புதன், 12 நவம்பர், 2014

நிலவில் கிடந்த பெண் உடல்



                                              

பிற கிரகங்களில் உயிர்கள் ஜீவிக்கின்றனவா என்று அறிந்து கொள்ளும் ஆராய்ச்சி நடந்துகொண்டே இருக்கிறது.

நாம் இந்த பூமியில் தனியாக இல்லை என்கிறார்கள் ....
 
1969 ல் முதன்முதலில் நிலவில் கால் வைத்ததாகச் சொல்லப்பட்ட பிறகு அடுத்தடுத்தும் நிலவுக்கு விண்கலங்கள் அனுப்பப் பட்டுக் கொண்டிருந்தன.


                                                           

நிலவில் கால் வைத்தவர் அமெரிக்கராய் இருந்தாலும், அவர்கள் கண்டு பிடிக்காத ஒன்றை - நிலவில் நீர் இருப்பதற்கான / இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன என்பதை -  நாம் கண்டு பிடித்தோம் என்று சொல்லிக் கொள்கிறோம்.
 
சமீபத்தில் ஃபேஸ்புக் வாயிலாக அறியவந்த அப்போலோ 20 பற்றிப் படித்தது சுவாரஸ்யமாக இருந்தது.
 
ஜூலை 1 2014 International Business Times பக்கத்திலிருந்து..

அப்போல்லோ 11 க்குப் பிறகும் அவர்கள் முயற்சி தொடர்ந்துகொண்டே இருந்திருக்கிறது. அபோல்லோ 17 (1972) தான் அவர்களின் கடைசி முயற்சி என்று சொல்லப் பட்டாலும், அப்போல்லோ 18,19, 20  விண்கலங்கள் ஏவத் தகுதியில்லை என்று கேன்சல் செய்யப்பட்டு அதன் பாகங்கள் சும்மா பொதுமக்கள் பார்வைக்கும், திரைப்படங்களில் உபயோகப் படுத்தப்படுவதற்கும் உபயோகப்படுத்தப்பட்டதாம். ஆனால் அப்போல்லோ 20 பற்றிய சரியான செய்திகளே ஏன் காணோம் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள் ஊடகத்தில்.
 

அப்போல்லோ 20 ஆகஸ்ட் 76ல் யு எஸ் ரஷிய கூட்டு முயற்சியாக அனுப்பப் பட்டதாம்.  அந்த விண்கப்பலில் சென்று வந்த வில்லியம் ரட்லெஜ் என்பவர் 2007ல் சில ஆதாரங்களையும், வீடியோக்களையும் பதிவேற்றி இருக்கிறார். 
 

அங்கு ஏற்கெனவே இருந்த கோடி வருடங்கள் பழமையான ஒரு விண்கலம் மற்றும் அழுகிப் போகாத ஒரு பெண்ணின் உடல் ஆகியவற்றிக் கண்டு பிடித்து அவற்றைப் பத்திரமாக கெட்டுப் போகாமலிருக்க தக்க ஏற்பாடுகளுடன் பூமிக்கு - நாசாவுக்கு - கொண்டு வந்ததாகவும் சொல்கிறார்.  அந்தப் பெண்ணுக்கு அவர்கள் மோனாலிசா என்று பெயரிட்டுள்ளார்கள். 
 

இவர் பதிவேற்றிய வீடியோக்கள் மறுபடி மறுபடி காணாமல் அடிக்கப் பட்டு, அழிக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தகவல்கள் நாசாவால் மறுக்கப்பட்டுக் கொண்டே இருந்திருக்கின்றன. உடனே ரட்லெஜ் தனி தளம் ஒன்று தொடங்கி அங்கும் பதிவேற்றி இருக்கிறார்.  அந்தத் தளமும் 'ஹேக்' செய்யப்பட்டதாம். 

அப்புறம் அட்ரஸ் இல்லாமல் போன ரட்லெஜ் (இப்போது இருந்தால் அவருக்கு சுமார் 86 வயதிருக்கலாம்) அதற்குமுன் ஒரு இத்தாலிய எழுத்தாளருக்கு அளித்த பேட்டியில் அப்போலோ 14 நிலவின் சில பகுதிகள் மீது பறந்தபோது நிறைய விண்கலங்களையும், சுமார் 100 வருடங்களுக்கும் மேலாகக் காலியாகக் கிடக்கக் கூடிய கட்டிடங்களையும் பார்த்ததாக / படம் பிடித்ததாக பூச்சாண்டி காட்டுகிறார்.

அப்போல்லோ 20 லிருந்து பார்த்தபோது சுமார் .5 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய ஒரு சிகார் வடிவ விண்கலம், அதற்குள் இரண்டு  இருந்ததாகவும் அதை, அவர்களை ஒரு 16 எம் எம் கேமிராவில் படம் பிடித்ததாகவும் சொல்கிறார்.

அவர் அங்கு பார்த்த அந்தப் பெண் உடல் உயிருடனும் இல்லையாம். சாகவும் இல்லையாம். ஆறு விரல்கள் இருந்ததாம். மூக்குத் துவாரங்கள் இல்லையாம். அவர் 'அதை' பூமிக்குக் கொண்டு வந்து, அது இன்னமும் எங்கேயோ உயிருடன் இருப்பதாக வேறு சொல்கிறார்.
 

அவர் அப்போல்லோ 20க்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் அவர் கடவுள் நம்பிக்கை இல்லாத விமானியாக இருந்ததுதானாம்.  (ஆனால் 1990க்கு அப்புறம் மாறி விட்டாராம்)
 
ரட்லெஜை பேட்டி கண்ட Scantamburlo தனது கருத்தைச் சொல்கிறார் இங்கு.

ரட்லெஜுடனான பேட்டி.

அப்போல்லோ 20 இறங்கியதாகச் சொல்லப்படும்  இடம் பற்றி.

இவற்றைப் பொய் என்று சொல்லும் பக்கம்.   உண்மையும் கற்பனையும் கலந்து அழகாகச் சொல்லப் பட்டிருக்கும் பொய் என்கிறது இந்தப் பக்கம். அப்போல்லோ 20  நிதிப் பிரச்னை காரணமாக பூமியை விட்டுக் கிளம்பவே இல்லை என்கிறது.
 
இது ஒன்றும் பொய் இல்லை என்று சொல்லும் காணொளி!
 


இந்தப் பக்கங்களுக்குச் சென்றாலே சம்பந்தப்பட்ட மற்ற (கிடைக்கும்) வீடியோக்களையும் பார்க்கலாம்.

மோனாலிசா வீடியோ.

ரத்து செய்யப்பட அப்போல்லோ விண்கலங்கள் பற்றி விக்கி சொல்வதை அறிய..
 
   

இது இன்னொரு சுவாரஸ்யமான பக்கம். இந்தச் சம்பவங்களை உண்மை என்று சொல்கிறது. நிலவில் இருந்த கட்டடங்களையும் ( ! ) காட்டும் வீடியோ வேறு இருக்கிறது. இதில் உள்ள வீடியோவில் மோனாலிசா இன்னும் தெளிவாக இருக்கிறார்!! மூக்குத் துவாரங்கள் இருப்பதாகத்தான் தெரிகிறது! கண்களை க்ளோஸ் அப்பில் காட்டும்போது எந்த வினாடியிலும் அந்தக் கண்கள் திறந்து பார்க்கும் திகில் சாத்தியக்கூறை மனம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது!
 
இதே பக்கத்தில் இந்த வருடம் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று நாசா தலைவர் செவ்வாயில் ஒரு ஜீவிதம் இருந்திருக்க, ஏன், இன்னமும்  சாத்தியம் உண்டு என்று சொல்லும் செய்தி, வீடியோ இணைக்கப் பட்டுள்ளது. இது ஒரு சுவாரஸ்யமான பக்கமாகத் தெரிகிறது. படிக்க நிறைய விஷயங்கள் அங்கு இருக்கின்றன!

இது இன்னுமொரு, இதே தகவல்கள் அடங்கிய பக்கம்.

சம்பந்தப் பட்ட இந்த வீடியோக்கள் ஏன் உடனுக்குடன் அழிக்கப்பட வேண்டும்?
 
இன்றும் நிலவில் கால் வைத்ததே ஸ்டூடியோவில் எடுக்கப் பட்ட காட்சி என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

17 கருத்துகள்:

  1. சரியான திகில் கதை. உங்கள் சுட்டிகளையும் பார்க்க வேண்டும். இப்போ நேரம் இல்லை. நேரமும் சரியாக இல்லை. :))) எல்லாம் தப்புத் தப்பாய்ப் போய்க் கொண்டு இருக்கிறது. :)

    பதிலளிநீக்கு
  2. என்னென்னவோ நடக்குது. ஒண்ணுமே புரியலே.

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப சுவாரஸ்யமாத்தான் இருக்கு! இணைப்பு பக்கங்களுக்கு செல்ல வில்லை! சென்று பார்க்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. சாயப்பட்டறைகள் இருக்கின்ற ஊர்களில் இந்த மாதிரிக் கதைகள் நிறையக் கிளப்பி விடுவார்களாம் . அப்போதான் சாயம் துணிகளில் ஒட்டும் என்று ஓர் ஐதிகம் உண்டு.

    பதிலளிநீக்கு
  5. அந்தக் கண்கள் திறந்து பார்க்கும் திகில் சாத்தியக்கூறை மனம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது!//

    அப்படித்தான் திகில் ஏற்படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
  6. பெரிய மர்மக்கதையாக இருக்கும் போலவே... சுட்டிகளைப் பார்க்க விடுமுறை தினம்தான் உகந்தது...
    நல்ல பகிர்வு அண்ணா....

    பதிலளிநீக்கு
  7. அதிகம் தெரிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள்.

    பதிலளிநீக்கு
  8. // நிலவில் கால் வைத்ததே ஸ்டூடியோவில் எடுக்கப் பட்ட காட்சி ///
    இதை இன்டெர்ஸ்டெல்லார் படத்தில் கூட கூறியிருப்பார்கள்..

    பதிலளிநீக்கு
  9. நிலவுக்கு சென்ற சர்ச்சையைப் பற்றி இன்டெர்ஸ்டெல்லர் படத்திலும் பேசியிருப்பார்கள், ஆனால் இந்த மூக்குத் துவாரம் கூட இல்லாத பெண் புதிய கதையால்லா இருக்கு...

    பதிலளிநீக்கு
  10. ஆஹா! செம திரில்லாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கின்றது! அந்தப் பெண்ணின் படம் ம்ம்ம்ம் என்னவோ புரியவில்லை! அந்தப் பக்கங்கள் சென்று பார்க்க வேண்டும் இன்னும் என்ன கதைகள் இருக்கின்றன என்று! சுஜாதா இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் இதற்கு?!!!!!

    பதிலளிநீக்கு
  11. ஆவியும் சீனுவும் சொன்னது போல் அந்தப் படத்தில் ஸ்டுடியோ .....சொல்லப்படுகிறதுதான்....

    பதிலளிநீக்கு
  12. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  13. அந்த பெண் படத்தைப் பார்க்கும் போது நம் சமூகத்தில் அக்கம் பக்கத்தில் பார்க்கும் பெண்ணைப் போல லக்ஷ்மிகரமாக இருக்கிறர்ர--பொட்டு கூட வைத்திருக்கிறார். அப்ப அந்த பெண் யார்? பொட்டு என்றால்..அப்ப இந்து தான்....!

    7000 வருடங்கள் முன்பே இந்தியர்கள் கிரகம் விட்டு கிரகம் தாவும் விமானம் கண்டு பிடித்ததாக சொல்வதைப் பார்க்கும்போது, எவனோ ஒரு ஆதிகால Pilot--விமானி அவன் மனைவியை, அந்த கெரகத்தை (இது கோவை கிரகம்) அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டான் போலிருக்கு. இதையும் நாம் சரித்திரமாக்குவோம்!

    பதிலளிநீக்கு
  14. வெகு சுவாரஸ்யம். பொட்டு வைத்த முகமோ, இல்லை துப்பாக்கி சுட்ட
    தழும்போ.
    நாளை மிச்சம் லிங்க்ஸ் பார்க்கிறேன். நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!