செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

5. ஸ்ரீரங்கப்பயணமும் (குறு) பதிவர் சந்திப்பும் - நிறைவுப்பகுதி


ஆர் ஆர் ஆர் வீட்டுக்குச் சுற்றிய அளவு சுற்றவில்லை.   ஓரளவு சீக்கிரமே வைகோ சார் வீடு இருக்கும் இடத்தை அடைந்து விட்டோம்.  கட்டிடத்தின் கீழே 'எங்களை' இறக்கிவிட்டு விட்டு,  மற்ற உறவினர்கள் வண்டியிலேயே காத்திருக்க, நாங்கள் அபார்ட்மெண்ட் கீழ்த்தளத்தை அடையும்போதே கௌதமன் வைகோ ஸாருக்கு அலைபேசினார்.  வழி சொன்ன வைகோ ஸார், எங்களை எதிர்கொண்டழைத்து வரவேற்க லிஃப்டின் வழியே கீழே வர,  நாங்கள் மாடிப்படி வழியாக மேலேறி விட்டோம்.  இடதா, வலதா என்று யோசித்த வேளையில் கீழே எங்களைக் காணாது மறுபடி மேலேறி வந்துவிட்ட அவரே வந்து எங்களை அழைத்துச் சென்றார்.

பவித்ராலயாவுக்குள் நுழைந்தோம். 

நாங்கள் வெயிலின் வெப்பத்தால் தவிக்காதிருக்கும் பொருட்டு ஏற்கெனவே குளிர்சாதனக் கருவியை 'ஆன்'  செய்து வைத்திருந்தார்.  அந்தக் குளிரிலும், அவர் அன்பின் குளுமையிலும் நனைந்தோம் நாங்கள் என்று சொன்னால் அது மிகை இல்லை.

ஸோன் பப்டி மற்றும் உருளைக் கிழங்கு சிப்ஸ் கொடுத்து உபசரித்தார். வைகோ ஸாரின் பதிவுகளைப் படித்து அவரின் கலை உணர்வையும், கலைத் திறமையையும்,  பல்சுவை ரசனையையும் அறிந்தவன் என்ற முறையில் அவரைப் பற்றி சக 'எங்கள் ஆசிரியர்களு'க்கு எடுத்துரைத்தேன்.  குறிப்பாக வைகோ சாருக்குக் கிடைத்த இந்தப் பேறு பற்றிச் சொன்னேன்.  இந்தக் கலையுணர்வு மாறாமல் கடந்த ஞாயிறு கூட மூத்த பதிவர் திருமதி ருக்மணி சேஷசாயி அவர்களுக்கு இதே போன்றதொரு பரிசை வழங்கி இருக்கிறார் திரு வைகோ.  
 
 
 
வைகோ ஸாரின் சிறுகதைகளை மிகவும் ரசித்திருக்கிறேன்.  என்ன, அப்புறம் நடந்த விமர்சனப் போட்டியில்தான் கலந்து கொள்ளவில்லை.  அவர் அதை நடத்தியவிதம் பிரமிக்க வைத்தது. சமீபத்தில் ஜீவி ஸாரைச் சந்தித்தபோது இந்தப் போட்டியின்போது வைகோ ஸார் காட்டிய ஆர்வத்தைப் பற்றிக் குறிப்பிட்டபோது அந்த மதிப்பு மேலும் உயர்ந்தது.  அவர் முன்னர் மிகவும் ருசித்து எழுதிய, மன்னிக்கவும், ரசித்து எழுதிய சமையல் பதிவு ஒன்றையும்  ரசித்துப்  கருத்திட்டிருந்தேன்.  
 

எங்களுக்கு அவர் எழுதிய "எங்கெங்கும்... எப்போதும்...என்னோடு"  புத்தகத்தைப் பரிசளித்தார்.  அதை அவருக்கே உரிய தனிப்பாணியில் ஒவ்வொருவருடனும் நின்று புகைப்படம் எடுத்து, அவர் பாணியில் 'கட்டிப்பிடி வைத்தியத்துட'ன் வழங்கினார்.  அவரின் அன்பான மருமகள்தான் புகைப்படங்கள் எடுத்துக் கொடுத்தார்.
 

அவர் வீட்டின் ஒவ்வொரு ஜன்னலிலிருந்தும் தெரிந்த பஜ்ஜிக்கடை நாக்கின் சுவை நரம்புகளைத் தூண்டி மிகவும் படுத்தினாலும்,  செய்யவேண்டியிருந்த பயணம் 'அடக்கு அடக்கு' என்று மனதை அடக்கியது!  அவர் வீட்டு ஜன்னலிலிருந்தும், வாசலிலிருந்தும் மலைக்கோட்டைக் கோவில் மிக அழகாகத் தெரிந்தது.  தினசரி கோபுர தரிசனம்!   கோபு ஸாரின் கோபுர தரிசனம் தினசரி கோடி புண்ணியத்தை அவருக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.

அவர் லாப்டாப்பைக் காட்டி அதில் அவர் எந்தெந்த நேரத்தில், எப்படி பதிவுகள் எழுதுவார் என்பது பற்றிச் சொன்னார்.  ஆஞ்சநேயர் படம் வரைந்த அனுபவம் பற்றிச் சொன்னார்.  
 
 

சென்னையில் ரயிலேற்றிவிட வேண்டிய உறவினரின் விவரம் சொல்லி, உடனே கிளம்ப வேண்டும் என்ற விவரத்தையும் சொல்லி திருமதி வைகோ அவர்கள் தந்த அருமையான காபியைக் குடித்து விட்டுக் கிளம்பினோம்.
திருச்சி எல்லையைக் கூட தாண்டியிருக்க மாட்டோம்.  அவர் எடுத்த புகைப்படங்களை என் மெயிலுக்கு அனுப்பி விட்டார் வைகோ ஸார்.  அதுதான் வைகோ!

26 கருத்துகள்:

  1. அழகான சந்திப்பு. அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  2. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  3. வைகோ சாரை நான் கோபுசார் என்றுதான் குறிப்பிடுவது வழக்கம். ரசனையான மனிதர். இருந்தாலும் அவரது அந்தரங்கத்தில் இன்னொரு மனிதர் இருக்கிறாரோ என்று எனக்குத் தோன்றி இருக்கிறது. எது எப்படியானாலும் மிகவும் ஈடுபாட்டுடனும் சுறுசுறுப்புடனும் எதையும் செய்யக் கூடியவர். திருச்சியில் ஒரே பதிவர் சந்திப்பு நேரமோ. ?

    பதிலளிநீக்கு
  4. சுவாரசியமான சந்திப்புகளுடன் அழகான தொடர். அதற்குள் முடிந்து விட்டதே??

    பதிலளிநீக்கு
  5. ஆரண்யநிவாஸ் to பவித்ராலயா – நல்ல விஜயம். நீங்கள் உங்கள் பதிவர் சந்திப்பைப் பற்றி, நீங்கள் எழுதி முடிப்பதறகுள் அடுத்த பதிவர் சந்திப்பு ஸ்ரீரங்கத்தில் நடந்து முடிந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  6. ஹாஹா, அடுத்த பதிவர் சந்திப்பு ஆரண்யநிவாஸின் மாமரத்தடியில் தான்! இப்போவே சாக்கு ரெடி பண்ணி வைச்சிருக்கேன். மாவடுக்காக! :)))))

    பதிலளிநீக்கு
  7. சுவையான பதிவர் சந்திப்பு. கல்யாண ஸ்வீட் மட்டுமில்லாமல் வைகோ வீட்டிலும் சோன் பப்டியா? :)

    பதிலளிநீக்கு
  8. நமது இனிய சந்திப்பினை மிக அருமையாக அழகாக எனக்கே வியப்பளிக்கும் விதமாக எழுதியுள்ளீர்கள்.

    ஆனந்தம் ...
    ஆனந்தம் ...
    ஆனந்தமே !

    >>>>>

    பதிலளிநீக்கு
  9. எனக்கு மிகவும் பிடித்தமான, எனக்குக் கிடைத்த மாபெரும் பாக்யமான

    http://gopu1949.blogspot.in/2013/04/9.html "நானும் என் அம்பாளும் !" .............. அதிசய நிகழ்வு !

    என்ற இந்தப்பதிவுக்குச் சுட்டி கொடுத்துள்ளது எனக்கு மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.

    >>>>>

    பதிலளிநீக்கு
  10. உபசரிப்பதில் அருமையானவர் தான் சகோதரர் வை.கோ! வழக்கம்போல பதிவு மிகவும் சுவாரஸ்யம்!

    பதிலளிநீக்கு
  11. //வைகோ ஸாரின் சிறுகதைகளை மிகவும் ரசித்திருக்கிறேன். என்ன, அப்புறம் நடந்த விமர்சனப் போட்டியில்தான் கலந்து கொள்ளவில்லை. அவர் அதை நடத்தியவிதம் பிரமிக்க வைத்தது. சமீபத்தில் ஜீவி ஸாரைச் சந்தித்தபோது இந்தப் போட்டியின்போது வைகோ ஸார் காட்டிய ஆர்வத்தைப் பற்றிக் குறிப்பிட்டபோது அந்த மதிப்பு மேலும் உயர்ந்தது.//

    ஆஹா, நம் உயர்திரு நடுவர் ஜீவி ஸார் அவர்களால் மட்டுமே இந்த என் சிறுகதை விமர்சனப்போட்டிக்கு ஓர் இலக்கிய அந்தஸ்தே கிடைத்தது. அதனாலேயே அதில் மிகுந்த ஈடுபாடு என்னால் காட்ட முடிந்தது. எந்தவிதமான சிக்கலோ சொதப்பலோ இல்லாமல் என் மனதில் நான் திட்டமிட்டபடி வெற்றிகரமாக முடிந்தது.

    >>>>>

    பதிலளிநீக்கு
  12. என் இல்லத்திற்கு தங்களின் அன்பான வருகைக்கும், அதனை அழகாக இங்கு பதிவிட்டு சிறப்பித்துள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  13. திருச்சியில் நீங்கள் சந்தித்த பதிவர்களின் விவரங்களை அழகாய்த் தொகுத்து அளித்த உங்களுக்கு பாராட்டுகள்.

    சந்திப்புகள் தொடரட்டும்!

    பதிலளிநீக்கு
  14. இதுபோன்ற இனிமையான
    சந்திப்புகள் தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  15. பதிவர் சந்திப்புகளாய் அரங்கேறிக் கொண்டிருக்கிறதே!
    வாழ்த்துக்கள் ....

    பதிலளிநீக்கு
  16. நானும் சந்திக்க ஆசைப்படும் பதிவர் திரு வை.கோ சார்! சுவையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  17. சந்திப்புகள்
    பதிவர் உறவைப் பலப்படுத்துமே!
    சிறந்த பதிவு, தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  18. இனிய சந்திப்பு...

    நம்ம சந்திப்பு எப்போ...?

    பதிலளிநீக்கு
  19. மிக அழகாக கோபு சாரின் வண்ண நிறை வாழ்க்கையை விவரித்திருக்கிறீர்கள். ஸ்ரீராம். மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  20. // இப்போவே சாக்கு ரெடி பண்ணி வைச்சிருக்கேன். மாவடுக்காக! :))//

    இன்னொரு ஹஹ்ஹஹா..

    சாக்கா!.. :)) ஜமாயுங்க!

    காரியத்தில் கண் வையடா, தாண்டவக்கோனே! :))

    பதிலளிநீக்கு
  21. ஆங்காங்கே சிறிய சிறிய பதிவர் சந்திப்பு அருமையான நட்பூ தோட்டமாய் விரிந்து கமகமக்கின்றதே! ...அழகு!

    பதிலளிநீக்கு
  22. பதிவு சூப்பர். சோன்பப்டியும் உருளை சிப்ஸும். காஃபியும் சூப்பரோ சூப்பர்.
    டயட்ல இருக்க ட்ரை பண்றேன். ஹிஹி பட் ஒரே ஜொள்ஸ். :)

    பதிலளிநீக்கு
  23. திரு, வை,கோபாலகிருஷ்ணன் அவர்கள் வீட்டுக்கு சென்று அவர் அன்பு மழையில் நனைந்தவிதம் அருமை.
    இனிமையான பதிவர் சந்திப்பு.

    பதிலளிநீக்கு
  24. இந்தச் சந்திப்பு பற்றி கோபு சார் வலைப்பக்கத்தில் அறிந்தேன்.
    ருசித்து எழுதிய சமையல் பதிவு, கட்டிப்பிடி வைத்தியம், ஒவ்வொரு ஜன்னலிலும் தெரிந்த பஜ்ஜிக் கடை என நகைச்சுவை கலந்து தாங்கள் எழுதியிருப்பதை மிகவும் ரசித்தேன். வை.கோபு சார் எழுத்து போலவே அவருடனான சந்திப்பைப் பற்றிய பதிவிலும், நகைச்சுவை கலந்திருப்பது ஒரு விசேஷம் தான்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!