செவ்வாய், 30 செப்டம்பர், 2014

கல்யாணி ஏன் சிரித்தாள்? 05 மன்னித்து விடு, மறந்துவிடு!


முந்தைய பகுதி சுட்டி இங்கே: பணத்திமிர் 
  
மங்களாம்பிகா கோஷ்டி, புடவைக் கடையிலிருந்து கிளம்பி செல்லும் வரை மங்கா மாமிக்கு என்ன செய்வது, என்ன சொல்வது என்று தெரியவில்லை. தன்னுடைய குழுவினருடன் புடவைகள் தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக, ஆனால் அதிகம் கவனமில்லாமல் இருந்தாள். 
          
தாங்கள் வாங்கிய புடவைகளுக்குரிய பணத்தைக் கொடுக்க கல்லா அருகே வந்தபோது, கல்லாவில் இருந்தவரிடம், மங்கா மாமி கேட்டாள் "அந்த பண்ணையார் வீட்டுக்கார அம்மா அடிக்கடி இந்தக் கடைக்கு வருவதுண்டா?" 
  
"ஆமாம் எப்பவும் இங்கேதான் புடவைகள் வாங்குவாங்க, அடிக்கடி வருவாங்க." 
    
"அவங்க பையனுக்குக் கல்யாணமா?" 
    
"ஆமாம். ரெண்டு மூணு மாசத்துக்குள்ள பையனுக்குக் கல்யாணம்; அதோட சேர்த்து அந்தப் பையனின் தங்கைக்கும் கல்யாணம் என்று சொன்னார்கள். இங்கேதான் எல்லாவற்றுக்கும் புடவைகள் வாங்க வருவேன் என்று சொல்லியிருக்கிறார்கள்." 
    
அதற்குள்  மங்கா மாமி கோஷ்டியிலிருந்த ஒரு மாமி, "ஆமாம், பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுக்கறாங்க என்று கேள்விப்பட்டேன். ரொம்ப பெரிய இடமாம். ஏழு தலைமுறைக்குச் சேர்த்து, சொத்து இருக்கின்ற இடமாம். ஏற்கெனவே இந்தப் பண்ணையாரினி  வானத்தைப் பார்த்துக்கொண்டு நடப்பா. இனிமேல அவளைக் கையில புடிக்கமுடியாது."  
     
மங்கா மாமியின் மனதுக்குள் இடி இடித்தது. 'அப்போ, அந்தப் பையன் கல்யாணம் செய்துகொள்ளப் போவது கல்யாணியை இல்லையா?'  
    
'அடக் கடவுளே கல்யாணி இதைத் தாங்கமாட்டாளே. நான் என்ன செய்வேன்? என்ன செய்யப் போகின்றேன்? கணேஷ மூர்த்தி சொன்னது போலவே பணக்கார சிநேகிதம் பாதாளத்தில் தள்ளிவிடும் போலிருக்கே - போலிருக்கு என்ன? தள்ளிடுச்சு.' இந்த வகையில் மங்கா மாமியின் எண்ணங்கள் சுற்றிச் சுற்றி வந்தன.   
    
வீட்டுக்கு வந்து சேரும் வரையிலும் மங்கா மாமிக்குக் குழப்பமாகவே இருந்தது.  

வீடு பூட்டியிருந்தது. 

அரைமணிநேரம் கழித்து, கல்யாணி, தன தோழியின் வீட்டிலிருந்து வந்து சேர்ந்தாள். 

மங்கா மாமியைப் பார்த்ததும், "அம்மா" என்றாள். அவ்வளவுதான்! அவள் கண்களிலிருந்து 'பொல பொல' வெனக் கண்ணீர் அவளுடையக் கன்னங்களை நனைத்து, கீழே விழத் துவங்கியது. 
                        
    
மங்கா பதறிப் போனாலும், கல்யாணியின் கண்ணீருக்கானக் காரணத்தை யூகித்துவிட்டாள்.   

"என்னம்மா கல்யாணி? விஸ்வம் கடிதம் எழுதவில்லையா?" 

"இல்லை அம்மா - கடிதம் எழுதியிருக்கிறார். அதுதான் கண்ணீரை வரவழைத்துவிட்டது" என்று சொல்லியபடி, கடிதத்தை நீட்டினாள் கல்யாணி. 
      
   
அதை வாங்கிப் பார்த்த மங்கா மாமிக்கு, கடைசி நான்கு வரிகள் மட்டும் பெரிய எழுத்துகளில் எழுதியிருந்தது கண்களில் பட்டது. 

"கல்யாணீ - உன்னை நான் அடுத்த முறை பார்க்க நேர்ந்தால், உன் கணவனுடனும், குழந்தையுடனும், சிரித்த முகத்தோடு பார்க்க வேண்டும்.
என்னை மன்னித்துவிடு, மறந்துவிடு." 
    
(தொடரும்) 
         
             

14 கருத்துகள்:

  1. போனவாரமே நினைச்சேன் இப்படி நடக்குமுன்னு! அடுத்து கல்யாணி எப்படி சிரிக்கப்போறான்னு ஆவலா இருக்கு! தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  2. இந்த பதிவில் கல்யாணியின் கண்ணீர் படம் அடுத்த பதிவில் கல்யாணிசிரிக்கும் படம் வரும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. கண்களில் நீர் நன்றாகவே படமாக்கப் பட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. பையன் ரொம்ப நல்லவன் போல. தப்பு தண்டா பண்ணாம பொலைட்டா சொல்லிருக்கான்

    பதிலளிநீக்கு
  5. கிடைக்கும் என்கிற உறுதி கொடுக்கும் ஆனந்தத்தில் சிரிக்கலாம்; கிடைக்காது என்கிற ஆனந்த இழப்பில் அழலாம்.
    கிடைக்காது என்று போக்குக்காட்டி
    கிடைக்கும் பேரின்ப சந்தோஷத்தில்
    பட்ட பாட்டிற்கான அழுகையும், கைக்கு கிட்டிய ஆனந்தமும் ஒன்றரக் கலந்து அழுது கொண்டே சிரிக்கலாம்!

    பதிலளிநீக்கு
  6. ரொம்ப சஸ்பென்ஸ் கூடிக் கொண்டே போகிறதே.சரி சிரிக்கத்தானே போகிறால். மனம் கலங்காமல் இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  7. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  8. ப்ரமாதம் ப்ரமாதம் ஐஞ்சு பாகத்தையும் ஓடி ஓடிப்போய் படிச்சுட்டு வந்தேன். யார் எழுதறா.. அற்புதமா இருக்கு.

    வாழ்த்துகள் கல்யாணி எப்போ சிரிப்பா. :)

    கமல் மாதிரி யாரும் வருவாளோ :)

    பதிலளிநீக்கு
  9. அருமை
    தொடர்கிறேன் நண்பரே
    அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  10. தலைப்புப்படி கல்யாணி
    எப்போ சிரிபாள?

    பதிலளிநீக்கு
  11. கல்யாணி ஏன் சிரித்தாள் என்பதற்கு ஏற்ப எப்போது சிரிக்கப் போகின்றாள் என்ற ஆவலுடன்! சே இன்று இது கொஞ்சம் வருத்தமாகிவிட்டது! பாவம் கல்யாணி!

    பதிலளிநீக்கு
  12. கல்யாணி ஏன் சிரித்தாள் என்பதற்கான காரணம் புரிந்து விட்டது. அது சரி, பதிவு போட்டு ரெண்டு நாளாச்சு, எனக்கு ஏன் அப்டேட்டே ஆகலை? :( அப்டேட் ஆக என்ன செய்யணும்! :)

    பதிலளிநீக்கு
  13. சிரிக்கப்போகிறாள் என்று நினைத்த கல்யாணியை அழ வைத்துவிட்டீர்களே!
    கடைசியில் சிரிப்பாளோ?

    பதிலளிநீக்கு
  14. ம்ம்ம்ம்... என்ன நடக்கும்... அடுத்த பகுதியும் இப்பவே படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!