Tuesday, February 10, 2015

பிரம்மாக்களுக்கு வேண்டுகோள்                                                                      


மேல்/இதர நாடுகளில் எப்படியோ தெரியாது இங்கு அதிகாலைப்பொழுது விசேஷமாகக் கருதப்படுகிறது. பிரம்ம முகூர்த்தம் எனப் பெயரிடப் பட்டுள்ளது அதற்கு தெய்வீகம் கறபிக்கப்பட்டுள்ளதை உணர்த்துகிறது. இந்த வேளையில் சில செயல்கள் நிறைவு தருவதும், வேறு சில சங்கடப் படுத்துவதும் எளிதில் காணக் கூடிய ஒன்று. 

                         


காலை எழுந்தவுடன் படிப்பு, தொடர்நது கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு என பாரதியார் சிபாரிசு செய்கிறார்.  ரண்டக்க ரண்டக்க கதியிலோ வயிற்றில் பலமாகக்குத்தியதால் எழும்பும் ஊளையிடல் மாதிரியான வல்லிசைப்பாடல்களில் கனிவோ நல்ல தன்மையோ அதிகாலைப்போதில் கிடைத்தலரிது. துரதிருஷ்ட வசமாக நம் ஊடக பிரம்மாக்களுக்கு இந்த விஷயம் விளங்குவதில்லை. அது கிடக்கட்டும்..


                                                    


நம்மில் பலர் வைகறைத்துயிலெழுகிறோம் என்று நினைக்கிறேன். கழிவறை, பல்விளக்கத்துக்குப்பின் காபிக்கடன்.  அதற்கும் பின், மணி என்ன ?

என்போன்ற "பெரிசு" களுக்கு 5:15. உங்களுக்கு என்னவோ ?


                                                     

இனி அடுத்த ஆக்டிவிட்டி அவர் எனக்கு 7:30. 

இந்த இரண்டு மணி அவகாசம் எப்படிக் கழிகிறது ? நல்ல முறையில் கடக்க வேண்டுமானால் என்ன செய்யலாம் ?


                                                      

என்ன எப்படிச் செய்கிறேன் என்று அப்புறம் சொல்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சொல்லலாம் எனில் சொல்லுங்கள், அல்லது நான் என்ன செய்யலாம் என்று ஆலோசனை தாருங்கள்.

தயவு செய்து நகைச்சுவை, நக்கல், கிண்டல் வேண்டாம்.  சீரியஸ் ஆக நம் பிரம்ம முகூர்த்தங்களுக்கு சிறப்புக்கூட்ட முடியுமா என்று பார்ப்போமே !
  

ராமன்

14 comments:

Geetha Sambasivam said...

ஆறுமாதம் முன் வரை கூட நாலரைக்கெல்லாம் எழுந்து கொண்டு விடுவேன். ஆனால் கடந்த ஆகஸ்டில் இருந்து காலை எழுந்திருப்பதில் கொஞ்சம் சிரமம் ஆக இருக்கிறது. சில நாட்கள் கண்களைப் பிய்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. :( என்றாவது அதிசயமாக ஐந்தரை, ஐந்தே முக்காலுக்குக் கூட எழுந்திருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

We belong to 4 am.saayi bajan,Sri mahaperiyava uraikaL, Vekukkudi upanyaasam.

பழனி. கந்தசாமி said...

கம்ப்யூட்டரில் லட்சக்கணக்கான விஷயங்கள் காடக் கிடைக்கின்றன. நான் அவைகளைத்தான் பார்க்கிறேன்.

'நெல்லைத் தமிழன் said...

காலையில் காலைக் கடன்கள் - பல் தேய்ப்பது, ஷேவிங்க் இன்ன பிற - 40-45 நிமிடம். அதன்பின் சகஸ்ரனாம பாராயணை (ரெடி ஆகும்போதே). அப்பறம், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் சுதர்சனக்கிரியா (இது 40-70 நிமிடம் ஆகும்). அப்பறம் நான் ரெடி.

மற்றவர்களுக்கு நான் பரிந்துரைப்பது. அந்த 45 நிமிடத்தில், குளிப்பதை மட்டும் விட்டு விட்டு, 45 நிமிடம் தேகாப்பியாசம் செய்யலாம். இது கோவிலுக்குச் செல்வதாகவோ அல்லது நடையோ அல்லது வீட்டினுள்ளே கையக் காலை ஆட்டி அடுத்தவர்களைப் பயமுறுத்துவதாகவோ இருக்கலாம்.

அதுக்கப்பறம் டி.வி. பார்க்க உட்கார்ந்தால், வெறும் கையை வைத்துக்கொண்டு விரல்கள் மற்றும் கால், காது போன்ற உறுப்புகளில் சில பகுதிகளை அழுத்துவதைச் சமீபத்தில் தி.நகர் டாக்டர் ஜெயலக்ஷ்மி அவர்களிடமும் அவர்கள் அளித்த புத்தகத்திலும் பார்த்தேன். அதைச் செய்யலாம்.

கரந்தை ஜெயக்குமார் said...
This comment has been removed by the author.
கரந்தை ஜெயக்குமார் said...

காலை 4.30 மணிக்கு எழுவேன்
5.30 வரை நடை
7.00 மணி வரை கணினி
8.00 மணிக்கெல்லாம் பள்ளிக்குப் புறப்பட்டாக வேண்டும்

‘தளிர்’ சுரேஷ் said...

4.30 மணி முதல் தேவைக்கேற்றபடி மாற்றி எழுந்து கொள்வேன்! பிரம்ம முகூர்த்தத்தில் மாணவர்கள் பாடம் படித்தால் நன்றாக மனதில் பதியும்! பெரியவர்கள் ஸ்லோகம் சொல்லுதல், நடைபயிற்சி, இறைவழிபாடு, யோகா முதலியவற்றில் ஈடுபடலாம்.

ரூபன் said...

வணக்கம்
ஐயா.
இவை எல்லாம் நமக்கு எட்டாத் தூரம் ஐயா... அருமையான கருத்தை பகிர்ந்துள்ளீர்கள் நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ssk tpj said...

எனக்கோ 50 வயதாகியும் காலையில் 7 மணிக்கு எழுவதே சிரமமாக உள்ளது.
காலையில் எழுந்தால் வெற்றி பெறலாம் என்று சொல்கிறார்கள்.
இதற்கு என்ன வழி ? எனக்கு மனதின்மை இல்லையோ என்று அஞ்சுகிறேன்.
இங்குள்ள அனுபவம் பெற்றவர்கள் வழி சொல்ல இயலுமா ?

திண்டுக்கல் தனபாலன் said...

கரந்தை ஐயா சொன்னது போல்...

நேரம் மட்டும் மாற்றம்...!

சீனு said...

நான் பிரம்ம முகூர்த்தம் பார்த்தே பலநாள் ஆகுதுன்றதால ஸ்கிப் பண்ணிக்கிறேன் :-)

RAMVI said...

நான் 5 மணிக்கு எழுந்து 1/2 மணி நேரம் யோகா பயிற்சி, பிறகு இதர வேலைகள்.

கோமதி அரசு said...

காலை 4.30க்கு எழுந்து காலைகடன்கள், பின் சிறிது தியானம், நாடிசுத்தி, பின் எளிய உடற்பயிற்சி, அதன் பின் கொஞ்சம் கணினி . அதன் பின் குழந்தைகளுடன் கொஞ்சம் பேச்சு ஸ்கைப்பில். மாலை கொஞ்சம் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் உரையாடல், கோவில் வழிபாடு.
பிரம்ம முகூர்த்தவேளை வழிபாடு மிக சிறந்த ஒன்று.

வெங்கட் நாகராஜ் said...

எழுவது 06.15. அதன் பிறகு தொடர்ந்த ஓட்டம் தான்..... உணவு தயாரித்தல், நடுநடுவே கணினி, கூடவே ஏதோ ஒரு இன்னிசை, எட்டே முக்காலுக்கு அலுவலகம் புறப்பாடு!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!