Saturday, March 28, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.1) பத்து நேர்மையான, துணிச்சலான அதிகாரிகள் பற்றி இங்கே.
 


 
2) காயமுற்ற நிலையிலும் வழி நடத்தும் ஒரு கடமை வீரனின் வீடியோ.
 


 
3) இளம் வயதிலேயே கணவரை இழந்து, இரண்டு குழந்தைகளுடன் தவித்த இவருக்குக் கைகொடுத்தது தமிழக அரசின் மகளிர் திட்டம். அதிகம் படிக்கவில்லை, குடும்பத்தை எப்படி நடத்துவது என்று மூலையில் உட்கார்ந்து அழவில்லை. வாழ்ந்து காட்டுவேன் என்று தன்னம்பிக்கையோடு துணிச்சலுடன் போராடினார். பொருட்களை உற்பத்தி செய்வதைவிட அவற்றை விற்பனை செய்வதுதான் சவால் நிறைந்தது. தேவகி அந்தச் சவாலைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டார். பட்டம் படிக்காமல், பயிற்சி பெறாமல் சந்தைப்படுத்தும் உத்தியில் கலக்குகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த தேவகி.
 


 
4) பெண்கள் நடத்தும் தொழில் என்றால் அப்பளம், வடகம், ஊறுகாய் என்று உணவுப் பொருள் தயாரிப்புத் தொழிலாகத்தான் இருக்கும் என்பது பலரது நினைப்பு. ஆனால் திருச்சியைச் சேர்ந்த ராஜமகேஸ்வரி, ராஜேஸ்வரி, சாந்தி, வாசுகி, ஜீசஸ்மேரி உள்ளிட்ட 25 பெண்கள் அந்த நினைப்பைப் பொய்யாக்குகிறார்கள்.
 


 
5) சந்தோஷின் சந்தோஷம் எதனால் தெரியுமா?
 


6) காரிருள் போல இருந்த ஆஸ்பத்திரியை மாற்றிய காந்திமதிநாதனைப் பார் அதி பெரிய மனிதர்.


15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தேவகி அவர்கள் சவால் ராணி...!

800 அடி என்றாலும் இங்கு சந்தோஷம் இல்லையே...?

பழனி. கந்தசாமி said...

அசாத்திய முயற்சியும் மன தைரியமும் உள்ள மக்கள்.

ரூபன் said...

வணக்கம்
ஐயா
எல்லாத்தகவலும் சிறப்பு பகிர்வுக்கு நன்றி த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

G.M Balasubramaniam said...

இவர்களின் செயல்கள் பிறருக்கு உந்து சக்தியாய் இருக்கட்டும். இரும்பு மனுஷிகள் வெற்றி பெற கொதிகலன் தொழிற்சாலை உதவுகிறது என அறிய இரட்டிப்பு மக்ழ்ச்சி.

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்கள்

‘தளிர்’ சுரேஷ் said...

சிறப்பான செயல்களால் செய்திகளில் மட்டுமின்றி உள்ளங்களிலும் இடம்பிடித்த மனிதர்கள்! வாழ்த்துக்கள்! நன்றி!

KILLERGEE Devakottai said...


அனைவரும் பாராட்டுக்குறியவர்கள் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே...

Bagawanjee KA said...

காட்டாஸ்பத்திரியா இது நம்பவே முடியலே !சம்பளம் வாங்கும் பணியில் காந்திமதிநாதன் போன்ற நல்ல மனிதர்கள் இருப்பதை அறிய மகிழ்ச்சி ஏற்படுகிறது !

பரிவை சே.குமார் said...

எல்லாமே சந்தோஷச் செய்திகள்... அருமையான தொகுப்பு அண்ணா...

பரிவை சே.குமார் said...

எல்லாமே சந்தோஷச் செய்திகள்... அருமையான தொகுப்பு அண்ணா...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

முதல் பத்து பேர் பட்டியலில் நம் சகாயமும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி. இந்தப் பட்டியல் இன்னும் பெருக வேண்டும்.

R.Umayal Gayathri said...

நல்ல செய்திகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோ

இரும்புப் பெண்கள் அசாத்திய துணிச்சல் தான்

Thulasidharan V Thillaiakathu said...

முதல் பத்து பேரில் நம் தமிழ்நாட்டு சகாயம் அவர்கள் இருப்பது மகிழ்ச்சி. மணிப்பூர் ஆஃபீசர் வாவ்! அவர் நிற்கும் இடம் மணிப்பூரா? அருமையாக இருக்கின்றது...அந்தக் கொடி சரியாகத் தெரியவில்லை இல்லைஎன்றால் கண்டுபிடித்திருக்கலாம்..
10 பேரில் இருவர் இல்லை சங்கரன் அவர்கள் அது இயற்கை மரணம். ஆனால் சண்முகம் மஞ்சுநாத், துபே , நரேந்திரக் குமார், அவர்களின் கொலைகள் எஞ்சியிருக்கும் ஆஃபீசர்களைக் காப்பாற்று என்று இறைவனை வேண்டத் தோன்றுகின்றது. குறிப்பாக சந்திரகலா. ஏனென்றால் இவர்கள் எல்லோரும் இருப்பது நம்ம நாட்டிலாச்சே...எல்லோரும் நமக்கு முன்னோடிகள்!

கடமை வீரன் ராயல் சல்யூட்!

திருச்சிப் பெண்கள் இரும்பு மனுஷிகள் தான் நோ டவுட்!

சந்தோஷ் பாராட்டப்பட வேண்டியவர். அருமை!
சபாஷ் காந்திமதி நாதன்! சபாஷ்! ஹேட்ஸ் ஆஃப் டு யூ!புலவர் இராமாநுசம் said...


பல செய்திகள்! அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்!

Geetha Sambasivam said...

காந்திமதிநாதனைப் பார்த்தால் அதி பெரிய மனிதருக்குத் தக்கவராகவே தெரிகிறது. அருமையான செய்திப் பகிர்வு. அனைத்துமே பொறுக்கி எடுத்த நல்முத்துக்கள்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!