Saturday, August 23, 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்

1) நடிகர்களுக்கு கட் அவுட் வைப்பது, புதுப்படம் ரிலீஸானால் பாலாபிஷேகம் செய்வது... இப்படியான சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் அற்புத மான சேவையை செய்துகொண்டிருக்கிறார்கள் மக்கள் நற்பணி கல்வி அறக்கட்டளை நண்பர்கள்.
 
 
2) அமைப்போ அறக்கட்டளையோ எதுவும் இல்லை. உதவிக்கு ஆட்களும் இல்லை. வருமானமும் இல்லை. ஆனாலும் ராசேந்திரன், தனி நபராக இருந்து, 8, 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற வைத்த கைதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டுகிறது.
 
 
 
4) மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த பிரதிஸ்தா பெஹரே
 
 
5) ஆண் சிங்கங்கள் உதவிக்கு வராமல் வேடிக்கை பார்க்க, தந்தையுடன் சேர்ந்து போராடிய 13 வயதுப் பெண் மீரட்டில்.
 6) நமக்கெதற்கு வம்பு என்று சும்மா இராமல் செயலில் இறங்கிய ஆரணி மக்கள்.7) விசாலினியின் சாதனைகள்.

8) டிகிரி படித்த இளைஞர்கள் பெற்ற வெற்றி.


13 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
நன்றி நண்பரே

Thulasidharan V Thillaiakathu said...

அரும்பக்காம் இளைஞர்களின் கல்விச் சேவை வாழ்க! (சினிமா மோகம் கொண்டு பாலாபிஷேகம் செய்யாமல், டாட்டி குத்துக் கொண்டு அலையாமல் இருந்ததற்கு பாராட்டுக்கள்- பரமபிதா ரட்சிப்பாராக!!!)

ராசேந்திரனின் பணி மிகவும் மிகவும் மகத்தானது. இன்றைய பாசிட்டிவ் செய்திகளில் இது டாப்! (கிட்டத்தட்ட இதே கருத்தைச் சொல்லும் பரோல் குறும்படம். நேரம் இருந்தால் பார்க்கவும். https://www.youtube.com/watch?v=U350Teh_-_o)

அஸ்வின் மகேந்திரா பக்கம் கிடைக்கவில்லையே!

விவசாயம் தானே இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லிக் கொள்வது....நாம் ஆனால் தற்போதைய நிலையில் பிரதிஸ்தகா பெஹரோ செய்வதற்கு ஒரு பெரிய ஷொட்டு.
மீரட் 13 வயது பெண் பாராட்டப்படவேண்டியவர்....அதனுடன் கொசுறுச் செய்தியாக வந்துச் சுட்டி- மனைவி வீராங்கனையே. இப்படி பெண்கள் இருந்துவிட்டால் நாட்டில் பல வன்முறைகள் குறையுமே!

யாருக்கு வந்த விருந்தோ எனும் இக்காலத்தில், ஆரணி இளைஞர்கள் வாழ்க!!

விசாலினி அம்மாடியோவ் சூப்பர் பொண்ணுபா...நம்ம மூளை எல்லாம்...சரி அத விடுங்கப்பா

டிகிரி படித்த இளைஞர்கள் சுய தொழில் செய்வது போல் நம் நாட்டு இளைஞர்கல் சிந்தித்தால், வேலையில்லா திண்டாட்டம் குறையுமே!!!Geetha Sambasivam said...

மீரட் சம்பவத்தில் அவர்கள் தகப்பனும், மகளும் இல்லை என்றும் கணவன், மனைவி என்றும் முதலில் அவர்கள் தான் அடிக்க ஆரம்பித்தனர் என்றும் செய்திகள் வருகின்றன. அவர்கள் அடிக்க ஆரம்பித்ததுமே வன்முறை அதிகமானதாகவும் சொல்கின்றனர். :))))

Bagawanjee KA said...

தன்னம்பிக்கை ஊட்டும் செய்திகள் !

rajalakshmi paramasivam said...

மீரட்டின் பதினைந்து வயதுப் பெண் செய்த வீரச் செயல் பல பெண்களுக்கு முன்னுதாரணம் .
விசாலினியின் IQ அசர வைக்கிறது.
மொத்தத்தில் பாசிடிவ் செய்திகள் எப்பவும் போல் மனதை லேசாக்குகின்றன.

Geetha Sambasivam said...

அது பதினைந்து வயதுப் பெண் இல்லை. ராஜலக்ஷ்மி. தொலைக்காட்சியில் காட்டினார்கள். குறைந்தது 35 இல் இருந்து 40 வயது இருக்கும் பெண்மணி. கணவன், மனைவி.

G.M Balasubramaniam said...


மீரட் பெண்ணின் வயதும் உறவும் முன்னுக்குப் பின் இருக்கிறது. எதுவாயிருந்தால் என்ன அந்தப் பெண் பாராட்டுக்குரியவர்.
நிறையவே பாசிடிவ் செய்திகள். எதைப் பாராட்ட எதை விட......

‘தளிர்’ சுரேஷ் said...

வாரா வாரம் பாசிட்டிவ் செய்திகள் பெருகுவதை காணும் போது மனம் மகிழ்கிறது! சில அறிந்தவை! பல அறியாத செய்திகள்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

ராமலக்ஷ்மி said...

தொகுப்புக்கு நன்றி. மீரட் சம்பவம் சுட்டியில் மனைவி என்று வருகிறது.
விசாலினி தொடர்ந்து சாதித்து வருகிறார்.

Meena Narayanan said...

ennda Link"s va-ra--vi_illai WHY?

முனைவர் இரா.குணசீலன் said...

அருமை

ezhil said...

பாஸிட்டிவ் மனிதர்களைத் தேடிப்பிடித்து எங்களுக்குக் கொடுத்தமைக்கு நன்றி...அஸ்வின் லிங்க் கிடைக்கவில்லை

ஸ்ரீராம். said...

அஸ்வின் செய்தி குறித்து தினமணி (இணையச்) செய்திப் பொறுப்பாளரிடம் சொல்லி இருக்கிறேன். பார்க்கிறேன் என்று சொன்னார். சில சமயங்களில் இப்படி ஆகி விடுகிறது.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!