்னலமற்ற அவர்களின் சமூகசேவைக்கு வணக்கங்கள்.

திருச்சி மத்திய சிறைச்சாலையின் கைதிகள், ௩௫ ஏக்கரில் காய்கறி தோட்டம் அமைத்து, அதன் காய்கறிகளை பொதுமக்களிடம் விற்பதுடன், அதில் உணவகமும் நடத்தி வருவதாக கூறும், துரைசாமி//

சிறைதோட்டத்தையும், கைதிகளின் மனதையும் பசுமையாக வைத்து இருக்கும் சிறைதுறை துணைதலைவர் துரைசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.


திண்டுக்கல் தனபாலன் said...

// "மனிதர்களுக்கு மட்டுமில்லாம மண்ணுக்கும் சேவை செய்ற திருப்தி இருக்கு...’’ //

அனைத்து + செய்திகளையும் விட ரூசோ அவர்களின் முடிவு சிறப்பு... அவருக்கு வாழ்த்துக்கள் பல...

இராஜராஜேஸ்வரி said...

பாராட்டுக்குரிய பாஸிட்டிவ் செய்திகள்..!

ராஜி said...

மனதுக்கு இதமளிக்கும் பாசிட்டிவ் செய்திகளை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

negative என்று இருபதையே மறக்க அடித்த செய்திகள்.ஹக்கீம் அவர்களின் தன்னம்பிக்கை அபாரம்

Bagawanjee KA said...

நம்பிக்கை தரும் நல்ல மனிதர்களைப் பற்றிய பகிர்வு அருமை !

கீத மஞ்சரி said...

வாழ்க்கையை இன்னும் பிடிப்புடன் வாழச்செய்யும் தன்னம்பிக்கையும் மனிதநேயமும் மிளிரும் செய்திகள். பகிர்வுக்கு மிகவும் நன்றி.

ராமலக்ஷ்மி said...

பகிர்வுக்கு நன்றி!

வல்லிசிம்ஹன் said...

சிலவற்றை முகநூலில் படித்தாலும் எபியில் படிக்கும் போது அவை சிறப்புப் பெறுகின்றன. மிக நன்றி ஸ்ரீராம்.

rajalakshmi paramasivam said...

சுந்தரேசனின் அப்பள பிசினஸ் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் .
ஹக்கீம் செய்யும் ஆசிரியத் தொழிலில் சிறக்க வாழ்த்துகிறேன்.
ஆதர்ஷ் பட்டின் முக நூலில் நான் like செய்து என் பாராட்டை சொல்லிவிட்டேன். ரூசோ செய்த வேலையை விட்டு விட்டு இயற்கை விவசாயமா ? ஆச்சர்யம் அடங்கவில்லை.பெண்கள் யாருக்கும் சலித்தவர்கள் இல்லை என்று உணர்த்தும் மெக்கானிக் வேலை பார்க்கும் பவானிக்கு பாராட்டுக்கள் . தொண்டிற்கு துணை நிற்கும் மந்தாகினி ஆம்தே அவர்களுக்கு ஒரு சல்யுட்.திரு துரைசாமியின் சேவைகள் வளர வாழ்த்துக்கள்.

HVL said...

நல்ல செய்திகளைத் தொடர்ந்து கொடுத்து வரும் உங்களுக்கு என் பாராட்டுகள்!

வெங்கட் நாகராஜ் said...

அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்....

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!