Saturday, December 20, 2014

பாஸிட்டிவ் செய்திகள் கடந்தவாரம்

1) அதிகமாக ஆசைப்படவில்லை. ஆட்களை வைத்து சமாளிக்கும் திறமையோடு இன்னும் நால்வருக்கு வேலை வாய்ப்பு. படிக்காவிட்டால் என்ன? மூன்று குழந்தைகளையும் தன்னுழைப்பில் ஆளாக்கிய சரஸ்வதி.

                       


2) உணர்ச்சி வசப்படாமல், அழுது புலம்பாமல் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவுடன் செயல் பட்ட தாய்.

போதை மருந்து விற்ற போது பிடிபட்ட சுனில் ஷர்மா (வலது)


3) உதவி என்றால் என்ன? மனிதாபிமானம் என்றால் என்ன? திரு(மிகு)நங்கைகள்.

                                            


4) நினைத்தால் வெளிநாடு போய் லட்சம் லட்சமாகச் சம்பாதித்திருக்கலாம். ஆனால், இப்படியும் ஒரு மனிதர். டாக்டர் முத்துகிருஷ்ணன்.

                                                              


5) 'நானா-நானி இல்லம்' நடத்தும் உமா மகேஸ்வரி பாராட்டப் பட வேண்டியவர்தான். சந்தேகமில்லை. இன்றைய சூழலுக்கு இவர் செய்யும் தொண்டு பாராப்பட வேண்டியது.  ஆனால் இது போன்ற இல்லங்கள் நிறையத் திறக்கப் படாதிருக்கும் சூழ்நிலை வரவேண்டும் என்பதே நம் விருப்பம்.

                                              


6) படித்துப் பட்டம் பெற்றால் வேலை கிடைக்கும் என்ற இவரது அறிவுரை சரியில்லை என்று திட்டிய சக கிராமவாசியின் வார்த்தைகள் இவரை இவரது வேலையை விடவைத்து, சொத்துகளை விற்று ஒரு தரமான கல்வி நிறுவனத்தைக் கட்ட வைத்தது. ப்ரஞ்சால் துபே.

                                    Pranjal Dubey


7) இந்தக் காலத்திலும் பிரசவம் என்பது எவ்வளவு கடினம் என்பதை உணராத கிராமவாசிகளுக்குச் சரியான வழி காட்டிய ASHA அமைப்பும் மார்த்தா டிக்காலும்.

                                                      In Rajkhol, the village health atlas has equipped ASHA Martha Diggal with all the right tools to do her job well. She has been able to motivate women to go in for institutional deliveries, linked them with government schemes and achieved 100 per cent immunisation. (Credit: Sarada Lahangir\WFS)

10 comments:

Chokkan Subramanian said...

படித்தால் தான் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியும் என்ற எண்ணத்தை ஓடைத்த சரஸ்வதி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

ஒவ்வொரு வாரமும் தேடிதேடி பாசிட்டிவ் செய்திகளை தொகுத்து வழங்கி வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

R.Umayal Gayathri said...

தன்னம்பிக்கை - சரஸ்வதி..
மனிதாபிமானம் - திருநங்கைகள்
சேவை இதுவல்லவோ - டாக்டர் என பிறவற்றையும்...

பாஸிட்டிவாக வழங்கிய தங்களுக்கு நன்றி

-'பரிவை' சே.குமார் said...

பாஸிட்டிவ் செய்திகள் அனைத்தும் அருமை...

வாழ்த்துக்கள் அண்ணா.

rajalakshmi paramasivam said...

நிப்பெட் தயாரிக்கும் தொழிலதிபர் சரஸ்வதியின் தன்னம்பிக்கை வியக்க வைக்கிறது.
போடஹை மருந்து விற்பவர்களை கண்டுபிடிக்க உதவிய தைரியம் மிக்கத் தாய்க்கு ஒரு ராயல் சல்யுட் .
திருநங்கைகள் பிரசவம் பார்த்து தாய் செய் இருவரையும் காப்பாற்றிய செய்தி படித்ததும் அவர்கள் மேல் தனி மரியாதை வருகிறது.
மற்றப் பாசிடிவ் செய்திகலின் உரிமையாளர்களுக்கும் பாராட்டுக்கள்

Thulasidharan V Thillaiakathu said...

பாசிட்டிவி செய்திகள் அனைத்தையும் வாசித்தோம்...அனைத்தும் அருமை. விரிவாக எழுத முடியவில்லை...இம்முறை...

பழனி. கந்தசாமி said...

அருமையான தகவல்கள். நன்றி ஸ்ரீராம்.

திண்டுக்கல் தனபாலன் said...

டாக்டர் முத்துகிருஷ்ணன் அவர்களின் சிறப்பை என்னவென்று சொல்வது...?

அனைத்தும் அருமை...

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே சிறப்பான செய்திகள்....

கோமதி அரசு said...

கலங்கி நின்று விடாமல் தன்னுழைப்பில் தன் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய சரஸ்வதி அவர்களுக்கு வணக்கம்.

போதை பொருள் பழக்கத்திலிருந்து தன் குழந்தையை மட்டும் அல்லாமல் அனைத்து குழந்தைகளையும் வீரமாய் காப்பாற்றிய தாய்க்கு வணக்கம்.

வடநாட்டில் குழந்தை பிறந்தால் அந்த வீட்டுக்கு வந்து குழந்தையை ஆசீர்வாதம் செய்து பண்ம வாங்கி செல்வார்கள் திருநங்கைகள்.

ஓடும் ரயிலில்திருநங்கைகள் பிரசவம் பார்த்து குழந்தை கையில் பணம் கொடுத்தது அவர்கள் நல்ல மனதையும், உதவும் மனபான்மையை காட்டுகிறது. அவர்களுக்கு பாராட்டுக்கள், வணக்கங்கள்.


மக்களுக்காகவே ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்துவரும் டாக்டர் முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள், வணக்கங்கள்.

பெரியவர்களை ஒரு கூட்டுக் குடும்பமாக வாழ வைக்கும்
அனன்யா, யுவராஜுக்கு வாழ்த்துக்கள்

கிராமவாசிகளுக்குச் சரியான வழி காட்டிய ப்ரஞ்சால் துபே அவர்களுக்கும்,

.கிராமவாசிகளுக்குச் சரியான வழி காட்டிய ஆஷா அமைப்பும் மார்த்தா டிக்காலுக்கும் வாழ்த்துக்கள்.

அனைத்து பாஸிடிவ் செய்தைகளை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

நானா நானி போல கோயமுத்தூரில் பல அமைப்புகள் வந்து விட்டுள்ளன. சேவை மட்டுமே நோக்கமாக அன்றி வர்த்தக நோக்கத்திலுமே இந்த அமைப்புகள் இயங்குகின்றன.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!