Saturday, November 22, 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்
1)  நேர்மையான ஆட்டோ ஓட்டுநர். கண்ணன்.
 
 
2) நந்துவைப் பாராட்டலாமே...
 
 
3) நடைபாதைக் குழந்தைகளின்மேல் அக்கறை எடுத்து அவர்களையும் சமூகத்தில் நல்ல நிலைக்கு உயர்த்தப் பாடுபடும் சுயம் அறக்கட்டளை.
  
4) தென்சென்னை புறநகரில் ஏரியில், குளம், கிணற்றில் மூழ்கி இறந்தவர்களின் உடல்களை மீட்க காவல், தீயணைப்பு துறையினரே தவிக்கும் நிலையில், முற்றிலும் பார்வையே இல்லாவிட்டாலும் சர்வசாதாரணமாக மூழ்கி சில நிமிடங்களில் உடலை மீட்டு பிரமிப்பை ஏற்படுத்தி வருகிறார் ஜல்லடியன்பேட்டையை சேர்ந்த சுந்தர்ராஜன்.
 

 
5) 50 ஆண்டுகளுக்குப் பிறகு உறவுகளைச் சேர்த்து வைத்த செய்தி. சிறு (நல்ல) செய்தியும் உறவு சேர உதவும்!
 


 
6) சுந்தரியின் போராட்டமும் வெற்றியும். 
7) இன்றும் கல்வி கற்க எவ்வளவு போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது?  தாங்களே கட்டிக் கொண்ட பள்ளிக்கூடம் குறித்து கூறும், பொதுமக்கள் மீட்புக் கமிட்டி தலைவர் ஆ.காமராஜ்.
 

 
8) இதுவும் கல்வி சம்பந்தப் பட்ட செய்தியே. அடிப்படை கல்விக்கு வாய்ப்பு கிடைக்காத, வெளிமாநில குழந்தை தொழிலாளர்களுக்காக, கோவை மாவட்டத்தில் சிறப்பு பள்ளி துவங்கப்பட்டுள்ளது.
 

 
9) ஊரையே மரங்களால் - அதுவும் லாபம் தரும் புளிய மரங்களால் - நிறைத்த ஊராட்சித் தலைவர் ந. பாலசுப்ரமணியமன். இப்படி ஒருவர் எல்லா ஊராட்சிகளிலும் தேவை.
 

 
10) ஒன்றும், இரண்டும் சிறிய எண்கள் - எண்ணிக்கையில்! ஆனால் அந்த ஒன்றும் இரண்டும் கழிக்க வழியில்லாமல் பொது இடங்களில் இந்நாட்டில் செய்யப்படும் அசுத்தங்கள்? இந்த 5 ஹீரோக்கள் பற்றிப் படியுங்களேன். 
 


 
11) "அதே பிரச்னை"க்கு இந்தப் பெண்கள் குழு கண்டு பிடித்திருக்கும் வித்தியாசமான ஐடியாவைப் பாருங்கள்!
 


 
12) ராஜஸ்தான் மாநில, உதய்பூர் அருகே உள்ள மனார் கிராம மக்களின் கருணை.
 

 
13) கணவனுக்கு வேலை போனால் என்ன? என் கை இருக்கிறது உதவவும், உழைக்கவும். பஞ்சர் கடை நடத்தி வரும் இரும்புப் பெண்மணி விஜயலட்சுமி.
 

 
14) ஒரு MBA படித்தவர் ஏழை விவசாயிகள் வாழ்வு முன்னேற என்ன செய்ய முடியும்? ப்ரையன் லீ.
 


15) பார்வை பாதிக்கப் பட்ட நிலையிலும் சஞ்சீவ் கோஹில் செய்யும் சேவை, நேற்று நல்ல பாம்புக் குட்டிகளை, அதன் மேல் பூச்சிக்கொல்லி மருந்தான 'ஹிட்' டை அடித்தபடியே ஓடிய என்னை வெட்கத்துக்குள்ளாக்குகிறது.


11 comments:

வல்லிசிம்ஹன் said...

அதிசயிக்கத்தக்க செய்திகள் அத்தனையும் படித்தாச்சு. டாய்லெட் விவகாரம் இத்தனை நபர்களிம் மனதில் எவ்வளவு உத்வேகத்தைக் கொண்டுவந்திருக்கிறது. கண் பார்வை இல்லாமல் சாலங்களை வெளியில் எடுப்பவருக்கும்,பாம்புகளைப் பிடிப்பவருக்கும் என்ன சொல்லிப் பாராட்டுவது.

Angelin said...

அனைத்தும் புதிய தகவல்கள் ..சஞ்சீவ் கோஹில் !! திகைக்க வைக்கிறார் ... என்னது ஹிட் வச்சிருக்கீங்களா ?
பறவைகளை பாதுகாக்கும் கிராமத்தினர் !மனம் நெகிழ்கிறது !! அனைவருமே இப்படி இருந்ந்தா எவ்ளோ நல்லா இருக்கும்
ஹ அஹா பெண்கள் குழு மக்கள் மன நிலையை நல்லாவே படிச்சவங்க போலிருக்கு :) முன்பு சுவாமி படங்களை வரைய ஒருவர் ஐடியா கொடுத்தார் சுரங்கபாதைகளில் அப்போவாது எச்சில் துப்பாம போவாங்கன்னு ..
துளசி பக்கத்தில் அழகிய மலர்செடிகளும் நடலாம் ::)
5 ஹீரோக்களும் கிரேட்டோ கிரேட் !!
கொத்தடிமை சிறார்கள் கல்வி விஷயம் நல்ல விஷயம் .வண்டி தள்ளும் சிறுவன் அந்த படம் பார்க்க மனதுக்கு கஷ்டமா இருக்கு :(
மற்றும் அனைத்து செய்திகள் பகிர்வுக்கும் நன்றி !

Bagawanjee KA said...

செய்திகள் அனைத்தும் அருமை ,ஐந்து வயது சிறுவன் நந்து ,ஆனால் செய்ததோ பெரிய செயல்தான் !

rajalakshmi paramasivam said...

பார்வையற்றவரின் நீச்சல் சாகசம்,அவரின் தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. தினமலர் செய்த உதவியால் முதியவர் ஒருவருக்குப் பிரிந்த உறவுகள் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. விசில் பெண்களின் ஐடியா அசத்தல். எல்லா பாசிடிவ் செய்திகளுக்கும் நன்றி ஸ்ரீராம் சார்.

ஊமைக்கனவுகள். said...

இலக்கை முன்வைத்து நகரச் செய்யும் பதிவுகள்!
பகிர்வுக்கு நன்றி அய்யா!

ஊமைக்கனவுகள். said...

இலக்கை முன்வைத்து நகரச் செய்யும் பதிவுகள்!
பகிர்வுக்கு நன்றி அய்யா!

கோமதி அரசு said...

ஓட்டுநர் கண்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
நந்துவை பாராட்டி ஆக வேண்டும்.

இளைஞர்கள் அடங்கிய குழு சுயம் அறக்கட்டளைக்கு வாழ்த்துக்கள்.

சுந்தர்ராஜன் அவர்கள் பணி மகத்தானது.
உறவை சேர்த்து வைத்த தினமலருக்கு நன்றி.

மாஞ்சான் விடுதியில் முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் அவர்கள் 1330 புளியமரங்கள் நட்டுவளர்த்தது பாராட்டுக்குரிய விஷ்யம்.

பறவைகளை பாதுகாக்க, மனார் கிராமத்தினர் கொண்ட கட்டுபாடு பாராட்ட்தக்கது.
அனைத்து பாஸிடிவ் செய்திகளும் அருமை பகிர்வுக்கு நன்றி.


Thulasidharan V Thillaiakathu said...

ஆட்டோ ஓட்டுநர்கள் கண்ணன் - இதற்கு முன்னும் இது போன்ற ஒரு செய்தி பாசிட்டிவில் வந்ததாக நினைவு- நேர்மையாக இருப்பது மிகவும் மகிழ்வாக இருக்கின்றது.

நந்து இல்லை அல்லவோ ஜோசஃப் அல்லவோ பாராட்டப்படவேண்டிய பையன்....நந்துவைக் காப்பாற்றியய் ஜோசஃப்....

சுயம் அறக்கட்டளையை வாழ்த்துவோம்.
சுந்தர்ராஜனின் சேவை பாராட்டிற்குரியது...
கல்வி செய்திகள் நம்பிக்க் ஊட்டுவதாக இருக்கின்றது.

பரவாயில்லையே டாய்லெட் விழிப்புணர்வு நன்றாகவே பரவி வருகின்றது..நல்ல செய்தி...

அட மனார் கிராம மக்களின் கருணை பறவைகளைக் குறித்த கருணை போற்றுவோம். நாமும் நம் பகுதிகளில் செய்யலாமே பறவைகள் மட்டுமன்றி மற்ற ஜீவங்களுக்கும்...

சஞ்சீவ் பிரமிக்க வைக்கிறார்...யம்மாடியோவ்....

ராமலக்ஷ்மி said...

நல்ல செய்திகளின் தொகுப்புக்கு நன்றி.

வீட்டுக்கு வரும் பாம்புகள் குறித்து, ஷங்கர்ஜியின் அனுபவம். ஏற்கனவே நீங்கள் படித்ததாகவும் இருக்கலாம். புதிய தலைமுறை கட்டுரை:
பக்கங்கள் 1-2 ; 3-4

Chokkan Subramanian said...

பல தகவல்கள் படிக்காத, அறியாத தகவல்கள். தங்களின் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

iqbal ali said...

அருமையான பயன் தரும் தகவல்கள்
அனைத்தும் படிப்பதர்க்கு ஆவலை தூண்டுகிறது

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!