புதன், 11 மார்ச், 2015

துட்டன்காமனும் ஆலந்தூர் ஸ்டாலினும். டிட் பிட்ஸ்.....



பிரமிட் மர்மங்களில் பெரியது!

......கடைசியில், 1922 நவம்பரில் மற்றொரு கல்லறையின் சிதைந்த பாகங்களுக்கு அருகில், படிக்கட்டுகள் இருப்பதை கார்ட்டரின் குழு கண்டுபிடித்தது. அதன் வழியாகச் சென்றபோது, துட்டன்காமனின் கல்லறை இருக்கும் இடம் தெரியவந்தது. அதன்பின்னர்தான், 1923-ல் அந்தக் கல்லறையின் நான்காவது மற்றும் கடைசி அறை, பல அதிகாரிகளின் முன்னிலையில் திறக்கப்பட்டது. 


ஒன்றுக்குள் ஒன்றாக வைக்கப் பட்டிருந்த மூன்று சவப்பெட்டிகளின், கடைசிப் பெட்டியில், மன்னர் துட்டன்காமன் மீளாத் துயிலில் ஆழ்ந்திருந்தார். 18-வது வயதில் மர்மமான முறையில் இறந்த மன்னர் அவர். அவரது இறப்புக்கான காரணம் பற்றி இன்றுவரை ஆய்வுகள் தொடர் கின்றன. ஒரே நாளில் இந்தச் செய்தி உலகப் பிரசித்தி பெற்றுவிட்டது. இந்தச் சம்பவத்தை வைத்து புனையப்பட்ட கதைகள் ஏராளம். தனது கல்லறையைத் திறப்பவர்களுக்கு மரணம் நிச்சயம் என்று துட்டன்காமனின் கல்லறையில் எழுதப்பட்டிருந்தது. 


கல்லறையைத் திறந்து 6 வாரங்களுக்குப் பிறகு, கொசுக்கடியால் ஏற்பட்ட தொற்றால், கெய்ரோ நகரில் கார்னர்வோன் மரணமடைந்தார். இதேபோல், அதே ஆண்டில் அந்தக் கல்லறையைப் பார்வையிட்ட ஜார்ஜ் ஜே கவுல்டு என்பவர் சில மாதங்களில் மர்மக் காய்ச் சலால் உயிரிழந்தார். துட்டன்காமனின் உடலை எக்ஸ்-ரே மூலம் ஆய்வுசெய்த சர் ஆர்ச்சிபால் டக்ளஸ் அடுத்த ஆண்டு மர்ம நோயால் இறந்தார். 


இப்படிப் பலர் மர்மமாக உயிரிழந்தது பலரின் கற்பனையைப் பயங்கரமாகத் தூண்டிவிட்டது. எனினும், இந்த மரணங்களுக்கும் மன்னரின் சாபத்துக்கும் அறிவியல்பூர்வமாக எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவியலாளர்கள் விளக்கமளித்துவிட்டனர்........ 
(தி இந்து பிப்ரவரி 16)






தாயை எரித்த தனயன்!


ஆலந்தூரில் சமையல் எரி வாயுவை கசிய விட்டு தாயை கொல்ல முயன்ற மகனை போலீஸார் கைது செய்தனர். 


சென்னை ஆலந்தூர் ஆண்டவன் தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின் (58). இவரது மனைவி லட்சுமி(53). இவர்களது மகன் மதன்ராஜ் (26). மென்பொருள் பொறி யாளர். இவர் தன்னுடன் பணிபுரியும் ஒரு பெண்ணை காதலித்து, கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இது மதன்ராஜின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதனால் மதன்ராஜ் தனது மனைவி யுடன் கோவிலம்பாக்கத்துக்கு தனிக்குடித்தனம் சென்று விட்டார். 


லட்சுமி அம்மாள் அங்கு அடிக்கடி சென்று ‘எனது மகனை பிரித்து தனிக்குடித் தனம் அழைத்து வந்து விட்டாய்’ என மருமகளிடம் சண்டை போட்டிருக்கிறார். இது மதன்ராஜுக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்னை ஏற்படுத்த, கோபமடைந்த மதன்ராஜின் மனைவி பெங்களூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். 


தனது தாயாரால்தான் மனைவி பிரிந்து சென்று விட்டதாக நினைத்த மதன் ராஜுக்கு தாய் லட்சுமி மீது ஆத்திரம் வந்தது. நேற்று முன்தினம் பிற்பக லில் ஆலந்தூரில் உள்ள வீட்டுக்கு வந்த மதன்ராஜ், தாயாரிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் அவரை அடித்து உதைத்தார். அதில் லட்சுமி மயங்கி விழவே, சிலிண்டரில் இருந்த சமையல் எரிவாயுவை திறந்து கசிய விட்டு, கதவை பூட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.


எரிவாயுவின் வாசனையை உணர்ந்து அருகே இருந் தவர்கள் லட்சுமியின் கணவர் ஸ்டாலினுக்கு தக வல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து கதவை திறந்து மனைவியை காப் பாற்றினார். இது குறித்த புகாரின்பேரில் பரங்கிமலை போலீஸார் விசாரணை நடத்தி மதன்ராஜை கைது செய்தனர்.



இன்னொரு நேதாஜி!

ஏப்ரல் 10, 1980 அன்று தில்லியிலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த வி.வி. சடகோபன், ரயிலிலிருந்து கூடூர் ஸ்டேஷனில் இறங்கினார். அதற்குப் பிறகு அவருக்கு என்ன நேர்ந்தது என்று யாருக்கும் தெரியாது. அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆன போதும், அவர் குடும்பத்தினர் அவர் இன்னும் உயிரோடு இருப்பதாகவே நம்புகிறார்கள்! (தி இந்து)


கலை இலக்கிய எழுத்தாளரும்,கர்னாடக சங்கீத வித்தகருமான ஸுஜாதா விஜயராகவன் வி வி சடகோபனின் உறவினர்.


17 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா.
    மிரமிட் அதிசயம் பற்றிய சொல்லிஉள்ளீர்கள் நானும் வியந்து விட்டேன்..
    மற்றும் மகளை காதலித்த குற்றத்துக்காக தகப்பன் தனி குடித்தனம்போன தகவலும்
    நேதாஜி பற்றிய தகவலும் அறிந்தேன் தங்களின் பதிவு வழி த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

  2. பிரமிட் விடயம் பிரமிப்பாக இருந்தது எனக்கு...
    கடைசியில் மொத்த வாழ்வையும் இழந்தது கணவனும் மனைவியுமே,,,, இதில் யாருக்கு லாபம் திருந்தாத ஜென்மங்கள்,,,
    இதுவும் நேதாஜி கதை போலவே இருக்கிறதே...
    நண்பரே தமிழ் மண வாக்கு இடமுடியவில்லையே... ஏன் ?

    பதிலளிநீக்கு
  3. பிரமிடு மர்மம் பெரியது தான்....வியப்பாக இருக்கிறது

    காலம் எங்கோ போகுது...

    ஆச்சரியமாக இருக்கிறது இன்னுமொரு நேதாஜி..

    பதிலளிநீக்கு
  4. வி.வி.சடகோபன் குறித்துப் படித்திருக்கிறேன். பிரமிட் விஷயங்கள் ஆச்சரியமளிக்கின்றன. தாய்க்கு மகன் சந்தோஷமாக இருப்பதில் என்ன கஷ்டமோ தெரியலை! :( இப்படித் தான் பெண்கள் தம்மைத் தாமே இழிவு செய்து கொண்டு அழித்துக் கொள்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  5. கற்பனைக்கு பஞ்சமே இல்லை தான்... பிரமிட் - வியப்பு தான்...

    தனயன் - அயோக்கியன்...

    நெகட்டிவ் செய்திகளின் முன்னோட்ட பகிர்வா என்று சின்னதாக ஒரு சந்தேகம்.... ஹிஹி...

    பதிலளிநீக்கு
  6. முதல் செய்தி ஆச்சரியமளிக்கிறது.

    இரண்டாவதைப் போல ஆங்காங்கே பல சம்பவங்கள்..

    பதிலளிநீக்கு
  7. Most of mothers in law probably act as if they will for ever and r here to tame their ds in law. I wish i am wrong but unfortunately am right though.
    It is time to realise for all of us me not excluded that
    After 10 yrs 10 p.c of all who live now will not be .
    After 20 yrs 20 pc wl have vacated this planet.
    After 50 yrs 50 pc of those who roar now wd have been forgotten
    And
    After100 yrs from now none of us i mean those all living now wd be nowhere
    Unless one does a feat as to be remembered by posterity.
    And i am sure that what the son did to his mom even conceding that she cd hv kept her distance once she is not revered shall remain a henious crime against humanity.
    Subbu thatha

    பதிலளிநீக்கு
  8. துட்டன்காமன் அல்லது தூத்தன்கேமன் (Tutankhamun, கிமு 1341 – கிமு 1323) என்பவன் பண்டைய எகிப்தின் பதினெட்டாவது வம்ச மன்னன் ஆவான். இவன் கிமு 1333 முதல் கிமு 1324 வரை புதிய இராச்சியம் என்ற பெயரில் அமைந்த எகிப்தை ஆண்டான். துட்டன்காமன் தனது எட்டாவது அல்லது ஒன்பதாவது வயதிலேயே பாரோ ஆனான். பதவியேற்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தான். இவனது இயற்பெயர் துட்டன்காட்டன் என்பதாகும். துட்டன்காமன் என்பதன் பொருள் ஆமனின் உயிருள்ள படிமம் என்பதாகும்[1]. இவனது பெயர் வளைகுடா அரபு, எகிப்திய அரபு என்பவற்றில் தூத்து-அன்கு-ஆமூன் ஆகும். அத்துடன் கிப்திய (Coptic) மொழியில் அக்கால எகிப்தியப் பெரிய கடவுளின் பெயர் ஆமூன் என்பதாகும். அதுவே இவனது பெயரிலும் சேர்ந்திருக்கிறது

    நன்றி: விக்கிப்பீடியா

    பதிலளிநீக்கு
  9. பிரமிக்க வைக்கும் பிரமிட்..
    அம்மாவை கொல்வதா? கஷ்டமாக இருக்கு..

    இன்னொரு நேதாஜி!

    பதிலளிநீக்கு
  10. இந்த துட்டன்காமன் என்னும் பெயர் காலையிலிருந்து உறுத்திக் கொண்டே இருந்தது. அப்புறமா இப்போத் தான் நினைவில் வந்தது. இலங்கை ராஜ வம்சத்து ஒரு அரசன் பெயர் துஷ்டகம்னு என்பது. அந்தக் கால விகடனில் இலங்கை ராஜவம்ச வரலாறு, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவை சித்ரலேகா என்பவரின் படங்களோடு ஒரு பக்கக் கதைகளாக வந்தன். ஆவலுடன் விரும்பிப் படித்திருக்கிறேன். :)))

    அப்படி எல்லாம் அறிவை வளர்த்த பத்திரிகைகள் இன்று சினிமா செய்தியைத் தவிர வேறே எதுவும் கொடுப்பதில்லை. :(

    பதிலளிநீக்கு
  11. பிரமிட் அதிசயம் தான்.
    பாசிடிவ் செய்திகள் மாதிரி இது நெகட்டிவ் செய்திகளா?

    பதிலளிநீக்கு
  12. பிரமிட் விஷயங்கள் படித்தது நினைவில் ஏதோ நிழலாக. இரண்டாவது செய்தியில் காசைத் திறந்து விட்டுப் போனவன் பற்ற வைக்காமல் போனானே என்று நிம்மதி அடைவதா?விவி,சடகோபன் என் பாட்டியின் குடும்ப நண்பர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  13. பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.. நெகட்டிவ் செய்திகள் என்றில்லை, பாஸிட்டிவ் செய்திகள் படிக்கும்போது கண்ணில்படும் சில சுவாரஸ்ய, அதிர்ச்சியூட்டும் செய்திகளைப் பகிர நினைத்தேன்! அவ்வளவுதான்!

    பதிலளிநீக்கு
  14. சுவாரஸ்யம் மட்டுமில்லை, அதிர்ச்சி நிறைந்த செய்திகள் ஸ்ரீராம் சார்.

    பதிலளிநீக்கு
  15. பிரமிட் என்றாலே வியப்புதான்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  16. ஆச்சர்யம்... அதிர்ச்சி... புதிர்... ஒவ்வொரு தகவலும் ஒவ்வொரு விதமாய் உணர்வுக்கலவைகளின் சங்கமம். அருமை. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  17. பிரமிட் மர்மமும் தாயை எரித்த மகன் செய்தியும் அதிர்ச்சி தரும் செய்திகள்.கலவை ரசிக்கும்படி இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!