Monday, July 7, 2014

அலேக் அனுபவங்கள் 140707:: முதன் முதலில் வடிவமைத்த....

            
லேலண்டில் நான் முதன் முதலில் வடிவமைத்த பொருள் என்ன தெரியுமா?  
             
லேலண்டு பஸ்ஸில் நீங்கள் நுழைந்து பார்த்தால், ஓட்டுனர் கைகளில் பிடித்திருக்கும் ஸ்டீரிங் வீலைப் பார்த்திருப்பீர்கள். அந்த ஸ்டீரிங் வீலின் நடுவில், ஒரு பிளாஸ்டிக் கவர் இருக்கும். அந்த வட்ட வடிவ நீல நிற பிளாஸ்டிக் கவரின் மத்தியில் L என்கிற ஆங்கில எழுத்து ஒரு லோகோ அமைப்போடு இருக்கும்.   
        
     

இதுதான் நான் முதன் முதலில் வடிவமைத்த சமாச்சாரம்.   
            
அந்த கவருக்கு Steering Wheel Centre Motif என்று பெயர் வைத்து, அதற்கு F1130660 என்று ஒரு அடையாள எண் கொடுத்து அதாவது பெற்றெடுத்து, பெயர் கொடுத்து ஆளாக்கியவன் நானே!   
                
அதற்கு முன்பு வடிவமைப்பு & அபிவிருத்தி பகுதியில் பல படங்கள் நான் வரைந்திருந்த போதும், அவைகள் என் பங்களிப்பு மிகவும் குறைந்த அளவில்தான் இருந்தது. அதிகாரிகள் சொல்படி, இன்ச் அளவுகளிலிருந்து மெட்ரிக் அளவு முறைக்கு மாற்றியது, யோசனை திட்ட மாற்றங்கள் என்று பல ரகமான மாற்றங்களுக்கு படம் வரைந்தது உண்டு.   
                          
என்னிடம் என்னுடைய மானேஜர் ஒரு ஸ்டீரிங் வீல் கொடுத்து, அதற்கு ஒரு கவர் டிசைன் செய்யச் சொன்னதும் அகமகிழ்ந்து போனேன்.   
                 
பிரிட்டிஷ் லேலண்டு டிசைன், ஜெர்மன் டிசைன் என்றெல்லாம் ஏதேதோ மானுவல் எல்லாம் பார்த்து, ஸ்டீரிங் வில் கேவிடி க்ரூவ் அளவுகள் எல்லாம் துல்லியமாக எடுத்து, நிறைய Sine/ cosine, Tan Theta கணக்குகள் எல்லாம் போட்டு, என்னுடனேயே வேலையில் சேர்ந்த நண்பர் தனசேகரன் என்பவரின் (இப்பொழுது இவர் உயிரோடு இல்லை) ஆலோசனையோடு அருமையான டிசைன் ஒன்றை உருவாக்கினேன்.  
               
     

கருமையான பின்னணியில், வெண்மையான லேலண்டு எம்ப்ளம் மத்தியில் உள்ளது போன்று அமைப்பு. பிளாஸ்டிக்கில் இதை உருவாக்க முடியும் என்று உறுதியாக நம்பினேன்.    
              

Silver foiling, embedded moulding என்று கனவுகள் கண்டு கொண்டிருந்தேன். 
    
என்னுடைய மேனேஜர் ஒரு சப்ளையரை வரவழைத்தார். Susan Indcom கம்பெனியின் பார்ட்னர் என்று ஞாபகம்.  
          
அவர் படத்தைப் பார்த்தார், பிறகு என்னைப் பார்த்தார். 
    
"புதுசா?" 

"ஆமாம்"

"எப்போ சேர்ந்தீங்க? " 
(ஓஹோ இவர் புதுசா என்று கேட்டது என்னுடைய டிசைனை இல்லையா!) 

பதில் சொன்னேன். 

"இது முதல் டிசைனா?"

"ஆமாம்"

அவர் என்னுடைய மேனேஜரின் ரூமுக்குச் சென்று கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு பிறகு வெளியே வந்து, நான் அளவுகள் எடுத்து வைத்திருந்த ஸ்டீரிங் வீலையும் அளவு குறிப்புகளையும்  என்னிடமிருந்து அபகரித்துச் சென்றுவிட்டார். 
    
இரண்டு வாரங்கள் கழித்து, என் மேனேஜர் என்னைக் கூப்பிட்டார். சென்றேன். அவர் மேஜை மீது அந்த சப்ளையர் கொடுத்த 'முழு நீல' கவர் இருந்தது. "சப்ளையரால் இப்படித்தான் சப்ளை செய்ய முடியுமாம். நீ இதன் அளவுகளைத் துல்லியமாக எடுத்து, நீ வடிவமைத்த படத்தை இதைப் போல மாற்றிவிடு"  
               
மாற்றினேன். 
          

வடிவமைத்தது ஒன்று, வந்தது முற்றிலும் வேறு ஒன்று.   
          
   

இப்போ கூட, சத்தமிட்டு என்னைக் கடந்து செல்லும் லாரிகளிலோ அல்லது நான் பயணிக்கின்ற பழைய பேருந்துகளிலோ ஸ்டீரிங் வீலைப் பார்க்கும்போது எனக்கு இந்த நினைவுகள் எல்லாம் ஒருமுறை வந்து போகும்.   
               
நீங்க அடுத்த முறை ஸ்டீரிங் வீலைப் பார்க்கும் பொழுது என்னை நினைத்துக் கொள்ளுங்கள். எனக்குப் புரை ஏறுகிறதா / தும்மல் வருகிறதா என்று பார்க்கிறேன்! 
                

20 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

இனி கண்டிப்பாக உங்கள் ஞாபகம் வரும்... எங்கள் blog சார் என்று மற்றவர்களிடம் சொல்லும் போது பெருமையும் வரும்... வாழ்த்துக்கள்...

Madhavan Srinivasagopalan said...

// இதுதான் நான் முதன் முதலில் வடிவமைத்த சமாச்சாரம். //

ஓஹோ ! நீங்கதான அது. உங்களைத்தான் நான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்.

Madhavan Srinivasagopalan said...

//எனக்குப் புரை ஏறுகிறதா / தும்மல் வருகிறதா என்று பார்க்கிறேன்! //

For that, please furnish the tentative period (Hr. min. 'from' and 'to) of your Breakfast, Lunch & Dinner timing.

Thanks

அப்பாதுரை said...
This comment has been removed by the author.
அப்பாதுரை said...

சப்ளையரின் திறனுக்கேற்ப பொருளை வடிவமைப்பது புதிதல்ல என்றாலும் ஒட்டு மொத்தமாக மாற்றச் சொன்னது ஆச்சரியம். ஏன் ஒப்புக்கொண்டீர்கள்?

kg gouthaman said...

//ஒட்டு மொத்தமாக மாற்றச் சொன்னது ஆச்சரியம். ஏன் ஒப்புக்கொண்டீர்கள்?//
மாற்றச் சொன்னது என்னுடைய மேனேஜர் அல்லவா!
நான் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நான்தானே பாதிக்கப்படுவேன்!

Madhavan Srinivasagopalan said...

// ஏன் ஒப்புக்கொண்டீர்கள்? //

கே.ஜி.ஜி. சார் வீட்ல அடுப்பு எரிய வேணாமா ?

G.M Balasubramaniam said...

அப்போ அது உங்கள் டிசைன் இல்லையா.?

‘தளிர்’ சுரேஷ் said...

அட! சிலமுறை இந்த வீல் கவரை பார்த்து ரசித்து இருக்கிறேன்! நீங்கள் வடிவமைத்ததுதானா? இனி பஸ் ஏறும் சமயம் உங்களை நினைத்துக்கொள்கிறேன்! நன்றி!

Avargal Unmaigal said...

இனி கண்டிப்பாக உங்கள் ஞாபகம் வரும்... வாழ்த்துக்கள்..

வல்லிசிம்ஹன் said...

லேலண்ட் பஸ்ஸில் போகும்போது நினைவு கொண்டு உங்களுக்குத் தும்மல் வரவழைக்கிறேன். வாழ்த்துகள் கௌதமன்.

வெங்கட் நாகராஜ் said...

நிச்சயம் உங்கள் நினைவு வரும்.....

கூடவே உங்களுக்கு தும்மல்/புரைஏற்றம்... :)

சே. குமார் said...

வாழ்த்துக்கள் அண்ணா...
இனி எப்போது பார்த்தாலும் உங்கள் ஞாபகம் வரும்.
உங்களுக்கு கண்டிப்பாக புரை ஏறும் அண்ணா...

Bagawanjee KA said...

கருப்பு நிற வட்டைக்கு உங்கள் டிசைன்தான் நல்ல பொருத்தம் !

Jeevalingam Kasirajalingam said...

சிறந்த பகிர்வு

மாடிப்படி மாது said...

கண்டிப்பாக உங்கள் ஞாபகம் வரும்.......

கோமதி அரசு said...ஸ்டீரிங் வீலைப் பார்க்கும் போது கண்டிப்பாய் உங்கள் பதிவு நினைவுக்கு வரும், உங்களை விருப்பம் போல் செய்ய விடாத மேனேஜர் நினைவும் வரும்.

இராஜராஜேஸ்வரி said...

வாழ்த்துகள்.

Ram Ravishankar said...

Dhanasekaran a brilliant engineer .. sad to learn that he succumbed to his extreme smoking habit.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!