சனி, 1 நவம்பர், 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1) முன்பெல்லாம் அரசுத்தேர்வுகள்  எழுத,பயிற்சி வகுப்புகளுக்கு நிறைய செலவழிக்க வேண்டியதிருக்கும். இப்போது லெனின் பாரதி போன்ற நண்பர்கள் இருக்கக் கவலை என்ன?
 

 
2) இவரை பாஸிட்டிவ் மனிதராகக் காட்டுவதில் எனக்குத் தயக்கம் இல்லை! திரு பாலசுப்பிரமணியன். 
 

 
3) தனியாகவே இருந்தும், தயக்கமின்றி கொள்ளையனைத் துரத்திப் பிடித்த தலைமைக்காவலர் சுனிதா.
 
 

 
4) மூளையில் ஏற்படும் புற்றுநோய்க் கட்டியை குணப்படுத்த மருந்து. உபரி பாஸிட்டிவ் செய்தி இதைக் (ஸ்டெம்செல்) கண்டறிந்தவர் இந்திய மருத்துவர் டாக்டர் காலித் ஷா
 


 
5) வருமான வரி இணை கமிஷனர் நந்தகுமார். "நான் எனது சிறுவயதில் வீட்டுப்பாடம் கொடுத்தால் எழுதத் தெரியாது. ஆறாம் வகுப்புடன் என் படிப்பு நின்றது. பின், லாட்டரி சீட்டுக்கள் விற்பனை, மெக்கானிக் ஷாப், ரேடியோ பழுதுபார்த்தல் பணிகளை செய்தேன். படிப்பை நிறுத்திய பின் தான் அதன் அருமை தெரிந்தது. பணி செய்து கொண்டே படித்தேன். அரசுக் கல்லுாரியில் பி.ஏ., (ஆங்கில இலக்கியம்) சேர்ந்தேன். கஷ்டப்பட்டு தேர்ச்சி பெற்றேன். கடந்த 2004ல் 12 லட்சம் பேர் எழுதிய சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றேன்; நான் கற்ற கல்வியால் தான் எனக்கு அமெரிக்க அதிபரின் மாளிகையில் கவுரவம் கிடைத்தது,”
 

 
6) அனாதைக் குழந்தைகளை அரவணைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதுவும் இவளவு முனைப்புடன். ஆந்திர பாஸிட்டிவ். Icha Foundation. அந்த புகைப்படங்களைப் பாருங்கள்.  Madhu Tugnait டைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.
 



 
7) லட்சியம் இருந்தால் போதும். எந்தத் தடைகளையும் வெல்லலாம். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து படிக்கப் பணம் கட்ட வழி இல்லாமல் யார் உதவி செய்கிறார்கள் என்று கூடத் தெரியாமல் ஹாஸ்டல் ஹாஸ்டலாக மாறிப் படித்த, குஜராத் அமேலியைச் சேர்ந்த சுல்தான் கேதானியின் பயணம் அவரை HIV கிருமியைக் கண்டுபிடிக்கும் ஹார்வர்ட் டீமுடன் இணைந்து பணியாற்ற வைத்திருக்கிறது.
 



 
8) "...அவங்களுக்கு முன்னால பேரு சொல்றாப்புல வாழ்ந்து காட்டணும்னு நினைச்சேன். கருணை இல்லத்துல எனக்கு அடைக்கலம் குடுத்தாங்க...இயலாமையில இருந்தாலும் பிச்சை எடுத்துப் பிழைக்க எனக்கு இஷ்டம் இல்லை. ஏதாச்சும் தொழில் செஞ்சு பொழைக்கணும்னு நினைச்சேன்.." கோவை ரமேஷ்குமார். தொடர்புக்கு: 99448-71680
 


 
 

 
10) பாஸிட்டிவ் எண்ணமிருந்தால் நம்மக்கு நடப்பதும் பாஸிட்டிவாகவே இருக்கும். திறமைசாலிக்கு முகம் தெரியாதவர்கள் செய்த உதவி.
 


 
11) தான் பிறந்த மண்ணுக்கும், தான் சார்ந்த மனித சமூகத்திற்கும் நித்தமும் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் இரவு பகல் பாராது செயல்படும் 83 வயது இளைஞர் ராஜகோபால் பற்றிய பதிவு. 
 

 
12) தனது பேச்சுத் திறமையையே சம்பாதிக்கும் திறனாய் மாற்றிக்கொண்டதும், இதன் மூலம் பள்ளிப் பிள்ளைகளுக்குக் குறைந்த கட்டணத்தில் பயிற்சி கொடுப்பதும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகவே வகுப்பெடுக்கும் உத்தேசங்களும்... விஷாலின் பாசிட்டிவ் பக்கங்கள்.
 

 
13) ராஜஸ்தானின் தண்ணீர்ப் பஞ்சம் பற்றி அறிவோம். அந்தத் துயரைத் துடைத்த பகவதி அகர்வால்.
 

14) பாஸிட்டிவ் அலைகளைப் பரவ வைக்கும் SoCh அமைப்பு.
 


 
15) இப்படியும் படிக்கலாம். கீதா, கனி போன்றவர்கள் நிறையவே இருக்கிறார்கள் என்பது கட்டுரையைப் படிப்பதில் புரிகிறது. பெண் கல்வி என்பது இன்னும் சில இடங்களில் எட்டாக்கனிதான் என்பதும் புரிகிறது. இந்த பாஸிட்டிவ் நம் சென்னையில்! 
 



16) எல்லோரும் எல்லோருக்கும்தான் சொல்கிறோம். 'மரம் நடுங்கள், வளருங்கள். இயற்கைக்கு நல்லது' என்று! எல்லோரும் ஓலையூர் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் பாஸ்கரன் மாதிரி செயல்படுத்துவார்களா என்ன? 

 

15 கருத்துகள்:

  1. லட்சியம் இருந்தால் போதும். எந்தத் தடைகளையும் வெல்லலாம்.

    பதிலளிநீக்கு
  2. இவர்களைப் போல
    எல்லோரும் முன்னேறலாமே!
    சிறந்த அறிமுகங்கள்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  3. வாழ்க்கையில் வெற்றி என்பது தானாக வருவதில்லை. நாம்தான் தேடிப்போக வேண்டும் இந்த மாதிரி பாசிடிவ் செய்திகளை தினம் ஒன்றாகப் பதிவிட்டால் பலரது மனதிலும் நிற்ஊ ஏண்ஆஊ ஏண் ஆறூஊ.

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான மனிதர்களின் அறிமுகங்கள்! வாழ்த்துக்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. உண்மையாவே பாசிடிவ் செய்தி தான் சார். சிறந்த மனிதர்கள் பற்றிய பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. உண்மையாவே பாசிடிவ் செய்தி தான் சார். சிறந்த மனிதர்கள் பற்றிய பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. அனைத்தும் அருமை! உங்கள் உழைப்பைப் போற்றுவது மட்டுமல்ல வாழ்த்தவும் வேண்டும்!

    பதிலளிநீக்கு
  8. அனைத்தும் அருமையான செய்திகள் அண்ணா...

    பதிலளிநீக்கு
  9. திரு பாலசுப்ரமணியம் பிரமிக்க வைக்கின்றார்...அம்மாடியோவ் எவ்வளவு புத்தகங்கள்!!!! அதே போன்று தலைமைக் காவலர் சுனிதாவும், டாக்டர் காலித்ஷாவும் பிரமிக்க வைத்து சபாஷ் போட வைக்கிரார்கள்!

    ஆனாதைக் குழந்தைகளை அரவணைப்பது..மனதை நெகிழ வைத்தது மட்டுமல்ல....வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்....இது போன்ரவர்கள் இருப்பதால்தான் .... பூமி சிறிதேனும் சுழல்கின்றதோ......

    லட்ச்சியம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் தான். சுலதான் கேதானி, கோவை ரமேஷ்குமார்...

    விபத்துக்கள் அடிக்கடி நடக்கும் சமயத்தில் இது போன்ரு சம்யோசிதமாக பல உயிர்களைக் காப்பாற்றிய ஓட்டுனர் வாழ்க......இப்படி எல்லாரும் இருந்துட்டா?? பகல் கனவோ?!!

    ஆசிரியர் பாஸ்கரன் எல்லோருக்கும் முன்னோடிதான்...

    கீதா கனி, விஷால், பகவதி அகர்வால் (ராஜ்ஸ்தான் கிராம மக்கள் கொடுத்துவைத்தவர்கள்...தமிழ்நாடு???), இளஞர் ராஜ கோபால், திறமையை ஊக்குவித்து உதவும் குழு...எல்லாருமே பாசிட்டிவ்தான்...

    லெனின் பாரதி குறித்தும், வருமானவரி இணையக் கமிழன்ர் நந்தகுமார் குறித்தும் ஏற்கனவே வாசித்தத்டுண்டு. நந்தகுமார் ரொம்பவே பிரமிக்க வைத்தார்...அவரது வாழ்க்கை கற்றல் திறன் சிறியகுறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. கீதாவின் மகனும் இது போன்று எழுத மிகவும் கஷ்டப்பட்ட கற்றல் திறன் குறைவாய் இருந்த பையன் ஆனால் பெற்றோர் ஆதரவு இருந்ததால் நந்தகுமார் போன்று கஷ்டம் அனுபவிக்கவில்லை என்றாலும் அவமாங்கள் சுமந்தவன். இப்போது கால்நடை மருத்துவன். அதை விட நந்த குமார் பல படிகள் உயர்ந்தவர். இந்தச் சமுதாயத்திற்கே எடுத்துக்காட்டு! வாழ்க வளர்க. நந்தகுமார்! பல உயரங்கள் தொடுவதற்கு!

    பதிலளிநீக்கு
  10. நூலக வாசகர் வட்டம் சார்பில் நடத்தப்படும் முதல் பயிற்சி மையம் சிறப்பாக நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கும் விஷ்யம்.

    புத்தகங்கள் வாங்குறது செலவு இல்லை; அது முதலீடு. ஒரு வகையில, பல தலைமுறைகளுக்கான முதலீடு அது என்று சொல்லும் திரு. பாலசுப்பிரமணியன் பாராட்டப்பட வேண்டியவர்.


    தலைமைக்காவலர் சுனிதா அவர்களின் துணிச்சல் பாராட்டுக்குரியது.

    தொப்புள் கொடியில் உள்ள செல்களை அடிப்படையாக வைத்து, புதிய செல்களை தயாரிக்கும் அதிநவீன தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த டாக்டர் காலித்ஷா அவர்கள் பாராட்டுக்குரியவர். புற்றுநோய்க் கட்டியை குணப்படுத்தி பல சாதனைகள் படைக்கட்டும்.

    கஷ்டப்பட்டு படித்து முன்னிலைக்கு வந்த வருமான வரி இணை கமிஷனர் நந்தகுமார் அவர்களின் தன்னம்பிக்கை வாழ்க!

    ஆதரவற்ற குழந்தைகளை அரவணைத்து பாதுகாக்கும் Madhu Tugnait டைப்பாராட்ட வேண்டும் கண்டிப்பாய். வாழ்த்துக்கள்.

    சுல்தான் கேதானி அவர்களின் லட்சியம் வாழக.

    ரமேஷ்குமார் அவர்களின்
    நம்பிக்கை அவரை வாழவைக்கும்.

    சகாதேவனின் மனோதிடம் பாராட்டபட வேண்டிய விஷயம்.


    ஜஸ்வர்யா நிச்சயமாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.


    83 வயது இளைஞர் ராஜகோபால் கனவு கல்லுப்பட்டியில் இயற்கை வைத்தியசாலை அமைக்க வாழத்துக்கள்.

    கல்லுாரி மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகளை எடுத்து வரும் விஷாலின் சேவை பாராட்டப்பட வேண்டியது.

    இப்படி அனைத்து செய்திகளும் தன்னம்பிக்கை நிறைந்த மனிதர்களைப் பற்றி சொல்கிறது.
    வாழ்த்துக்கள்.








    பதிலளிநீக்கு
  11. அனைத்துமே அருமையான செய்திகள்.

    இது போன்ற செய்திகள் நமக்கு புத்துணர்வு தருபவை.....

    பதிலளிநீக்கு
  12. பத்தும் பத்துவிதமான செய்திகள். ஒன்றிரண்டு ஏற்கனவே படித்திருக்கிறேன்,ஒவ்வொன்றும் நம்பிக்கை அளிக்கும் செய்திகள்.தொகுத்தளித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. ஏதோ செட்டிங்க்ஸ் மாற்றிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். Word verification கேட்பது கருத்திட தடையாக உள்ளது . நீக்கிவிடவும்

    பதிலளிநீக்கு
  14. தெரியாத நிறைய விஷயங்கள். தங்களின் இந்த பாசிட்டிவ் செய்திகளால் தெரிந்து கொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு
  15. வருமான வரி இணைக் கமிஷனர் நந்தகுமார் ஆச்சரியப் பட வைத்தால் சுல்தான் கேதானியும் அதிசய மனிதராக ஆகிவிட்டார். இவர்களின் தன்னம்பிக்கை வியக்க வைக்கும் ஒன்று.

    ராஜஸ்தானிலேயோ, குஜராத்திலேயோ இருந்தவரைக்கும் தண்ணீர்க் கஷ்டமே தெரியாமல் தான் இருந்தோம். இருந்தது முழுக்க முழுக்க ராணுவக் குடியிருப்புப் பகுதி என்பதால் தண்ணீர் கிடைத்துவிடும். :))))

    மற்றச் செய்திகள் அனைத்துமே அருமை என்றாலும் அநாதைக் குழந்தைகளையும் அன்புடன் வளர்ப்பது நெகிழ வைத்தது. 83 வயது இளைஞரைப் பார்த்தால் வயதே தெரியலை! :)) நாமெல்லாம் எப்படி எல்லாம் வாழ்க்கையை வீணடிக்கிறோம் என நினைக்கவே வருத்தமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!